மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016-ன் முக்கிய அம்சங்கள் என்ன? -குஷ்பூ குமாரி, ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள்:


— சமீபத்தில், இந்தியாவின் 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வை குறைபாடுள்ள மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள மக்கள் வீடியோ பொழுதுபோக்குகளை அணுகுவதற்கான உரிமை குறித்து ஏமாற்றத்தை சந்தித்தனர்.


அக்டோபர் 2025-ல், காது கேளாமை மற்றும் பார்வைக் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு OTT உள்ளடக்கத்தை அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் (Ministry of Information and Broadcasting’s (MIB)) முன்மொழியப்பட்ட வழிகாட்டுதல்களை மாற்றுத்திறனாளி உரிமைகள் சமூகம் வரவேற்றது.


இரண்டு முக்கிய விஷயங்கள் நம்பிக்கை அளித்தன. முதலாவதாக, வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்ட ஆறு மாதங்களுக்குள், அனைத்து புதிய OTT உள்ளடக்கமும் குறைந்தது இரண்டு அணுகல் அம்சங்களைக் கொண்டிருக்கும்: செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கான தலைப்புகள் அல்லது இந்திய சைகை மொழி (Indian Sign Language (ISL)) மற்றும் பார்வை குறைபாடுள்ளவர்களுக்கான ஒலிப்பதிவு விளக்கமாகும்.


இரண்டாவதாக, தற்போதுள்ள உள்ளடக்கத்திற்கு, OTT-கள் அணுகல்தன்மை அம்சங்களை 12 மாதங்களுக்குள் 30%-ஆகவும், 18 மாதங்களுக்குள் 60%-ஆகவும், 24 மாதங்களுக்குள் 100%-ஆக பயன்படுத்துவதற்கான  வாய்ப்புகளை வழங்கும்.


வழிகாட்டுதல்களின் அறிவிப்பு குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு விசாரணைக்கு ஒரு நாள் முன்பு, இந்த ஏமாற்றம் ஏற்பட்டது. தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இரண்டு முக்கிய மாற்றங்களுடன் வழிகாட்டுதல்களை வெளியிட்டது. முன்மொழியப்பட்ட ஆறு உள்ளடக்கங்களிலிருந்து, அனைத்து புதிய உள்ளடக்கத்தையும் அணுகக்கூடியதாக மாற்ற OTT-கள் 36 மாதங்கள் அவகாசம் அளிக்கும். தற்போதுள்ள உள்ளடக்கத்திற்கு, சிறந்த முயற்சி அடிப்படையில் பயன்படுத்துவதற்கான  வாய்ப்புகளை வழங்க OTT-கள் ஊக்குவிக்கப்பட்டன.


இந்த தளர்வுகளுக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, ஆரம்பத்தில் முன்மொழியப்பட்ட விதிகள் சிறிய OTT தளங்களை பாதிக்கும் சூழல் ஏற்பட்டது. அவை தானியங்கி கருவிகள் அல்லது பெரிய உலக தளங்களிடம் உள்ள நிதிநிலை அறிக்கை இல்லாததால் ஏற்பட்டது.


— இது உண்மையெனில், பெரிய OTT நிறுவனங்கள் முன்னிலை பெற்றிருக்க முடியும். JioHotstar, Netflix மற்றும் Amazon Prime Video போன்றவை இணைந்து இந்தியாவில் 67 சதவீத OTT சந்தை பங்கைக் கொண்டுள்ளன.


தானியங்கி கருவிகளைப் பொறுத்தவரை, இந்தியா சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டை நடத்தியது. அங்கு இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட சர்வம் செயற்கை நுண்ணறிவின் அடிப்படை மாதிரி இடம்பெற்றது. செலவு குறைந்த மொழிப் பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவு விரைவாக தீர்வுகளை வழங்கி வருகிறது. மேலும், அணுகல் அம்சங்களை காணொளிப் பதிவு உள்ளடக்கத்தில் ஒருங்கிணைப்பது இனி பெரிய சுமையாக இருக்காது.


OTT தளங்களும் அவற்றின் சுய ஒழுங்குமுறை அமைப்புகளும் மாற்றுத்திறனாளிகளை (persons with disabilities (PwDs)) அதிகமாக சேர்க்கலாம். சரியான செயலாக இருப்பதோடு மட்டுமல்லாமல், அணுகக்கூடிய உள்ளடக்கம் எழுத்தறிவு மற்றும் மொழித் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் மதிப்பைச் சேர்க்கலாம். இந்தியாவில் OTT-களுக்கான மிகப்பெரிய வளர்ச்சி  ஊரகப் பகுதிகளில் உள்ளது. மேலும், வெற்றி பெறும் நிறுவனங்கள் கல்வி நோக்கங்களுக்கும் பயன்படும் பொழுதுபோக்கையும் வழங்குவார்கள்.


உங்களுக்குத் தெரியுமா?


ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் மாற்றுத்திறனாளிகளின் முழு பங்கேற்பு மற்றும் சமத்துவம் குறித்த (Proclamation on the Full Participation and Equality of People with Disabilities in the Asian and Pacific Region) பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திட்டதற்குப் பதிலளிக்கும் விதமாக 1995-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் சட்டம் இயற்றப்பட்டது. பின்னர், இது மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016-ஆல் மாற்றப்பட்டது. இது 2007-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் மாநாட்டை (United Nations Convention on the Rights of Persons with Disabilities (UNCRPD)) இந்தியா அங்கீகரித்ததைத் தொடர்ந்து வந்தது.


 2016-ஆம் ஆண்டு சட்டம் மூன்று முக்கிய வழிகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது. முதலாவதாக, இது ஒரு குறுகிய, மருத்துவமயமாக்கப்பட்ட இயலாமை கட்டமைப்பிலிருந்து சமூக-மருத்துவ மாதிரியாக மாறியது.  இது சமூகத் தடைகள் ஒரு குறைபாடு மட்டுமல்ல அது பங்கேற்பை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பதை அங்கீகரிக்கிறது.


 இரண்டாவதாக, 1995-ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ்  7 குறைபாடுகளிலிருந்து தகுதியை 21 குறைபாடுகளின் விரிவான தொகுப்பாக விரிவுபடுத்துவதன் மூலம் சட்டப் பாதுகாப்பின் நோக்கத்தை இது விரிவுபடுத்தியது.


மூன்றாவதாக, இது ஐக்கிய நாடுகளின் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் (United Nations Convention on the Rights of Persons with Disabilities (UNCRPD)) மாநாட்டுடன் இணக்கமான செயல்படும் உரிமைகள் அடிப்படையிலான சொற்களஞ்சியத்தை அறிமுகப்படுத்தியது. நலத்திட்டங்கள் சார்ந்த சொற்களை (welfare-oriented terminology) சமத்துவம், கண்ணியம் மற்றும் முழுப் பங்கேற்புக்கான கட்டாய உத்தரவாதங்களுடன் மாற்றியது.


Original article : What are the key features of the RPwD Act, 2016? -Khushboo Kumari, Roshni Yadav

Share: