விதிகளை மீறுதல்: வனசக்தி தீர்ப்பை மாற்றியமைத்தல் குறித்து . . .

நடைமுறைக்குப் பிந்தைய அனுமதி என்பது விதியாக இல்லாமல் விதிவிலக்காக இருக்க வேண்டும்.


உச்சநீதிமன்றத்தின் ஒரு அமர்வு மே 2025-ல் வழங்கப்பட்டத் தீர்ப்பு, நடைமுறைக்கு வந்த பின்னர் அனுமதி வழங்குவதை (post-facto clearance) தடை செய்த முந்தைய தீர்ப்பை ரத்து செய்துள்ளது. அதிகமாக தவறாக பயன்படுத்தப்பட்ட ஒரு சட்டத்தின் மாற்றமுடியாத விளைவுகளை சமாளிப்பது எவ்வளவு கடினம் என்பதை இது வெளிக்காட்டுகிறது. சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த விதிவிலக்குகளை சாதாரணமாக்கிய விதமான அதன் உத்தரவுகளின் வடிவமைப்பும் இந்த விவகாரத்தில் சர்ச்சைக்குரியதாக உள்ளது. 1986-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டமும், 1994 மற்றும் 2006-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்ட அறிவிக்கைகளும் முன்கூட்டிய சுற்றுச்சூழல் அனுமதி (prior Environmental Clearance (EC)) என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. பெரிய கட்டுமான மற்றும் தொழில்துறை திட்டங்கள் அரசால் அனுமதிக்கப்பட்ட ஒரு அமைப்பு அவற்றின் விளைவுகளை மதிப்பிடும்வரை பணிகளைத் தொடங்கக்கூடாது. 2017-ஆம் ஆண்டு Common Cause, 2020-ஆம் ஆண்டு Alembic Pharmaceuticals போன்ற வழக்குகளில், நீதிமன்றத் தீர்ப்புகள் முன்கூட்டிய சுற்றுச்சூழல் அனுமதி கட்டாயமாக இருக்கும் இடங்களில் பிந்தைய (post-facto) சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக் கூடாது என்று தெளிவான நிலைப்பாட்டை எடுத்தன. உச்சநீதிமன்றத்தின் புதிய பெரும்பான்மை தீர்ப்பு, ஒரு திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பு ஒப்புதல் பெறுவது முக்கிய கட்டாயமானது என்று தொடர்ந்து கூறி வருகிறது. இருப்பினும், புதிய பெரும்பான்மை தீர்ப்பு, சுற்றுச்சூழல் அனுமதி முதலில் வழங்கவேண்டும் என்ற விதியை ரத்து செய்யவில்லை. ஆனால், இது ஒரு சிறிய விதிவிலக்கை திட்டங்களை தொடர அனுமதிக்கிறது: ஒரு திட்டத்திற்கு நிதி அதிகமாக செலவிடப்பட்டிருந்தால், அலெம்பிக் மற்றும் டி. சுவாமி போன்ற முந்தைய வழக்குகளின் அடிப்படையில், அரசாங்கம்  பொதுவாக அபராதங்களுடன் மிகவும் அரிதான சூழல்களில் திட்டங்கள் தொடங்கப்பட்ட பின்னர் அனுமதி வழங்கலாம். எப்படியிருந்தாலும், சுற்றுச்சூழல் அனுமதி (EC) முறையின் நோக்கம் தொடர்ந்து முன்கூட்டிய மதிப்பீடாகவே இருக்கிறது


ஒரு திட்டத்தின் கட்டுமானம் தொடங்கியபிறகு அல்லது முடிந்தபிறகு வழங்கப்படும் சுற்றுச்சூழல் அனுமதி, EIAயின் அடிப்படை நோக்கத்தை நிறைவேற்ற முடியாது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் நோக்கம் — திட்டத்தின் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் விளைவுகள் உருவாகும் முன்பே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பதுதான். பிந்தைய (post-facto) அனுமதிகளால் அபராதம் விதிப்பது, தணிப்பு நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பது அல்லது திட்டங்களை தடை செய்வது போன்ற உத்தரவுகளைப் மட்டுமே பிறப்பிக்க முடியும். நீதித்துறை இவ்வாறான அனுமதிகளை சில சூழ்நிலைகளில் அனுமதித்தாலும், அவை சரிசெய்யும் நடவடிக்கைகளாகவே இருக்கும். மேலும், 1990-களிலிருந்து இந்தியாவில் உருவான சுற்றுச்சூழல் சட்டக் கொள்கைகளுடன் இந்த கொள்கைகள் முழுமையாக பொருந்தாது. கடந்தகால மற்றும் எதிர்காலங்களில் சட்டத்தை மீறுபவர்களை வித்தியாசமாக நடத்துவது குறித்து பெரும்பான்மையானவர்கள் கவலைப்படுவது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. அவர்களின் தீர்வு சரியானதாக இல்லாவிட்டாலும்கூட. வனசக்தி வழக்கு 2017ஆம் ஆண்டு அறிவிப்பையும் பின்னர் சுற்றுச்சூழல் அமைச்சக உத்தரவுகளையும் ரத்து செய்தது. இது நடைமுறைக்கு பிந்தைய அனுமதிகளை அனுமதித்தது. ஆனால், ஏற்கனவே வழங்கப்பட்ட நடைமுறைக்கு பிந்தைய அனுமதிகளை செல்லுபடியாகும் வகையில் வைத்திருந்தது. சுற்றுச்சூழல் ஒப்புதல் முறையிலிருந்து கடுமையான சுற்றுச்சூழல் ஒப்புதல் முறைக்கு மாறும்போது, ​​கடந்தகால திட்டங்களை வித்தியாசமாக நடத்துவது நியாயமானது என்று உச்சநீதிமன்றத்தின் பெரும்பான்மையான நீதிபதிகளின் தீர்ப்பு கூறுகிறது. விதிகளைப் புதுப்பிக்கும்போது இந்த வேறுபாடு ஏற்படும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பழைய முறைகளை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று அர்த்தமல்ல. நடைமுறைக்குப் பிந்தைய சுற்றுச்சூழல் அனுமதிகள் பொதுவாக தடைசெய்யப்படுகின்றன. ஆனால், வரையறுக்கப்பட்ட விதிவிலக்குகளுக்கு அனுமதிக்கப்படுகின்றன என்பதை நீதிமன்றம் நினைவுப்படுத்தியது. சுற்றுச்சூழல் அமைச்சகம் நடைமுறைக்குப் பிந்தைய ஒப்புதல்களை அரிதானதாகக் கருத வேண்டும். ஏனெனில், அவை நிறுவப்பட்ட சட்டங்களுக்கு எதிராக உள்ளன. கடந்தகால மீறல்களுக்கும் எதிர்கால மீறல்களுக்கும் இடையிலான பாகுபாடு பற்றிய எந்தப் புகாரையும், பிந்தைய சீரமைப்பை (post-facto regularisation) இயல்பாக்குவதன் மூலம் எந்த மாற்றத்தையும் செய்யமுடியாது. மாறாக, ஏற்கெனவே உள்ள பழைய அனுமதிகளை கடுமையாக்குவதன் மூலமே செய்ய வேண்டும்.


Original Article:  Breaking the rules: On the reversing of the Vanashakti ruling.


Share: