1940-களின் இறுதியில் தமிழ்நாடு சட்டமன்றம் அரசியலமைப்பின் உருவாக்கத்தை எப்படிப் பார்த்தது? -டி. ராமகிருஷ்ணன்

 அரசியலமைப்பு நிர்ணய சபையின் விவாதங்களின்போது 1946 முதல் 1949-ஆம் ஆண்டு வரை அப்போதைய தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த K. சந்தானம் மற்றும் N.G. ரங்கா ஆகிய இருவரும், பொதுப் பட்டியலை (Concurrent List) விரிவுபடுத்துவது என்ற போர்வையில் ஒன்றிய அரசாங்கத்தை மேலும் சக்திவாய்ந்ததாக மாற்றும் எந்தவொரு முயற்சிக்கும் தங்களது வலுவான எதிர்ப்பை தெரிவித்தனர்.


 10 ஆண்டுகளுக்கு முன்பு, 2017-ஆம் ஆண்டின் சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) தொடர்பான அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் அதற்கான சட்டங்களை உருவாக்கும் காலகட்டத்தில், பல மாநிலங்கள், குறிப்பாக டிசம்பர் 2016-ஆம் ஆண்டுவரை முன்னாள் முதலமைச்சரால் ஜெயலலிதாவால் ஆட்சி செய்யப்பட்ட தமிழ்நாடு, தங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தது. சில கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அரசியலமைப்பு மற்றும் சட்டக் கட்டமைப்புக்கான இறுதி வடிவத்தில் சேர்க்கப்பட்டன. ஆனால், அரசியலமைப்பு மற்றும் சட்ட முக்கியத்துவம் விவகாரங்களில் மாநிலங்கள் தங்களின் குரல் ஒலிக்க வேண்டும் என்று விரும்பும் இந்த மனப்பான்மை புதியது அல்ல.


அரசியலமைப்பு சபையின் விவாதங்களில் (1946-49), தற்போதைய தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தென் மாநிலங்களைச் சேர்ந்த K. சந்தானம் மற்றும் N.G. ரங்கா ஆகியோர், பொதுப் பட்டியலை விரிவுபடுத்துவதன் மூலம் ஒன்றிய அரசை மேலும் சக்திவாய்ந்ததாக மாற்றும் அனைத்து முயற்சியையும் எதிர்த்தனர். ஒன்றிய-மாநில உறவுகள் ஆணையம் (2010), அதன் அறிக்கையின் தொகுதி I-ல், அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவரான அம்பேத்கர், நவீன சூழல்கள் அமெரிக்க அரசாங்கத்தை அதிக சக்தி வாய்ந்ததாக மாற்றிவிட்டன. இது மாநில அரசாங்கங்களை பலவீனப்படுத்தி, அவற்றின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிட்டது என்ற மேற்கோள் சுட்டிக்காட்டப்பட்டது. அதேபோல், "அதே நிலைமைகள் இந்திய அரசாங்கத்திற்கும் நிச்சயமாகப் பொருந்தும். மேலும், அதை வலிமையடைவதைத் தடுக்க ஒருவராலும் முடியாது" என்று அம்பேத்கர் முன்னறிவித்திருந்தார். மேலும், ஒன்றிய அரசாங்கத்தை வலிமையாக்குவதற்கான இந்தப் போக்கை நாம் எதிர்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


அரசியலமைப்பு விவாதம்: இந்தியாவில் அதிகாரம், உரிமைகள் மற்றும் ஜனநாயகம்


பொதுப் பட்டியலை விரிவுபடுத்துவது, ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான வேறுபாட்டைக் கண்டறிவதை கடினமாக்கும் என்று சந்தானம் நம்பினார். இந்தச் சூழ்நிலையில், பொதுப் பட்டியலை மிகக் குறைந்த அளவிற்குக் கட்டுப்படுத்துவது அல்லது அதில் உள்ள விஷயங்கள் தொடர்பாக ஒன்றிய மற்றும் மாநில அதிகார வரம்பின் எல்லையை தெளிவாக வரையறுப்பது ஆகிய இரண்டு யோசனைகளை அவர் முன்வைத்தார். ரங்கா இதைவிட நேரடியாகவும் விமர்சனத்துடனும் பேசினார்: “ஒன்றிய அரசாங்கத்தை வலுப்படுத்துவதன் மிக முக்கியமான விளைவுகளில் ஒன்று, அதிகாரத்தை ஒன்றிய அரசாங்கத்திடம் அல்ல, மாறாக ஒன்றிய செயலகத்திடம் ஒப்படைப்பதாக இருக்கும். ஒன்றிய செயலகத்தில் உள்ள அலுவலக உதவியாளர் அல்லது தபால்காரர் முதல் அங்குள்ள செயலாளர் வரை, அவர்களில் ஒவ்வொருவரும் தங்களை ஒரு மாநிலத்தின் முதலைமச்சரைவிட மிகவும் முக்கியமான நபராகக் கருதுவார்கள். மேலும், மாகாணங்களின் முதலைமச்சர்கள் ஒன்றிய அரசிடமிருந்து சிறிதளவாவது கவனத்தைப் பெறுவதற்காக, ஒன்றிய அரசை சார்ந்திருக்க வேண்டிய சூழலிற்கு தள்ளப்படுவார்கள் என்று அரசியலமைப்பு நிர்ணய சபையில் ரங்கா கூறியதாக ஆணையத்தின் அறிக்கை பதிவு சுட்டிக்காட்டுகிறது.


மாநிலத் தலைநகரில், 1947-ஆம் ஆண்டு ஜூன் மாதம், அப்போதைய மெட்ராஸ் (இப்படித்தான் தமிழ்நாடு அப்போது அழைக்கப்பட்டது) சட்டமன்றத்தின் சபாநாயகரும், மகாத்மா காந்தியின் தீவிரப் பற்றாளருமான J. சண்முகம்பிள்ளை, அரசியலமைப்புச் சபையின் செயலாளரான H.V.R. ஐயங்காருக்கு வரைவு அரசியலமைப்புச் சட்டத்தின் நகலைக் கேட்டு கடிதம் எழுதினார். மாநிலத்தில் சபாநாயகர் பதவியை வகித்த முதல் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் J. சண்முகம்பிள்ளை ஆவார். இதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், சண்முகம்பிள்ளை சார்ந்த காங்கிரஸ் கட்சி, தேர்தல் நடைபெற்ற 215 இடங்களில் 164 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்திருந்தது.


ரோஹித் டி மற்றும் ஓர்னிட் ஷானி ஆகியோரின், Assembling India’s Constitution: A New Democratic History (பெங்குயின் ரேண்டம் ஹவுஸ், 2025) என்ற நூலின்படி, "இது ஒரு வழக்கமான நடைமுறை என்று அவர் J. சண்முகம்பிள்ளை நம்பினார். ஏனெனில், விதி 63 (1) K.M. முன்ஷி கொண்டு வந்த ஒரு தீர்மானத்தைத் தொடர்ந்து, விதியின் முழுப் பகுதியும் ஜூலை 1947-ல் நீக்கப்பட்டது. அந்த ஆவணம் இறுதி செய்யப்படுவதற்கு முன்பு, மாகாணங்களும் சுதேச அரசுகளும் வரைவு மீதான தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தது. அந்த விதி நடைமுறையில் இல்லாததால், சட்டமன்றச் செயலகம் பிள்ளையின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.


சில மாதங்களுக்குப் பிறகு, இந்த விஷயம் தொடர்பாக J. சண்முகம்பிள்ளைக்கும் அரசியலமைப்புச் சபையின் செயலகத்திற்கும் இடையே கடிதப் பரிமாற்றம் நடந்திருப்பது பொதுமக்களுக்குத் தெரியவந்தது. ஒரு முன்னணித் தமிழ் நாளிதழான 'தினத்தந்தி'யின் நிறுவனர் S.B. ஆதித்தன், சட்டமன்ற மேலவையில் நடந்த ஒரு விவாதத்தில் பங்கேற்றபோது, ​​1947 செப்டம்பர் 24 அன்று இந்தத் தகவலை வெளியிட்டார்.


அரசியலமைப்பு வரைவு மசோதா மாகாண சட்டமன்றத்தால் பரிசீலனைக்காக விரைவில் அல்லது எந்த நேரத்திலும் அனுப்பப்படாது என்று S.B. ஆதித்தன் கூறினார். செப்டம்பர் 25, 1947 அன்று தி இந்து நாளிதழ் இந்த செய்தியை வெளியிட்டது.


காங்கிரஸை விமர்சித்தவரும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான A. லட்சுமணசாமி முதலியார், சட்டமன்ற மேலவையால் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும், அரசாங்கம் வரைவை "விரைவில்" பரிசீலனைக்கு எடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரியபோது ஆதித்யன் ஒரு கருத்தை தெரிவித்தார். உண்மையில், பிள்ளைக்கு அனுப்பப்பட்ட தகவலைக் கருத்தில் கொண்டு, முதலியாரின் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று முன்னாள் பத்திரிகையாளர் வாதிட்டார். மூத்த பத்திரிகையாளர் முதலியார் தனது தீர்மானத்தை வலியுறுத்த வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எந்தவொரு தீர்மானமும் அரசியலமைப்பு சபையின் அதிகாரங்களுக்கு "நேரடி சவாலாக" இருக்கும் என்று அவர் வாதிட்டார். மேலும், அத்தகைய தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது அர்த்தமற்ற ஒரு 'கடிதமாகவே இருக்கும் என்றும், அதை ஏற்றுக்கொள்வது விவேகமற்ற செயல் என்றும் அவர் கூறினார். மேலும், அந்தச் சட்டமன்றம் மாகாண சட்டமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டிருந்தது என்றும், முன்மொழியப்பட்ட தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது மாகாண சட்டமன்றம் விரும்பிய விவாதத்தை அந்தச் சட்டமன்றம் "கட்டுப்படுத்த முயற்சிக்கிறது" என்ற தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் என்றும் ஆதித்யன் குறிப்பிட்டார்.


ஆனால், அரசியலமைப்பு நிர்ணய சபையைப் போலவே இந்த அவையும் ஒரு இறையாண்மை பெற்ற அமைப்பு என்றும், அந்தத் தீர்மானத்தின் மீது விவாதம் அனுமதிக்கப்படாவிட்டால், அது அவையின் சிறப்புரிமைகளை மீறுவதாக (privileges of the House) அமைந்துவிடும் என்றும் கூறி, முதலியார் அவரது வாதத்தை மறுத்தார். இதில், பி. நாராயணசாமி நாயுடு, K.T. M. அகமது இப்ராஹிம் மற்றும் R. சூர்யநாராயண ராவ் உள்ளிட்ட மற்ற உறுப்பினர்களும் அவருக்கு ஆதரவளித்தனர். சட்ட மேலவை இதுபோன்ற ஒரு தீர்மானத்தைப் பற்றி விவாதிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை என்று அவர்கள் கூறினர்.


அக்காலத்தில் தங்குதூரி பிரகாசம் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராக இருந்த P. சுப்பராயன், தனது கருத்துக்களை மிகவும் சுருக்கமாகத் தெரிவித்தார். வரைவு மசோதாக்களை மாகாண சட்டமன்றங்களுக்கு அனுப்பும் அசல் அரசியலமைப்புச் சபையின் விதி நீக்கப்பட்டதையும், அது தொடர்பான பிள்ளையின் கடிதப் பரிமாற்றங்களையும் அவர் குறிப்பிட்டார். சட்டமன்ற உறுப்பினர்கள் மாகாண சட்டமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும், அந்தச் சட்டமன்றம் ஒரு "இறையாண்மை பெற்ற அமைப்பு" (sovereign body) என்றும் உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.


மூன்று மாதங்களுக்குப் பிறகு, அந்த ஆண்டு டிசம்பர் 17 அன்று, முதலியாரின் தீர்மானம் மீண்டும் அவையில் விவாதிக்கப்பட்டது. அப்போது உறுப்பினர் V.K. ஜான், அரசியலமைப்பு உருவாக்கும் செயல்முறையைத் தாமதப்படுத்துவது "ஆபத்தானது" என்று கூறி, அந்தத் தீர்மானத்தை கடுமையாக எதிர்த்தார். இந்த முறை, சுப்பராயன் அந்தத் தீர்மானம் ஏன் முன்னெடுத்துச் செல்லப்படக் கூடாது என்றும், ஒன்றிய அரசுக்கு ஏன் அதிக அதிகாரங்கள் தேவை என்றும் விரிவாகப் பேசினார். அமெரிக்காவின் உதாரணத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். அங்கு, அரசியலமைப்பைச் செயல்படுத்தும்போது, ​​அமெரிக்க அரசியலமைப்பை உருவாக்கியவர்களால் கருதப்படாத பல அதிகாரங்களை ஒன்றிய அரசு தனக்கே எடுத்துக்கொள்ளத் தொடங்கியுள்ளது என்று அவர் கூறினார்.


அனைத்து கூட்டாட்சி அமைப்புகளிலும், ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அதிகரித்து வருவதே ஒரு போக்காக இருந்தது. ஏனெனில், நவீன அரசாங்கங்கள் செயல்பட வலுவான ஒன்றிய அதிகாரம் தேவைப்படுகிறது. ஒன்றிய அரசு மற்ற நாடுகளுடன் உறவுகளைக் கையாள வேண்டும். எனவே சர்வதேச அளவில் மரியாதையைப் பெற அதற்குப் போதுமான அதிகாரம் தேவை என்று உள்துறை அமைச்சர் விளக்கினார். மாகாணங்கள் தங்கள் சொந்த நலன்களை மேம்படுத்திக்கொள்ளப் போதுமான அதிகாரம் பெற்றிருக்க வேண்டும் என்ற முதலியாரின் கருத்துடன் தாம் முழுமையாக உடன்படுவதாகவும் அவர் மேலும் கூறினார். இறுதியில், அந்தத் தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.


78 ஆண்டுகளுக்கு முன்பு சட்ட மேலவையில் நடைபெற்ற விவாதங்கள், மாநிலத்தின் சட்டமியற்றுபவர்களின் திறமையை எடுத்துக்காட்டுகின்றன.

 Original Article : How the Tamil Nadu legislature, in the late 1940s, viewed the making of the Constitution? -T. Ramakrishnan

Share: