முக்கிய அம்சங்கள்:
முதலாவதாக, குறைந்த நுகர்வோர் விலைக் குறியீட்டுப் (Consumer Price Index (CPI)) பணவீக்கத்திற்குக் காரணம், கடந்த ஆண்டு பணவீக்கம் அதிகமாக இருந்ததே ஆகும். இது இந்த ஆண்டின் புள்ளிவிவரங்களைக் குறைவாகக் காட்டுகிறது. குறைந்த பணவீக்கம் குறித்துக் குடும்பங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.
பணவீக்கக் கருத்து குறித்த ரிசர்வ் வங்கியின் (RBI) ஆய்வுகள், நவம்பர் மாதத்தில், குடும்பங்கள் பணவீக்கத்தை 6.6 சதவீதமாகக் கணித்துள்ளதாகவும், அதற்கு முந்தைய மூன்று மாதங்களில் இது 7.6 சதவீதமாக இருந்ததாகவும் காட்டுகின்றன. இந்த எண்கள் முந்தைய கணக்கெடுப்பு சுற்றுகளைவிடக் குறைவாக இருந்தாலும், இந்த புள்ளிவிவரங்கள் களத்தில் கருத்துக்கள் மிகவும் வேறுபட்டவை என்பதைக் காட்டுகின்றன.
இரண்டாவதாக, இந்த புள்ளிவிவரங்கள் வட்டி விகிதங்களைத் தீர்மானிப்பதில் ரிசர்வ் வங்கிக்கு ஒரு சவாலை உருவாக்குகின்றன. டிசம்பர் மாதத்தில், பணவியல் கொள்கைக் குழு (Monetary Policy Committee (MPC)) ரெப்போ விகிதத்தைக் குறைத்தபோது, பணவீக்கம் குறைவாகவும் பொருளாதார வளர்ச்சி வலுவாகவும் இருந்தது.
விகிதங்களை மீண்டும் குறைப்பது பொருத்தமானதாக இருக்கும். ஆனால், குறைந்த அடிப்படை விளைவு காரணமாக பணவீக்கம் உயரும்போது என்ன நடக்கும்? விகிதங்கள் அதிகரிக்கப்படுமா?
மூன்றாவதாக, குறைந்த பணவீக்கம் கவலைக்குரிய ஒரு விவகாரமாகும். ஏனெனில், உணவுப் பணவீக்கம் எதிர்மறையாக இருக்கும்போது, காரிஃப் பயிர்களின் உற்பத்தி சிறப்பாக இருந்தபோதிலும், விவசாயிகளுக்குக் குறைந்த வருமானம் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இது தொடர் விளைவுகளை (ripple effects) ஏற்படுத்தும்.
ஊரக பகுதிகளில் வருமானங்கள் பாதிக்கப்பட்டால், ஊரக பகுதிகளில் உள்ள மக்களின் செலவழிக்கும் சக்தி குறையும் மேலும் சரக்கு மற்றும் சேவை வரி 2.0-ன் நன்மைகளும் மறைந்துவிடும்.
நான்காவதாக, உற்பத்தித் துறையின் கண்ணோட்டத்தில், குறைந்த பணவீக்கம், குறிப்பாக மொத்த விற்பனைப் பிரிவில், ஒரு நல்ல செய்தி அல்ல. ஏனெனில், இது விலை நிர்ணய சக்தியும் குறைவதைக் குறிக்கிறது. நிறுவனங்களின் லாபத்திற்கு அதிக உற்பத்தி ஒரு முக்கியப் பங்களிப்பாக இருந்தாலும், விலைகள் மிகவும் முக்கியமானது.
ஐந்தாவது, குறைந்த பணவீக்கம் ஏற்கனவே சரக்கு மற்றும் சேவை வரி வசூலில் சிறிது மந்தநிலையை ஏற்படுத்தியுள்ளது. குறைந்த வரி விகிதங்களால் வசூல்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கேள்வி என்னவென்றால், தொடர்ந்து குறைந்த பணவீக்கத்துடன் வரும் வரி வருவாயில் ஏற்படும் வளர்ச்சி நீடிக்குமா என்பதுதான்?
- ஆறாவது, குறைந்த பணவீக்கம் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கடந்த காலத்தில் சராசரியாக 3-4 சதவீத புள்ளிகளின் வேறுபாட்டிற்கு எதிராக உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட சிறிதளவு அதிகமாக இருக்கும் சூழ்நிலைக்கு வழிவகுத்தது.
குறைந்த பெயரளவு வளர்ச்சி, நிதிப் பற்றாக்குறை இலக்குகளை அடைவதற்கு ஒரு சவாலாக அமைகிறது. 2027ஆம் ஆண்டு நிதியாண்டிற்கான நிதிசார் புள்ளிவிவரங்களைக் கணிக்கும்போது, எந்தப் பெயரளவு வளர்ச்சி எண் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பார்ப்பது வியப்பூட்டுவதாக இருக்கும்.
எனவே, குறைந்த பணவீக்கம் வெவ்வேறு தரப்பினருக்கு வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது. சில குடும்பப் பிரிவுகள் பயனடையலாம். அதே, சமயம் சில உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படலாம். நமது பொருளாதாரத்தை சீராக இயங்க வைப்பதற்குத் தேவையான குறைந்தபட்ச பணவீக்கத்தின் அளவு 4 சதவீதமாகும். இதுவே பணவியல் கொள்கையின் இலக்காகவும் உள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
பணவீக்கம் (Inflation) என்பது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பொதுவான விலை நிலை அதிகரிக்கும் வீதமாகும். இது பணத்தின் வாங்கும் சக்தியைக் குறைக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பணவீக்கம் அதிகரிக்கும்போது, ஒவ்வொரு நாணய அலகும் முன்பைவிட குறைவான பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்க முடியும்.
— பணவீக்கத்தை அளவிடுவதற்கு நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index (CPI)), மொத்த விலைக் குறியீடு (Wholesale Price Index (WPI)), மொத்த உள்நாட்டு உற்பத்தி பணவீக்கம் (Gross Domestic Product Inflation), உற்பத்தியாளர் விலைக் குறியீடு (Producer Price Index (PPI) மற்றும் ஊதிய பணவீக்கம் போன்ற பல்வேறு முறைகள் உள்ளன. ஒவ்வொன்றும் விலை மாற்றங்களின் ஒரு குறிப்பிட்ட காரணியில் கவனம் செலுத்துகின்றன.
Original Article : What is inflation? -Khushboo Kumari , Roshni Yadav