2023-ஆம் ஆண்டு நிதி ஆயோக் அறிக்கையின்படி, 2024-ல் முடிவடைந்த 'தொழில்துறை மதிப்பு மேம்பாட்டிற்கான திறன்களை வலுப்படுத்துதல்’ (Skill Strengthening for Industrial Value Enhancement (STRIVE)) திட்டத்தின்கீழ் செலவிடப்பட்ட ரூ.2,200 கோடிக்கு கூடுதலாக, 3,500 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களின் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் ஆண்டுதோறும் ரூ.10,000 கோடி செலவிடுகிறது. இது போன்ற கணிசமான முதலீடு இருந்தபோதிலும், வேலைவாய்ப்பு முடிவுகள் மிகவும் குறைவாகவே உள்ளன என்று அந்த அறிக்கை கூறுகிறது: பயிற்சி பெற்ற 4,14,247 நபர்களில் 405 நபர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இது வெறும் 0.09 சதவீத வேலைவாய்ப்பு விகிதத்திற்குச் சமமானதாகும்.
2026-27-ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கையில் முன்மொழியப்பட்ட ரூ.6,000 கோடி ஒதுக்கீட்டுடன், மேம்படுத்தப்பட்ட தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மூலம் பிரதம மந்திரி திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு மாற்றம் (Pradhan Mantri Skilling and Employability Transformation through Upgraded ITIs (PM-SETU)) திட்டம், என்பது திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் மிகப்பெரிய திட்டமாகும். ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கையில் ரூ.9,800 கோடி தொகையை அமைச்சகம் எடுத்துக்கொள்கிறது. அக்டோபர் 4, 2025 அன்று தொடங்கப்பட்ட PM-SETU திட்டம், இந்தியாவில் தொழிற்பயிற்சியை மேலும் வேலைவாய்ப்பு சார்ந்ததாக மாற்றுவதற்காக, தொழிற்பயிற்சி நிறுவனங்களை நவீனமயமாக்கி மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஒன்றிய அரசின் நிதியுதவித் திட்டமாகும்.
திட்ட வழிகாட்டுதல்களின்படி, இதன் செயலாக்கம் இரண்டு கூறுகளைக் கொண்டுள்ளது: 1,000 தொழிற்பயிற்சி நிறுவனங்களை (Industrial Training Institutes (ITIs)) தரம் உயர்த்துவது மற்றும் திறன் மேம்பாடு மற்றும் பயிற்றுநர் மேம்பாட்டிற்கான முதன்மை நிறுவனங்களாக ஐந்து தேசிய திறன் பயிற்சி நிறுவனங்களை (National Skill Training Institutes (NSTIs)) உருவாக்குவது போன்றவையாகும். இந்த இரண்டு கூறுகளுக்கும் சேர்த்து, ஐந்து ஆண்டு காலத்திற்கு மொத்தம் ரூ.60,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் அரசு தொழிற்கல்வி நிறுவனங்களுக்கு என்ன என்ன உதவி செய்ய உள்ளது?
மேம்படுத்தப்பட்ட தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மூலம் பிரதம மந்திரி திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு மாற்றம் (Pradhan Mantri Skilling and Employability Transformation through Upgraded ITIs (PM-SETU)) திட்டத்தின் வழிகாட்டுதல்களின்படி, 200 மைய தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மற்றும் 800 துணை தொழிற்பயிற்சி நிறுவனங்களை உள்ளடக்கிய ஆயிரம் அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள், ஒரு மைய-துணை மாதிரியின் (hub-and-spoke model) கீழ் மேம்படுத்தப்பட உள்ளன. இதில் மைய தொழிற்பயிற்சி நிறுவனங்கள், சராசரியாக நான்கு துணை தொழிற்பயிற்சி நிறுவனங்களுடன் இணைக்கப்பட்ட முதன்மை நிறுவனங்களாக செயல்படும். மேம்படுத்தப்பட்ட அனைத்து தொழிற்பயிற்சி நிறுவனங்களும் 'அதிநவீன' உள்கட்டமைப்பு, இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுடன் பொருத்தப்பட உள்ளன. தொழிற்பயிற்சி நிறுவனங்கள் குழுக்களின் தேர்வு, தொழில் பங்குதாரரால் சமர்ப்பிக்கப்பட்டு, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டு, இறுதியாக ஒன்றிய அரசின் குழுவால் அனுமதிக்கப்பட்ட முதலீட்டுத் திட்டத்தின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. இதற்கு ஒன்றிய அரசு 50%, மாநிலங்கள் 33% மற்றும் தொழில் துறை 17% என்ற செலவுப் பகிர்வு முறையின் மூலம் நிதியளிக்கப்படுகிறது. வடகிழக்கு மற்றும் மலைப்பாங்கான மாநிலங்கள் மற்றும் சில யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் பங்களிப்பு அதிகமாக (83% வரை) இருக்கும்.
இரண்டாவது கூறு, 33 தேசிய திறன் பயிற்சி நிறுவனங்களில் (National Skill Training Institutes (NSTIs)) இருந்து புவனேஷ்வர், சென்னை, ஹைதராபாத், கான்பூர் மற்றும் லூதியானாவில் உள்ள ஐந்து நிறுவனங்களின் திறன் மேம்பாடு மற்றும் உலகளாவிய நிறுவனங்களுடன் இணைந்து, திறன் மேம்பாடு மற்றும் பயிற்றுநர் மேம்பாட்டிற்கான முதன்மை நிறுவனங்களாக அவற்றை மாற்றுவது தொடர்பானது ஆகும். இந்த ஐந்து நிறுவனங்களும், நிறுவனத்தின் நிலப்பரப்பு, வர்த்தகப் பன்முகத்தன்மை, தற்போதுள்ள இருக்கை வசதி, விரிவாக்கத்திற்கான வாய்ப்பு, ஆசிரியர்களின் இருப்பு மற்றும் பிற காரணிகள் போன்ற அளவுகோல்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்றும் மேலும் குறிப்பிடுகிறது. இது ஒரு செலவுப் பகிர்வு மாதிரியைப் (cost-sharing model) பின்பற்றுகிறது; இதில் ஒன்றிய அரசிடமிருந்து 80% நிதியும், தொழில்துறையிடமிருந்து 20% நிதியும் வழங்கப்படுகிறது.
“அரசாங்கத்திற்குச் சொந்தமான, தொழில்துறையால் நிர்வகிக்கப்படும்” (“government-owned, industry- managed) மாதிரியில் தனியார் துறையின் பங்கு என்ன?
2010-ஆம் ஆண்டிலிருந்து, தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கான பொது-தனியார் கூட்டாண்மை (public–private partnership (PPP)) மாதிரி நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. முந்தைய வழிகாட்டுதல்களின்கீழ், தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்குத் தலைமை தாங்கும் நிறுவன மேலாண்மைக் குழுக்கள் (Institute Management Committees (IMCs)) மூலம் தொழில்துறை தலைமையிலான பங்கேற்பு நிறுவனமயமாக்கப்பட்டது. அதேநேரத்தில், நிதி மற்றும் செயல்பாடுகளுக்கான பொறுப்பை மாநில அரசு தக்கவைத்துக்கொண்டதுடன், ஒன்றிய அரசு ரூ.2.5 கோடி வரை வட்டி இல்லாத கடனை வழங்கியது. பங்கேற்பதற்குத் தொழில்துறைப் பங்காளரின் நிதிப் பங்களிப்பு ஒரு முன்நிபந்தனை அல்ல; மாறாக, அத்தகைய பங்களிப்புகள் தொழிற்பயிற்சி நிறுவனங்களைத் தரம் உயர்த்துவதற்கும், ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சி அளிப்பதற்கும், மாணவர்களுக்குப் பணியிடப் பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்கும் முக்கியமானவை என்று விவரிக்கப்பட்டன. காலப்போக்கில், பல மாநில அரசுகள் பொது-தனியார் கூட்டாண்மை மாதிரியை ஏற்றுக்கொண்டுள்ளன; இதில் சில தொழிற்பயிற்சி நிறுவனங்களின் செயல்பாடு மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளத் தொழில்துறை நிறுவனங்களை அழைப்பதும் அடங்கும். இதன் மூலம் தனியார் நிறுவனங்களின் பங்கு மற்றும் நோக்கம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், தற்போதைய வழிகாட்டுதல்கள், கட்டாயப் பங்களிப்புடன் தேசிய அளவில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கின்றன. அவை ஒரு தனிப்பட்ட தொழில் பங்குதாரர் அல்லது பங்குதாரர்களின் கூட்டமைப்பு மூலம் பங்கேற்க அனுமதிக்கின்றன. அதே நேரத்தில், தொழிற்பயிற்சி நிறுவன குழுமங்களுக்கு குறைந்தபட்சம் 17% தொழில் பங்களிப்பை ஒரு கட்டாய நிபந்தனையாக ஆக்குகின்றன. மேலும், ஐந்து ஆண்டு காலம் தேசிய வழிகாட்டுதல் குழுவிற்கு ரூ40 கோடி குறைந்தபட்ச உறுதியளிக்கப்பட்ட தொழில் முதலீட்டையும் பரிந்துரைக்கின்றன. இந்த கடமைகளை நிறைவேற்ற பெருநிறுவன சமூகப் பொறுப்பு (Corporate Social Responsibility (CSR)) நிதியைப் பயன்படுத்தவும் இந்த வழிகாட்டுதல்கள் அனுமதிக்கின்றன. தனியார் பங்குதாரர் ஒரு ஏல செயல்முறை (bidding process) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார். இதில், மாநில அரசாங்கம் சிறந்த முன்மொழிவுகளைத் தேர்ந்தெடுத்து, இறுதி ஒப்புதலுக்காக, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் செயலாளரின் தலைமையிலான தேசிய வழிகாட்டுதல் குழுவிற்கு (National Steering Committee (NSC)) அனுப்புகிறது. குறிப்பாக தேசிய திறன் பயிற்சி நிறுவனங்களைப் பொறுத்தவரை, தேசிய வழிகாட்டுதல் குழு நேரடியாக ஒப்புதல் அளிக்கிறது. இந்த அமைப்பின் கீழ், மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்குதல், அவற்றைச் செயல்படுத்துதல் மற்றும் முக்கிய இலக்குகளை (key performance indicators (KPIs)) அடைதல் ஆகியவற்றில் தனியார் பங்குதாரர் முன்னிலை வகிக்கிறார்.
மைய இடத்திலிருந்து பல கிளை (Hub-and-Spoke) மாதிரி குறித்த கவலைகள் என்ன?
மைய இடத்திலிருந்து பல கிளை மாதிரியில், ஒவ்வொரு மைய இடத்திலிருந்து கிளையையும் குறைந்தபட்சம் நான்கு மைய இடத்திலிருந்து தொழிற்பயிற்சி நிறுவனங்களுடன் இணைகிறது. முதன்மைத் தொழில் கூட்டாளர் (Anchor Industry Partner (AIP)) என்பவர், உத்திமுறை முதலீட்டுத் திட்டத்தில் (Strategic Investment Plan (SIP)) விவரிக்கப்பட்டுள்ள அளவுகோல்களின் அடிப்படையில் மைய இடத்திலிருந்து பல கிளை தொழிற்பயிற்சி நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கிறார். இந்த உத்திமுறை முதலீட்டுத் திட்டமானது, தொழிற்பயிற்சி நிறுவனங்களின் அடிப்படைப் பண்புகள், முன்மொழியப்பட்ட தலையீடுகள், விளைவு இலக்குகள் மற்றும் செயலாக்க உத்திகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்க வேண்டும்; நிதி ஒதுக்கீட்டிற்கு முன்பு, இதற்கு மாநில வழிகாட்டுதல் குழு மற்றும் பின்னர் தேசிய வழிகாட்டுதல் குழுவின் (National Steering Committee (NSC)) ஒப்புதல் தேவைப்படுகிறது. இந்தத் திட்டம் 100 முதல் 125 தொழிற்பயிற்சி நிறுவனங்களை உள்ளடக்கிய 20–25 மைய இடத்திலிருந்து பல கிளை மாதிரி தொகுப்புகளுடன் ஒவ்வரு கட்டமாகச் செயல்படுத்தப்படுகிறது.
மைய இடத்திலிருந்து பல கிளை மாதிரிக்கு தொழிற்பயிற்சி நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை குறித்துப் பேசுகையில், தொழிற்கல்வித் துறையில் பணியாற்றும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான 'Lend-A-Hand India'-வின் இணை நிறுவனர் ராஜ் கில்டா, தொகுப்புகளைத் தேர்ந்தெடுப்பது என்பது, மைய இடத்திலிருந்து பல கிளை மாதிரி தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கு இடையே உள்ள வர்த்தகங்களின் பொதுத்தன்மை, நிறுவன செயல்பாடுகள் மற்றும் பகிரப்பட்ட தொழில் ஆர்வம் ஆகியவற்றைப் பொறுத்து அமையும் என்று குறிப்பிடுகிறார். புவியியல் மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த காரணிகளைக் கருத்தில் கொள்ளும்போது, நகர்ப்புற மையங்களில் அல்லது அதற்கு அருகிலுள்ள தொழிற்பயிற்சி நிறுவனங்கள் எளிதாகப் பயனடையக்கூடும் என்றும், அதே சமயம், பெரும்பாலும் வெவ்வேறு உள்ளூர் திறன் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கிராமப்புற தொழிற்பயிற்சி நிறுவனங்கள், தளவாடச் சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம் அல்லது புறக்கணிக்கப்படும் அபாயத்தை சந்திக்க நேரிடலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். இந்த செயல்முறைகள் நடைமுறையில் எவ்வாறு செயல்படுகின்றன என்பது, இறுதியில் இந்த மாதிரி களத்தில் எவ்வாறு உருவாகிறது என்பதைப் பொறுத்தது அமையும் என்றும், இது செயல்படுத்தலின் அடுத்தடுத்த கட்டங்களில் கவனிக்கப்படலாம் என்றும் அவர் மேலும் கூறுகிறார்.
முந்தைய திட்டங்களின் செயல்திறன் எப்படி இருந்தது?
2023-ஆம் ஆண்டு நிதி ஆயோக் அறிக்கையின்படி, அரசாங்கம் 3,500 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களின் சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ரூ.10,000 கோடி பொதுச் செலவினத்தின் மூலம் செலவு செய்தது. இது தவிர, 2024-ல் முடிவடைந்த ''தொழில்துறை மதிப்பு மேம்பாட்டிற்கான திறன்களை வலுப்படுத்துதல்’ (Skill Strengthening for Industrial Value Enhancement (STRIVE)) திட்டத்தின் கீழ் ரூ.2,200 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஜூலை 2022 நிலவரப்படி கிடைத்த தரவுகளின் அடிப்படையில், இது போன்ற கணிசமான முதலீடு இருந்தபோதிலும், வேலைவாய்ப்பு முடிவுகள் மிகவும் மோசமாக இருந்ததாக அந்த அறிக்கை கூறுகிறது: பயிற்சி பெற்ற 4,14,247 பேரில் 405 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இது வெறும் 0.09 சதவீத வேலைவாய்ப்பு விகிதமாகும். அதே நேரத்தில், திறமையான தொழில்நுட்ப வல்லுநர்களின் பற்றாக்குறை இருப்பதாகத் தொழில்துறை தொடர்ந்து தெரிவித்து வருகிறது. பதிவுசெய்யப்பட்ட பயிற்சியாளர்களில் 6.6% மற்றும் பயிற்றுனர்களில் 15.83% மட்டுமே பெண்களாக இருப்பதால், பாலினப் பன்முகத்தன்மையில் குறிப்பிடத்தக்க பற்றாக்குறை இருப்பதையும் இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. அனுமதிக்கப்பட்ட பயிற்றுனர் பதவிகளில் 36% மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதால், ஆசிரியர்களுக்கும் கடுமையான பற்றாக்குறை உள்ளது. மேலும், ஒப்பந்த அல்லது வருகை விரிவுரையாளர்களைச் சார்ந்திருப்பது அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, இந்திய தொழிற்பயிற்சி நிறுவனங்களின் சூழல் அமைப்பு, ஜெர்மனி மற்றும் பிற ஒப்பிடக்கூடிய நாடுகளில் உள்ள தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (vocational education and training (VET)) அமைப்புகளுடன் தொடர்புடைய தர அளவுகோல்களை இன்னும் அடையவில்லை.
தெளிவாக வரையறுக்கப்பட்ட இலக்குகள் உள்ளதா?
இரு கூறுகளின் வழிகாட்டுதல்களின்படி, இந்தத் திட்டம் சீரான இலக்குகளை நிர்ணயிக்காமல், சுட்டிக்காட்டும் முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளை (Key Performance Indicators (KPIs)) வழங்குகிறது. ஒவ்வொரு மைய இடத்திலிருந்து பல கிளை மாதிரி அல்லது தேசிய திறன் பயிற்சி நிறுவனமும் (National Skill Training Institute (NSTI)) அதன் சொந்த முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளை (Key Performance Indicators (KPIs)) ராஜதந்திர முதலீட்டுத் திட்டம் (Strategic Investment Plan (SIP)) மற்றும் வருடாந்திர செயல்பாட்டுத் திட்டம் (Annual Operational Plan (AOP)) மூலம் வரையறுக்க வேண்டும்.
இந்த முக்கிய செயல்திறன் குறிகாட்டிகள் உள்கட்டமைப்பு மேம்பாடு, பயிற்சி வழங்கல் மற்றும் அதன் விளைவுகள், பயிற்சியாளர்களின் வேலைவாய்ப்பு, ஆசிரியர்களின் திறன் மற்றும் தொழில் கூட்டாண்மை நடவடிக்கைகள் போன்ற பகுதிகளை கொண்டுள்ளன. செயல்திறன் ஒரு செலவு-எடையிடப்பட்ட மதிப்பெண் முறை மூலம் மதிப்பிடப்படுகிறத. இதில் ஒவ்வொரு கூறுகளிலும் ஏற்படும் முன்னேற்றம், அதன் வரவுசெலவுப் பங்குக்கு ஏற்ப ஒட்டுமொத்த மதிப்பெண்ணில் சேர்க்கப்படுகிறது. திட்டச் செயலாக்கம் மாநில அளவில் மாநில வழிகா இந்தக் குழு மற்றும் சுதந்திர கண்காணிப்பு முகமையால் கண்காணிக்கப்படுகிறது, அதே சமயம் தேசிய திறன் பயிற்சி நிறுவனங்கள் (NSTIs) ஒன்றிய அளவில் தேசிய வழிகாட்டுதல் குழுவால் (National Steering Committee (NSC)) கண்காணிக்கப்படுகின்றன.
இந்த திட்டம் தொழில்நுட்பத் திறன் இடைவெளியைக் களைந்து, தொழிற்பயிற்சி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்குமா?
பிரதம மந்திரி திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு மாற்றம் (Pradhan Mantri Skilling and Employability Transformation through Upgraded ITIs (PM-SETU)) திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள், தொழிற் கல்வியில் அதிகமாக உள்ள ஒரு சவாலை எதிர்கொள்கின்றன. பள்ளிகள் அல்லது உயர்கல்வி நிறுவனங்களைப் போல் இல்லாமல், தொழிற் பயிற்சி நிறுவனங்களிடமிருந்து வேலைக்குத் தயாரான, குறிப்பிட்ட துறை சார்ந்த திறன்களை, பெரும்பாலும் குறுகிய காலப் படிப்புகள் மூலம் வழங்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, புதுப்பித்த தொழில்நுட்ப நிபுணத்துவம், தொடர்ச்சியான தொழில் துறை அனுபவம் மற்றும் வலுவான கற்பித்தல் தகவமைப்பு திறன் கொண்ட பயிற்றுநர்கள் தேவைப்படுகிறார்கள். இருப்பினும், அரசு மற்றும் தனியார் துறைகள் இரண்டிலும் பயிற்றுநர்களிடையே ஒரு தொடர்ச்சியான திறன் சார்ந்த இடைவெளி நிலவுகிறது என்று கில்டா குறிப்பிடுகிறார்.
இந்த இடைவெளியைக் குறைக்க, வழிகாட்டுதல்கள் மேம்படுத்தப்பட்ட தொழில் துறை பங்கேற்பை நம்பியிருப்பதாகத் தெரிகிறது. குறைந்தபட்சம் 17% தொழில் துறை இணை நிதி பங்களிப்பு, வாரிய அளவிலான முடிவெடுப்பதில் அதிகக் கட்டுப்பாடு மற்றும் பாடத்திட்ட வடிவமைப்பு, ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி ஆகியவற்றில் விரிவுபடுத்தப்பட்ட பொறுப்புகள் போன்றவை இதன் முக்கிய அம்சங்களாகும். இது பலவிதமான பணியாளர் நியமன செயல் முறைகளையும் அனுமதிக்கிறது. இதில் அரசு தொழிற்பயிற்சி நிறுவன ஊழியர்களுடன் சிறப்பு நோக்க வாகனத்தால் (Special Purpose Vehicle (SPV)) நியமிக்கப்பட்ட பணியாளர்கள் இணைந்து பணியாற்றுவது, அரசு ஊழியர்களை SPV-க்கு மாற்றுப் பணியில் அனுப்புவது அல்லது தொழிற்பயிற்சி நிறுவனங்கள் முழுவதுமாக SPV-யால் சொந்தமாக நியமிக்கப்பட்ட ஊழியர்களால் நிர்வகிக்கப்படுவது ஆகியவை அடங்கும். இருப்பினும், மாற்றங்கள் செயல்பாடுகளை பொறுத்து இருக்கும். செயல்பாடுகள் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் கருவிகள், உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்புடன் பயிற்சியாளர்களுக்கு சமமாக முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும், தொழிற்கல்வியின் குறிப்பிட்ட தொழில்நுட்ப திறன்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கில்டா கூறுகிறார்.
தொழில் கூட்டாளிகள் சிறு அளவிலான உள்ளூர் தொழில்கள் இல்லையா?
தொழில்துறை பங்குதாரர்கள் முக்கியமாக நம்பகமான முன்னணி தொழில்துறை பங்குதாரர்கள் (Anchor Industry Partners (AIPs)), வருவாய், செயல்பாட்டு அளவு மற்றும் பணியாளர் எண்ணிக்கை போன்ற தகுதி அளவுகோல்கள் மாநிலங்களால் எச்சரிக்கையுடன் அமைக்கப்பட்டு "சிறிய நேர ஆபரேட்டர்களை" தடுக்கின்றன. நிதிரீதியாகவும் செயல்பாட்டுரீதியாகவும் உறுதியளிக்கக்கூடிய பெரிய, நிறுவப்பட்ட நிறுவனங்களுக்கு இவை சாதகமாக உள்ளன.
தொழில்துறை என்பதைப் பெரிய நிறுவனங்கள் என்று மட்டுமே புரிந்துகொள்ளக் கூடாது என்று கிட்லா வாதிட்டார். 'தொழில்துறை' என்பதைப் பெரிய நிறுவனங்களுடன் மட்டுமே ஒப்பிடுவது, பெரும்பாலான வேலைவாய்ப்புகள் உண்மையில் எங்கு உள்ளன என்பதைப் புறக்கணிக்கிறது என்றும், அவை உள்ளூர் மற்றும் சிறுதொழில்களில்தான் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். சம்பந்தப்பட்ட முதலீட்டின் அளவைக் கருத்தில் கொண்டு, சிறுதொழில்கள் பங்கேற்கத் தகுதியற்றவையாகவோ அல்லது ஆர்வம் இல்லாதவையாகவோ இருக்கலாம். இருப்பினும், தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் தங்களின் இருப்பை தக்கவைத்துக்கொள்ள, தொழில் பங்குதாரர்கள் மூலம் அந்தச் சிறுதொழில்களுடன் மிகவும் வலுவான, முறையான, கள அளவிலான தொடர்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஏற்கனவே உள்ள தொழில்துறை பயிற்சி நிறுவன பட்டதாரிகளை ஆண்டுதோறும் பணியமர்த்துவதற்குப் போதுமான தேவை அல்லது வாய்ப்பு உள்ளதா?
ராஜதந்திர முதலீட்டுத் திட்டத்திற்கு (Strategic Investment Plan (SIP)) உள்ளூர் தொழிலாளர் சந்தை ஆய்வுகள், தொழில்துறை மதிப்புச் சங்கிலி பகுப்பாய்வு மற்றும் துறைகள் முழுவதும் நிபுணர் ஆலோசனைகள் தேவைப்பட்டாலும், தனியார் மையாமக்கபட்ட திட்டங்களுக்கு உள்ளூர் தொழில்கள் அல்லது சிறு நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு தேவைப்பட்டாலும், ராஜதந்திர முதலீட்டுத் திட்ட மதிப்பீட்டு செய்யும்போது, உட்பிரிவு வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில்துறையுடன் தொடர்புடைய வேலை செயல்திறன் போன்ற கருதுகோள்களும் முக்கியமாக பார்க்கப்படுகின்றன. இந்த சூழலில், மதிப்பெண் பெறுபவர்களை ஆண்டுதோறும் வேலைக்கு எடுத்துக்கொள்ள போதுமான, நிலையான தேவை உள்ளதா என்ற கேள்வி தொடர்ந்து நிலவி வருகிறது.
கில்டா கருத்துப்படி, தொழிற்பயிற்சி நிறுவன பட்டதாரிகளின் எண்ணிக்கை போதுமான அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்காத போதிலும், மாணவர்கள் முதன்மையாகப் புகழ்பெற்ற நிறுவனங்களில் வேலை செய்யவே விரும்புகிறார்கள் என்பதுதான் முரண்பாடாக உள்ளது. அதே நேரத்தில், வலுவான கூட்டுத் தேவையைக் கொண்ட உள்ளூர் முதலாளிகளும் சிறு தொழில்களும் பட்டதாரிகளை ஈர்ப்பதில் சிரமப்படுகின்றன. ஏனெனில், மாணவர்கள் அத்தகைய வேலைகளின் குறைந்த லட்சிய மதிப்பு மற்றும் சமூக அங்கீகாரம் காரணமாக அவற்றை பெரும்பாலும் தவிர்க்கின்றனர்.
(ஆசிரியர் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஒரு சுயாதீன பத்திரிகையாளர், அரசியல், மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள், முதன்மையாக ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவிலிருந்து வரும் பிரச்சினைகள் குறித்து எழுதுகிறார். அவர் இப்போது அனைத்து மாநிலங்களிலும் கல்வியை உள்ளடக்கிய தனது பணியை விரிவுபடுத்துகிறார்)