2026-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்படவிற்கும் இந்தியாவின் வரவு-செலவு அறிக்கைக்கு முன்னதாக, அரசாங்கத்தின் செலவினங்கள், வரிவிதிப்பு மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைக்கும் அத்தியாவசிய வரவு-செலவு அறிக்கை குறித்து புரிந்துகொள்ளுங்கள்.
2026-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள வரவு-செலவு அறிக்கை, அரசாங்கத்தின் செலவினங்கள், அரசாங்கம் விதிக்கத் திட்டமிட்டுள்ள வரிகள், பொருளாதாரம் மற்றும் குடிமக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் பிற பரிவர்த்தனைகள் குறித்த அரசாங்கத்தின் செயல் திட்டமாகும். புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் இந்தியாவிலிருந்து அனுப்பப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50% செங்குத்தான வரி ஆகியவற்றுக்கு மத்தியில் நிதியமைச்சர் வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார். இந்தியாவின் வரலாற்றில் ஒன்றிய அரசின் ஒரு வரவு செலவு அறிக்கை ஞாயிற்றுக்கிழமை அன்று தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
வரவு செலவு அறிக்கைக்கு முன்னதாக, பொதுச் செலவினங்கள் மற்றும் வருவாய்கள் எவ்வாறு விவாதிக்கப்படுகின்றன என்பதை வடிவமைக்கும் சில முக்கியச் சொற்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
பணவீக்கம் (Inflation)
பணவீக்கம் என்பது ஒரு பொருளாதாரத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயர்வதைக் குறிக்கிறது. காலப்போக்கில் பணத்தின் வாங்கும் சக்தி குறைவதையும் இது குறிக்கிறது. பணவீக்க விகிதம் என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் விலைகள் எவ்வளவு சதவீதம் மாறியுள்ளன என்பதைக் காட்டுகிறது.
நிதிக் கொள்கை (Fiscal policy)
நிதி கொள்கை என்பது ஒரு அரசாங்கம் எவ்வளவு செலவழிக்க வேண்டும் மற்றும் எவ்வளவு வரி வசூலிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதன் மூலம் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதாகும். நிதிக் கொள்கை (Fiscal policy) அரசாங்க வரவு செலவுத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
பணவியல் கொள்கை (Monetary Policy)
பண விநியோகம் மற்றும் வட்டி விகிதம் தொடர்பான முடிவுகள் மூலம் ஒரு பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு முறையாகும். ஒரு மத்திய வங்கி (ரிசர்வ் வங்கி) மேற்கொள்ளும் நடவடிக்கைகளே பணவியல் கொள்கை எனப்படும்.
மூலதன செலவு அறிக்கை (Capital Budget)
மூலதன செலவு அறிக்கை என்பது மூலதன வரவுகள் மற்றும் செலவுகளைக் கொண்டுள்ளது. இதில் பங்குகளில் செய்யப்படும் முதலீடுகள், ஒன்றிய அரசால் மாநில அரசுகள், அரசு நிறுவனங்கள், கழகங்கள் மற்றும் பிற தரப்பினருக்கு வழங்கப்படும் கடன்கள் மற்றும் முன்பணங்கள் ஆகியவை அடங்கும்.
மூலதன வரவுகள் (Capital receipts)
மூலதன வரவுகள் என்பவை அரசாங்கத்தின் கடனை அதிகரிக்கும் அல்லது அதன் சொத்துக்களைக் குறைக்கும் நிதிகளாகும். மூலதன வரவுகள் என்பவை அரசாங்கத்தால் திரட்டப்படும் கடன்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றன. இவை சந்தைக் கடன்கள் என அழைக்கப்படுகின்றன. கருவூல பில்களை விற்பதன் மூலம் அரசாங்கம் பெறும் கடன்கள், வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து பெறும் கடன்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடமிருந்து கடன்களைத் திரும்பப் பெறுதல் ஆகியவை ஆகும்.
மூலதனச் செலவினம் (Capital expenditure)
மூலதனச் செலவினம் என்பது அரசாங்கம் மேம்பாட்டுப் பணிகளுக்காக அல்லது இயந்திரங்கள் அல்லது சொத்துக்களை வாங்குவதற்கோ அல்லது மேம்படுத்துவதற்கோ செலவிடும் பணமாகும். மூலதனச் செலவினங்கள் என்பவை நிலம், கட்டிடங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள் போன்ற சொத்துக்களை வாங்குவதற்கான மூலதனச் செலவுகள், பங்குகளில் செய்யப்படும் முதலீடுகள் போன்றவையாகும். அதனுடன் ஒன்றிய அரசால் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், அரசு நிறுவனங்கள், கழகங்கள் மற்றும் பிற தரப்பினருக்கு வழங்கப்படும் கடன்கள் மற்றும் முன்பணங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
வருவாய் வரவு செலவு அறிக்கை (Revenue Budget)
வருவாய் வரவு செலவு அறிக்கை, அரசாங்கத்தின் வழக்கமான செயல்பாடுகளிலிருந்து கிடைக்கும் வருமானம் மற்றும் அதன் செலவினங்களைக் கொண்டுள்ளது.
வருவாய் வரவுகள் (Revenue receipts)
அரசாங்கத்தால் பெறப்படும், திருப்பிச் செலுத்தத் தேவையில்லாத வருமானமே வருவாய் வரவுகள் ஆகும். வருவாய் வரவுகள் வரி (tax) மற்றும் வரி அல்லாத வருவாய் (non-tax revenue) எனப் பிரிக்கப்படுகின்றன. வருமான வரி, நிறுவன வரி, கலால் வரி, சுங்க வரி, சேவை வரி மற்றும் அரசாங்கம் விதிக்கும் பிற வரிகள் போன்ற வரிகள் வரி வருவாயில் இடம்பெற்றிருக்கும். கடன்களுக்கான வட்டி, முதலீடுகளுக்கான ஈவுத்தொகை (dividend) ஆகியவை வரியல்லாத வருவாய் ஆதாரங்களில் இடம்பெற்றிருக்கும்.
வருவாய் செலவினம் (Revenue expenditure)
வருவாய் செலவினம் எதிர்கால வருமானத்தை உருவாக்கவோ அல்லது ஈட்டவோ செய்யாது. அரசாங்கம் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் மானியங்களுக்காகச் செலவிடுகிறது. வருவாய் செலவினம் உடனடி நுகர்வுக்கானவை. இதுவே வருவாய் செலவினம் ஆகும்.
நேரடி வரி (Direct tax)
வருமான வரி அல்லது நிறுவன வரி போன்ற ஒரு வரியானது, விதிக்கப்படும் நபரால் அல்லது நிறுவனத்தால் செலுத்தப்படுகிறது.
மறைமுக வரி (Indirect tax)
மறைமுக வரிகள் பொருட்கள் மற்றும் சேவைகளின் மீது விதிக்கப்படுகின்றன. பொதுவாக வரி விதிக்கப்பட்டவரைத் தவிர வேறு ஒருவரால் செலுத்தப்படுகின்றன. நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கும்போது அவர்களால் மறைமுக வரிகள் செலுத்தப்படுகின்றன. இதில் கலால் வரி, சுங்க வரி போன்றவை இடம்பெற்றிருக்கும்.
கலால் வரி (Excise duty)
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு, உள்நாட்டு நுகர்வுக்காக உள்ள பொருட்களின் மீது விதிக்கப்படும் ஒரு வரியே மறைமுக வரியாகும்.
சுங்க வரி (Customs duty)
இவை நாட்டிற்குள் பொருட்கள் இறக்குமதி செய்யப்படும்போதோ அல்லது நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும்போதோ விதிக்கப்படும் வரியாகும். மேலும், இவை இறக்குமதியாளர் அல்லது ஏற்றுமதியாளரால் செலுத்தப்படுகின்றன. பொதுவாக, இந்த வரிகள் நுகர்வோர் (consumer) மீதும் சுமத்தப்படுகின்றன.
நிதிப் பற்றாக்குறை (Fiscal deficit)
அரசாங்கத்தின் மொத்தச் செலவினம், கடன் வாங்கிய பணத்தைத் தவிர்த்து, அதன் மொத்த வருவாயை விட அதிகமாக இருக்கும்போது நிதிப் பற்றாக்குறை ஏற்படுகிறது.
வருவாய் பற்றாக்குறை (Revenue deficit)
வருவாய் செலவினத்திற்கும் (revenue expenditure) வருவாய் வரவுகளுக்கும் (revenue receipts) இடையிலான வேறுபாடு வருவாய் பற்றாக்குறை என்று அழைக்கப்படுகிறது. இது செலவினங்களைவிட அரசாங்கத்தின் தற்போதைய வரவுகளில் உள்ள பற்றாக்குறையைக் காட்டுகிறது.
முதன்மைப் பற்றாக்குறை (Primary deficit)
முதன்மைப் பற்றாக்குறை என்பது நிதிப் பற்றாக்குறையிலிருந்து அரசாங்கம் தனது கடனுக்குச் செலுத்தும் வட்டியை கழித்தால் மூலம் கிடைக்கும் தொகையாகும். வட்டிச் செலவைத் தவிர மற்ற செலவுகளை ஈடுகட்ட அரசாங்கம் எவ்வளவு கடன் வாங்குகிறது என்பதை முதன்மைப் பற்றாக்குறை காட்டுகிறது.
சரக்கு மற்றும் சேவை வரி (GST)
ஏப்ரல் 1, 2016 முதல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட முன்மொழியப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி, சுங்கச்சாவடி வரி, ஒன்றிய விற்பனை வரி, மாநில விற்பனை வரி, நுழைவு வரி போன்ற பல வரிகளை மாற்றுவதன் மூலம் மறைமுக வரி அமைப்பை எளிமையாகவும் திறமையாகவும் மாற்ற முயல்கிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product (GDP))
மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரு நாட்டிற்குள் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த சந்தை மதிப்பைக் குறிக்கிறது.
முதலீட்டை திரும்பப் பெறுதல் (Disinvestment)
அரசாங்கத்தால் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதே முதலீட்டை திரும்பப் பெறுதல் என்று அழைக்கப்படுகிறது. அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களின் பங்குகள், அரசாங்கத்திடம் உள்ள சொத்துக்களாகும். இந்த பங்குகளை விற்றுப் பணம் ஈட்டும்போது, வருமானம் ஈட்டக்கூடிய சொத்துக்கள் பணமாக மாற்றப்படுகின்றன. இதன் காரணமாக இது முதலீட்டை திரும்பப் பெறுதல் என்று அழைக்கப்படுகிறது.
Original Article : Key terms that will help you understand Budget 2026