உயர்கல்வி நிறுவனங்களுக்கு அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் (systemic reforms) தேவைப்படுகின்றன.
மாணவர் தற்கொலைகள் தொடர்பான ஒரு வழக்கில், உச்சநீதிமன்றம் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு 9 வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. உயர் கல்வி தனியார்மயமாக்கல் மூலம் வேகமாக விரிவடைந்துள்ள போதிலும், அதன் தரம் அதற்கு ஈடாக மேம்படவில்லை என்பதையும், இது மாணவர்களுக்கு நிதி, சமூக மற்றும் கல்வி ரீதியான அழுத்தங்களை ஏற்படுத்துவதையும் நீதிமன்றம் கவனத்தில் கொண்டுள்ளது. அரசியலமைப்பின் 142-வது பிரிவைப் பயன்படுத்தி, நீதிமன்றம் 9வழிகாட்டுதல்களைப் வழங்கியுள்ளது: அவற்றில் ஏழு, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் தற்கொலைகள் தொடர்பான பதிவுகளைப் பராமரித்தல், அறிக்கை சமர்ப்பித்தல் மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன. மற்ற இரண்டு வழிகாட்டுதல்கள், பதிவாளர்கள், துணைவேந்தர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்ற காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதைக் கட்டாயமாக்குகின்றன. மாணவர்களின் நலனுக்கு இந்த நடவடிக்கைகள் முக்கியமானவை என்று நீதிமன்றம் கருதுவது தெளிவாகத் தெரிகிறது.
இந்தியா முழுவதும் கள நிலவர அறிக்கைகள், பல பொது உயர்கல்வி நிறுவனங்கள், குறிப்பாகப் பல்கலைக்கழகங்களில், 50% பணியிடங்கள் காலியாக இருப்பதாக சுட்டிக்காட்டுகின்றன. சென்னை பல்கலைக்கழகம் ஒரு சிறந்த உதாரணமாகும். ஏனெனில், இது தமிழ்நாட்டில் உள்ள முதன்மையான மாநில அரசின் உயர்கல்வி நிறுவனம் ஆகும். உயர்கல்விச் சேர்க்கையில் நாட்டிலேயே முன்னணியில் இருக்கும் ஒரு மாநிலமாக உள்ளது. மேலும், பெண்கல்வியில் ஒரு சிறந்த சாதனைப் பதிவையும் கொண்டுள்ளது. இத்தகைய புகழ்பெற்ற பாரம்பரியத்தைக் கொண்ட இந்தப் பல்கலைக்கழகம், இணைப்புக் கல்லூரிகளில் தேர்வுகள் மூலம் பட்டங்களை வழங்குவதுடன், தரமான ஆராய்ச்சிக்காகவும் தமிழ்நாடு அனைவராலும் அறியப்பட்டுள்ளது. 1970-களின் பிற்பகுதியில் கற்பித்தல் ஒரு முக்கிய அங்கமாக மாறியது. கடந்த பத்தாண்டுகளில் கற்பித்தல் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. புதிய ஆசிரியர்கள் நியமனங்கள் எதுவும் செய்யப்படவில்லை. மேலும், கற்பிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு குறைவாகவே உள்ளது. பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப் பிரிவு பெயரளவிற்கு மட்டுமே செயல்படுகிறது. தத்துவம், தாவரவியல் மற்றும் கணிதம் போன்ற துறைகளில் மேம்பட்ட ஆய்வுகளுக்கான மையங்கள் இருப்பதாகக் கூறி வருகிறது. ஆனால், அவை இன்னும் அதிகமாக தேவைப்படுகின்றன. இன்று, மாநிலம் தனது பொதுப் பல்கலைக்கழகங்களில் இருந்து பயன்படுத்திக்கொள்ளக்கூடிய, தமிழ்நாட்டை மையமாகக் கொண்ட மானுடவியல், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. தன்னிச்சையாக செயல்பட்டுவரும் ஒரு ஆளுநரால் துணைவேந்தர் நியமனங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆளுநரின் அதிகாரங்கள் குறித்த குடியரசுத் தலைவரின் பரிந்துரையின் (Presidential reference on a Governor’s powers) மீது நீதிமன்றம் கூறியுள்ள தெளிவற்றத்தன்மையை, துணைவேந்தர் பதவியிடங்களை விரைவாக நிரப்புவதற்கு முன்பு விரிவாக விளக்க வேண்டும். ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் செயல்முறையைப் பின்பற்ற வேண்டும். இதற்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் ஆகும். மேலும், இதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டிற்கு ஒன்றிய அரசின் ஆதரவு தேவைப்படலாம். தகுதிவாய்ந்த ஆசிரியர்களைக் கண்டுபிடிப்பது கடினமான பணியாக இருக்கலாம். ஊழல் மற்றும் அரசியல்-கருத்தியல் அடிப்படையிலான நியமனங்கள் தரத்தைப் பாதித்துள்ளன. அவை கவனிக்கப்பட வேண்டும். நீதிமன்றம் நிர்ணயித்த நான்குமாத காலக்கெடு சவாலானதாகத் தோன்றினாலும், ‘வளர்ந்த இந்தியா’ (Viksit Bharat) போன்ற இலக்குகளை அடைவதற்காக, முதலில் உயர்கல்வியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அந்த உத்தரவில் குறிப்பிடபட்டுள்ளது.
Original Article : Crisis in education: On the Supreme Court, higher education and student well-being