முக்கிய அம்சங்கள்:
— உண்மையான போர்க்களத்தில் ராணுவத் தளவாடங்கள் எந்த வரிசையில் பயன்படுத்தப்படுமோ, அதே வரிசையில் பொதுமக்கள் பார்ப்பதற்கு காட்சிப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகக் கூறப்படுகிறது
— படைப்பிரிவுகள் போர் ஒத்திகை அணிவகுப்பு வரிசையில் கர்தவ்ய பாதை (Kartavya Path) வழியாக முன்னேறிச் செல்லும் என்றும் கூறப்படுகிறது. இதில் முதலில் உளவுப் பிரிவுகளும், அவர்களைத் தொடர்ந்து தளவாடங்கள் மற்றும் வீரர்கள் அனைவரும் முழு போர் சீருடைகளுடன் அணிவகுத்துச் செல்வதாகவும் கூறப்படுகிறது.
—முதலில் கண்காணிப்பு தளங்களின் வாகனங்கள் அணிவகுத்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ட்ரோன்கள் மற்றும் எதிர்ப்பு ஏவுகணைகள் (anti-tank missiles) கொண்ட நடமாடும் உளவு வாகனங்கள் இடம்பெறும் என்றும் அத்துடன் அப்பாச்சி (Apache) மற்றும் பிரசாந்த் (Prachand) போன்ற இலகுரக போர் ஹெலிகாப்டர்களின் வான்வழி சாகசங்களும் நடைபெறும் என்கின்றனர்.
— இதனைத் தொடர்ந்து பீரங்கிகள் (Tanks), காலாட்படை போர் வாகனங்கள் (Boyevaya Mashina Pekhoty (BMP)), பீரங்கிப் படைகள் (Artillery), வான் பாதுகாப்பு தளவாடங்கள் மற்றும் ஏவுகணைகள், இவற்றுக்குத் தேவையான தளவாட வாகனங்கள், இயந்திர நாய் (Robotic dogs), இரட்டைத் திமில் ஒட்டகங்கள் (Bactrian camels) மற்றும் ஜான்ஸ்கர் குதிரைகள் (Zanskar ponies) ஆகியவற்றின் அணிவகுப்பு இடம்பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
— இறுதியாக, காலாட்படைப் பிரிவுகளும், இந்த ஆண்டு அணிவகுப்பில் முதன்முறையாக அறிமுகமாகும் 'பைரவ்' இலகுரக அதிரடிப் படைப்பிரிவுகளும் (Bhairav light commando battalion) அணிவகுத்து வர வாய்புள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
— இந்திய ராணுவத்தின் சார்பில் 61-வது காவல்படை (61 Cavalry) குதிரைப்படைப் பிரிவும், ஒரு போர் வியூகப் பிரிவும் பங்கேற்கும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த அணிவகுப்பில் பின்வரும் ராணுவ அமைப்புகளின் பலம் காட்சிப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அவை, அணிவகுப்புப் பிரிவுகள்: ஏழு தரைப்படை வீரர்களின் அணிவகுப்புகள், அதிவேக கண்காணிப்பு வாகனம் (High Mobility Recce Vehicle (HMRV)), T-90 பீஷ்மா மற்றும் அர்ஜுன் போர் பீரங்கிகள், காலாட்படை போர்வாகனம் -II (BMP-II)) ரக கவச வாகனங்கள், நாக் ஏவுகணை அமைப்பு (Nag Missile System (NAMIS)), அனைத்து நிலப்பரப்புகளிலும் செல்லும் வாகனங்கள் (All-terrain vehicles). இயந்திர கோவேறு கழுதைகளுடன் கூடிய இலகுரக தாக்குதல் வாகனங்கள், பனிப்பகுதிக்கான வாகனம் (Glacier All-Terrain Vehicle Glacier (ATV)), அதிநவீன இலகு ஹெலிகாப்டர் - துருவ் (Advanced Light Helicopter (ALH) Dhruv) ஹெலிகாப்டர், சக்திபான் (Shaktiban), அதிநவீன இழுத்துச் செல்லும் கனரக பீரங்கி அமைப்பு (Advanced Towed Artillery Gun System (ATAGS)) மற்றும் தனுஷ் பீரங்கிகள், பினாகா (Pinaka) ராக்கெட் அமைப்பு, பிரம்மோஸ் (BrahMos) ஏவுகணை, ஆகாஷ் மற்றும் பராக்-8 (Barak-8) தரைவழி-விண்வெளி ஏவுகணைகள், ஒருங்கிணைந்த செயல்பாட்டு மையம் (Integrated Operational Centre (IOC)). தானியங்கி தரைவழி வாகனங்கள் (Unmanned Ground Vehicle (UGV)), ட்ரோன் சக்தி (Drone Shakti) ஆகிய படைகள் அணிவகுக்க உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
— இந்த அணிவகுப்பில் ஜான்ஸ்கர் குதிரைகள், இரட்டைத் திமில் கொண்ட ஒட்டகங்கள் மற்றும் கையாளுபவர்களுடன் கூடிய மோப்ப நாய்கள் உள்ளிட்ட விலங்குப் படைகள் பங்கேற்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், ஸ்காட்ஸ் (Scouts), ராஜ்புத், அசாம், ஜம்மு & காஷ்மீர் இலகு காலாட்படை படைப்பிரிவு (Jammu and Kashmir Light Infantry (JAK LI)), பீரங்கிப் படை (Artillery), பைரவ் மற்றும் லடாக் ஸ்காட்ஸ் ஆகிய ராணுவப் பிரிவினர், கைகளை உயர்த்தி வீசி நடக்கும் 'ஊஞ்சா கடம் தால்' (Uncha Kadam taal) முறையில் மேடையைக் கடந்து அணிவகுத்துச் செல்வார்கள் என்று கூறப்படுகிறது.
— போர்க்களக் காட்சியில் ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் போன்ற வான்வழிப் படைகளும், அதைத் தொடர்ந்து டி-90 (T-90) மற்றும் அர்ஜுன் பீரங்கிகளின் கவசப் படைகளும், காலாட்படை போர் வாகனங்கள்)-II (Boyevaya Mashina Pekhoty (BMP)-II) மற்றும் நாக் ஏவுகணை அமைப்பு-II (Nag Missile System (NAMIS-II)) அமைப்புகளைக் கொண்ட இயந்திரமயமாக்கப்பட்ட பிரிவுகளும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
— அடுத்ததாக, கண்காணிப்பு அமைப்புகள் மூலம் போர்க்களத்தைக் கண்காணிக்கும் ஒருங்கிணைந்த செயல்பாட்டு மையம் (Integrated Operational Centre) காட்சிப்படுத்தப்படும். இதைத் தொடர்ந்து, தானியங்கி தரைவழி வாகனங்கள் (UGVs), அனைத்து நிலப்பரப்புகளிலும் செல்லும் வாகனங்கள் (ATVs), இலகுரக தாக்குதல் வாகனங்கள், இயந்திர கோவேறு கழுதைகள், தளவாட வாகனங்கள், இயந்திர நாய்கள், பாக்ட்ரியன் ஒட்டகங்கள் மற்றும் ஜான்ஸ்கர் குதிரைகள் ஆகியவை அணிவகுத்து வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
— இறுதியாக, இந்த ஆண்டு முதன்முறையாகக் பங்கேற்கும் பைரவ் இலகுரக அதிரடிப் படைப்பிரிவு மற்றும் காலாட்படை வரிசைகளுடன் இந்த அணிவகுப்பு நிறைவடைய உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
— இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு, வந்தே மாதரம் பாடல் உருவான 150-வது ஆண்டைக் குறிக்கும் விதமாக அமையும் என்றும் கர்தவ்ய பாதையில் (Kartavya Path) உள்ள அரங்குகளில், இப்பாடலின் முதல் வரிகளை விளக்கும் பழமையான ஓவியங்கள் காட்சிப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதன்மை மேடையில் அமைக்கப்படும் மலர் அலங்காரங்கள், இப்பாடலை இயற்றிய பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமையும் என்று கூறப்படுகிறது.
— இந்திய தேசிய காங்கிரஸ் தனது லாகூர் மாநாட்டை 1929-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தியது. டிசம்பர் மாதம் 19-ஆம் தேதி அன்று, "முழுமையான சுயராஜ்யம்" எனப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க பூர்ண ஸ்வராஜ் (Poorna Swaraj) தீர்மானத்தை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கு முழுமையான சுதந்திரம் வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவின் சுதந்திரத்தைப் பறித்துக்கொண்டது மட்டுமல்லாமல், இந்திய மக்களைச் சுரண்டி, பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் மற்றும் ஆன்மீக ரீதியாகவும் நாட்டிற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று அந்தத் தீர்மானம் குறிப்பிட்டது. எனவே, இந்தியா ஆங்கிலேய அரசுடனான அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்துக்கொண்டு, முழு சுதந்திரம் அடையவேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
— இந்த சுதந்திரப் பிரகடனம் 1930-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. காங்கிரஸ் இந்தியர்களை அந்த நாளை 'சுதந்திர தினமாக' கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டது. இந்தத் தீர்மானம் பூர்ண ஸ்வராஜ் தினத்திற்குப் பிறகு தொடங்கிய காந்திய அகிம்சை போராட்ட முறைகள் மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
— 1930-ஆம் ஆண்டு முதல் 1947-ஆம் ஆண்டில் சுதந்திரம் கிடைக்கும் வரை, ஜனவரி மாதம் 26-ஆம் தேதி 'சுதந்திர தினம்' அல்லது 'முழு சுதந்திர தினமாக' கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்கள் தங்களின் இறையாண்மைக்கான உறுதியை அன்று புதுப்பித்துக் கொண்டனர்.
— இறுதியாக, ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி, 1947-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றது. பின்னர், இந்திய அரசியலமைப்பை நடைமுறைக்குக் கொண்டுவர ஒரு தேதியைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தபோது, ஜனவரி மாதம் 26-ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது. ஏனெனில், அந்தத் தேதிக்கு ஒரு வலுவான தேசிய முக்கியத்துவம் இருந்தது என்றும் கூறப்பட்டது. மேலும், இருபது ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட முழு சுதந்திரம் (Poorna Swaraj) பிரகடனத்தின் கொள்கைகளை பிரதிபலிக்கும் வகையில் இந்த அரசியலமைப்பு அமைந்திருந்ததாகத் தெரிவிக்கின்றனர்.
Original Article : Why was January 26 chosen to be India’s Republic Day? -Roshni Yadav