ராஜஸ்தான் உயர்நீதிமன்றம், தனது முந்தைய தீர்ப்பைப் பின்பற்றி, நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஏ.ஜி. மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு, திறந்த அல்லது பொதுப் பிரிவு என்பது ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமானது அல்ல. அது அனைவருக்கும் பொதுவானது என்று தெளிவுபடுத்தியது.
பொதுப் பிரிவுக்கான தகுதி மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்தும், ஒரு விண்ணப்பதரர் இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக அவரைப் பொதுப் பிரிவுப் பதவிகளுக்கான பரிசீலனையிலிருந்து ஒரு தேர்வு வாரியம் நீக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது. அவ்வாறு நீக்குவது, அரசியலமைப்பின் 14 மற்றும் 16-வது பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் சமத்துவத்திற்கான உத்தரவாதங்களை (guarantees of equality) மீறுவதாகும் என்று நீதிமன்றம் கூறியது.
ராஜஸ்தான் உயர்நீதிமன்றம், தனது முந்தைய தீர்ப்பைப் பின்பற்றி, நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஏ.ஜி. மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு, திறந்த அல்லது பொதுப் பிரிவு என்பது ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமானது அல்ல. அது அனைவருக்கும் பொதுவானது என்று தெளிவுபடுத்தியது. பொதுப் பிரிவு என்பது தகுதியின் அடிப்படையில் அனைத்து விண்ணப்பதரர்களுக்கும் உரியது. அதை வேறுவிதமாக பின்பற்றுவது, இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நியாயமற்ற விலக்கலாக மாற்றிவிடும் என்று நீதிமன்றம் கூறியது.
ஆட்சேர்ப்பு கட்டமைப்பு (The recruitment framework)
இந்த வழக்கு, ராஜஸ்தான் உயர் நீதிமன்றப் பணியாளர் சேவை விதிகள், 2002 மற்றும் ராஜஸ்தான் மாவட்ட நீதிமன்றங்கள் அமைச்சுப் பணியாளர் விதிகள், 1986 ஆகியவற்றின்கீழ் ஆகஸ்ட் 2022-ல் வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பில் இருந்து உருவானது. உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் நீதித்துறை அகாடமியில் நீதித்துறையில் பணியாற்றிவரும் இளநிலை உதவியாளர் மற்றும் இரண்டாம் நிலை எழுத்தர் பதவிகளுக்கு மொத்தம் 2,756 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேர்வு செயல்முறை இரண்டு கட்டங்களைக் கொண்டிருந்தது: 300 மதிப்பெண்களுக்கான எழுத்துத் தேர்வாக நடத்தப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து 100 மதிப்பெண்களுக்கான கணினி அடிப்படையிலான தட்டச்சுத் தேர்வாக நடத்தப்படவுள்ளது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள், காலியிடங்களின் எண்ணிக்கையைப் போல ஐந்து மடங்கு பேர் இரண்டாவது கட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இறுதித் தேர்வு இரண்டு கட்டங்களிலும் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் அமையும்.
மே 2023-ல் எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியானபோது, தேர்வு வாரியம் பிரிவுகளின் அடிப்படையில் தட்டச்சுத் தேர்வுக்கான தகுதிப் பட்டியல்களை வெளியிட்டது. பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண் 196-ஆக இருந்தபோதிலும், சில இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 220-க்கும் அதிகமாக இருந்தன.
இந்த முறையின் ஒரு பெரிய சிக்கலை ஏற்படுத்தியது. பொதுப் பிரிவுக்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றும், தங்கள் பிரிவிற்கான உயர் குறைந்தபட்ச மதிப்பெண்ணுக்குக் குறைவாகப் பெற்றிருந்த இட ஒதுக்கீட்டுப் பிரிவு விண்ணப்பதாரர்கள், தகுதியானோர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்கள் பல பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்களைவிட அதிக மதிப்பெண் பெற்றிருந்தபோதிலும், அவர்களுக்குத் தட்டச்சுத் தேர்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
உயர்நீதிமன்றம் என்ன தீர்ப்பளித்தது
ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தனது தலையீட்டின் வரம்புகளை வரையறுப்பதில் கவனமாக இருந்தது. நீதிமன்றம் இடஒதுக்கீட்டு கட்டமைப்பை ரத்து செய்யவில்லை அல்லது வகை வாரியான குறைந்தபட்ச மதிப்பெண் பட்டியல் தயாரிப்பது ஒரு விதியாக அனுமதிக்க முடியாதது என்றும் கூறவில்லை. வகைப்படுத்தல் பிரிப்பு (category segregation) எப்போது, எப்படிப் பயன்படுத்தப்பட்டது என்பதே இந்த விவகாரம் என்று நீதிமன்றம் கூறியது.
அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 16(1) அரசாங்க வேலைகளில் அனைவருக்கும் சம வாய்ப்பு இருப்பதை (equality of opportunity in public employment) உறுதி செய்கிறது. அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 16(4) கட்டமைப்பு ரீதியான பின்தங்கிய நிலையைச் சமாளிப்பதற்காக, ஒரு விதிவிலக்காக இட ஒதுக்கீட்டை (permits reservation as an exception to address structural disadvantage) அனுமதிக்கிறது. அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 14, நியாயமற்ற அல்லது தன்னிச்சையான பாகுபாட்டைத் தடை செய்வதன் (prohibiting arbitrary classification) மூலம் இந்த இரண்டு விதிகளையும் ஆதரிக்கிறது.
குறைந்தபட்ச மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் கட்டத்தில், பொது அல்லது திறந்தநிலை வகை என்பது பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்களுக்காக மட்டுமேயான ஒரு பிரிவாகக் கருதப்பட்டபோது தான் இந்தப் பிரச்சனை ஏற்பட்டது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எந்தப் பிரிவைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஒரு விண்ணப்பதாரர் குறைந்தபட்ச மதிப்பெண் கடந்த பிறகு, திறந்தநிலை இடங்களுக்கு அவர்களைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமல் இருப்பது, சமவாய்ப்பை மறுப்பதற்குச் சமமானதாகும் என்று கூறியது.
பொதுப் பிரிவில் இடம்பெறத் தேவையான அளவுக்கு அதிக மதிப்பெண்களைப் பெறும் இடஒதுக்கீட்டுப் பிரிவு விண்ணப்பதரர், இடஒதுக்கீட்டு விதிகள் காரணமாக அல்லாமல், தகுதியின் அடிப்படையிலேயே சேர்க்கப்படுவதற்குத் தகுதியானவர் என்று உயர்நீதிமன்றம் கூறியது. அவர்களை அவர்களது இடஒதுக்கீட்டுப் பிரிவிலேயே நீடிக்கச் செய்வது நியாயமற்றது மற்றும் சமூக அடையாளத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதாகும் என்று உயர்நீதிமன்றம் கூறியது.
முதலில், பொதுப் பிரிவுக்கான தகுதி மதிப்பெண்ணைக் கடந்த இடஒதுக்கீட்டுப் பிரிவு விண்ணப்பதாரர்களையும் சேர்த்து, முற்றிலும் தகுதியின் அடிப்படையில் ஒரு பொது/திறந்தநிலை பிரிவுப் பட்டியலைத் தயாரித்து அதன் பிறகு மீதமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து இடஒதுக்கீட்டுப் பிரிவுப் பட்டியல்களைத் தயாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது
உச்சநீதிமன்றத்தின் முன் உள்ள சவால்
உச்சநீதிமன்றத்தின் முன், உயர்நீதிமன்ற நிர்வாகம் மூன்று முக்கிய வாதங்களை முன்வைத்தது. முதலாவதாக, ஆட்சேர்ப்பு முறையில் பங்கேற்ற விண்ணப்பதாரர்கள் பின்னர் அதை எதிர்த்து வழக்குத் தொடுக்க முடியாது. இரண்டாவதாக, தகுதியானவர்கள் பட்டியலைத் தயாரிக்கும் கட்டத்தில் இடஒதுக்கீட்டுப் பிரிவு விண்ணப்பதாரர்களைப் பொதுப் பிரிவிலும் கருத்தில் கொள்வது, அவர்களுக்கு 'இரட்டைப் பலனை' வழங்குவதற்குச் சமமாகும். மூன்றாவதாக, ஒதுக்கீட்டுப் பிரிவு விண்ணப்பதாரர்கள் பொதுப் பிரிவுக்கு மாறுவது தொடர்பான விதிகள், ஆரம்ப நிலைகளில் அல்லாமல், இறுதித் தேர்வு கட்டத்தில் மட்டுமே பொருந்தும் என்று நீதிமன்றம் கூறியது.
இருப்பினும், கவனமாக வரையறுக்கப்பட்ட காரணங்களின் அடிப்படையில், உச்ச நீதிமன்றம் அந்த மூன்று கோரிக்கைகளையும் நிராகரித்தது.
முரண்தடை (estoppel) தொடர்பாக, உச்ச நீதிமன்றம் கூறியது: பங்கேற்பது அறிவிக்கப்பட்ட செயல்முறையை ஏற்றுக்கொள்வதாகும், ஆனால் அதன் பயன்பாட்டில் மட்டுமே தோன்றும் சட்டவிரோதத்தை ஏற்றுக்கொள்வதாக அல்ல. விண்ணப்பதாரர்கள் உயர்மதிப்பெண்கள் பெறுவது விலக்கத்திற்கு வழிவகுக்கும் என்ற நிலையை முன்கூட்டியே எதிர்பார்க்க முடியாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
ஒரு விண்ணப்பதரர் தேர்வுச் செயல்முறையில் பங்கேற்பது, பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கிறது. ஆனால், அந்த நடைமுறையை செயல்படுத்துவதில் உள்ள எந்தவொரு சட்டவிரோதத்தையோ அல்லது அதன் அடிப்படையிலான அரசியலமைப்பு ரீதியான குறைபாட்டையோ ஏற்றுக்கொண்டதைக் குறிக்காது என்று நீதிபதிகள் அமர்வு குறிப்பிட்டது. மேலும், முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு குறைபாடு வெளிப்படையாகத் தெரிந்ததும், உயர்நீதிமன்றம் அந்த மனுக்களை விசாரித்தது சரியான நடவடிக்கையே என்று உச்சநீதிமன்றம் முடிவு செய்தது.
பொதுப் பிரிவு என்பது இட ஒதுக்கீடா?
அந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சம்: பொதுப் பிரிவு என்பது இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலானது அல்ல. மாறாக பொதுப் பிரிவு தகுதியின் அடிப்படையிலானது.
உயர்நீதிமன்றத்தின் கருத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், இட ஒதுக்கீடு இல்லாத பதவிகள் அனைத்து விண்ணப்பதரர்களுக்கும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே கிடைக்கும் என்று தீர்ப்பளித்தது. இட ஒதுக்கீடு என்பது ஒதுக்கப்பட்ட பதவிகளுக்கு மட்டுமே பொருந்தும்; அது விண்ணப்பதாரர்களை அவர்களின் சமூகப் பிரிவின் காரணமாக பொதுப் பதவிகளிலிருந்து விலக்குவதற்கு அனுமதிக்காது.
பொதுப் பிரிவு என்பது ஒரு இட ஒதுக்கீடு அல்ல, மாறாக அது அனைவருக்கும் உரியது என்று நீதிமன்றம் கூறியது. அதில் ஒரு விண்ணப்பதாரர் இடம்பெறுவதற்கான ஒரே நிபந்தனை தகுதி மட்டுமே.
இந்திரா சாஹ்னி வழக்கு மற்றும் சௌரவ் யாதவ் வழக்கில் 2021-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு உட்பட முந்தைய அரசியலமைப்பு அமர்வுத் தீர்ப்புகளை மேற்கோள் காட்டி, பொதுத் பிரிவு தகுதியின் அடிப்படையில் தேர்ச்சி பெறும் தகுதியுள்ள இட ஒதுக்கீட்டுப் பிரிவு விண்ணப்பதரர்ருக்கு, இட ஒதுக்கீடு இல்லாத காலியிடங்களுக்கான பரிசீலனையை மறுக்க முடியாது என்று நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியது.
பொதுப் பிரிவு இடங்கள் இடஒதுக்கீடு பெறாத விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டால், அது ஒரு வகையான 'சமூக அடிப்படையிலான இடஒதுக்கீடாக' (“communal reservation”) மாறிவிடும் என்றும், அது நியாயமற்றது மற்றும் அரசியலமைப்பின் 14 மற்றும் 16-வது பிரிவுகளுக்கு எதிரானது என்றும் நீதிமன்றம் எச்சரித்தது.
இரட்டைப் பலன் இல்லை
ஒதுக்கீட்டுப் பிரிவு விண்ணப்பதாரர்கள் இரட்டைப் பலனைப் (double benefit) பெறுகிறார்கள் என்ற வாதத்தையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
குறைந்த தகுதி மதிப்பெண்கள் அல்லது வயது வரம்புகள் போன்ற சலுகையோ அல்லது தளர்வோ பயன்படுத்தப்படும்போது மட்டுமே ஒரு விண்ணப்பதாரர் இடஒதுக்கீட்டைப் பெறுகிறார் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்படுவது மட்டுமே இடஒதுக்கீட்டைப் பெறுவதாக ஆகாது என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.
எந்தவிதமான தளர்வும் இல்லாமல், இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்த ஒரு விண்ணப்பதாரர் பொதுப் பிரிவுக்கான தகுதி மதிப்பெண்ணைவிட அதிகமாகப் பெற்றால், அவர்கள் இடஒதுக்கீட்டின் காரணமாக அல்லாமல், தகுதியின் அடிப்படையிலேயே பொதுப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்று நீதிமன்றம் கூறியது. அவர்களுக்கு 'இரட்டைப் பலன்' கிடைக்கிறது என்ற கருத்து தவறானது, ஏனெனில் இடஒதுக்கீட்டுப் பிரிவில் இருப்பது, தேர்வுச் செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் தானாகவே நன்மைகளை வழங்கிவிடுவதில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
‘இடமாற்றம்' பற்றி என்ன?
பின்னர், நீதிமன்றம் இடமாற்றம் குறித்த கேள்விக்குத் திரும்பியது. இதன்கீழ், ஒதுக்கீட்டு பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றால், அவர்கள் பொது பிரிவு (Open Category) இடங்களில் சேர்க்கப்படுவார்கள்.
முந்தைய தீர்ப்புகள், இடமாற்றம் என்பது இறுதித் தேர்வு நிலையில் மட்டுமே பொருந்தும் என்று கூறின. இதற்குக் காரணம், அந்த வழக்குகளில் ஆரம்பக்கட்டத் தேர்வுகள் சமந்தபட்டிருந்தாதே ஆகும். அவற்றின் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. எனவே, ஒருவரை இடையில் நீக்கினாலும், அதை பின்னர் சரிசெய்ய முடியும் என்ற நிலை இருந்தது.
இருப்பினும், வழக்கு வித்தியாசமானது. ஏனெனில், எழுத்துத் தேர்வு 400 மதிப்பெண்களில் 300 மதிப்பெண்களைக் கொண்டிருந்ததுடன், இறுதி முடிவில் ஒரு முக்கியப் பங்காக இருந்தது. இந்த நிலையில் இருந்து நீக்கப்படுவது என்பது, அந்த விண்ணப்பதாரர் இனிமேல் பரிசீலிக்கப்பட மாட்டார் என்பதாகும்.
இத்தகைய ஒரு முக்கியமான கட்டத்தில் ஒரு விண்ணப்பதாரர் குறைந்தப்பட்ச மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றால், அங்கு ‘இடமாற்றம்’ தேவை இல்லை என்று நீதிமன்றம் கூறியது. மாறாக, அது ஒரு ‘தகுதி அடிப்படையிலான மாற்றம்’ (merit induced shift) ஆகும். விண்ணப்பதாரர் தனது மதிப்பெண்களின் அடிப்படையில் தொடக்கத்திலிருந்தே பொதுப் பிரிவில் போட்டியிடுகிறார்.
நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள்
தேர்வு செயல்முறையை எவ்வாறு சரிசெய்ய வேண்டும் என்பது குறித்த உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. எழுத்துத் தேர்வைத் தொடர்ந்து தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் ஆரம்பக்கட்டத்தில், இடஒதுக்கீட்டுப் பிரிவினரைச் சேர்ந்தவர்கள் உட்பட அனைத்து விண்ணப்பதாரர்களும் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே ஒன்றாக மதிப்பிடப்பட வேண்டும். பொதுத் தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்ட பின்னரே, மீதமுள்ள வேட்பாளர்களிடமிருந்து இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான பட்டியல்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தகுதி என்பது ஒரு தடையாக மாறக்கூடாது (penalty) என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. பொதுத் தகுதியின் அடிப்படையில் தேர்ச்சி பெறும் இடஒதுக்கீட்டுப் பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர், தனது ஒதுக்கீட்டிற்குள் கிடைக்கும் ஒரு சிறந்த பதவி அல்லது பணியிடத்தை இழக்க நேரிடும் என்றால், அவரைப் பொதுப் பிரிவுக்கு மாற்ற முடியாது. இதன் மூலம், இட ஒதுக்கீடு என்பது ஒரு பின்னடைவை ஏற்படுத்தும் கருவியாக இல்லாமல், அனைவரையும் உள்ளடக்குவதற்கான ஒரு வழிமுறையாகச் செயல்படுவதை உறுதி செய்கிறது என்று நீதிமன்றம் கூறியது.
பட்டியல்களை மறுபரிசீலனை செய்வது ஏற்கனவே செய்யப்பட்ட நியமனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதை ஒப்புக்கொண்ட நீதிபதிகள், எந்தவொரு திருத்தமும் குறைந்தபட்ச நிர்வாக இடையூறுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
Original Article : General category open to all candidates based on merit: What the SC said, and why it is significant. -Amaal Sheikh