தேசிய பாதுகாப்பு மற்றும் தேர்தல் சீர்திருத்தங்கள் போன்ற சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் விவாதங்களில் ஆதிக்கம் செலுத்தியதால், குறிப்பிடத்தக்க இடையூறுகள் மற்றும் குறைந்தபட்ச விவாதங்களுக்கு மத்தியில் ஏறக்குறைய 40 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதன் மூலம், 2025-ஆம் ஆண்டின் நாடாளுமன்ற அமர்வுகள் உற்பத்தித்திறனில் கலவையான பதிவை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
நிதிநிலை அறிக்கை மற்றும் குளிர்கால கூட்டத்தொடர்களின்போது நாடாளுமன்றம் மிகவும் சுமுகமாகச் செயல்பட்டாலும், மழைக்கால கூட்டத்தொடரில் அதன் உற்பத்தித்திறன் 31% மட்டுமே பதிவானது. 'சிந்தூர் நடவடிக்கை' ((Operation Sindoor)), வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் Special Intensive Revision (SIR)), மணிப்பூர் இன வன்முறை மற்றும் செங்கோட்டை குண்டுவெடிப்பு போன்ற விவகாரங்கள் தொடர்பாக மீண்டும் மீண்டும் ஏற்பட்ட தடங்கல்கள் இருந்தபோதிலும், ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த சட்டங்கள் பெரும்பாலும் குறைவான விவாதத்துடனும் மற்றும் குரல் வாக்கெடுப்பு மூலமாகவும் நிறைவேற்றப்பட்டன.
நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு 26 அமர்வுகளைக் கொண்டிருந்தது. இக்காலக்கட்டத்தில், மத்திய நிதிநிலை அறிக்கையானது பல அமைச்சகங்களின் கூடுதல் மானியங்களுக்கான கோரிக்கைகள் தொடர்பான பல ஒதுக்கீட்டு மசோதாக்களுடன் சேர்த்து அங்கீகரிக்கப்பட்டது. இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மிகவும் சர்ச்சைக்குரிய சட்டங்களில் வக்ஃபு (திருத்த) மசோதா, 2025, மற்றும் பேரிடர் மேலாண்மை (திருத்த) மசோதா, 2025 ஆகியவை அடங்கும். இந்த இரண்டு மசோதாக்களும் எதிர்க்கட்சிகளிடமிருந்து கடும் எதிர்ப்பை சந்தித்தன.
"ஆபரேஷன் சிந்தூர்" (Operation Sindoor) குறித்த விவாதம் கோரி அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் வலியுறுத்தியதால், மழைக்காலக் கூட்டத்தொடர் மிகவும் சர்ச்சைக்குரிய அமர்வாக இருந்தது. சிந்தூர் நடவடிக்கையில், இந்திய விமானப்படை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) பகுதிகளில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களைத் தாக்கியது. 32 நாட்களில் நடந்த 21 அமர்வுகளில், எதிர்க்கட்சிகளின் விவாதத்திற்கான கோரிக்கைகள் காரணமாக முதல் வாரத்தில் பாராளுமன்றத்தில் சிறிதளவும் அல்லது எந்த வேலையும் நடக்கவில்லை. இரண்டு நாட்கள் விவாதத்திற்குப் பிறகு, பாராளுமன்றம் வரிவிதிப்பு, விளையாட்டு, கடல்சார் விவகாரங்கள் மற்றும் இணையவழி சூதாட்டம் தொடர்பான 15 மசோதாக்களை நிறைவேற்றியது.
குளிர்காலக் கூட்டத்தொடரிலும் மீண்டும் மீண்டும் அமளி ஏற்பட்டது, எதிர்க்கட்சிகள் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரின. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பற்றிய விவாதத்தையும் தொடங்கியது. இந்த விவாதம் மோதலாக மாறியது, இதில் முஸ்லீம் லீக்கின் வற்புறுத்தலால் பாடலை இரண்டு பத்திகளாகக் குறைத்து, ஜவஹர்லால் நேரு அதற்குத் துரோகம் இழைத்துவிட்டார் என்று பாஜக குற்றம் சாட்டியது. அதேநேரத்தில், இரவீந்திரநாத் தாகூரின் ஆலோசனையின் அடிப்படையில் அரசியலமைப்புச் சபையால் இந்த முடிவு கூட்டாக எடுக்கப்பட்டது என்று காங்கிரஸ் சார்பில் கூறப்பட்டது.
நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்திய முக்கியப் பிரச்சினைகள் பற்றிய கண்ணோட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 2025–26-ஆம் ஆண்டுக்கான இரண்டு பகுதிகளைக் கொண்ட நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததோடு கூட்டத்தொடர் தொடங்கியது. வருமான வரி விலக்கு வரம்பை ₹12 லட்சம் வரை உயர்த்துதல், தேர்தல் நடைபெறவிருக்கும் பீகார் மாநிலத்திற்காக பல திட்டங்களையும், செயல்முறைகளையும் தொடங்குதல், தற்காலிக பணியாளர்களுக்கு (gig workers) காப்பீடு வழங்குதல், இந்தியாவின் அணுசக்தித் துறையில் தனியார் முதலீடுகளை அங்கீகரித்தல், மாநிலங்களுக்கு வட்டி இல்லாத உள்கட்டமைப்பு கடன்களை வழங்குதல் ஆகியன முக்கிய அறிவிப்புகள் ஆகும்.
மொத்தம் பதினாறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் அவற்றில் இரண்டு மசோதாக்கள் மட்டுமே 10 மணி நேரத்திற்கு மேல் விவாதிக்கப்பட்டன: வக்ஃப் (திருத்தம்) மசோதா, 2024 (Waqf (Amendment) Bill, 2024), பேரிடர் மேலாண்மை (திருத்தம்) மசோதா, 2024 (Disaster Management (Amendment) Bill, 2024). மற்ற மசோதாக்களுக்கு அதிக நேரம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு அவையிலும் (மக்களவை, மாநிலங்களவை) அவை 2 முதல் 4 மணி நேரம் மட்டுமே விவாதிக்கப்பட்டன. வக்ஃப் மசோதா - வக்ஃப் வாரியங்கள், அவற்றின் சொத்துக்கள் மற்றும் அது தொடர்பான சர்ச்சைகளின் செயல்பாட்டைச் சீர்திருத்தியது. இது ஏற்கெனவே ஒரு கூட்டுக் குழுவால் ஆராயப்பட்டது. பேரிடர் மேலாண்மை மசோதா - நிவாரண முயற்சிகளை நகர மற்றும் மாநில அளவில் அதிகாரப் பரவலாக்கம் செய்தது போன்ற அம்சங்கள் முன்மொழியப்பட்டன. குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா, 2025 (Immigration and Foreigners Bill, 2025) - பயண ஆவணங்களை எளிமைப்படுத்தியது, வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2025 (Banking Laws (Amendment) Bill, 2025) - நிர்வாக விதிகளை மேம்படுத்தியது போன்றவை கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆகும்.
நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில், குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா, 2025, மற்றும் வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2025 ஆகியவை அடங்கும். இவை பயண ஆவணங்கள் மற்றும் நிர்வாக விதிகளை எளிமைப்படுத்தின. மத்திய நிதிநிலை அறிக்கை அங்கீகரிக்கப்பட்டபிறகு, மணிப்பூரின் பட்ஜெட் மற்றும் பல ஒதுக்கீட்டு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. மணிப்பூரில் நிலவும் தொடர்ச்சியான நெருக்கடி குறித்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த போதிலும், அதுபற்றி அதிகம் விவாதிக்கப்படாமலேயே, அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த அமர்வில், மக்களவை 118% உற்பத்தித் திறனைப் பதிவு செய்தது, அதே சமயம் மாநிலங்களவை 119% உற்பத்தித் திறனைப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
மழைக்கால கூட்டத்தொடர்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் இந்தியாவின் இராணுவத் தாக்குதலுக்குப் பிறகு, 'சிந்தூர் நடவடிக்கை' (Operation Sindoor) பாராளுமன்றத்தின் முக்கியப் பிரச்சினையாக மாறியது. முதல் வாரத்தில், 'சிந்துர் நடவடிக்கை' குறித்து விவாதம் நடத்தவேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையால் ஏற்பட்ட தொடர்ச்சியான ஒத்திவைப்புகளின் காரணமாக எந்த வேலையும் நடைபெறவில்லை. இறுதியாக, 'சிந்தூர் நடவடிக்கை' மற்றும் இந்தியாவின் விண்வெளித் திட்டம் குறித்து இரண்டு விவாதங்கள் நடத்தப்பட்டன. அப்போது, பஹல்காம் தாக்குதலுக்குக் காரணமான ஊடுருவல்காரர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட 'மகாதேவ் நடவடிக்கை' (Operation Mahadev) பற்றிய விவரங்கள் சபை உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவாதங்களைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் ஐந்து கடல்சார் சட்டங்களை நிறைவேற்றியது: சரக்கு பட்டியல் மசோதா, 2025; கடல் வழியாக சரக்குகளை எடுத்துச் செல்லும் மசோதா, 2025; கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா, 2025; வணிகக் கப்பல் போக்குவரத்து மசோதா, 2025; மற்றும் இந்திய துறைமுகங்கள் மசோதா, 2025. மேலும், இரண்டு விளையாட்டுத் தொடர்பான சட்டங்களும் நிறைவேற்றப்பட்டன — விளையாட்டு அமைப்புகளை மத்திய கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரும் தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா, 2025, மற்றும் விளையாட்டு பந்தயங்களைத் தடைசெய்து, இணையவழி சூதாட்ட விளையாட்டுக்கள் உட்பட இணைய விளையாட்டுத் துறையைப் பாதிக்கும் இணையவழி விளையாட்டுக்கள் ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறை மசோதா, 2025 நிறைவேற்றப்பட்டது.
ஐந்து மசோதாக்கள் தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்டன. இதில், சர்ச்சைக்குரிய ஒரு அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவும் அடங்கும். இந்தச் சட்டத் திருத்தம், “பிரதமர்கள், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் தீவிரமான குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டால், உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க” அனுமதி அளித்தது. இதற்கிடையில், மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. மக்களவை (Lok Sabha) வெறும் 39 மணி நேரம் மட்டுமே செயல்பட்டது, அதன் உற்பத்தித்திறன் 31% ஆகப் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், அது 12 மசோதாக்களை நிறைவேற்றியது. அதேபோல், மாநிலங்களவை (Rajya Sabha) 41 மணி நேரம் செயல்பட்டது, அதன் உற்பத்தித்திறன் 39% ஆக இருந்ததுடன், 15 மசோதாக்களை நிறைவேற்றியது. இவ்வளவு வேகமான மசோதா நிறைவேற்றம், மசோதாக்கள் மீதான விவாதம் குறைவாகவே நடந்ததால் சாத்தியமானதாகக் கூறப்படுகிறது. விவாதங்கள் மிகக் குறைவாக 28 நிமிடங்கள் முதல் அதிகபட்சமாக 2.5 மணி நேரம் வரை மட்டுமே நீடித்ததாகக் கூறப்படுகிறது.
குளிர்கால கூட்டத்தொடர்
ஆண்டின் குறைந்த காலக் கூட்டத்தொடர், 15 அமர்வுகளுடன் நடந்தது. இதில் சமர்ப்பிக்கப்பட்ட 10 மசோதாக்களில் 8 மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. மீதமுள்ள இரண்டு மசோதாக்கள், மேலும் ஆய்வுக்காக கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு (Joint Parliamentary Committee) அனுப்பப்பட்டன. எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தலால், சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) பற்றிய விவாதம் நடைபெற்றது. அப்போது, மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அரியானா தேர்தல்களில் நடந்ததாகக் கூறப்படும் 'வாக்குத் திருட்டு' குற்றச்சாட்டுகள், பீகாரில் வாக்காளர் நீக்கம் மற்றும் தேர்தல் ஆணையர் மீதான வழக்குத் தொடுப்பதில் இருந்து அவரைப் பாதுகாப்பது போன்ற தனது குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்குமாறு மத்திய அரசிடம் கேட்டார். இதற்குப் பதிலளித்த அமித் ஷா, தேர்தல் நடைமுறைகள் மீது நம்பிக்கை தெரிவித்தார் மேலும் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தேர்தல் ஆணையம் அளித்த விளக்கங்களை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
ஒவ்வொரு அவையிலும் ஒரு நாள் விவாதத்திற்குப் பிறகு இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவை: விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்திரவாதத் திட்டம் (கிராமின்) சட்டம், 2025 (Viksit Bharat Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G) Bill, 2025) மற்றும் இந்தியாவை மாற்றியமைப்பதற்கான அணுசக்தியின் நீடித்தப் பயன்பாடு மற்றும் முன்னேற்றம் சட்டம், 2025 (Sustainable Harnessing and Advancement of Nuclear Energy for Transforming India (SHANTI) Bill, 2025) முதல் மசோதா (VB-G RAM G): இது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு (MGNREGA) மாற்றாக வருகிறது. இதில் வேலை நாட்களை 125 நாட்களாக உயர்த்துவதுடன், மாநிலங்கள் 40% நிதிப் பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையையும் விதிக்கிறது. இரண்டாவது மசோதா (SHANTI): இது அணுசக்தித் துறையில் வரையறுக்கப்பட்ட பொறுப்புடன் தனியார் முதலீடுகளையும் பங்களிப்பையும் அனுமதிக்கிறது.
குறைந்தபட்ச விவாதத்துடன் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் இரண்டு சட்டங்கள் அடங்கும். அவை, புகையிலை தயாரிப்பு ஆலைகள் மீது கூடுதல் வரி மற்றும் கலால் வரியை விதிக்கும் சட்டங்கள் ஆகும். மற்றொன்று, மணிப்பூரில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) விகிதங்களை 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளாக மாற்றியமைக்கும் ஒரு சட்டம், மற்றும் காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை (Foreign Direct Investment (FDI)) அனுமதிக்கும் மற்றொரு சட்டம் ஆகியவை ஆகும். மேலும், வளர்ச்சியடைந்த இந்தியா கல்வி ஆணைய மசோதா, 2025 (Viksit Bharat Shiksha Adhishtan Bill, 2025) மற்றும் பங்குச் சந்தைகள் சட்டக்குறியீடு, 2025 (Securities Markets Code, 2025) ஆகிய இரண்டு மசோதாக்கள் மேல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டன.
ஒட்டுமொத்தமாக, மக்களவை 103% உற்பத்தித்திறனையும், மாநிலங்களவை 104% உற்பத்தித்திறனையும் பதிவு செய்தன. சராசரியாக, ஒவ்வொரு அவையிலும் சட்டங்கள் சுமார் நான்கு மணிநேரம் விவாதிக்கப்பட்டன. வளர்ச்சியடைந்த இந்தியா – ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்க மசோதா, 2025 (Viksit Bharat – Guaranteed Employment and Livelihood Movement (Gramin) (VB – GRAM G) Bill, 2025 எட்டு மணிநேரத்திற்கும் மேலாக விவாதிக்கப்பட்டது, அதேசமயம் மணிப்பூர் ஜிஎஸ்டி மசோதாவிற்கு வெறும் 12 நிமிடங்கள் மட்டுமே மிகக் குறைந்த நேரம் விவாதம் நடந்தது.
2019-ஆம் ஆண்டிலிருந்து காலியாக உள்ள துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் குறித்து இந்த ஆண்டு கூட்டத் தொடர்களில் எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் உடல்நலக் காரணங்களுக்காக ராஜினாமா செய்தபிறகு, சி.பி. ராதாகிருஷ்ணன் மாநிலங்களவையின் புதிய தலைவரானார். பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை வழங்கினார். மேலும் 'வந்தே மாதரம்', சிந்தூர் நடவடிக்கை, தேர்தல் சீர்திருத்தங்கள், புதிய துணை குடியரசுத் தலைவர் தேர்தல் மற்றும் சில மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படுதல் போன்ற விஷயங்கள் குறித்த விவாதங்களில் கலந்து கொண்டார்.
இருப்பினும், 2025 வக்ஃபு (திருத்த) மசோதாவின் நிறைவேற்றத்தின்போது பிரதமர் பங்கேற்கவில்லை. அந்த மசோதா மின்னணு வாக்குப்பதிவு மூலம் அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.Original Article :