தமிழ்நாடு அரசின் புதிய ஓய்வூதியத் திட்டம் பெரும்பாலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறது. -டி.ராமகிருஷ்ணன்

இந்த முன்மொழியப்பட்ட திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்று கேட்டபோது, ஓய்வூதிய விதிகளில் திருத்தம் செய்வது உட்பட சட்டப்பூர்வ நடைமுறைகளை முதலில் மேற்கொள்ள வேண்டும் என்று ஓர் உயர்அதிகாரி கூறுகிறார்.


தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (Tamil Nadu Assured Pension Scheme (TAPS)) என்பது நடைமுறையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (Old Pension Scheme (OPS)) நகலாகவும், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (Unified Pension Scheme (UPS)) மேம்படுத்தப்பட்ட பதிப்பாகவும் உள்ளது.

மாதாந்திர தனிநபர் பங்களிப்பு மற்றும் ஒவ்வொரு ஊதியக் குழு அமையும்போதும் செய்யப்படும் ஓய்வூதிய திருத்தம் ஆகியவற்றைத் தவிர, முன்மொழியப்பட்ட ஓய்வூதியத் திட்டம் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பரந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறது.


உதாரணமாக, 20 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்தவர்கள் பணியில் இருக்கும்போதே காலமானால், ₹25 லட்சம் வரை பணிக்கொடை (Gratuity) வழங்கப்படும். இந்த அம்சம் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் (TAPS - Tamil Nadu Assured  Pension Scheme) சேர்க்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் (OPS - Old Pension Scheme) போலவே, குடும்ப ஓய்வூதியம் (Family Pension) ஓய்வூதியத்தின் 60% ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணவீக்கக் குறியீட்டுடன் கூடிய திருத்தமும் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 


தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின்கீழ், கடைசியாகப் பணிபுரிந்த மாதத்தின் ஊதியத்தில் 50% அடிப்படையில் ஓய்வூதியம் கணக்கிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேசமயம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் (UPS - Universal Pension Scheme), கடைசியாகப் பணிபுரிந்த 12 மாதங்களின் சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% அடிப்படையில் ஓய்வூதியம் கணக்கிடப்படுகிறது.


ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் (UPS - Universal Pension Scheme) (பழைய திட்டம்): ஓய்வூதியதாரர் இறந்தால், சட்டப்படி திருமணம் செய்த மனைவி/கணவர் மட்டுமே குடும்பப் பலன்களைப் (Family Payout) பெறத் தகுதியுடையவர் ஆவர். தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் (புதிய திட்டம்)( Tamil Nadu Assured Pension Scheme (TAPS)): ஓய்வூதியதாரரால் நியமிக்கப்பட்ட சட்டப்பூர்வ வாரிசுகளை உள்ளடக்கிய குடும்பம் அந்தக் காப்பீட்டைப் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. குறைந்தபட்ச உறுதி செய்யப்பட்ட தொகை (Minimum Assured Payout): ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் (UPS - Universal Pension Scheme): ஓய்வுபெறுவதற்கு முன் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட தகுதியான சேவை இருந்தால் மட்டுமே இந்த உறுதிசெய்யப்பட்ட குறைந்தபட்ச தொகை வழங்கப்படும். தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் (புதிய திட்டம்)(Tamil Nadu Assured Pension Scheme (TAPS)): இந்தக் குறைந்தபட்ச உறுதிசெய்யப்பட்ட தொகை, பணியின் கால அளவைப் பொருட்படுத்தாமல் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 


முன்மொழியப்பட்ட இந்தத்  திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்று கேட்டதற்கு, ஓய்வூதிய விதிகளில் திருத்தம் உள்ளிட்ட சட்டப்பூர்வ நடைமுறைகள் முதலில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஒரு மூத்த அரசு அதிகாரி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் (Contributory Pension Scheme (CPS)) இருக்கும் 6.24 லட்சம் ஊழியர்கள் அனைவரும், அவர்கள் விரும்பும் ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்க அனுமதி இருந்தாலும், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் (TAPS) மாறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பு ஓய்வூதிய நிதியை இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (Life Insurance Corporation (LIC)) முதலீடு செய்வதற்குப் பதிலாக, இப்போது அதை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Pension Fund Regulatory and Development Authority (PFRDA)) மூலம் முதலீடு செய்ய அரசு முடிவு செய்துள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


2003-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட (Contributory Pension Scheme (CPS)) நிதிகள் இதுவரை முழுவதும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (Life Insurance Corporation (LIC)) ஓய்வூதிய நிதித் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிதிகளை அதிக வருமானம் தரக்கூடிய ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Pension Fund Regulatory and Development Authority (PFRDA)) வழியாக முதலீடு செய்யாமல் விட்டதற்காக, தலைமை கணக்குத்  தணிக்கையாளர் (Comptroller and Auditor General of India (CAG))  உள்ளிட்ட பல தரப்புகளிடமிருந்து மாநில அரசு விமர்சனங்களைச் சந்தித்துள்ளது. 2025-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்  சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2023–24-ஆம் ஆண்டுக்கான தலைமை கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முன்பு வரையறுக்கப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (Defined Contributory Pension Scheme (DCPS)) நிதிகளை இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் மற்றும் கருவூல உண்டியல்களில் முதலீடு செய்ததால், பொது வருங்கால வைப்பு நிதி (General Provident Fund (GPF)) வட்டியைவிட குறைவான வட்டியே கிடைத்ததாகக் கூறப்பட்டிருந்தது. இது முந்தைய தணிக்கை அறிக்கைகளிலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இப்போது மாநில அரசு அனைத்து வரையறுக்கப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (Defined Contributory Pension Scheme (DCPS)) நிதிகளையும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் மட்டும் முதலீடு செய்கிறது. அதன் வட்டி விகிதம்  பொது வருங்கால வைப்பு நிதி (General Provident Fund (GPF)) வட்டி விகிதமான 7.1% உடன் சமமாக உள்ளது.



'சாத்தியமான மாதிரி'


புதிய ஓய்வூதியத் திட்டத்தை வடிவமைக்கும்போது போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மற்றொரு திட்ட வகுப்பாளர் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் சொந்த வரி வருவாயின் (State Own Tax Revenue (SOTR)) வளர்ச்சி விகிதம் குறைந்தது அடுத்த 15 ஆண்டுகளுக்காவது எப்படி இருக்கும் என்ற மதிப்பீடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கீட்டு மதிப்பு அதிகரித்தாலும், ஓய்வூதியப் பொறுப்பின் விகிதம் மாநிலத்தின் சொந்த வரி வருவாயில்  (State Own Tax Revenue (SOTR)) சுமார் 21% முதல் 22% வரை நிலையாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 


2023-24 ஆம் ஆண்டிற்கான தலைமை கணக்குத் தணிக்கையாளர் (CAG) அறிக்கையின்படி, ஓய்வூதியம் மற்றும் பிற ஓய்வூதியப் பலன்களின் பங்கு 22.5% ஆக இருந்தது. ஏனெனில், ஓய்வூதியத் தொகை ₹37,696.81 கோடியாகவும், மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் (SOTR) ₹1,67,279 கோடியாகவும் இருந்தது. மாநிலத்தின் சொந்த வரி வருவாய்க்காக 8% என்ற “மிதமான” வளர்ச்சிக் கணக்கு மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.


இதனால்தான், புதிதாக வகுக்கப்பட்டுள்ள ஓய்வூதிய மாதிரி திட்டம் நீடித்திருக்கும் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளதாகத் தெரிவித்தார்.

  Original Article :  Tamil Nadu government’s new pension scheme broadly follows the guidelines of Old Pension Scheme. -T. Ramakrishnan

Share: