உச்சநீதிமன்றம் தனது சொந்த தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்யும் அதிகாரத்தை அரிதாகவே பயன்படுத்துகிறது. மே மாதத்தில் வழங்கப்பட்ட அதன் தீர்ப்பை திரும்பப் பெறுவதன் மூலம், நீதிமன்றம் மீண்டும் வழக்குத் தொடர முன்கூட்டிய சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியுள்ளது.
2:1 என்ற விகிதத்திலான தீர்ப்பில், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தால் (Ministry of Environment, Forest and Climate Change (MoEFCC)) வெளியிடப்பட்ட 2017-ஆம் ஆண்டு அறிவிப்பு மற்றும் 2021-ஆம் ஆண்டு அலுவலக குறிப்பாணை (office memorandum (OM)) ஆகியவற்றை நீக்கிய மே மாதத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை நவம்பர் மாதம் 18-ஆம் தேதி திரும்பப் பெற்றது. முன்னனுமதி பெறாமல் பணிகளைத் தொடங்கிய திட்டங்கள், பின்னர் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான ஒரு வழியை இந்த ஆவணங்கள் உருவாக்கியிருந்தன.
இந்திய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர், வனசக்தி தீர்ப்பு என்று அழைக்கப்படும் மே மாதத் தீர்ப்பு, கட்டுப்பாடற்ற முறையில் அல்லது பிணைப்புச் சட்டத்தின் அறியாமையால் வழங்கப்பட்டதாகக் கூறினர். நீதிபதி உஜ்ஜல் புயான், சுற்றுச்சூழல் சட்டத்தின்கீழ் சரியான நிலைப்பாட்டையே மே மாதத் தீர்ப்பு பிரதிபலிப்பதாகக் கூறி, மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தார். "பின்னர் வழங்கப்படும் சுற்றுச்சூழல் அனுமதி என்பது சுற்றுச்சூழல் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரானது; உண்மையில், அது இந்த சட்ட முறைக்கு முற்றிலும் பொருந்தாத ஒன்றாகும்." என்று அவர் குறிப்பிட்டார்.
சுற்றுச்சூழல் அனுமதி எப்போதும் ஒரு திட்டம் தொடங்குவதற்கு முன்பே வழங்கப்பட வேண்டுமா, அல்லது கடுமையான விதிகள் உண்மையில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத் தவறக்கூடிய சில சிறப்பு நிகழ்வுகளில் பின்னர் அனுமதி வழங்குவது அனுமதிக்கப்படலாமா? என்பதுதான் பிரச்சினையின் மையமாக உள்ளது.
வழக்கின் பின்னணி
சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986, (Environment (Protection) Act, 1986) மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் அதிகாரங்களை மத்திய அரசுக்கு வழங்கியது. 1994-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (Environmental Impact Assessment (EIA)) அறிவிப்பில், புதிய திட்டங்கள் தொடங்குவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்று கூறப்பட்டது. இருப்பினும் "முன்னர்" என்ற வார்த்தை வெளிப்படையாகப் பயன்படுத்தப்படவில்லை. பின்னர் நீதிமன்றங்கள் இந்த விதியை நீதிமன்றங்கள் முன் அனுமதி தேவைப்படுவதாகவே விளக்கின. எந்தவொரு கட்டுமானம், விரிவாக்கம் அல்லது நவீனமயமாக்கலுக்கும் முன் "முன்கூட்டியே சுற்றுச்சூழல் அனுமதி" பெறுவது கட்டாயமென்று 2006-ஆம் ஆண்டு வெளியான ஒரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் மீறி, பல பொது மற்றும் தனியார் திட்டங்கள் அனுமதி பெறாமலேயே தொடர்ந்தன. விமான நிலையங்கள், மருத்துவமனைகள், தொழில்துறை வசதிகள் மற்றும் சாலைத் திட்டங்கள் ஆகியவை விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தபோதே பெரும்பாலும் பணிகளைத் தொடங்கின. அதிகரித்து வரும் நிலுவைத் தொகையை தீர்க்க, சுற்றுச்சூழல் அமைச்சகம் 2017-ஆம் ஆண்டில் ஒருமுறை மட்டுமே வழங்கக்கூடிய "மீறல் சாளரத்தை" ("violation window") வெளியிட்டது. இது ஏற்கனவே விதிகளை மீறியவர்கள் அனுமதி பெறுவதற்கு ஆறு மாத கால அவகாசத்தை அளித்தது. இந்தச் செயல்பாட்டிற்கு தெளிவான நடைமுறை தேவை என்று தனாஜி கம்பீரே வழக்கில் (2021) தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (National Green Tribunal (NGT)) தீர்ப்பளித்த பிறகு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC) அத்தகைய வழக்குகளுக்கான ஒரு நிலையான இயக்க நடைமுறையை அமைத்து ஒரு அலுவலக குறிப்பாணையை வெளியிட்டது. ஒடிசாவில் உள்ள எய்ம்ஸ் வளாகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள புதிய விமான நிலையம் உட்படப் பல பெரிய பொதுத் திட்டங்கள், முன் அனுமதி பெறாமல் பணிகளைத் தொடங்கிய பிறகு, இந்தக் கட்டமைப்புகளைப் பயன்படுத்தின.
மே மாதம் 2025-ஆம் ஆண்டில் , நீதிபதிகள் அபய் ஓகா மற்றும் உஜ்ஜல் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்வு இரண்டு ஆவணங்களையும் ரத்து செய்தது. பின்னோக்கு அனுமதி (retrospective clearance) பெறுவது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு EIA செயல்முறையின் கட்டமைப்பிற்கு முரணானது என்று நீதிமன்றம் கூறியது. இதற்கு வேலை தொடங்குவதற்கு முன் மதிப்பீடு மற்றும் பொதுமக்களின் பங்கேற்பு தேவை என்பதை விளக்கியது. 2017-ஆம் ஆண்டு வெளியான அறிவிப்பு மற்றும் 2021-ஆம் ஆண்டின் அலுவலக குறிப்பாணையின் கீழ் ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதிகள் செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
தீர்ப்பை திரும்பப் பெறுதல்
அரசியலமைப்பின் 137-வது பிரிவானது, மறுஆய்வு மனுக்கள் மூலம் உச்சநீதிமன்றம் தனது சொந்த தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்ய அதிகாரம் அளிக்கிறது. இதுபோன்ற மனுக்கள் பொதுவாக ஆரம்ப தீர்ப்பை வழங்கிய அதே அமர்வால் விசாரிக்கப்படும். இந்த வழக்கில், நீதிபதி ஓகா ஓய்வு பெற்றவுடன், தலைமை நீதிபதி, நீதிபதி சந்திரன் மற்றும் நீதிபதி புயான் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வால் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் விதிகளின்படி, சிவில் மற்றும் குற்றவியல் சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறுக்கப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே ஒரு தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய முடியும். முக்கியமாக, பதிவில் தெளிவான மற்றும் வெளிப்படையான தவறு இருக்கும்போது மட்டுமே இது அனுமதிக்கப்படும் என்று விதிமுறைகள் கூறுகின்றன.
இருப்பினும், நீதிமன்றம் ஒரு வழக்கை மீண்டும் திரும்பப் பெறும் அதிகாரத்தை அரிதாகவே பயன்படுத்துகிறது. ஏனெனில், ஒரு வழக்கு ஏற்கனவே பல கட்டங்களைக் கடந்து வந்திருக்கும் — விசாரணை நீதிமன்றம், மேல்முறையீடு மற்றும் பின்னர் உச்சநீதிமன்றம். அது முடிவடையும்போது, அது பலமுறை ஆராயப்பட்டிருக்கும். ஒரு மறுஆய்வு என்பது மேலும் ஒரு கட்டத்தைச் சேர்த்து செயல்முறையைத் தாமதப்படுத்துகிறது. எனவே, நீதிபதிகள் வழக்குகள் என்றென்றும் இழுத்துச் செல்வதைத் தவிர்க்கிறார்கள். மறுஆய்வுகள் அதே அமர்வின் மூலம், ஆவணத்தில் தெளிவான தவறு அல்லது உண்மையாகவே முன்பு சமர்ப்பிக்க முடியாத புதிய சான்றுகள் போன்ற வரையறுக்கப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே விசாரிக்கப்படுகின்றன. எனவே, நீதிபதிகளை முன்பு நம்பவைத்திருக்கக்கூடிய எந்தவொரு விஷயமும் ஏற்கனவே பரிசீலிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுச்சூழல் அனுமதி சட்டம்
நீதிபதி பூயன் அவர்கள் எந்தவொரு திட்டத்தையும் தொடங்குவதற்கு முன் சுற்றுச்சூழல் அனுமதி கட்டாயம் பெறப்பட வேண்டும் என்று வாதிடுகிறார்; ஏனெனில் பிரிவு 21 அனைவருக்கும் மாசு இல்லாத சூழலில் வாழும் உரிமையை வழங்குகிறது, பிரிவு 51A(g) ஒவ்வொரு குடிமகனும் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்று கோருகிறது, மேலும் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் பணி தொடங்குவதற்கு முன்பே முன் அனுமதி பெறுவதை கட்டாயமாக்குகிறது; எனவே ஒரு திட்டம் தொடங்கப்பட்ட பிறகு பின்தேதியிட்ட அனுமதி (ex post facto clearance) வழங்குவது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகளுக்கு எதிரானது என்று அவர் நம்புகிறார்.
2006-ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பானது ஒரு மூன்றடுக்கு அமைப்பை உருவாக்குகிறது. பெரிய திட்டங்கள் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தால் (MoEFCC) அங்கீகரிக்கப்படுகின்றன, நடுத்தர திட்டங்கள் மாநில அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படுகின்றன, மற்றும் சிறிய சுரங்கத் திட்டங்கள் மாவட்ட அளவில் அங்கீகரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு முன்மொழிவும், சுற்றுச்சூழல் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு, பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னர், ஆய்வு, பரப்பு வரையறை, மதிப்பீடு, மற்றும் சில சமயங்களில் பொது விசாரணை போன்ற நிலைகளைக் கடந்து செல்ல வேண்டும். அங்கீகாரம் இல்லாமல் தொடங்கப்பட்ட திட்டங்களை "சட்டப்பூர்வமாக்க" பிரிவு 15-ன் கீழ் உள்ள அபராதங்களைப் பயன்படுத்த முடியாது. இதன் காரணமாக, 2017-ஆம் ஆண்டின் அறிவிப்பு மற்றும் 2021-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நிலையான இயக்க நடைமுறைகள் போன்ற நடவடிக்கைகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முரணாகத் தெரிகிறது.
இந்த வழக்கில் வெற்றி பெற்ற மற்றொரு நிலைப்பாடு, சட்டத்தில் பின்னோக்குத் தேதியிட்ட அனுமதி (retrospective clearance) வழங்குவதை வெளிப்படையாகத் தடை செய்யவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறது; மிகக் குறைந்த சூழல்களில் மட்டுமே, சமநிலை அடைவது அதைவிடப் பெரிய இழப்பைத் தடுக்கும் என்று கருதுகிறது. இந்தக் கருத்து “மாசுபடுத்துபவர் செலுத்தட்டும்” (polluter pays principle) கொள்கையைப் பிரதிபலிக்கிறது; இடிப்பதற்குப் பதிலாக அபராதமும், சீரமைப்பும் (remediation) முன்னுரிமை அளிக்கப்படுகின்றன. இந்தக் கருவிகள் (அபராதம் மற்றும் சீரமைப்பு) மீறல்காரர்களைச் சட்டத்திற்கு இணங்க வைப்பதற்கான வழிமுறைகளாகவே கருதப்படுகின்றன.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு
தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி சந்திரன் ஆகியோர், 2017-ஆம் ஆண்டு அறிவிப்பு மற்றும் 2021-ஆம் ஆண்டின் அலுவலக குறிப்பாணையை உறுதி செய்த முந்தைய ஒருங்கிணைந்த அமர்வுகளின் தீர்ப்புகளை மே மாதத் தீர்ப்பு புறக்கணித்ததால், அந்தத் தீர்ப்பு குறைபாடுடையது என்று கூறினர். எனவே, மே மாதத் தீர்ப்பு முந்தைய முடிவுகளை தவறாகப் புரிந்துகொண்டது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
* பொதுக் காரண (Common Cause) (2018) வழக்கில், ஒரு திட்டம் ஏற்கனவே தொடங்கிய பிறகு அனுமதி அளிப்பதைப் பற்றி நீதிமன்றம் விமர்சித்தது. ஆனால், விதிகள் பின்பற்றப்பட்ட பின்னரும் மற்றும் செலுத்த வேண்டிய நிலுவைகள் செலுத்தப்பட்ட பின்னரும் சுரங்கத் தொழிலைத் மீண்டும் தொடங்க அனுமதித்தது.
* அலெம்பிக் பார்மாசூட்டிகல்ஸ் (Alembic Pharmaceuticals) (2020) வழக்கில் (2020), தொழில்களை மூடுமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. ஏனெனில், அவற்றை மூடுவது ஒரு விகிதாசாரமான அல்லது நியாயமான நடவடிக்கை அல்ல என்று அது கருதியது.
* எலக்ட்ரோஸ்டீல் ஸ்டீல்ஸ் (Electrosteel Steels case) (2025) வழக்கில், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் பொருத்தமான வழக்குகளில் முன்கூட்டிய அனுமதியைத் தடுக்கவில்லை என்று நீதிபதி ஓகாவின் அமர்வு தீர்ப்பளித்தது.
கடந்த செவ்வாய்கிழமையன்று, முந்தைய அமர்வின் தீர்ப்பு இந்தத் தீர்ப்புகளுடன் முரண்பட்டிருந்தால், அதை ஒரு பெரிய அமர்வுக்குப் பரிந்துரைத்திருக்க வேண்டும் என்று பெரும்பான்மையானோர் கருத்து தெரிவித்தனர்.
தலைமை நீதிபதியும் (CJI) நீதிபதி சந்திரனும் இது குறித்த கவலையை எழுப்பினர். கடுமையான அமலாக்கம் முக்கியமான பொதுத் திட்டங்களை இடித்துத் தள்ள வழிவகுக்கும், இதனால் பொதுப் பணம் பெருமளவில் வீணாகும் என்று அவர்கள் கூறினர். மேலும், 2017-ஆம் ஆண்டு அறிவிப்பு மற்றும் 2021-ஆம் ஆண்டு அலுவலகக் குறிப்பாணை ஆகியவை ஏற்கனவே கடுமையான அபராதங்களை விதித்துள்ளன. இவை விதிமீறல்களைத் தடுப்பதோடு, திட்டங்கள் விதிகளின்படி பின்பற்றப்படுவதையும் உறுதி செய்கின்றன என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
முன் அனுமதி பெறாத கட்டிடங்களை இடிப்பது சுற்றுச்சூழலுக்கு உதவாது. ஏனெனில், அந்த இடிபாடுகள் மேலும் அதிக சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தும். மேலும், முறையான அனுமதி பெற்று கட்டிடங்கள் மீண்டும் கட்டப்படலாம் என்றும் அமர்வு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. எனவே, இது குறித்த ஒரு சமச்சீரான அணுகுமுறை தேவை என்று நீதிமன்றம் தெரிவித்தது.
நீதிபதி பூயன் தனது மாறுபட்ட கருத்தில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அமைப்பின் அடிப்படைக் கொள்கையை மே மாதத் தீர்ப்பு சரியாகப் பின்பற்றியதாகக் கூறினார். அதாவது, ஒரு திட்டம் தொடங்குவதற்கு முன்பே அனுமதி பெற வேண்டும். பின்னோக்கு ஒப்புதலுக்கு அனுமதி இல்லை என்று தெளிவாகக் கூறிய Common Cause மற்றும் Alembic Pharmaceuticals வழக்குகளை அவர் நம்பியிருந்தார். உச்சநீதிமன்றத்தின் சட்டப்பிரிவு 142-ன் கீழ் உள்ள சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி, முந்தைய வழக்குகளில் விதிமீறல்கள் செய்தவர்கள் தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டதே தவிர, அவை கட்டாயச் சட்டம் (binding law) அல்ல என்றும் அவர் தெரிவித்தார். இதன் காரணமாக, பெரும்பான்மையினர் குறிப்பிட்ட Electrosteel Steels, Pahwa Plastics (2022) மற்றும் D Swamy (2022) போன்ற பிந்தைய வழக்கின் தீர்ப்புகள், சரியான சட்டத்தைக் கருத்தில் கொள்ளாமல் முடிவெடுக்கப்பட்டவை (per incuriam) என்பதால், அவை செல்லாது என்று அவர் அறிவித்தார்.
தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்கூட, ஒரு சட்ட மீறல் நடந்த பிறகு சட்டம் என்ன செய்ய வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு நீண்டது. சுற்றுச்சூழலை சேதப்படுத்திய ஒரு நிறுவனம் அந்த சேதத்திற்கான செலவுகளை ஏற்க வேண்டும். 2021-ஆம் ஆண்டுக்கான SOP (நிலையான இயக்க நடைமுறை) ஆனது, மீறல் காலத்திற்கு மாசுபாட்டாளர் பணம் செலுத்த வேண்டும் என்றும், அந்த செலுத்தும் தொகை திட்டத்தின் அளவு மற்றும் வணிக பரிவர்த்தனைகளின் அளவிற்கு ஏற்ப விகிதாசாரமாக இருக்க வேண்டும் என்றும் கோடிட்டுக் காட்டுகிறது. இது “மாசுபடுத்துபவர் செலுத்தட்டும்” கொள்கை (Polluter Pays Principle) என்று அழைக்கப்படுகிறது.
பெரும்பாலான நீதிபதிகள், ஒரு கட்டிடத்தை இடிப்பதன் விளைவைச் சட்டம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், குறிப்பாக அந்தத் திட்டம் இன்னும் விதிமுறைக்கு இணங்கும்படி மாற்றப்படலாம் என்றால், இது அவசியம் என்றும் கூறினர். ஆனால், நீதிபதி பூயன் இந்தக் கருத்தை மறுத்தார். "மாசுபடுத்துபவரே செலவை ஏற்க வேண்டும்" என்ற கொள்கை, ஏற்பட்ட சேதத்தைச் சரிசெய்வதற்காக மட்டுமே, அதுவே ஒரு திட்டத்தின் சட்டவிரோதமான தொடக்கத்தை அனுமதிப்பதற்கான முறை அல்ல என்றும் அவர் வாதிட்டார். கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கு முன்பே சுற்றுச்சூழல் அனுமதி எப்போதும் பெறப்பட வேண்டும் என்று நீதிபதி வலியுறுத்தினார்.
மே மாதத் தீர்ப்பை ரத்து செய்தபிறகு, நீதிமன்றம் வழக்கை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது. அறிவிப்பு மற்றும் அலுவலக குறிப்பாணை இப்போதைக்கு நடைமுறையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், அவற்றின் செல்லுபடியாகும் தன்மை மீண்டும் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Original Article: SC strikes down Vanashakti judgment: Why ruling is significant.