நுண்ணுயிர் எதிர்ப்புக்கான (Antimicrobial Resistance (AMR)) தேசிய செயல் திட்டத்தின் பதிப்பு-2 புதிக்கப்பட்ட உறுதிப்பாட்டைக் கோருகிறது.
நுண்ணுயிர் எதிர்ப்புக்கான தேசிய செயல் திட்டத்தின் 2-வது பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அறிமுகம், பதிப்பு-1 சிறிய ஆதாயங்களை மட்டுமே அடைந்தது என்பதைக் காட்டுவதுடன், அதன் ஒட்டுமொத்த செயல்பாடும் மந்தமாக இருந்தது என்பதை ஒப்புக்கொள்கிறது. இதனைத்தொடந்து, வரவேற்கத்தக்க நடவடிக்கையாக, ஒன்றிய அரசு இப்போது கொள்கையின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான, விவரங்கள் இன்னும் பொதுவில் கிடைக்கவில்லை என்றாலும், நாடு எதிர்கொள்ள வேண்டிய மிகப்பெரிய நுண்ணுயிர் எதிர்ப்புக்கான (Antimicrobial Resistance (AMR)) சிக்கலை சரிசெய்ய முயற்சிப்பதில் நாட்டிற்கு ஒரு உந்துதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அக்டோபரில், உலக சுகாதார அமைப்பு (WHO) தனது உலகளாவிய ஆண்டிபயாடிக் எதிர்ப்பு கண்காணிப்பு அறிக்கையை (Global Antibiotic Resistance Surveillance Report) வெளியிட்டது. இது 2023-ம் ஆண்டில், இந்தியாவில் தோராயமாக மூன்றில் ஒரு பாக்டீரியா தொற்று பொதுவாகப் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டது என்று பதிவு செய்தது. உலகளவில், இது ஆறு உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளில் ஒன்றாகும். இந்தியா ஏன் மற்ற நாடுகளை விட அதிகமாக பாதிக்கப்பட்டது என்பதை அறிக்கை விளக்கியது. அதிக தொற்று நோய்கள், நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் அதிகப்படியான மற்றும் தவறான பயன்பாடு மற்றும் கண்காணிப்பு மற்றும் சுகாதார உள்கட்டமைப்பில் உள்ள இடைவெளிகள் ஆகிய காரணிகளில் அடங்கும். ஈ.கோலை (E.coli) மற்றும் கிளெப்சில்லா நிமோனியா (Klebsiella pneumoniae) ஆகியவை முக்கியமான நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு அதிக எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. இதனால், மருந்துகளின் கடைசி வரிசை பயனற்றதாகிறது. ஆனால் மனித உடல்நலம் மட்டுமே AMR-இன் ஒரே தடயம் அல்ல; உணவுச் சங்கிலியில் அதன் குளிர்ந்த கரங்கள் தீண்டாத துறை எதுவும் ஏறக்குறைய இல்லை — கால்நடை மருத்துவப் பயன்பாடுகளில் தொடங்கி, மண் மற்றும் நீரின் உடல்நலத்தை மாசுபடுத்துவது வழியாக விவசாயமும் நீர்வாழ் உயிரியலும் (aquaculture) பாதிக்கப்படுகின்றன. AMR-இன் இந்த எங்கும் பரவியிருக்கும் பரவல் விஞ்ஞானிகளை One Health முறையை முன்னெடுக்கத் தூண்டியுள்ளது — இது மனித உடல்நலம், விலங்கு உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் உடல்நலம் ஆகிய மூன்று கண்ணோட்டங்களையும் ஒருங்கிணைத்து, சமூகங்களில் அதிகரித்து வரும் எதிர்ப்புத் திறனை (resistance) கையாள உதவுகிறது.
இந்தியா நுண்ணுயிர் எதிர்ப்பை (AMR) தீவிரமாக எடுத்துக்கொண்டு, மேம்படுத்தப்பட்ட, உறுதியான நுண்ணுயிர் எதிர்ப்பி மேலாண்மைத் திட்டத்திற்கு (antibiotics stewardship programme) அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் இது என்பதில் சந்தேகமில்லை. முதல் தேசிய செயல் திட்டம் நுண்ணுயிர் எதிர்ப்பு (AMR) பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க உதவியது. இருப்பினும், அதன் உண்மையான செயல்படுத்தல் பலவீனமாக இருந்தது. இந்தியா தனது தேசிய கண்காணிப்பு திட்டத்தை விரிவுபடுத்தியது. COVID-19 தொற்றுநோய் காரணமாக இது ஒரு வலுவான ஆய்வக வலையமைப்பை உருவாக்கியது. கால்நடை வளர்ப்பில் வளர்ச்சி ஊக்குவிப்பாளராக கொலிஸ்டினை (Colistin) தடை செய்வதன் மூலம் நாடு ஒரு பெரிய வெற்றியைப் பெற்றது. இருப்பினும், மாநிலங்களுடன் சக்திவாய்ந்த ஒத்துழைப்புகளைப் பெறத் தவறியதால் இந்தத் திட்டம் தோல்வியடைந்தது. ஒரு சில மாநிலங்கள் தங்கள் சொந்தக் கொள்கைகளை வகுத்தன. இதில், கேரளா மட்டுமே அதன் கொள்கையை சிறப்பாக செயல்படுத்தியது. கேரளா சமீபத்தில் சமூகத்தில் AMR அளவுகளில் ஒரு சிறிய வீழ்ச்சியைப் பதிவு செய்தது. இந்தக் கொள்கை நுண்ணுயிர் எதிர்ப்பின் (AMR) காரணக் காரணிகளின் ஒவ்வொரு அம்சத்தையும் நிவர்த்தி செய்ய வேண்டும். இதில் அதிகப்படியான நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாடு மற்றும் தவறான பயன்பாடு ஆகியவை அடங்கும். ஒரு ஆரோக்கியம் அணுகுமுறையை (One Health approach) வலுப்படுத்துவடன், மாநிலங்களுடன் சிறந்த ஒருங்கிணைப்பை உறுதிசெய்ய வேண்டும். இந்த முறையில், கொள்கை பயனுள்ளதாக இருக்க வேண்டும். இதற்கான சவால்கள் இருந்தபோதிலும் இதற்கான தீர்வுகளை வழங்க வேண்டும்.
Original Article: Overcoming resistance : On the National Action Plan on Antimicrobial Resistance (2025–29)