தண்டி யாத்திரை: காந்தி ஏன் உப்பைத் தேர்ந்தெடுத்தார், அது இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை எவ்வாறு மாற்றியது? -ரோஷ்னி யாதவ்

தற்போதைய செய்தி


குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டி வரை மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உப்பு யாத்திரை அல்லது தண்டி யாத்திரையின் 96-வது ஆண்டு நிறைவை மார்ச் 12-ஆம் தேதி குறிக்கிறது. இந்தச் சூழலில், தண்டி யாத்திரை மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி தெரிந்து  கொள்வோம்.


முக்கிய  அம்சங்கள்:


1. மார்ச் 12 முதல் ஏப்ரல் 5, 1930 வரை நடைபெற்ற 24 நாட்கள் நடைப்பயணம் ஆங்கிலேயரின் உப்பு விலை கட்டுப்பாடுக்கு  எதிரான வரி எதிர்ப்பு பிரச்சாரமாகும். காந்தியின் அகிம்சை அல்லது சத்தியாக்கிரகக் கொள்கையின் அடிப்படையில், இந்த நடைப்பயணம், ஒத்துழையாமை இயக்கத்தின் (civil disobedience) தொடக்கத்தைக் குறித்தது.


2. 1920-களின் முற்பகுதியில் உருவான ஒத்துழையாமை இயக்கத்திற்குப் பிறகு ஆங்கிலேய அரசுக்கு எதிரான மிக முக்கியமான ஒழுங்கமைக்கப்பட்ட இயக்கமாக தண்டி யாத்திரை இருந்தது. தேசிய, சர்வதேச ஊடகங்கள் மற்றும் உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்தாலும், தண்டி யாத்திரை இந்திய சுதந்திர இயக்கத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.


காந்தி ஏன் 'உப்பை' தேர்ந்தெடுத்தார்?


1882-ஆம் ஆண்டின் உப்பு சட்டம் மூலம் ஆங்கிலேய அரசு இந்தியாவில் உப்பு தயாரிப்பு மற்றும் விற்பனைமீது  முழுமையான அடிப்படை உரிமையை பெற்றது. இந்தியாவின் கடற்கரைகளில் உப்பு தாராளமாகக் கிடைத்தாலும், இந்தியர்கள் உப்பை ஆங்கிலேயர்களிடமிருந்து வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காந்தி, உள்நாட்டு ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்குவதற்கு ஏற்ற ஒரு பொருள்  உப்பாக இருக்கும் என்று உப்பை தேர்ந்தெடுத்தார். மார்ச் 8 அன்று அகமதாபாத்தில் ஒரு பெரிய கூட்டத்தில் உரையாற்றிய காந்தி, உப்புச் சட்டங்களை மீறுவதற்கான (break the salt laws) தனது முடிவை அறிவித்தார்.


உப்பு சத்தியாக்கிரகத்திலிருந்து (Salt Satyagraha) நாடு முழுவதும் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கம் (Civil Disobedience Movement) வரை


1. 1930 ஏப்ரல் 6 அன்று, காந்தி தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து கடல்நீரிலிருந்து உப்பு தயாரித்து உப்பு சட்டத்தை மீறினார். அப்போது அவர் Free Press செய்தியாளரிடம், “இதன் மூலம் நான் ஆங்கிலேய அரசின் அடித்தளத்தையே அசைத்து பார்த்திருக்கிறேன்” என்று கூறினார்.


2. இதன்மூலம், இந்த இயக்கம் நாடு முழுவதும் பரவியது. 60,000 பேர் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. Gandhi Smriti, வலைத்தளம், ஜவஹர்லால், மகாதேவ் தேசாய் மற்றும் காந்தியின் மகன் தேவதாஸ் ஆகியோர் முதலில் சிறைக்கு அனுப்பப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. ஆங்கிலேய அரசாங்கம் இந்திய தேசிய காங்கிரஸை சட்டவிரோதமானது என்று அறிவித்தது. தாராசனாவில் உள்ள அரசாங்க உப்பு ஆலைகளை சோதனை செய்யப் போவதாக காந்தி மாகாண ஆளுநரிடம் தெரிவித்தார். அவர் சோதனை செய்வதற்கு முன்பு, கைது செய்யப்பட்டு ஏர்வாடா மத்திய  சிறைக்கு அனுப்பப்பட்டார்.

3. காந்தி கைது செய்யப்பட்ட பிறகு, அப்பாஸ் தியாப்ஜி, தாராசனாவிற்கு நடைபயணம் மேற்கொண்டார். ஆனால், அவரும் கைது செய்யப்பட்டார். பேரணியை வழிநடத்திய அப்பாஸ் தியாப்ஜிக்குப் பிறகு சரோஜினி நாயுடு நடைபயணத்தை வழிநடத்தினர். அவர் துறையினரின் தாக்குதலை எதிர்கொண்டார்.


4. இந்தியாவின் பிற பகுதிகளிலும் இதேபோன்ற செயல்கள் நடந்தன. பல ஆங்கிலேய சட்டங்கள் மீறப்பட்டன, வெளிநாட்டு துணி மற்றும் மதுபானங்களை புறக்கணித்தன. உப்பு சத்தியாக்கிரகமாகத் தொடங்கிய போராட்டம் வேகமாக மக்கள் சத்தியாக்கிரகமாக (mass satyagraha) வளர்ந்தது. உதாரணமாக, வங்கத்தில், சதீஷ் சந்திர தாஸ்குப்தா தலைமையிலான தன்னார்வலர்கள் சோதேபூர் ஆசிரமத்திலிருந்து மஹிஸ்பதன் கிராமத்திற்கு உப்பு தயாரிக்க நடந்து சென்றனர். பம்பாயில் உள்ள கே.எஃப். நாரிமன் தலைமையில் மற்றொரு குழுவினர் ஹாஜி அலி பாயிண்டிற்குச் சென்று அருகிலுள்ள பூங்காவில் உப்பு தயாரித்தனர்.


5. ரையத்துவாரி பகுதிகளில் சௌகிதாரி (கிராம காவலர்) வரிக்கு எதிரான போராட்டமும், அதோடு வாடகை செலுத்தா முறையும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. மத்திய மாகாணங்கள், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் காவல்துறையினருடன் பல வன்முறை மோதல்களும், பழங்குடியினரின் வனப் பகுதிகள்  மீதும் படையெடுப்புகள்  நடந்தன.


6. வடமேற்கு எல்லை பகுதியில் (North-West Frontier Province (NWFP)), எல்லை காந்தி (Frontier Gandhi) என்று பிரபலமாக அறியப்படும் கான் அப்துல் கஃபார் கான், குதாய் கித்மத்கர்கள் (Red Shirts) என்று அழைக்கப்படும் அறப்போர் தன்னார்வல  தொண்டர் படையை (non-violent volunteers) உருவாக்கினார். அவர்கள் இயக்கத்தில் தீவிரப் பங்கு வகித்தனர். தன்னார்வலர்களால் அந்த நகரத்தைக் கைப்பற்ற முடிந்தது. இருப்பினும், ஆங்கிலேயர்களால் வேகமாக அந்த நகரத்தை மீண்டும் ஆக்கிரமிக்க முடிந்தது. அகிம்சை முறையில் போராட்டம் நடத்தும் அறப்போர் தன்னார்வல  தொண்டர்படைமீது கடுமையான தாக்குதலை  நடத்தியது.


7. சி. ராஜகோபாலாச்சாரி தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கத்தை வழிநடத்தினார். ஏப்ரல் 1930-ல் உப்புச் சட்டத்தை மீறுவதற்காக திருச்சிராப்பள்ளியிலிருந்து தஞ்சை கடற்கரையில் உள்ள வேதாரண்யம் வரை ஒரு பேரணியை நடத்த முடிவுசெய்தார். இதைத் தொடர்ந்து வெளிநாட்டுத் துணிக்கடைகளில் மறியல் போராட்டம் மற்றும் மது பானத்திற்கு எதிரான எதிர்ப்புப் பிரச்சாரம் (anti-liquor campaign) நடைபெற்றது.

8. மலபாரில், நாயர் காங்கிரஸ் தலைவர் கேளப்பன் தலைமையில் உப்பு சத்தியாகிரகப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. அதேபோல், ஒரிசாவில், கோபபந்து சவுத்ரி தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்பட்டது. பீகாரில், ராம் பிரிக்ஷா பெனிபுரி, பேராசிரியர் அப்துல் பாரி மற்றும் ஆச்சார்யா கிருபளானி போன்ற தலைவர்கள் இந்த இயக்கத்திற்கு தலைமை தாங்கினர்.


9. சிட்டகாங்கில், சுர்ஜயா சென் தலைமையிலான புரட்சியாளர்களின் குழு ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியது. அவர்கள் உள்ளூர் ஆயுதக் கிடங்கைக் கைப்பற்றினர். மேலும், 'சுதந்திர குடியரசு இராணுவம்' (Independent Republican Army) என்ற பெயரில் ஒரு பொது அறிவிப்பு  (Proclamation) வெளியிடப்பட்டது. மேலும், ஜலாலாபாத் மலையில் ஒரு கடுமையான போரை நடத்தினார். பல புரட்சியாளர்கள் இந்த  போரில் கொல்லப்பட்டனர்.


காந்தி-இர்வின் ஒப்பந்தம் என்றால் என்ன?


1. காந்தி ஜனவரி 31, 1930 அன்று இர்வினுக்கு 11 அம்ச இறுதி எச்சரிக்கையை அனுப்பினார். 11 அம்ச கோரிக்கைகள்: முழுமையான மதுவிலக்கு, பரிமாற்ற விகிதத்தைக் குறைத்தல், நில வருவாயை 50% குறைத்தல், உப்பு வரியை ரத்து செய்தல், இராணுவச் செலவினங்களைக் குறைத்தல், உயர்ந்த பதவியிலுள்ள அரசு அதிகாரிகளின் சம்பளங்களை குறைத்தல், வெளிநாட்டுத் துணிகளுக்கான பாதுகாப்பு வரி (Protective Tariff) விதித்தல், கடலோரப் போக்குவரத்து முன்பதிவு மசோதாவை (Coastal Traffic Reservation Bill) நிறைவேற்றுதல், கொலைக் குற்றத்திற்காகக் தண்டிக்கப்பட்டவர்களைத் தவிர அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தல், குற்றப் புலனாய்வுத் துறையை (Criminal Investigation Department (C.I.D)) ஒழித்தல் மற்றும் தற்காப்புக்காக துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதற்கான உரிமங்களை வழங்குதல் போன்றவைகளாகும்.


2. கோரிக்கைகளை நிறைவேற்ற இர்வின் விருப்பம் காட்டாதபோது, ​​காந்தி தனது வரலாற்றுச் சிறப்புமிக்க உப்பு யாத்திரையான தண்டியை தொடங்கினார். ஜனவரி 25, 1931 அன்று, மாகாண ஆளுநர் இர்வின் காந்தி மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்களை நிபந்தனையின்றி விடுவிப்பதாக அறிவித்தார்.


3. மார்ச் 5, 1931 அன்று, காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானது. இது டெல்லி ஒப்பந்தம் (Delhi Pact) என்றும் அழைக்கப்பட்டது. இதன் மூலம் வன்முறையில் ஈடுபட்டதாகத் தண்டனை பெறாத அனைத்து அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட்டனர். அபராதங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன, பறிமுதல் செய்யப்பட்ட நிலங்கள் திரும்ப வழங்கப்பட்டன. பணியில் இருந்து ராஜினாமா செய்த அரசு ஊழியர்கள் கருணையுடன் நடத்தப்பட்டனர். காங்கிரஸ், ஒத்துழையாமை இயக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, அந்த ஆண்டின் பிற்பகுதியில் இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் (Second Round Table Conference) பங்கேற்க ஒப்புக்கொண்டது.


காந்திய தத்துவம் (Gandhian Philosophy) என்றால் என்ன?


இவரைப் போன்ற ஒரு மனிதர், இரத்தமும் சதையுமாக இந்த பூமியில் இருந்தார் என்பதை வருங்கால சந்ததியினர் நம்பமாட்டார்கள் என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறினார்.


ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் இந்த கூற்று மகாத்மா காந்தி மற்றும் அவரது தத்துவத்தின் முக்கியத்துவதை காட்டுகிறது.  ஐன்ஸ்டீன் காந்தியின் தத்துவங்ககளால் ஆழமாக ஈர்க்கப்பட்டார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தனது காலத்தில் இருந்த அரசியல்வாதிகளில் அதிக அறிவை பெற்றவராக இருக்கிறார் (enlightened of all the politicians of his time) என்று காந்தியை அழைத்தார். 


1. அகிம்சை : மகாத்மா காந்தி உலகம் முழுவதும் அகிம்சையின் தூதராக அறியப்படுகிறார். காந்தியின் கருத்துப்படி, அகிம்சை என்பது மனிதன் உருவாக்கிய மிகப் பெரிய அழிவுக் ஆயுதங்களைக் காட்டிலும் வலிமையானதாகும். "சமூக அல்லது அரசியல் மாற்றத்தை அடைவதற்காக உடல்ரீதியான வன்முறையைப் பயன்படுத்துவதை நிராகரிப்பதாக ஐக்கியநாடுகள் சபை இந்த சொல்லை விளக்கியுள்ளது.


2. சத்தியாக்கிரகம் (Satyagraha): காந்தியின் சத்தியாக்கிரகம் அல்லது உண்மை-சக்தி, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை ஊக்கப்படுத்தியுள்ளது. சத்தியாகிரகம் என்பது தவறுகளுக்கும் அநீதிக்கும் அகிம்சை முறையில் எதிர்த்து, உண்மையை உறுதியாக பாதுகாப்பது என்பதைக் குறிக்கிறது. சத்தியாகிரகத்தின் அடிப்படை ஆன்மீக சக்தியை உண்மை மற்றும் அகிம்சையிலிருந்து பெறுகிறது.

3. தன்னிறைவு (Swadeshi): தன்னிறைவு என்பது காந்திய தத்துவத்தின் ஒரு முக்கிய கொள்கையாகும். இந்தியா தன்னிறைவு பெற்ற நாடக மாறுவதையும், இந்திய பணம் பிரிட்டனுக்கு மீண்டும் அனுப்பப்படுவதைத் தடுக்க மகாத்மா காந்தி விரும்பினார்.


4. சர்வோதயா: சர்வோதயா என்ற கருத்து காந்தி அவர்களின் தத்துவத்தில் ஒரு முக்கியமான பகுதியாகும். சர்வோதயா என்பது இரண்டு சொற்களைக் கொண்ட சமஸ்கிருத சொல்லாகும்:  இதில் “சர்வா” என்பது அனைவரும் என்றும், “உதயா” என்பது உயர்வு என்ற இரண்டு சொற்கள் ஒன்றிணைக்கபட்டுள்ளன. இதன் பொருள் “அனைவரின் உயர்வு”, “அனைவரின் நலன்”, அல்லது “அனைவரின் முன்னேற்றம்” என்பதாகும். இந்த சொல்லை முதன்முதலில் காந்தி 1908-ஆம் ஆண்டு ஜான் ரஸ்கின் எழுதிய அரசியல் பொருளாதாரம் குறித்த "கடைசி வரை" (Unto This Last) என்ற துண்டுப்பிரசுரத்தின் மொழிபெயர்ப்பாக உருவாக்கினார்.


5. சுயராஜ்ஜியம் (Swaraj) மற்றும் கிராம சுயராஜ்ஜியம்: 'பயமின்றி வாழ முடியும்' என்பதை மகாத்மா காந்தி தனது ஹிந்த் ஸ்வராஜ் நூலில் சுவராஜ் என்று விளக்குகிறார். கிராம சுயராஜ்ஜியம் என்பது இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன் மகாத்மா காந்தி முன்வைத்த கிராம முன்னற்றத்திற்கான கருத்தாகும். இதில் சமூகத்தின் முழுமையான வளர்ச்சியை (holistic development of society) நோக்கமாக கொண்டு, பொருளாதார அமைப்பில் தனி நபர்களை முக்கிய இடத்தில் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.


Original Link: Dandi March: Why Gandhi chose salt and how it changed India’s Freedom Struggle.


Share: