ஜல் ஜீவன் திட்டம் பற்றி… -ரோஷ்னி யாதவ்

முக்கிய அம்சங்கள்:


ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம், ஜல் ஜீவன் திட்டத்திற்கு 2028 வரை மொத்தம் ரூ.8.70 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என்றும் இந்தத் தொகையில், ஒன்றிய அரசின் செலவுத்தொகை தற்போது ரூ.3.59 லட்சம் கோடியாக இருக்கும் என்றும் 2019-ல் ஒதுக்கப்பட்ட ரூ.2.08 லட்சம் கோடியும் அடங்கும் என்று கூறினார்.


பின்னர், X சமூக ஊடகத்தில், பிரதமர் நரேந்திர மோடி, இந்த முடிவு கிராமப்புறத்தில் உள்ள வீடுகளுக்கு நிலையான மற்றும் நம்பகமான குடிநீர் வழங்கும் முக்கியமான நடவடிக்கை என்று தெரிவித்தார். மேலும், இது அமைப்புகள் உருவாக்குவதில் மட்டும் அல்லாமல், மக்களுக்கு நேரடியாக சேவை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது என்றும் கூறினார். இந்த நடவடிக்கை நீர் பாதுகாப்பை மேம்படுத்தி, மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கிராமப்புற மக்களை குறிப்பாக பெண்களை வலுப்படுத்தும் என்றும் அவர் பதிவிட்டார்.



அதிகாரப்பூர்வ அறிக்கை, "மூலத்திலிருந்து குழாய் வரை" விநியோக முறையை டிஜிட்டல் முறையில் வரைபடமாக்க "நீர் வளம் மிக்க இந்தியா" (Sujalam Bharat) என்ற சீரான தேசிய டிஜிட்டல் கட்டமைப்பு அமைக்கப்படும் என்றும், இரண்டாம் கட்டத்தில், கட்டமைப்பு சீர்திருத்தங்களை உறுதி செய்வதற்காக மூன்று மாதங்களுக்குள் மாநிலங்களுடன் தனித்தனி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. 


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தபோது, ​​"மேம்பட்ட மொத்த செலவினத்துடன்" இந்த திட்டத்தை 2028 வரை நீட்டிப்பதாக அறிவித்த ஒரு வருடத்திற்குப் பிறகு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


இருப்பினும், இந்த தொகை, ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு பொறுப்பான முதன்மை அமைச்சகமான ஜல் சக்தி அமைச்சகத்தால் ஆரம்பத்தில் அளிக்கப்பட்ட  தொகையைவிட குறைவானதாகும்.


ஆகஸ்ட் 2019-ல் தொடங்கப்பட்ட ஜல் ஜீவன் திட்டம், ஆரம்பத்தில் 2024-ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 55 லிட்டர் குடிநீரை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.


புதிய டிஜிட்டல் கட்டமைப்பின்கீழ், "ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு தனித்துவமான நீர் இணைப்பு / சேவை பகுதி அடையாள அட்டை” என்ற தனித்துவமான அடையாள எண் வழங்கப்படும். இதன் மூலம் குடிநீர் விநியோக அமைப்பு நீரின் மூலத்திலிருந்து குழாய்வரை முழுமையாக டிஜிட்டல் முறையில் வரைபடமாக பதிவு செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.


"வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதிசெய்வதற்காக", கிராம பஞ்சாயத்துகள் மற்றும் கிராம நீர் மற்றும் சுகாதாரக் குழுக்கள் திட்டங்களை தொடங்குவதிலும் அதிகாரப்பூர்வமாக ஒப்படைப்பதிலும் பங்கேற்பார்கள். மாநில அரசு கிராமத்தில் தேவையான திட்டம் மற்றும் பராமரிப்பு அமைப்புகளை ஏற்படுத்தியதை உறுதிசெய்த பிறகே, கிராம பஞ்சாயத்து அந்த கிராமத்தில் பணிகள் முடிந்ததாக சான்றளித்து, “அனைத்து வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் பாதுகாப்பான குடிநீர் வழங்கும் திட்டம்” (‘Har Ghar Jal) என்ற நிலையை அறிவிக்க முடியும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உங்களுக்குத் தெரியுமா?


இந்திய அரசியலமைப்பின் 7-வது அட்டவணையில் உள்ள 17-வது பிரிவு, மாநிலப் பட்டியல் (பட்டியல் II), "நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் கால்வாய்கள், வடிகால் மற்றும் கரைகள், நீர் சேமிப்பு மற்றும் நீர் மின்சாரம் ஆகியவை பட்டியல் I-ன் கீழ் 56-வது பிரிவின் விதிகளுக்கு உட்பட்டவை" என்று கூறுகிறது. இதன் பொருள், ஒரு மாநிலத்தின் எல்லைக்குள் நீர்ப்பாசனம், நீர்ப்பகிர்வு, கால்வாய்கள் மற்றும் அணைகள் போன்ற நீர் தொடர்பான விவகாரங்களில் சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே உள்ளது என்பதாகும்.


Original Link: about the Jal Jeevan Mission


Share: