இந்த வழக்கில், வாங்குபவர் நிலத்தின் நேரடி உடைமையை (physical possession) திரும்ப ஒப்படைக்கும் வரை, பணத்தைத் திரும்ப வழங்க இயலாது என்று டெல்லி மேம்பாட்டு ஆணையம் வாதிட்டது. நிலம் கையகப்படுத்தும் (land acquisition) நடவடிக்கை காலாவதியாகிவிட்டதால், நீதிமன்றம் இந்த வாதத்தை நிராகரித்தது. இந்த வழக்கு குறித்த விவரங்களை நாங்கள் விளக்குகிறோம்.
2007-ஆம் ஆண்டில், டெல்லி மேம்பாட்டு ஆணையம் நடத்திய ஒரு பொது ஏலத்தில், புது டெல்லியில் அமைந்திருந்த ஒரு வணிக நிலத்துக்காக ஒரு நிறுவனம் ரூ. 165 கோடியைச் செலுத்தியது. அந்தநிறுவனம் முத்திரைக் கட்டணத்தைச் செலுத்தியதுடன், ஒரு 10 ஆண்டு காலத்திற்குத் தொடர்ந்து சொத்து வரியையும் செலுத்தி வந்தது. 10 ஆண்டுகளை கடந்த நிலையில், விற்பனை செய்த அந்த நிலத்தை டெல்லி மேம்பாட்டு ஆணையம் ஒருபோதும் சட்டபூர்வமாகவே கையகப்படுத்தவில்லை என்பதை அந்நிறுவனம் கண்டறிந்தது.
ஏப்ரல் 29 அன்று உச்ச நீதிமன்றம், விற்பனைத் தொகையை வட்டியுடன் முழுமையாகத் வழங்குமாறு டெல்லி மேம்பாட்டு ஆணையத்திற்கு உத்தரவிட்டது. மேலும், ஒரு அரசு நிறுவனம் தனது கையகப்படுத்தும் காலம் முடிவடைந்த நிலத்தை ஏலம் விடும்போது, வாங்குபவர் முழுத் தொகையையும் திரும்பப் பெற உரிமை உண்டு என்று இந்த வழக்கை சுட்டிக்காட்டி தீர்ப்பை வழங்கியது. தொழில்நுட்பரீதியான வாதங்களை முன்வைத்து அந்த நிறுவனம் பணத்தைத் தடுத்து வைக்க முடியாது. அரசு நிறுவனங்கள் சட்டப்படி தங்களுக்குச் சொந்தமில்லாத ஒரு நிலதை விற்கும்போது என்ன நடக்கும் என்பதையும், அந்த உரிமை மீறப்படும்போது வாங்குபவருக்கு என்ன தீர்வு வழங்கப்படும் என்பதையும் இந்தத் தீர்ப்பு எடுத்துரைக்கிறது.
நிலம் கையகப்படுத்தும் முறை
அரசு பொது நோக்கங்களுக்காகத் தனியார் நிலத்தைக் கையகப்படுத்தும்போது, உண்மையான உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கக் கடமைப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யத் தவறும்போது, அதுபோன்ற கையகப்படுத்தல் காலாவதியாகிவிடும்.
2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல், புனரமைப்பு மற்றும் மீள்குடியேற்றத்தில் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான உரிமைச் சட்டத்தின், பிரிவு 24(2)-ன் படி, இழப்பீடு வழங்கப்படாமலும், தீர்ப்பு வழங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் கடந்தும் ஒரு கையகப்படுத்தல் காலாவதியாகிவிடும். ஒரு கையகப்படுத்தல் காலாவதியாகும்போது, அது ஒருபோதும் நடக்காதது போல சட்டம் கருதுகிறது. மேலும், நிலத்தின் உரிமை உண்மையான உரிமையாளருக்கே மீண்டும் செல்லும்.
இந்த வழக்கில், டெல்லி மேம்பாட்டு ஆணையம் (DDA) 2007-ல் அந்த நிலத்தை ஏலம் விட்டது. அதன் அசல் உரிமையாளரான சிம்லா தேவி, தனக்கு இழப்பீடு கிடைக்காததால் நிலம் கையகப்படுத்தும் உரிமை காலாவதியாகிவிட்டது என்று வாதிட்டு, ஏலம் நடந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு, 2015-ல் ஒரு நிதிப் பேராணை மனுவைத் தாக்கல் செய்தார். 2016-ல் டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கை ஏற்றுக்கொண்டது. 2017-ல் உச்ச நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை உறுதி செய்தது.
அந்த நிலத்திற்காக ₹165 கோடி செலுத்திய நிறுவனம், இந்த வழக்கு நடவடிக்கைகளில் எந்த ஒரு நிலையிலும் ஒரு தரப்பாக (party) சேர்க்கப்படவில்லை. டெல்லி மேம்பாட்டு ஆணையம் கையகப்படுத்தல் செயல்முறையை மீண்டும் மேற்கொள்வதற்கான செலவை ஏற்குமாறு கடிதம் அனுப்பியபோது, இந்த விவகாரம் அந்த நிறுவனத்திற்குத் தெரியவந்தது. இதன்மூலம், ஒரே நிலத்திற்கு வாங்கியவர் இரண்டு முறை பணம் செலுத்தும்படி டெல்லி மேம்பாட்டு ஆணையம் வலியுறுத்தியது.
சட்டம் என்ன சொல்கிறது
இந்தத் தீர்ப்பின் முக்கிய பகுதியாக இருப்பது உரிமையியல் நடைமுறைச் சட்டத்தின் XIII-A பிரிவு ஆகும். இது, வழக்களித்த தரப்பினரை பல ஆண்டு கால விசாரணைக்கு அழைக்காமல், தெளிவான வழக்குகளைத் தீர்க்க வணிக நீதிமன்றங்களை (Commercial Courts) அனுமதிக்கிறது. ஒவ்வொரு வழக்கும் தானாகவே ஒரு முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து நீதிமன்றங்கள் விலக வேண்டும் என்று கூறிய உச்சநீதிமன்றம், "ஒரு வழக்கமான விசாரணை நவீன காலத்திற்கு ஏற்ப இல்லை என்றும், அதற்கு மறுசீரமைப்பு தேவைப்படுகிறது என்றும்” குறிப்பிட்டது.
ஒரு தரப்பு வாதம் வெற்றிபெற வாய்ப்பே இல்லாத வழக்குகளில், நீதிபதிகள் சுருக்கமாகத் தீர்ப்பளிக்கலாம் என்று நீதிமன்றம் கூறியது. எதிர்வாதம் "கற்பனையானதாகவோ அல்லது ஊகத்தின் அடிப்படையிலானதாகவோ" இருந்தால், வெறும் வாதிடக்கூடிய ஒரு கோரிக்கை மட்டும் போதாது. அதே நேரத்தில், இதுபோன்ற மனுக்களை விசாரிக்கும்போது நீதிமன்றங்கள் "குறுக்கு விசாரணைகளை" நடத்துவதைத் தவிர்க்க வேண்டும். "நீதிமன்றத்தின் முன் உள்ள ஒரு வழக்கில் ஒரு தெளிவான சட்டம் தொடர்பான சந்தேகம் எழுந்தால், நீதிமன்றம் அந்த சவாலை ஏற்றுக்கொண்டு அதற்கு ஏற்றவாறு தீர்ப்பளிக்க வேண்டும்" என்றும் நீதிமன்றம் கூறியது.
இழப்பீடு வழங்கப்படாவிட்டால் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் காலாவதியாகிவிடும் என்று கூறும் 2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் பிரிவு 24(2)-ஐயும் அமர்வு ஆய்வு செய்தது. ஆய்வு செய்தவுடன், ஏலத்திற்கு முந்தைய நிலைக்கு "காலத்தை பின்னோக்கிச் செலுத்துவதே" (revert the clock) ஒரே தீர்வு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வாங்குபவரின் உரிமைகள்
பொது ஏலம் மூலம் நல்லெண்ண அடிப்படையில் (In good faith) நிலத்தை வாங்கியவர், அரசாங்கத்தின் நிலக் கையகப்படுத்துதல் தோல்வியடையும் போது (Acquisition fails), பணத்தைத் பெறும் உரிமையை பெறுவர். அரசாங்கம் உண்மையான நில உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கத் தவறியதால், ஏலத்தில் வாங்கியவர் தனது பணத்தை இழக்க வேண்டிய சூழல் ஏற்படாது.
ஒரு பரிவர்த்தனையின் அடிப்படை இங்கு, டெல்லி மேம்பாட்டு ஆணையத்திற்கு அந்த மனையை விற்பதற்கான உரிமையை முதன்முதலில் வழங்கிய கையகப்படுத்தல் உரிமையை வழங்க மறுக்கும்போது, சம்பந்தப்பட்ட தரப்பினரை அவர்களின் பழைய நிலைக்கு ஏற்றவாறு மீண்டும் பணத்தை வழங்க வேண்டும். நிறுவனம், இனிமேல் பயன்படுத்த இயலாத ஒரு உரிமைக்காகப் பணம் செலுத்தியது. அந்தப்பணம் மீண்டும் வழங்கபட வேண்டும்.
வாங்குபவர் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான (refund) கோரிக்கை, இடத்தின் உடமையை (possession) மீண்டும் வழங்குவதை நிபந்தனையாகக் கொண்டிருக்கவில்லை. நிலத்தை வாங்கிய நிறுவனம் முதலில் இடத்தை ஒப்படைக்க வேண்டும். அதன் பின்னரே, பணத்தைத் திரும்பக் கேட்க முடியும் என்று டெல்லி மேம்பாட்டு ஆணையம் வாதிட்டிருந்தது. இதை நீதிமன்றம் நிராகரித்தது, நிலம் கையகப்படுத்துதல் (acquisition) காலாவதியாகிவிட்டால், உரிமை உண்மையான உரிமையாளரிடமே மீண்டும் வழங்குமாறு கூறியது.
நீதிமன்றம் என்ன தீர்ப்பை வழங்கியது
ஜூலை 2007 முதல், உண்மையான நில உரிமையாளருக்கு பணம் செலுத்தப்படும் நாள் வரை 7.5% வட்டியுடன் சேர்த்து, ரூ. 164.91 கோடியைத் திரும்பச் செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. டெல்லி மேம்பாட்டு ஆணையம் ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் ரூ.186 கோடியை நிலையான வைப்புத்தொகையாக (Fixed Deposit) செலுத்தியிருந்தது. அந்தத் தொகையை நிறுவனம் உடனடியாக பெற்றுக்கொள்ளலாம். அதற்குப் பிறகும் ஏதேனும் நிலுவைத் தொகை இருந்தால், அதை 8 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும்.
நீதிமன்றத் தீர்ப்பில், நீதி பகிர்வு அமைப்பில் ஒரு "சிறந்த நிலைக்கான" (Golden Mean) தேவையை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. இந்திய நீதிமுறை நியாயமானது என்றபோதிலும், அதன் செலவுகள் மற்றும் காலதாமதங்களுக்காக விமர்சிக்கப்படுவதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இந்தத் தீர்ப்பின் முக்கியப் பகுதி, 'ஆணை XIII-A'-ன் விதி 3-ல் உள்ளது. ஒரு வழக்கில் வெற்றிபெற ஒரு தரப்பினருக்கு "உண்மையான வாய்ப்பு ஏதும் இல்லை" என்றால், அந்த வழக்கில் 'சுருக்கமான தீர்ப்பை' (summary judgment) வழங்க இந்த விதி அனுமதிக்கிறது. “‘வெற்றி பெறுவதற்கான உண்மையான வாய்ப்பு’ (real prospect of success) எனும் சொல், வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறு என்பது கற்பனையானதாகவோ அல்லது ஊகத்தின் அடிப்படையிலானதாகவோ இல்லாமல், உண்மையானதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.” ஒரு வழக்குக் கோரிக்கை மிகவும் பலவீனமாக இருந்து, அது வெற்றி பெறுவதற்கான எந்த விதமான நியாயமான வாய்ப்பையும் இல்லாத பட்சத்தில், சம்பந்தப்பட்ட தரப்பினரை “முழுமையான விசாரணையின் நவடிக்கைகளுக்கு” உட்படுத்துவது விரும்பத்தக்க நடவடிக்கை அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நீதிமன்ற ஆவணங்களில் உள்ள விவரங்கள் தெளிவாக இருந்தபோதிலும், "இந்த வழக்கை முழுமையான விசாரணைக்கு அனுமதிப்பது, 'விகிதாச்சாரக் கோட்பாட்டிற்கு' (principle of proportionality) முரணானதாக அமையும்" என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
இந்த குறிப்பிட்ட வழக்கில், நிலத்தை வாங்கியவர் அதன் நேரடி உடைமையை மீண்டும் ஒப்படைக்கும் வரை, பணத்தைத் திரும்பச் செலுத்த முடியாது என்று டெல்லி மேம்பாட்டு ஆணையம் வாதிட்டது. ஆனால், நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை காலாவதியாகிவிட்டதால், நீதிமன்றம் அந்த வாதத்தை நிராகரித்தது. "எதிர் மனுதாரரான டெல்லி மேம்பாட்டு ஆணையம் நிறுவனம் அந்த நிலத்தில் இருந்து பெறுவதற்கு இனி ஏதும் இல்லை" என்று குறிப்பிட்ட நீதிமன்றம், டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் வாதத்தை "கற்பனையானது" மற்றும் "மாயையானது" என்றும் வர்ணித்தது.
Original Link: SC orders DDA to refund Rs 165 cr: What happens if the government sells you land it does not own?