மேற்கு ஆசிய நெருக்கடியின் காரணமாக அதிகரித்து வரும் எண்ணெய் விலைகளும், வலுவிழந்து வரும் ரூபாயும் இந்தியாவின் வரவுச்செலவு சமநிலை (BoP) மீது அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. வரவுச்செலவு சமநிலை (BoP) என்றால் என்ன? அதன் முக்கியக் கூறுகள் யாவை?
தற்போதைய செய்தி :
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) தரவுகளின்படி, வரவுச்செலவு சமநிலை (BoP) விவரங்கள் ஒரு முக்கிய மாற்றத்தைக் காட்டுகின்றன: ஏப்ரல்-டிசம்பர் 2024 காலகட்டத்தில் $36.6 பில்லியனகவும் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3 சதவீதம்) இருந்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (current account deficit (CAD)), ஏப்ரல்-டிசம்பர் 2025 காலகட்டத்தில் $30.1 பில்லியன்களாகவோ அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதமாகவோ குறைந்துள்ளது.
வரவுச்செலவு சமநிலை (BoP), அதன் கூறுகள் மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகியவற்றைத் தெரிந்துகொள்வோம். 1991-ஆம் ஆண்டில் ஏற்பட்ட வரவுச்செலவு சமநிலை நெருக்கடியையும் ஒருமுறை திரும்பிப் பார்ப்போம்.
முக்கிய அம்சங்கள்:
1. வரவுச்செலவு சமநிலை (Balance of Payments (BoP)) என்பது அடிப்படையில், ஒரு நாடு உலகின் பிற நாடுகளுடன் மேற்கொள்ளும் அனைத்துப் பரிவர்த்தனைகளையும் பதிவு செய்யும் ஒரு 'பற்று வரவு கணக்குப் பதிவேடு' (ledger) ஆகும். இந்தியர்கள் உலகின் பிற பகுதிகளுடன் வர்த்தகம் மற்றும் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது, பணம் நாட்டிற்குள்ளும் வெளியேயும் செல்கிறது.
2. நாட்டிலிருந்து எவ்வளவு பணம் வெளியேறியது என்பதையும், நாட்டிற்குள் எவ்வளவு பணம் வந்தது என்பதையும் வரவுச்செலவு சமநிலை (Balance of Payments (BoP)) காட்டுகிறது. நாட்டிற்குள் வரும் அனைத்துப் பணமும் 'நேர்மறையாகக்’ (positive) குறிக்கப்படுகிறது. நாட்டிலிருந்து வெளியேறும் அனைத்துப் பணமும் 'எதிர்மறையாகக்’ (negative) குறிக்கப்படுகிறது. அந்நியச் செலாவணிகளுக்கான தேவைக்கு எதிராக, ரூபாய்க்கான சார்புத் தேவையை (relative demand) இது துல்லியமாகப் பிரதிபலிப்பதால், வரவுச்செலவு சமநிலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
3. இதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் புரிந்துகொள்வோம். உலகில் இந்தியா மற்றும் அமெரிக்கா என இரண்டு நாடுகள் மட்டுமே இருப்பதாகக் கற்பனை செய்துகொள்வோம். ஒரு இந்தியர் அமெரிக்கப் பொருளையோ அல்லது சேவையையோ வாங்க விரும்பும்போதோ அல்லது அமெரிக்காவில் முதலீடு செய்ய விரும்பும்போதோ, அந்தப் பரிவர்த்தனையை நிறைவு செய்வதற்குத் தேவையான டாலர்களை முதலில் வாங்குவதற்காக, அவர் குறிப்பிட்ட அளவு ரூபாயை வழங்க வேண்டும்.
4. இறுதியில், அந்த இரண்டு நாணயங்களுக்கான சார்புத் தேவையின் அடிப்படையில் அவற்றின் மாற்று விகிதம் (exchange rate) தீர்மானிக்கப்படும். அமெரிக்கர்கள் ரூபாயை விரும்புவதைவிட, இந்தியர்கள் டாலர்களை அதிகம் விரும்பினால், ரூபாய்க்கு எதிரான டாலரின் 'விலை' அல்லது மாற்று விகிதம் உயரும்.
5. வரவுச்செலவு சமநிலையின் (Balance of Payments (BoP)) கூறுகள்: இது இரண்டு முக்கிய 'கணக்குகளைக்' கொண்டுள்ளது. அவை நடப்புக் கணக்கு (Current Account) மற்றும் மூலதனக் கணக்கு (Capital Account) ஆகும்.
(i) நடப்புக் கணக்கு: இது 'தற்போதைய' சூழலில் நடைபெறும் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்கிறது. நடப்புக் கணக்கில் இரண்டு உட்பிரிவுகள் உள்ளன: அவை பொருட்களின் வர்த்தகம் (trade of goods) மற்றும் சேவைகளின் வர்த்தகம் (trade of services) ஆகும்.
(அ) வர்த்தக அல்லது சரக்குக் கணக்கு (merchandise account) என்பது பொருட்களின் (கார்கள், கோதுமை, கருவிகள் போன்றவை) ஏற்றுமதி மற்றும் இறக்குமதியைக் குறிக்கிறது. இது 'வர்த்தக இருப்பை' நிர்ணயிக்கிறது. நமது நாடு ஏற்றுமதி செய்வதைவிட அதிகப் பொருட்களை இறக்குமதி செய்வதால், வர்த்தகப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. இது ஒரு எதிர்மறைக் குறியீட்டால் வெளிக்காட்டப்படுகிறது.
வர்த்தகப் பற்றாக்குறை (trade deficit) என்பது ஒரு நாடு விற்பனை செய்வதைவிட (ஏற்றுமதி) அதிகமாக வாங்கும் (இறக்குமதி செய்யும்) ஒரு நிலையாகும். வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிப்பது டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. ஏனெனில், இந்தியா ஏற்றுமதியிலிருந்து பயணம் ஈட்டுவதை விட இறக்குமதிக்காக அதிக டாலர்களை வாங்க வேண்டியிருக்கும். டாலர்களுக்கான தேவை அதிகரிப்பது ரூபாயின்மீது அழுத்தத்தை ஏற்படுத்தி, அதன் மதிப்பை இழக்கச் செய்கிறது.
(ஆ) சேவைகளின் வர்த்தகம் (Trade of services): இது 'கண்ணுக்கு தெரியாத' வர்த்தகத்தை கொண்டுள்ளது. ஏனெனில், இது பொருட்களின் வர்த்தகத்தைப் போல பொதுவாக 'கண்ணுக்கு தெரியாத' சேவைகள் மற்றும் பிற பரிவர்த்தனைகளைக் குறிக்கிறது. இதில் சேவைகள் (எ.கா., வங்கி, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா போன்றவை); பரிமாற்றங்கள் (எ.கா., வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் தங்கள் குடும்பங்களுக்கு பணம் அனுப்புவது) மற்றும் வருமானங்கள் (முதலீடுகள் மூலம் ஈட்டப்படும் வருமானம் போன்றவை) அடங்கும்.
(ii) மூலதனக் கணக்கு: மூலதனக் கணக்கு (Capital Account) என்பது நடப்பு நுகர்வை விட முதலீடுகளைப் பற்றிய பரிவர்த்தனைகளை அதிகம் கொண்டுள்ளது. அவை அந்நிய நேரடி முதலீடு (Foreign Direct Investment (FDI) மற்றும் அந்நிய நிறுவன முதலீடுகள் (Foreign Institutional Investments (FII)) ஆகும்.
வரவுச்செலவு சமநிலை (Balance of Payments (BoP)) = நடப்புக் கணக்கு (வர்த்தக இருப்பு + கண்ணுக்குப் புலப்படாத வர்த்தகம்) + மூலதனக் கணக்கு ஆகும்.
6. நடப்புக் கணக்கு மற்றும் மூலதனக் கணக்கைக் கழித்த பிறகு, வரவுச்செலவு சமநிலை உபரி இருக்கும்போதும், பில்லியன் கணக்கான டாலர்கள் நாட்டிற்குள் வரும்போதும், இந்திய ரிசர்வ் வங்கி இந்த டாலர்களை அதிகமாக வாங்கி அந்நிய செலாவணிக் கையிருப்பில் சேர்க்கிறது. ரிசர்வ் வங்கி இதைச் செய்யாவிட்டால், ரூபாயின் பரிமாற்ற விகிதம் உயர்ந்து, இந்தியாவின் ஏற்றுமதிகளின் போட்டித்தன்மையைக் குலைத்துவிடும்.
7. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் ஹரிஷ் தாமோதரன், இந்தியாவின் வரவுசெலவு சமநிலை (BOP) பரிவர்த்தனைகளில் ஒரு கட்டமைப்பு சார்ந்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (CAD) சிக்கல் இருப்பதாக எழுதியுள்ளார். கடந்த 25 ஆண்டுகளில், நடப்புக் கணக்கில் உபரி (ஏப்ரல்-மார்ச்) நான்கு மட்டுமே: 2001-02 ($3.4 பில்லியன்), 2002-03 ($6.3 பில்லியன்), 2003-04 ($14.1 பில்லியன்) மற்றும் 2020-21 ($23.9 பில்லியன்) இந்த நான்கு ஆண்டுகளில் மட்டுமே கிடைத்துள்ளது. மற்ற அனைத்து ஆண்டுகளிலும், நடப்புக் கணக்கு பற்றாக்குறையிலேயே இருந்துள்ளது.
8. வரவுச்செலவு சமநிலை (BOP) சார்ந்த கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்கையில், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (CAD) இந்தியப் பொருளாதாரத்திற்குப் பெரிதாகப் பிரச்சினைகளை ஏற்படுத்தியதில்லை. 2024-ஆம் ஆண்டு ஏப்ரல்-செப்டம்பர் காலகட்டத்தில் $25.3 பில்லியனாக இருந்த பற்றாக்குறை, 2025-ஆம் ஆண்டு ஏப்ரல்-செப்டம்பர் காலகட்டத்தில் $15.1 பில்லியனாகக் குறைந்துள்ளது.
9. கடந்த ஓராண்டாக ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதும், மேற்கு ஆசிய மோதலின் விளைவாக ஏற்பட்ட பணவீக்க அச்சம் மற்றும் எண்ணெய் விலை அதிகரிப்பு ஆகியவற்றிற்க்கு இடையே ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதும், வரவுச்செலவு சமநிலை நடப்புக் கணக்கினால் ஏற்பட்டதல்ல. மாறாக, அது மூலதனக் கணக்கினால் மட்டுமே ஏற்ப்பட்டது என்று தாமோதரன் குறிப்பிடுகிறார்.
10. ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, மார்ச் 13, 2026 அன்று அந்நியச் செலாவணி கையிருப்பு $709.75 பில்லிய ஆக இருந்தது. இந்தக் கையிருப்பு 12 மாதங்களுக்கும் மேல் இறக்குமதித் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாகும். இது மிகவும் திருப்திகரமான ஒரு நிலையாகக் கருதப்படுகிறது. உலகளாவிய தரநிலைகளின்படி பார்த்தால், 8 முதல் 10 மாதங்களுக்கு மேலான கையிருப்பு அளவே பொதுவாக வலுவான நிலையாகக் கருதப்படுகிறது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பானது, அந்நியச் செலாவணிச் சொத்துக்கள் (foreign currency assets (FCA)), தங்கம், சிறப்பு எடுப்பு உரிமைகள் (SDRs) மற்றும் பன்னாட்டு நாணய நிதியத்தில் (International Monetary Fund (IMF)) உள்ள இருப்புப் பங்கு நிலை (reserve tranche position (RTP)) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
1991-ஆம் ஆண்டின் வரவுச்செலவு சமநிலை நெருக்கடி (BoP Crisis)
1. தற்போது மேற்கு ஆசியாவில் நிலவி வரும் மோதல் சூழல், இந்திய ரூபாயின் மீதும் அந்நியச் செலாவணி கையிருப்பின் மீதும் அழுத்தம் ஏற்படுவது இது முதல் முறை அல்ல. 1991-ஆம் ஆண்டில் இந்தியாவில் ஏற்பட்ட வரவுச்செலவு சமநிலை நெருக்கடிக்குப் பிறகு, நாடு இது போன்ற அழுத்தங்களை பல சூழல்களில் எதிர்கொண்டுள்ளது.
2. 1991-ஆம் ஆண்டில், வரவுச்செலவு சமநிலை நெருக்கடி உச்சத்தில் இருந்தபோது, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மிகவும் குறைந்துவிட்டது. இது 2 முதல் 3 வாரங்களுக்கான இறக்குமதிச் செலவுகளை ஈடுகட்ட மட்டுமே போதுமானதாக இருந்தது. அதன்பிறகு, ஆசிய நிதி நெருக்கடி, உலகளாவிய நிதி நெருக்கடி, அமெரிக்காவில் ஏற்பட்ட 'படிப்படியான குறைப்புப் பதற்ற' (Taper Tantrum) நிகழ்வு, கோவிட் பெருந்தொற்று மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் ஆகியவை இந்திய ரூபாயின் மீதும் அந்நியச் செலாவணி கையிருப்பின் மீதும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.
3. ஆகஸ்ட் 1990-ல் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட திடீர் உயர்வு ஒரு கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்தது. இது வரவுச்செலவு சமநிலைச் சூழலை எதிர்கொள்ளமுடியாத நிலைக்குத் தள்ளியதுடன், அந்நியச் செலாவணி கையிருப்பைக் குறைத்தது, அதிக அளவிலான மூலதன வெளியேற்றத்தை ஏற்படுத்தியது. மேலும், இந்தியா தனது கடன் கடமைகளைத் திருப்பிச் செலுத்தத் தவறும் (default) அபாயத்திற்கு தள்ளியது.
4. 1991-ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள், ஏற்பட்ட வரவுச்செலவு சமநிலை நெருக்கடியானது, நாட்டின் வரவுச்செலவு சமநிலையை நிர்வகிக்கும் திறனின் மீதே நம்பிக்கையின்மை ஏற்படும் ஒரு நெருக்கடியாக உருவெடுத்தது. வளைகுடாப் போரின் காரணமாக எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்தபோது, 1990–91 நிதியாண்டின் இரண்டாம் பாதியில் இந்தச் செலுத்துநிலை நெருக்கடியின் அறிகுறிகள் தெளிவாகத் தென்படத் தொடங்கின.
5. அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் மற்றும் நிதியமைச்சர் மன்மோகன் சிங் ஆகியோரின் தலைமையிலான அரசாங்கத்தை, புதிய தொழிற்கொள்கைத் தீர்மானம், பெரும்பாலான வர்த்தக உரிமங்களை ரத்து செய்தல், நடப்புக் கணக்கில் ரூபாயின் முழுமையான மாற்றத்தக்கத்தன்மை மற்றும் நாட்டை நேரடி அயல்நாட்டு முதலீட்டிற்காகத் திறந்துவிடுதல் ஆகியவற்றை அறிவிக்க ஏற்பட்ட நெருக்கடி கட்டாயப்படுத்தியது.
Original link:
Current account, capital account and rupee dynamics.