தத்தெடுக்கும் தாய்மார்கள் (Adoptive Mothers) குறித்து, மகப்பேறு நலச் சட்டம் (Maternity Benefit Act), 1961 சரியாக என்ன கூறுகிறது? -பிரியா குமாரி சுக்லா

முக்கிய அம்சங்கள் :


நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு, சட்டத்தில் உள்ள மூன்றுமாத காலக்கெடு, தத்தெடுக்கும் தாய்மார்களிடையே ஒரு "செயற்கையான" வேறுபாட்டை (artificial distinction) உருவாக்குவதாகக் கருதியது. மேலும், வளர்ந்த குழந்தைகளைத் தத்தெடுக்கும் பெண்கள் தங்களின் "பங்குகள், பொறுப்புகள் மற்றும் பராமரிப்புக் கடமைகள்" ஆகியவற்றின் அடிப்படையில் "ஒரே மாதிரியான நிலையில்தான்" உள்ளனர் என்றும் குறிப்பிட்டது.


தத்தெடுக்கும் தாய்மார்களுக்கு மகப்பேறு நல உதவிகளை நீட்டிக்கவும், பெண்கள் பணியிடத்தில் பங்கேற்பதை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. இருப்பினும், இந்தச் சலுகை மூன்று மாதங்களுக்கும் குறைவான வயதுடைய குழந்தைகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டது. பெரும்பாலான தத்தெடுப்புகளில் மூன்று மாதங்களுக்கும் குறைவான வயதுடைய குழந்தைகள் இடம்பெறுவதில்லை. இதன் காரணமாக, இந்த நல உதவியை "மாயையானதாகவும், நடைமுறைப் பயன்பாடு அற்றதாகவும்" ஆக்கியது.


ஒரு குழந்தையைத் தத்தெடுக்கும் தாய்மார்கள், "குழந்தை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நாளிலிருந்து பன்னிரண்டுவார காலத்திற்கு மகப்பேறு நல உதவிக்கு உரிமையுடையவர்கள் ஆவார்கள்" என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


நிறுவனங்களில் வளர்க்கப்படும் குழந்தைகள் பெரும்பாலும் அதிக மன அழுத்தத்தையும், சீரற்ற பிணைப்பு எதிர்வினைகளையும் வெளிப்படுத்துகிறார்கள் என்றும், இது ஆரம்பகால, சீரான கவனிப்பின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் நீதிபதி குழு குறிப்பிட்டது. இது உயிரியல் காரணிகளுக்கு அப்பாற்பட்டு, நீதிபதி குழுவானது "மகப்பேறு" என்பதன் சாதாரண அர்த்தத்தை, "ஒரு தாயாக இருக்கும் நிலை" என்று நிதிமன்றம் விளக்கியது. இது பிரசவத்துடன் மட்டும் நின்றுவிடுவதில்லை.


ஒரு குழந்தையின் உணர்ச்சி வளர்ச்சிக்கு ஆரம்பகால கவனிப்பு மிகவும் முக்கியமானது என்பதையும், நிறுவனப் பராமரிப்பில் உள்ள குழந்தைகள் பெரும்பாலும் அதிக மன அழுத்தம் (கார்டிசோல்-cortisol) மற்றும் உணர்ச்சி ஒழுங்குமுறையுடன் நேரடியாக தொடர்புடைய ஆக்ஸிடோசின் போன்ற சீர்குலைந்த பிணைப்பு ஹார்மோன்களுடன் காணப்படுகிறார்கள் என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்ட, நீதிபதிக் குழு வளர்ச்சி ஆராய்ச்சிகளையும் சார்ந்திருந்தது. ஆரம்பகால கவனிப்பு குழந்தைகளுக்கு நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்றும், எனவே சட்டமானது பிணைப்பு நேரத்தை ஒரு விருப்பத் தேர்வாகக் கருத முடியாது அல்லது குழந்தை வீட்டிற்கு வரும்போது அதன் வயதைப் பொறுத்து அதை நிபந்தனைக்குட்படுத்த முடியாது என்றும் நீதிபதி குழு முடிவு செய்தது.


உங்களுக்குத் தெரியுமா? 


மகப்பேறு நலச் சட்டம்-1961 (Maternity Benefit Act), மற்றும் அதன் வாரிசான சமூகப் பாதுகாப்புச் சட்டம்-2020 (Code of Social Security), ஆகிய இரண்டும் தத்தெடுக்கும் தாய்மார்களையும் மகப்பேறு விடுப்பு நலப் பலன்களின்கீழ் கொண்டுவரும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டன. மூன்று மாதங்களுக்கும் குறைவான வயதுடைய குழந்தையைத் தத்தெடுக்கும் பெண்கள் மட்டுமே பன்னிரண்டு வார விடுப்புக்குத் தகுதி பெறுவார்கள் என்பதே அந்த விதிவிலக்கு ஆகும்.


2020 சட்டத்தின் பிரிவு 60(4) குறிப்பிடுவதாவது, “மூன்று மாதங்களுக்கும் குறைவான வயதுடைய குழந்தையைச் சட்டப்பூர்வமாகத் தத்தெடுக்கும் ஒரு பெண் அல்லது குழந்தையைக் கேட்கும் தாய், குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்பட்ட நாளிலிருந்து பன்னிரண்டு வாரகாலத்திற்கு மகப்பேறு உதவித்தொகைக்குத் தகுதியுடையவர் ஆவார்.”


மனுதாரர்கள், மூன்று மாதகால வரம்பானது "செயற்கையானது மற்றும் சட்டப்பிரிவு 14-ஐ மீறுவதாகும்" (artificial and violative of Article 14) என்று நீதிமன்றத்தில் வாதிட்டனர். நான்கு மாதக் குழந்தையைத் தத்தெடுக்கும் ஒரு பெண்ணுக்கு, இரண்டு மாதக் குழந்தையைத் தத்தெடுக்கும் பெண்ணுக்கு உள்ள அதே பராமரிப்புப் பொறுப்புகள்தான் உள்ளன என்று அவர்கள் விளக்கினர். குழந்தைக்கு உணவூட்டவும், பராமரிக்கவும், குழந்தையை முற்றிலும் புதிய சூழலுக்குப் பழகிக்கொள்ளவும் வேண்டியுள்ளது. இதற்காக, தாய்க்கு வேலையிலிருந்து விடுப்பு தேவைப்படுகிறது.


இதற்குப் பதிலளித்த அரசாங்கம், வளர்ந்த குழந்தைகளைத் தத்தெடுக்கும் பெண்கள் தங்கள் நிறுவனங்களில் உள்ள குழந்தைகள் காப்பக வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறியது. இருப்பினும், "வெளித்தோற்றத்தில் லாபகரமானதாகத் தோன்றும்" (seemingly appears to be lucrative) இந்த வாதம் கடுமையான குறைபாடுகளைக் கொண்டிருப்பதாக நீதிமன்றம் கண்டறிந்தது.


Original Link: What exactly the Maternity Benefit Act, 1961 says about adoptive mothers?


Share: