தற்போதைய நிகழ்வு :
சமீபத்தில், நாடு முழுவதும் 100 தயார் நிலை தொழிற்பூங்காக்களை (plug-and-play industrial parks) மேம்படுத்துவதற்காக, ரூ.33,660 கோடி மதிப்பிலான பாரத் ஆத்யோகிக் விகாஸ் யோஜனா (Bharat Audyogik Vikas Yojna (BHAVYA)) திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் நோக்கம், உலகத்தரம் வாய்ந்த தொழில்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, உற்பத்தித் திறனை முழுமையாக வெளிக்கொணர்வது மற்றும் இந்தியாவின் நீண்டகாலப் பொருளாதார வளர்ச்சிப் பயணத்தை முன்னெடுத்துச் செல்வது ஆகும்.
முக்கிய அம்சங்கள் :
1. இத்திட்டத்தின்கீழ், ஏக்கருக்கு ரூ.1 கோடி வரையிலான நிதியுதவியுடன், 100 முதல் 1,000 ஏக்கர் வரையிலான தொழிற்பூங்காக்களின் மேம்பாட்டிற்காக எடுத்துக்கொள்ளப்படும். இந்த தொழிற்பூங்காக்களில் உள்வசதி சாலைகள், நிலத்தடி பயன்பாட்டு வசதிகள், வடிகால், பொது சுத்திகரிப்பு வசதிகள், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (Information and Communication Technology (ICT)) மற்றும் நிர்வாக அமைப்புகள் போன்ற முக்கிய உள்கட்டமைப்புகள் இருக்கும். இவற்றுடன் கூடுதலாக, வெளிப்புற உள்கட்டமைப்பிற்கான ஆதரவும், இதற்கான திட்டச் செலவில் 25% வரை வழங்கப்படும்.
2. பாவ்யா (BHAVYA) திட்டமானது, உற்பத்தி, தளவாடங்கள் மற்றும் சேவைகள் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கி, பெரிய அளவிலான வேலைவாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது கணிசமான முதலீடுகளை ஈர்ப்பதோடு, அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களிலும் செயல்படுத்தப்படும்.
3. இங்கு இதற்கு முன்னரே கட்டப்பட்ட தொழிற்சாலைக் கூடங்கள், தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்ட நிலையங்கள், பரிசோதனைக் கூடங்கள், கிடங்குகள் மற்றும் தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள் உள்ளிட்ட சமூக உள்கட்டமைப்புகள் அமைக்கப்படும். மேலும், தேசிய தொழில்துறை வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் (National Industrial Corridor Development Programme (NICDP)) கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட தொழில்துறை சீர்மிகு-நகரங்களின் (Industrial Smart Cities) வெற்றியைப் பயன்படுத்தி, பாவ்யா திட்டமானது மாநிலங்கள் மற்றும் தனியார்துறை நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.
4. இத்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட திட்ட முறையானது, சவாலான செயல்முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படும். இதன்மூலம், உயர்தரம் வாய்ந்த, சீர்திருத்தங்களில் கவனம் செலுத்துவது மற்றும் முன்மொழிவுகள் முன்னெடுத்துச் செல்லப்படுவதற்கு முன்பு முதலீட்டிற்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யப்படும்.
5. தடையற்ற பல்முனைப் போக்குவரத்து இணைப்பையும், திறமையான இறுதிக்கட்ட அணுகலையும் செயல்படுத்தும் வகையில், பிரதம மந்திரி கதிசக்தி (PM GatiShakti) திட்டக் கொள்கைகளை பின்பற்றும் விதமாக, இந்தத் தொழில் பூங்காக்கள் எதிர்கால நோக்கம் மற்றும் நீடித்த சுற்றுச்சூழல் அமைப்புகளாக வடிவமைக்கப்படும்.
6. தளவாடங்கள் (Logistics) என்பது பரந்த அளவில் வர்த்தகத்திற்கு அவசியமான வசதிகளை உள்ளடக்கியது. அதாவது, பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லும் போக்குவரத்து சேவைகள், உணவுப் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற விரைவில் கெட்டுப்போகும் பொருட்களின் வர்த்தகத்திற்கு குறிப்பாக அவசியமான சேமிப்பு வசதிகள், மற்றும் உரிமம் வழங்குதல், சுங்கம் போன்ற வர்த்தகத்தை எளிதாக்கும் அரசாங்க சேவைகளின் சீரான செயல்பாடு ஆகியவை இதில் அடங்கும்.
7. தளவாடத் துறையை வலுப்படுத்த, அரசாங்கம் தேசிய தளவாடக் கொள்கை (National Logistics Policy (NLP)) மற்றும் பிரதம மந்திரி கதி சக்தி தேசிய பெருந்திட்டத்தை (PM Gati Shakti National Master Plan) அறிமுகப்படுத்தியுள்ளது.
8. தேசிய தளவாடக் கொள்கையின் (NLP) இலக்குகளானவை, இந்தியாவில் தளவாடச் செலவைக் குறைத்தல், தளவாடச் செயல்திறன் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசையை மேம்படுத்துதல், 2030-க்குள் இந்தியாவை முதல் 25 நாடுகளுக்குள் கொண்டுவர இடம்பெற முயற்சித்தல் மற்றும் ஒரு திறமையான தளவாடச் சூழலமைப்பை உருவாக்க, தரவு சார்ந்த முடிவெடுக்கும் ஆதரவு வழிமுறையை உருவாக்குதல் போன்ற இலக்குகளை கொண்டுள்ளது.
9. கடந்த ஆண்டு, “இந்தியாவில் தயாரிப்போம்” (Make in India”) திட்டத்தின் பத்தாண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக, இந்தியாவில் தளவாடச் செலவு மதிப்பீடு குறித்த அறிக்கையை அரசாங்கம் வெளியிட்டது. இது, இரண்டாம் நிலைத் தரவுகளையும் நாடு தழுவிய அளவிலான ஆய்வுகளையும் ஒருங்கிணைக்கும் ஒரு கலப்பு வழிமுறையைப் பயன்படுத்தி, தளவாடச் செலவுகளின் விரிவான மற்றும் அறிவியல் பூர்வமான மதிப்பீட்டை முதன்முறையாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
10. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறைக்காக (Department for Promotion of Industry and Internal Trade (DPIIT)) தேசிய பயன்பாட்டுப் பொருளாதார ஆராய்ச்சிக் கழகம் (National Council of Applied Economic Research (NCAER)) தயாரித்த தற்போதைய மதிப்பீட்டின்படி, இந்தியாவில் தளவாடச் செலவுகள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 7.97% என மதிப்பிடப்பட்டுள்ளது.
நிவாரணத் திட்டம் (RELIEF Scheme)
1. மேற்கு ஆசியாவில் நடைபெற்றுவரும் போரின் காரணமாக ஏற்பட்ட வர்த்தக இடையூறுகளைத் தொடர்ந்து, சரக்கு மற்றும் எரிபொருள் செலவுகள் கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்தது உள்ளிட்ட பரவலான தளவாடச் சவால்களால் வர்த்தக இடையூறுகளை எதிர்கொள்ளும் ஏற்றுமதியாளர்கள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்காக, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ரூ.497 கோடி மதிப்பிலான நிவாரணத் திட்டத்தை அறிவித்துள்ளது.
2. இந்த நிவாரணத் திட்டத்தில், ஏற்றுமதி கடமைகளைத் தானாகவே நீட்டிக்கும், தளவாட ஆதரவும், மற்றும் கப்பல் தாமதங்களை நிர்வகிப்பதற்கான சாத்தியமான நிதி நடவடிக்கைகளும் ஆகியவை அடங்கும். மேலும் இது முக்கியமாக ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, குவைத், கத்தார், ஓமன், பஹ்ரைன், ஈராக், ஈரான், இஸ்ரேல் மற்றும் யேமன் ஆகிய நாடுகளுக்கு விநியோகம் அல்லது இடமாற்றம் செய்யப்படும் சரக்குகளை உள்ளடக்கும்.
3. இத்திட்டமானது ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டத்தின் (Export Promotion Mission (EPM)) கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சரிபார்ப்பு பணிகள், உரிமைகோரல்களைச் செயலாக்கம், விநியோகப் பணிகள் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றிற்குப் பொறுப்பான ஒருங்கிணைப்புச் செயலாக்க முகமையாக இந்திய ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கழகம் (Export Credit Guarantee Corporation (ECGC)) நியமிக்கப்பட்டுள்ளது.
4. இத்திட்டத்தில் மூன்று முக்கியப் பிரிவுகள் உள்ளன :
மேம்படுத்தப்பட்ட காப்பீட்டுப் பாதுகாப்பு (Enhanced insurance coverage) : ஏற்கனவே, ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கழகம் (ECGC) காப்பீடு வைத்திருக்கும் ஏற்றுமதியாளர்கள், பிப்ரவரி 14 மற்றும் மார்ச் 15, 2026-க்கு இடைப்பட்ட காலத்தில் அனுப்பப்படும் தகுதிவாய்ந்த சரக்குகளுக்கு, கூடுதல் கட்டணமும் செலுத்தாமலேயே 100% வரை இடர் பாதுகாப்பைப் பெறுவார்கள்.
வரவிருக்கும் சரக்கு அனுப்புதலுக்கான ஆதரவு (Support for upcoming shipments) : மார்ச் 16 முதல் ஜூன் 15, 2026 வரை சரக்குகளை அனுப்பத் திட்டமிடும் ஏற்றுமதியாளர்கள், அரசாங்கத்தின் ஆதரவுடன் 95% வரை இடர் காப்பீட்டைப் (risk coverage) பெறலாம். இது வர்த்தகப் பரிமாற்றங்களைத் தக்கவைக்க உதவும்.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான நிவாரணம் (Relief for MSME) : இடையூறு காலத்தில் ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கழகம் (ECGC) காப்பீடு இல்லாத சிறு ஏற்றுமதியாளர்கள், அதிகரித்த சரக்கு மற்றும் காப்பீட்டுச் செலவுகளில் 50% வரை பகுதித் தொகையைத் திரும்பப் பெறத் தகுதி பெறுவார்கள். இருப்பினும், ஒரு ஏற்றுமதியாளருக்கு இந்தத் தொகை ₹50 லட்சம் என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டது.
Original Link: BHAVYA Scheme – Why this new push for industrial infrastructure.