கீழ் நீதித்துறை சேவையின் (subordinate judicial service) செயல்பாட்டை மேம்படுத்த சில தீர்வுகள் உள்ளன.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அரசியலமைப்பு அமர்வின், துணை நீதித்துறை சேவையில் (subordinate judicial service) ஏற்பட்டுள்ள தேக்க நிலைக்கும், நீண்டகால வழக்குகளுக்கும், இந்திய நீதிமன்றங்களில் உள்ள அதிக நிலுவை வழக்குகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் கூறியுள்ளது. தேசிய நீதித்துறை தரவு கட்டத்தின்படி, மாவட்ட நீதிமன்றங்களில் 4.69 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. அடிப்படை அறிவுக் குறைபாடு காரணமாக டெல்லி நீதிபதிகளுக்கு பயிற்சிபெற நீதிமன்றத்தின் மற்றொரு அமர்வு கேட்டுக் கொண்டுள்ளது.
நீதித்துறை நிர்வாகத்தில் மாற்றங்களைச் செய்வதற்கு சில வழிகள் உள்ளன.
குடிமை நடைமுறைச் சட்டம் (Code of Civil Procedure) மற்றும் குடிமை நடைமுறை விதிகள் (Civil Rules of Practice), நீதிமன்றங்கள் வழக்குகளை ஏற்பது, பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை அனுப்புவது மற்றும் தரப்பினர்கள் எவ்வாறு வர வேண்டும் என்பதற்கான நடைமுறைகளை குறிப்பிடுகின்றன. இவை அனைத்தையும் துணை நீதிபதிகள் கையாளுகிறார்கள். ஒவ்வொரு வழக்கு தாக்கல் செய்த நபர்கள் ஆஜராவதற்காக அழைக்க வேண்டியிருக்கிறது அல்லது புதிய அழைப்பாணை பிறப்பிக்க உத்தரவிட வேண்டியிருக்கிறது அல்லது வக்காலத்துகளைப் பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. நீதிபதிகள் தங்கள் காலை வேளைகளில் வழக்குகளை விசாரித்தல், புதிய அழைப்பாணைகளை அனுப்புதல் மற்றும் வழக்கறிஞர்களின் அங்கீகாரங்களை ஏற்றுக்கொள்வதில் செலவிட வேண்டியுள்ளது. பெரும்பாலான கீழ் நீதிமன்றங்களில், வழக்குகள் விசாரணை காலை 10.30 மணி முதல் நண்பகல் வரை நீடிக்கும். இத்தகைய அமைச்சுப்பணிகள் மற்றும் நிர்வாகப்பணிகளில் ஈடுபடுவதால் முக்கியமான நேரம் வீணாகிறது.
ஒவ்வொரு மாவட்ட நீதிமன்றத்திலும், அந்த குறிப்பிட்ட நீதிமன்றப் பிரிவுகளின் (மூத்த குடிமை நீதிபதிகள் அல்லது குடிமை நீதிபதிகள் அல்லது மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், வழக்கு இருக்கலாம்) அனைத்து வழக்குகளையும் விசாரிக்க, படிநிலையில் மிகக் குறைந்த பதவியில் உள்ள ஒரு நீதித்துறை அதிகாரியை நியமிக்க முடியும். இந்த நீதிமன்றம் நாள் முழுவதும் அமைச்சுப் பணிகளைச் செய்ய முடியும். மேலும், சாட்சியங்களைப் பதிவு செய்தல், அறிவிப்பாணைகளை அனுப்புதல், வக்காலத்து வாங்குதல் மற்றும் எழுத்துப்பூர்வ அறிக்கைகளைப் பெறுதல் போன்ற அதிகாரங்களையும் வழங்க முடியும். நாளின் இறுதியில், இந்த நீதிமன்றம் ஒவ்வொரு நீதிமன்றத்திலும் விசாரணை மற்றும் வாதங்களுக்கான விவகாரங்களை மறுநாள் பட்டியலிடலாம். இந்தப் பட்டியலை மாலையில் இணையதளத்தில் வெளியிடலாம்.
இந்தப் பட்டியலின்படி, ஒவ்வொரு நீதிமன்றமும் தினமும் காலை 10.30 மணி முதல் வழக்குகளை எடுத்துக்கொள்ளலாம்; பட்டியலிடப்பட்ட வழக்குகளை மாலை வரை தீர்த்து வைக்கலாம். சில வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டாலும், நீதிபதிகள் உத்தரவுகளைப் பதிவு செய்ய முடியும். இது தீர்ப்புகளை எழுதுவதையும் வழக்குகளை விரைவாக முடித்து வைக்கவும் உதவுகிறது.
கீழ் நீதிமன்றங்கள் சேவை, அதன் தரம்
ஒரு காலத்தில், ஏதேனும் ஒரு சட்டப் பிரிவில் ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞரிடம் குறைந்தது 10 ஆண்டுகள் பயிற்சி பெற்று, பார்-இல் அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்களையே “மாவட்ட உரிமையியல் நீதிபதி/மாவட்ட நீதிபதி ஆக நியமிப்பது வழக்கமாக இருந்தது. அதிக அனுபவம் உள்ள வழக்கறிஞர்கள் நேரடி ஆட்சேர்ப்புக்கான தேர்வுகளை எழுதியபிறகு மாவட்ட நீதிபதிகளாக தகுதி பெறுவார்கள்.
ஆனால், இப்போது அனுபவமே இல்லாதவர்களை நீதிபதிகளாக நியமிக்கிறார்கள்; அவர்களால் பணிச்சுமையைச் சமாளிக்க முடியவில்லை. பல சமயங்களில் அடிப்படைத் திறன்கள் இல்லாததால் உத்தரவுகளையே பிறப்பிக்க முடியாத நீதிபதிகளும் உள்ளனர். எனவே, புதிதாக நியமிக்கப்படும் ஒவ்வொரு குடிமை நீதிபதியும், மூத்த குடிமை நீதிபதியும் கட்டாயமாகப் பல மாதங்கள் பல்வேறு உயர்நீதிமன்ற அமர்வுகளில் (High Court Benches) பயிற்சி பெற வேண்டும். உயர்நீதிமன்றம் எவ்வாறு செயல்படுகிறது, உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்குகளைக் கையாள்வது, வழக்கறிஞர்களுடன் உரையாடுவது, மேற்கோள் காட்டப்படும் தீர்ப்புகளை ஆராய்வது, உத்தரவுகளை எவ்வாறு பிறப்பிக்கிறார்கள் என்பதை நேரடியாகக் கவனிக்க வேண்டும். இது போன்ற நேரடிக் கண்காணிப்பு மூலமான பண்பாட்டுப் பயிற்சி உறுதியாக கீழ்நிலை நீதித்துறையின் செயல்திறனை மேம்படுத்தும் ஒரு முக்கியமான படியாக அமையும்.
ஒவ்வொரு முறையும் ஒரு சட்டம் இயற்றப்படும்போது, வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும் (quick disposal of cases) என்று கூறிக்கொண்டு புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஆனால், பல சமயங்களில் விரைவான தீர்வு என்ற நோக்கம் நிறைவேறுவதில்லை. மாறாக, எதிர்மறையான தாக்கமே (negative impact) ஏற்படுகிறது.
ஒரு பொதுவான உதாரணமாக, வணிக நீதிமன்றச் சட்டத்தின் பிரிவு 12(a), வழக்குத் தாக்கல் செய்வதற்கு முன்பு மக்கள் மத்தியஸ்தத்தை முயற்சிக்க வேண்டும் என்று கோருகிறது. 2022ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பாட்டீல் ஆட்டோமேஷன் vs ரகேஜா பொறியாளர்கள் (Patil Automation vs Rakheja Engineers (2022 (7) MLJ 139)) வழக்கில், உச்சநீதிமன்றம் இந்த விதி கட்டாயமானது என்றும், மத்தியஸ்தம் முதலில் செய்யப்படாவிட்டால், வழக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறியது. ஆனால், வணிக வழக்குகளில், வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள தரப்பினர் ஏற்கனவே ஒருவருக்கொருவர் அழைப்பாணைகள் அனுப்பியிருப்பார்கள். அழைப்பாணைகள் மூலம் தீர்வு கிடைக்காதபோதுதான் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்கிறார்கள். எனவே, வழக்கு தாக்கல் செய்யும் நேரத்திலேயே விவகாரம் எங்கு செல்கிறது என்பது தெரிந்துவிடும். அந்த சூழலில், மத்தியஸ்தத்தை கட்டாயமாக்கி, மனுதாரரை வழக்கு தொடுப்பதற்கு முன்னரே மத்தியஸ்த வழியை முழுமையாக முயற்சித்து மேற்கொள்ள சொல்வதில் என்ன அவசியம் இருக்கிறது?
மற்றொரு உதாரணம் திருமணச் சட்டங்களில் பரஸ்பர சம்மத விவாகரத்து (mutual consent divorce) திருமணச் சட்டங்களில் உள்ள ஆறு மாத இடைக்காலம் (‘cooling-off’) உள்ளது. பெரும்பாலும் வழக்கு தாக்கல் செய்த தரப்பினர் இந்தக் காலத்திற்குள் வழக்கு முடிவடைய விரும்புகிறார்கள். ஒரு தம்பதி பரஸ்பர ஒப்புதலோடு பிரிய முடிவு செய்துவிட்டால், அவர்களை 6 மாதம் கட்டாயமாகக் காத்திருக்க வைப்பது சரியா என்ற கேள்வி எழுகிறது. சில நீதிமன்றங்கள் இந்த இடைக்காலம் (‘cooling-off’) காலத்தைத் தள்ளுபடி செய்ய அனுமதிப்பதில்லை; இதனால் வழக்கில் தேக்க நிலை ஏற்படுகிறது. பரஸ்பர ஒப்புதல் மனுவை தாக்கல் செய்வதில் ஒரு வருட பிரிவினை இருப்பது புத்திசாலித்தனமாதை என்று தெரியவில்லை. அதே நேரத்தில் சர்ச்சைக்குரிய மனுவில் இது பொருந்தாது. ஒரு மனுவைத் தாக்கல் செய்வதற்காக, இரு தரப்பினரும் ஒரு வருடத்திற்கும் மேலாகப் பிரிந்து இருப்பது போல் ஒரு தோற்றத்தை காட்டி, உண்மைக்கு மாறான அறிவிப்பை வெளியிடுகின்றனர். இந்த விதிகளில் சில, வழக்கு நிலுவையில் இருப்பதற்கும், வழக்குத் தொடுப்பவரை விரக்தியான மனநிலைக்கு கொண்டு செல்கிறது.
மூன்றாவது, உதாரணம் புதிய வாடகைச் சட்டமாகும். எழுதப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட குத்தகை இல்லையென்றால் வாடகை நீதிமன்றம் ஒரு வழக்கை விசாரிக்க முடியுமா என்பது குறித்து ஏற்கனவே குழப்பம் உள்ளது. அதே உண்மைகளுடன், ஒரு நபர் வணிக குத்தகை பிரச்சனைகளுக்காக குடிமை அல்லது வணிக நீதிமன்றத்திற்குச் செல்லலாம். ஆனால் ,வாடகை நீதிமன்றத்திற்குச் செல்ல முடியாது. சொத்து பரிமாற்றச் சட்டத்தின்கீழ் முன்னர் அனுமதிக்கப்பட்டபடி, வாய்மொழி குத்தகைகள் மற்றும் சொத்துக்களை ஒப்படைப்பதை சட்டம் தொடர்ந்து ஏற்றுக்கொண்டிருந்தால், இந்தப் பிரச்சனைகளைத் தவிர்த்திருக்கலாம். சிறிய குடியிருப்பு சொத்துக்களுக்கு, மக்கள் பெரும்பாலும் முத்திரை வரி (stamp duty) மற்றும் பதிவு கட்டணங்களை செலுத்துவதைத் தவிர்க்கிறார்கள். இந்த தெளிவற்ற சட்ட சூழ்நிலை, நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கு மற்றொரு காரணமாகும்.
பழமையான நடைமுறைச் சட்டம்
குடிமை நடைமுறைச் சட்டத்தில் உள்ள பல விதிகள், சில வழக்குரைஞர்கள் நடவடிக்கைகளை தாமதப்படுத்த ஒரு கருவியாக மாறியுள்ளன. இந்த விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.
உதாரணமாக, ஒரு பிரிவினை நடவடிக்கையில் ஏன் ஒரு ஆரம்ப ஆணையும் இறுதி ஆணையும் இருக்க வேண்டும்? தீர்ப்பு வழங்கப்பட்ட உடனேயே, பிரிவினைச் சட்டத்தின் கீழ் சொத்துக்களைப் பிரிப்பது விற்பனைக்கு உத்தரவிடுவது குறித்து ஏன் ஒரு வழங்கப்பட்ட தீர்ப்பை நிறைவேற்றக்கூடாது?
இரண்டு தீர்ப்புகள் எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும், புதிய விண்ணப்பம் தாமதத்தை ஏற்படுத்தாமல், இறுதித் தீர்ப்பின் நடவடிக்கைகள் ஏன் ஆரம்ப தீர்ப்பின் தொடர்ச்சியாக இருக்கக்கூடாது? அதைப் போலவே, குடிமை நடைமுறைச் சட்டத்தின் ஆணை XXI-ல் உள்ள அதிகமான விதிகளில் தீர்ப்பு நிறைவேற்றுதல் நடவடிக்கைகள் (execution proceedings) எளிதில் முடிவதில்லை. தீர்ப்பில் வழக்கு தொடுத்தவர்கள் இவற்றைப் பயன்படுத்தி நிறைவேற்றுதலைத் தாமதப்படுத்துகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. உதாரணமாக, ஆணை XXI-ல் ஏன் 106 விதிகள் இருக்க வேண்டும், அவற்றில் பல மிகை தொழில்நுட்பமானவை?
நடைமுறையை மாற்றியமைக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மற்றும் உரிய நேரத்தில் நிறைவேற்றப்பட்டால் (வகுப்பு மற்றும் வெளிப்படுத்தல் மூலம் சொத்துக்களின் பட்டியல் செய்யப்பட்டாலும் கூட) ஒரு நபர் தங்களுக்குக் கொடுக்கவேண்டிய பணத்தைப் பெற பல ஆண்டுகளாக நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும். அவருக்கு சாதகமாக வழங்கப்பட்ட நடுவர் தீர்ப்புகள் உட்பட அனைத்து பண உரிமைகோரல்களிலும் இதுவே அவரது நிலையாக இருக்கும். ஆணைகள் மற்றும் தீர்ப்புகளை நிறைவேற்றுவதற்கான செயல்முறையை எளிதாக்க வேண்டிய அவசியம் உள்ளது. இது போன்ற சூழல்களில் தான் விரைவான நடைமுறை தேவைப்படுகிறது.
முக்கியமானது வழக்கை விரைவாக முடிப்பது, வெறும் விசாரணை நடத்துவது அல்லது மேல்முறையீடு மனுக்களின் மூலம் வழக்கை தொடர்ந்து நடத்துவது அல்ல. இந்தச் சட்டம் 1908ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டபோது அதன் நோக்கத்தை நிறைவேற்றியிருக்கலாம். ஆனால், 1976 மற்றும் 2002-ஆம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னரும், நடவடிக்கைகளை விரைவாக முடிக்க இன்னும் தீர்வு இல்லை என்பது கவலைக்குரியதாக உள்ளது.
உதாரணமாக, குடிமை நடைமுறைச் சட்டத்தின் (Code of Civil Procedure) ஆணை VIII விதி 1, பிரதிவாதி 90 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்வதை கட்டாயமாக்குகிறது. எழுத்துப்பூர்வ அறிக்கையை 90 நாட்களுக்குள் தாக்கல் செய்தால் என்ன நடக்கும்? வழக்கு உடனடியாக முடிக்கப்படவில்லை. மேலும், விசாரணை அதன் சொந்த வழியில் செல்லும். குறிப்பாக, பாதிக்கப்பட்ட தரப்பினரால் மேல்முறையீடு செய்யும் உரிமையைப் பயன்படுத்தும்போது இது நடக்க வாய்ப்புள்ளது. எனவே, எழுத்துப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்வதற்கு மட்டும் ஏன் ஒரு காலக்கெடு உள்ளது?
இந்தப் பிரிவு, வேறு எந்தப் பயனையும் தந்ததில்லை; மோசமான, அலட்சியமாக எழுதப்பட்ட மனுக்களையே (slipshod pleadings) அதிகரித்திருக்கிறது. பண உரிமைகோரல் வழக்குகளுக்கு (money claims) நேரக்கெடு கொள்ள கூடியதாக உள்ளது; ஆனால், உரிமை வழக்குகளில் (title suits) இது வேலை செய்வதில்லை.
நிலுவையில் உள்ள வழக்கும் உயர் நீதித்துறையும்
அதிக அளவில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த பிரச்சினையை உயர்நீதித்துறை தீர்க்க வேண்டும். நீதிமன்ற வழக்குகளை தொடக்கத்திலோ அல்லது நடந்து கொண்டிருக்கும்போதோ மட்டும் அவசரப்படுத்தாமல், நியாயமான நேரத்திற்குள் முடிப்பதே அவசரத் தேவையாக உள்ளது.
நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைப்பதற்கான தீர்வுகள் குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும். பழமையான சட்டங்களைக் கைவிட்டு, திறமையான வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்காவிட்டால், வழக்குகளின் தரமான தீர்வை எதிர்பார்க்க முடியாது. நிலுவையில் உள்ள வழக்குகளும் குறையாது.
கீழ் நீதித்துறை (subordinate judiciary) நீதிபதிகளாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்; தினமும் இரண்டு மணி நேரம் புதிய அழைப்பாணைகளை பிறப்பித்தல், வக்காலத்து மற்றும் மனுக்கள் பெறுதல், கோப்பில் குறிப்பு எழுதுதல் போன்ற அலுவலகப் பணிகளைச் செய்யும் நிலைக்கு தள்ளக் கூடாது.
பி.ஆர். ராமகிருஷ்ணன் கோயம்புத்தூரில் ஒரு வழக்கறிஞர்.
Original Article: The lower judiciary — litigation, pendency, stagnation