இந்தியாவில் இணையக் குற்றங்களின் நிலை என்ன?

முக்கிய அம்சங்கள்:


— ‘‘டிஜிட்டல் கைது’ மோசடி தொடர்பான தானாக முன்வந்து வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் இருந்த நீதிபதி ஜாய்மல்யா பாக்சி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம், “எங்களுக்குத் தெரிந்தவரை, இணையக் குற்றங்களுக்கு எதிரான ஐ.நா. மாநாடு என்ற ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் உள்ளது. நம் நாடு அதை அங்கீகரித்துள்ளதா?” என்று கேட்டார்.


— 72 வயது பெண் வழக்கறிஞரிடம் ரூ.3.29 கோடி மோசடி செய்யப்பட்ட ‘டிஜிட்டல் கைது’ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விசாரணை முடியும் வரை பிணை வழங்கக்கூடாது என்று நீதிபதிகள் குழு உத்தரவிட்டது.


— பின்னர், பல்வேறு மாநிலங்களில் உள்ள அனைத்து 'டிஜிட்டல் கைது' வழக்குகளையும் மத்திய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றுமாறு உச்சநீதிமன்றம் முன்மொழிந்தது. மேலும், அந்தந்த அதிகார எல்லைகளில் பதிவு செய்யப்பட்டுள்ள இது போன்ற வழக்குகளின் விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டது.


உங்களுக்குத் தெரியுமா?


— அக்டோபர் மாதம் 25-ஆம் தேதி  சனிக்கிழமை வியட்நாமின் ஹனோயில் நடந்த ஐக்கிய நாடுகளின் சைபர் குற்றத்திற்கு எதிரான மாநாட்டில் 193-உறுப்பு நாடுகளில் குறைந்தது 72-நாடுகள் கையெழுத்திட்ட பிறகு, சைபர் குற்றத்தை உலகின் முதல் உலகளாவிய சட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. அக்டோபர் மாதம் வரையில், இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


— ஐக்கிய நாடுகள் அமைப்பின்  41 பக்கங்கள் கொண்ட இணையக் குற்றச் சட்டம், சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கிடையேயான சர்வதேச ஒத்துழைப்பை அதிகரிக்கவும், இணையக் குற்றங்களைத் தடுப்பதற்குப் போதுமான உள்கட்டமைப்பு இல்லாத நாடுகளுக்கு தொழில்நுட்ப உதவியை வழங்கவும் ஒரு சட்டபூர்வமான கட்டமைப்பை முன்மொழிகிறது. இது சட்டவிரோத இடைமறிப்பு, பணமோசடி, ஹேக்கிங் மற்றும் இணையம் சார்ந்த குழந்தை பாலியல் வன்முறைக் குற்றங்கள் ஆகியவற்றைக் கையாளும் விதிகளையும் கொண்டுள்ளது.


— “டிஜிட்டல் கைது” மோசடி என்பது மோசடி செய்பவர்கள் காணொளி அழைப்புகள் மூலம் சட்ட அமலாக்க அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து, பணம் பறிக்க போலி கைது நடவடிக்கைகளின் மூலம் அச்சுறுத்துகின்றனர்.


— பெரும்பாலான மோசடிகளில், இணையவழியில் மோசடி செய்பவர்கள் மற்றும் குற்றவாளிகள் பொதுவாகப் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து, சட்டவிரோத பொருட்கள், போதைப்பொருட்கள், போலி கடவுச்சீட்டுகள் அல்லது வேறு ஏதேனும் கடத்தல் பொருள் அடங்கிய பார்சலை அனுப்பியதாகவோ அல்லது பெற விரும்புவதாகவோ கூறுவார்கள். சில சமயங்களில், குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் அல்லது நண்பர்களைத் தொடர்பு கொண்டு, பாதிக்கப்பட்டவர் ஒரு குற்றம் அல்லது சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டு, தங்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி அச்சுறுத்துகின்றனர். 


— பெரும்பாலும் காவல்துறையினரின் படங்களையோ அல்லது அடையாளங்களையோ பயன்படுத்தி நம்பகத்தன்மையை உருவாக்க முயற்சிக்கும் குற்றவாளிகள், வழக்கமாக 'சமரசம்' செய்து வழக்கை முடித்துவைப்பதற்காகப்  பாதிக்கப்பட்டவர்களிடம் பணம் கோருகின்றனர். சில சமயங்களில், பாதிக்கப்பட்டவர்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்பட்டு, குற்றவாளிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை ஸ்கைப் (Skype) அல்லது பிற காணொளி வாயிலாக அவர்களுடன் நேரடித் தொடர்பில் இருக்க  கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.


— தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (National Crime Records Bureau (NCRB)) செப்டம்பர் 2025-இல் வெளியான சமீபத்திய தரவுகளின்படி, இணையக் குற்றங்கள் பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2022-ஆம் ஆண்டில் 65,893-ஆக இருந்தது. இது 2023-ஆம் ஆண்டில்  31.2 சதவீதம் அதிகரித்து 86,420-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


— இந்தியாவில் பெரும்பாலான இணையக் குற்ற வழக்குகளில் மோசடி, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பாலியல் சுரண்டல் ஆகியவை முக்கியக் காரணங்களாக இருந்தன. அனைத்து மாநிலங்கலையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் கர்நாடகா மாநிலத்தில் மட்டுமே சுமார் 21,889 எண்ணிக்கையிலான இணையக் குற்ற வழக்குகள்  பதிவாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. 


Original Article: What is the status of cybercrime in India?

 

Share: