மதமாற்றம் மற்றும் பட்டியல் சாதி அந்தஸ்து குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பானது, ஒரு நபர் பின்பற்றும் மதத்துடன் அவரது சாதி அடையாளத்தை இணைக்கும், அரசியலமைப்பு மற்றும் சட்டரீதியான விதிகளின் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஒரு நபர், பட்டியல் சாதியினருக்குக் கிடைக்கும் பாதுகாப்புகளைத் தொடர்ந்து கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
நீதிபதிகள் பிரஷாந்த் குமார் மிஸ்ரா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதிசெய்து, இந்து, சீக்கிய மதம் அல்லது பௌத்த மதம் தவிர, “ஒருவர் ஒரே நேரத்தில் ஒரு மதத்தைப் பின்பற்றி, அதே சமயம் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என்றும் உரிமை கோர முடியாது. தனிப்பட்ட, சமூக மற்றும் ஆன்மீக காரணங்களுக்காக அந்த மதத்தை பின்பற்றும் நபர், சட்டரீதியாக அரசு வழங்கும் சலுகைகளைப் பெறுவதற்காக தன்னை ஒரு பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என்று உரிமை கோர முடியாது. இந்த இரண்டு நிலைப்பாடுகளும் ஒன்றுக்கொன்று முரணானவை என்பதோடு, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அமைப்பிற்கும் எதிராக உள்ளதாக கூறியது.
இந்தத் தடை "முழுமையானது" (absolute) என்றும், இதில் "எந்த விதமான விதிவிலக்குகளுக்கும் இடமில்லை" என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
இந்த உத்தரவானது, ஒன்றுக்கொன்று முரணான இரு கருத்துக்களின் சந்திப்பில் அமைந்துள்ளது. அவற்றுள் ஒன்று, 'பட்டியலிடப்பட்ட சாதி' (Scheduled Caste) அங்கீகாரத்திற்கான அரசியலமைப்பு வடிவமைப்பு ஆகும். இது 'அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதிகள்) ஆணை, 1950-ன் வாயிலாக வரையறுக்கப்பட்ட ஒரு சட்டரீதியான அங்கீகாரமாக இருப்பதுடன், ஒரு சமூக அடையாளமாகவும் திகழ்கிறது. மற்றொன்று, சாதி அடிப்படையிலான பாகுபாடு ஆகும். மதம் மாறிய பின்னரும், தலித் கிறிஸ்தவர்களிடையே இந்தப்பாகுபாடு தொடர்ந்து நிலவி வருகிறது.
வழக்கின் பின்னணி
ஆந்திரப் பிரதேசத்தின் பிட்டலவனிபாலேம் கிராமத்தைச் சேர்ந்த போதகர் சிந்தடா ஆனந்த் பால் என்பவர் 2021-ஆம் ஆண்டில் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. தன்னை நோக்கித் தொடர்ந்து சாதி ரீதியான தவறான சொற்களைப் பயன்படுத்தித் திட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இரண்டு முறை உடல்ரீதியாகத் தாக்கியதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார். அந்தத் தாக்குதல்களில் ஒருமுறை பிரார்த்தனைக் கூட்டத்தின்போதும், மற்றொரு முறை கூட்டத்திலிருந்து திரும்பிக்கொண்டிருந்தபோதும் நிகழ்ந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
அவரது புகாரின் அடிப்படையில், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (SC/ST) வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்துடன், இந்திய தண்டனைச் சட்டத்தின் (Indian Penal Code (IPC)) கீழ் வரும் சட்டவிரோதத் தடுப்பு, குற்றவியல் மிரட்டல் மற்றும் காயம் ஏற்படுத்துதல் ஆகிய குற்றவியல் பிரிவுகளும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டன.
பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள், வழக்கை ரத்து செய்யுமாறு ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தை அணுகினர். அவர்களின் வாதம் ஒரே ஒரு முக்கிய அம்சத்தை அடிப்படையாகக் கொண்டது: புகார் அளித்தவர் பல ஆண்டுகளுக்கு முன்பே கிறித்தவ மதத்திற்கு மாறி, ஒரு பாதிரியாராக (pastor) செயல்பட்டு வந்தார். எனவே, அவரால் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என்று உரிமையை கோர முடியாது. பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் சட்டத்தை (SC/ST Act) பயன்படுத்தவும் முடியாது.
புகார்தாரர், தன்னை அங்கீகரிக்கப்பட்ட பட்டியல் சாதியைச் சேர்ந்த 'இந்து-மடிகா' (Hindu-Madiga) என அடையாளப்படுத்தும் தனது சாதிச் சான்றிதழைச் சார்ந்திருந்து இதற்கு மறுப்பு தெரிவித்தார். மேலும், சாதியானது பிறப்புடன் இணைந்திருப்பதால், மதமாற்றத்தினால் அது மறைந்துவிடுவதில்லை என்றும் அவர் வாதிட்டார்.
சூழலை விளக்க, வரலாற்று ரீதியாக சாதிப் பாகுபாடு, வன்முறை மற்றும் சமூகப் புறக்கணிப்பை எதிர்கொண்ட இந்தியாவின் மிகவும் விளிம்புநிலை சமூகங்களுக்கு சட்டப் பாதுகாப்பு தேவைப்பட்டதாலேயே பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம் இயற்றப்பட்டது. அது குறிப்பிட்ட குற்றங்களையும், கடுமையான தண்டனைகளையும், ஒரு பிரத்யேக நீதிமன்றக் கட்டமைப்பையும் உருவாக்குகிறது. ஒருவர் மதமாற்றத்தின் மூலம் தானாக முன்வந்து சமூகத்தை விட்டு வெளியேறிய பிறகும், அந்தச் சட்டப் பாதுகாப்பு தொடருமா என்பதே நீதிமன்றம் கையாள வேண்டிய பிரச்சினையாக இருந்தது.
ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் ஏப்ரல் 2025-ல், சாதி அமைப்பு கிறித்தவ மதத்திற்கு வெளிப்பட்டது” (alien) என்று கூறியது. மேலும், SC/ST சட்டம் என்பது குறிப்பாக பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின சமூக உறுப்பினர்களைக் காக்க உருவாக்கப்பட்ட பாதுகாப்பு சட்டமாகும் என்றும் தெரிவித்தது. அந்த சட்டத்தின் விதிகளை, அந்த வரையறைக்குள் வராத ஒருவர் பயன்படுத்த முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது.
நீதிமன்றம், சாட்சிகளின் வாக்குமூலங்களில் முரண்பாடுகள் இருந்ததையும், அவற்றை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் இல்லாததையும் சுட்டிக்காட்டியது. எனவே, வழக்கை தொடர்ந்து நடத்துவதில் எந்த பயனும் இல்லை என்றும், அது குற்றம் சாட்டப்பட்டவர்களை தேவையற்ற விசாரணைக்கு உட்படுத்துவதற்கு (unnecessary trial) சமம் என்றும் தெரிவித்தது.
சட்டம்
மதமாற்றம் மற்றும் பட்டியல் சாதி அங்கீகாரம் குறித்த நீதிமன்றத்தின் வாதம், ஒரு நபரின் சாதி அடையாளத்தை அவர் பின்பற்றும் மதத்துடன் இணைக்கும் அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வ விதிகளின் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டது. இந்தக் கட்டமைப்பு, அரசியலமைப்பின் 341-வது பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட 1950-ஆம் ஆண்டின் அரசியலமைப்பு பட்டியல் சாதி ((Scheduled Caste) Order) ஆணையின் மூலம் தொடங்குகிறது. அந்த ஆணையின் 3-வது பத்தி, "இந்து, சீக்கிய அல்லது பௌத்த மதங்களிலிருந்து வேறுபட்ட மதத்தைப் பின்பற்றும் எந்தவொரு நபரும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவராகக் கருதப்பட மாட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவதை, பட்டியல் சாதி அங்கீகாரம் முடிவுக்கு வரும் ஒரு புள்ளியாக சட்டம் கருதுகிறது.
இந்த வகைப்பாடு இந்திய அரசியலமைப்பால் மேலும் வலுப்படுத்தப்படுகிறது. அரசியலமைப்பின் 366(24)-வது பிரிவு, அரசியலமைப்பின் 341-வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் அறிவிக்கும் சமூகங்களாக வரையறுக்கப்படுகின்றன. இந்த இரண்டு விதிகளும் இணைந்து செயல்படுகின்றன. மேலும், பட்டியல் சாதியினர்/பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டமும் இதே வரையறைகளையே ஏற்றுக்கொள்கிறது. இதன் விளைவாக, ஒரு நபரின் பட்டியல் சாதி என்ற சட்டப்பூர்வ அடையாளம், அவர் பின்பற்றும் மதத்திலிருந்து பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது. ஒருவர் அந்த சமூகத்துடன் கொண்டுள்ள சமூக உறவு முடிவடைந்தவுடன், அதனுடன் தொடர்புடைய சட்ட பாதுகாப்புகளும் முடிவடைகின்றன.
உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு
நீதிபதிகள் குழு, மீண்டும் மதமாற்றம் (reconversion) செய்ததாகவோ அல்லது மீண்டும் தனது பட்டியல் சமூகத்தை பின்பற்றி வருவதாகவோ எந்தக் கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை என்று குறிப்பிட்டது. மாறாக, பதிவுகள் (record) காட்டியது என்னவெனில், முறையீட்டாளர் தொடர்ந்து கிறித்தவ மதத்தை பின்பற்றி, பத்தாண்டுகளுக்கு மேலாக பாதிரியாராக (pastor) செயல்பட்டு வருகிறார் என்று ஆவணங்கள் காட்டுகின்றன.
சம்பவம் நடந்ததாக கூறப்படும் நேரத்தில், அவர் பிரார்த்தனை கூட்டத்தை நடத்தி வந்தார்” என்பது ஏற்கப்பட்ட உண்மை என்றும், இந்த உண்மைகள் அந்த நேரத்தில் அவரது நிலை குறித்து எந்த சந்தேகத்திற்கும் இடமளிக்கவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
அரசியலமைப்பு விதிகளின்படி, ஒரு மதத்தை "பின்பற்றுவது" என்பது ஒருவர் நம்புவது மட்டுமல்ல, அவர் வாழ்க்கையில் வெளிப்படையாக கடைப்பிடிப்பதையும், உலகிற்கு காட்டுவதையும் குறிக்கிறது. “பகிரங்கமாக ஒப்புக்கொள்” (Profess) என்ற சொல், மதத்தை பொதுவாக அறிவித்து பின்பற்றுவதை குறிக்கிறது; இது வெறும் தனிப்பட்ட நம்பிக்கை அல்ல, வெளிப்படையான செயல்பாடுகளையும் கொண்டிருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. அந்த அளவுகோலின்படி, பிரார்த்தனைகளை வழிநடத்துதல், கூட்டங்களை ஏற்பாடு செய்தது, அவரது சட்ட உரிமையை தெளிவாக நிரூபிப்பதாகக் கருதப்பட்டது.
நீதிமன்றம், 1950-ஆம் ஆண்டின் உத்தரவை மீண்டும் எடுத்துக்காட்டி, அதன் தாக்கத்தைக் எடுத்துகாட்டியது. இது “தெளிவானதும் சந்தேகமற்றதுமானதும்” (categorical and unambiguous) ஆணை எனக் கூறப்பட்டது. இந்த ஆணையின் படி, இந்து, சிக் அல்லது புத்த மதத்தைத் தவிர வேறு மதத்தை பின்பற்றும் நபர், பட்டியல் சாதியை சேர்ந்த நபராக கருதப்பட முடியாது என்று கூறியது.
மேல்முறையீட்டாளரின் பிறப்புச் சாதி எதுவாக இருந்தாலும், அவர் பட்டியல் சாதியை சேர்ந்தவராக கருதப்பட முடியாது என்று நீதிமன்றம் கூறியது. மேலும், மதமாற்றத்தின் விளைவு உடனடியானது என்றும், அவர் கிறித்தவ மதத்திற்கு மாறிய உடன், முன்பு அவருக்கு இருந்த சாதி நிலை சட்டத்தின் பார்வையில் நீங்கிவிட்டது என்றும் தெரிவித்தது.
சாதி சான்றிதழ் (caste certificate) குறித்து, ஆவணங்களுக்கும் சட்டத்திற்கும் இடையிலான வேறுபாட்டை நீதிமன்றம் விளக்கியது. நீதிமன்றம், சான்றிதழ் வைத்திருப்பது மட்டும் எந்தப் பயனையும் அளிக்காது என்று தெரிவித்தது. மேலும், இத்தகைய சான்றிதழ்கள் அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதிகள்) ஆணை, 1950-க்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.
மதம் தீர்மானிக்கும் காரணியாக இல்லாத பட்டியல் பழங்குடியினருக்கு நிலைமை வேறுபட்டது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. அங்கு மதம் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இல்லை. ஆனால் அங்கும், ஒரு நபரின் அடையாளம் அவர் அந்த சமூகத்தின் பழக்கவழக்கங்கள் மற்றும் அங்கீகாரம் அடிப்படையில் தொடர்ந்து அதன் பகுதியாக உள்ளாரா என்பதைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.
இருப்பினும், இந்த வழக்கில் இப்படியான சிக்கல் எதுவும் இல்லை. உண்மைகளும் சட்டமும் தெளிவாக இருந்தன. மேல்முறையீட்டாளர் மதமாற்றம் செய்து, கிறித்தவ மதத்தை வெளிப்படையாக தொடர்ந்து பின்பற்றி வந்தார். மேலும், தனது பழைய சமூகத்திற்குத் திரும்பவில்லை.
Original ink:
Do protections for Scheduled Castes carry over with religious conversion? What the law says.