உலகப் பயங்கரவாதக் குறியீடு (2026) : தற்போதைய போக்குகள், தரவரிசைகள் மற்றும் முக்கிய அம்சங்கள்
- ரோஷ்னி யாதவ்
2026-ஆம் ஆண்டு உலகப் பயங்கரவாதக் குறியீடு, பயங்கரவாதத்தின் எண்ணிக்கை ஒட்டுமொத்த எண்ணிக்கை குறைந்திருந்தபோதிலும், பயங்கரவாதம் உலகளாவிய அச்சுறுத்தலாக நீடிக்கிறது என்பதைக் காட்டுகிறது. மாறிவரும் பயங்கரவாத இடங்கள் குறித்து இந்தக் குறியீடு என்ன வெளிப்படுத்துகிறது? எந்த நாடு முதலிடம் பிடித்தது மற்றும் இந்தியா எந்த இடத்தில் உள்ளது? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே உள்ளன.
தற்போதைய செய்தி?
சமீபத்தில், 'உலகப் பயங்கரவாதக் குறியீட்டின்' (Global Terrorism Index) 13-வது ஆண்டுப் பதிப்பு வெளியிடப்பட்டது. பயங்கரவாதச் செயல்பாடுகளில் ஒட்டுமொத்தமாகக் எண்ணிக்கை குறைந்திருந்தபோதிலும், அது தொடர்ந்து ஒரு உலகளாவிய அச்சுறுத்தலாகவே நீடித்து வருகிறது என்பதை இந்தக் குறியீடு சுட்டிக்காட்டுகிறது. குறைந்தது ஒரு பயங்கரவாதச் சம்பவத்தையாவது எதிர்கொண்ட நாடுகளின் எண்ணிக்கை 66-ஆக உயர்ந்துள்ளது. இது 2018-ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிக பெரிய அளவாகும். இந்தச் சூழலில், இந்த குறியீடு குறித்தும் அதன் முக்கிய சிறப்பம்சங்கள் குறித்தும் அறிந்துகொள்வோம்.
முக்கிய அம்சங்கள்:
1. 2007-ஆம் ஆண்டில் ஸ்டீவ் கில்லிலியா AM அவர்களால் நிறுவப்பட்ட ‘பொருளியல் மற்றும் அமைதி நிறுவனம்’ (Institute for Economics and Peace), பாதுகாப்பு, தற்காப்பு, பயங்கரவாதம் மற்றும் மேம்பாடு சார்ந்த விவகாரங்கள் குறித்த உலகளாவிய விவாதப் போக்குகளைப் பாதிக்கும் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இந்த அறிக்கைகளில் உலக அமைதிக் குறியீடு, உலகளாவிய பயங்கரவாதக் குறியீடு மற்றும் சூழலியல் அச்சுறுத்தல் அறிக்கை போன்றவை இடம் பெற்றிருக்கும்.
2. உலகளாவிய பயங்கரவாதக் குறியீடு Global Terrorism Index (GTI)) என்பது 163 நாடுகளின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, கடந்த பத்தாண்டுகளில் பயங்கரவாதத்தால் ஏற்பட்ட முக்கிய உலகளாவிய போக்குகள் மற்றும் வடிவங்கள் குறித்த விரிவான சுருக்கத்தை வழங்கும் ஒரு முழுமையான, தரவு சார்ந்த மதிப்பீடாகும்.
3. பயங்கரவாதம் ஒரு முக்கிய உலகளாவிய அச்சுறுத்தலாக இருப்பதாக குறியீடு சுட்டிக்காட்டுகிறது. 2025-ஆம் ஆண்டில், 2,944 பயங்கரவாதச் சம்பவங்களில் 5,582 பேர் உயிரிழந்துள்ளனர். சஹாரா துணைச் சகாரா ஆப்பிரிக்கப் பகுதி பயங்கரவாதத்தின் முக்கிய இடங்களாக இருந்து வந்தாலும், அதில் ஓரளவுக்கு முன்னேற்றம் காணப்பட்டது.
4. 2025-ஆம் ஆண்டில், உலகளாவிய உயிரிழப்புகள் குறைந்தன. இருப்பினும், பல நாடுகள் பயங்கரவாதத்தால் ஏற்பட்ட ஒட்டுமொத்த பாதிப்பில் முன்னேற்றங்களைப் பதிவு செய்தபோதிலும், பயங்கரவாதத்தின் எண்ணிக்கை தெளிவாக இல்லை. பிரச்சினை பல்வேறு பிராந்தியங்களுக்கு இடையே இடமாற்றம் கண்டு வருகிறது.
5. 2025-ஆம் ஆண்டில், பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாகப் பாகிஸ்தான் இருந்தது. புர்கினா ஃபாசோவை பின்னுக்கு தள்ளி அந்த நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த அட்டவணையில் பாகிஸ்தான் முதலிடத்தைப் பிடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த அட்டவணை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் பத்து நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் இடம்பிடித்து வருகிறது.
6. 2007-ஆம் ஆண்டில் பயங்கரவாதத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே சஹேல் பிராந்தியம் கொண்டிருந்த நிலையில், 2025-ஆம் ஆண்டில் இந்தப்பிராந்தியம் மொத்த உயிரிழப்புகளில் பாதியளவுக்கும் அதிகமான பங்கைக் கொண்டிருந்தது.
7. குறியீட்டின் படி, தீவிரவாதச் செயல்பாடு மேற்கொள்வதற்கான (radicalisation) காலம் கணிசமாக குறைந்துள்ளது. 2005-ஆம் ஆண்டு 18 மாதங்களாக இருந்தது. 2016-ஆம் ஆண்டு 13 மாதங்களாக குறைந்தது. இன்று, தீவிரவாதச் செயல்பாடு சில வாரங்களுக்குள்ளேயே நிகழக்கூடும்.
8. உலகின் மிகவும் நீடித்த பயங்கரவாத மையங்களில் பல, எல்லைப் பகுதிகளில் இடம் பெற்றுள்ளன: அவை கொலம்பியா-வெனிசுலா எல்லை, ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகள், மத்திய சஹேல் முக்கூட்டு எல்லைப் பகுதி மற்றும் சாட் ஏரிப் படுகை பகுதிகளாகும். இந்த பதற்றமான பகுதிகள் அனைத்தும் பொதுவான அம்சங்களைப் பகிர்ந்து கொள்கின்றன: அவை எளிதில் ஊடுருவக்கூடிய எல்லைகள், போதிய நிர்வாகமில்லாத நிலப்பரப்பு, மற்றும் தேசிய எல்லைகளைக் கடந்து ஒன்றிணைந்த சமூகங்களாகும்.
9. இந்த குறியீட்டின் படி, எல்லைப் பகுதிகள் பெரும்பாலும் அதிகார இடைவெளிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இவை அரசு கட்டுப்பாடு மிகவும் குறைவாக இருக்கும் தொலைதூர பகுதிகளாகும். கடினமான நில அமைப்பு மற்றும் முக்கிய நகரங்களிலிருந்து உள்ள தூரம் காரணமாக, இந்த இடங்கள் பயங்கரவாதக் குழுக்கள் ஆட்களை சேர்த்துக் கொள்ள, பயிற்சி அளிக்க மற்றும் செயல்பட தொடர்பான சுதந்திரத்தை வழங்குகின்றன.
10. உலக பயங்கரவாத குறியீடு (GTI) 2026-ல் இந்தியா 13-வது இடத்தில் உள்ளது. பயங்கரவாதத் தாக்குதல்களின் எண்ணிக்கை குறைந்ததன் மூலம், இந்தியா இந்த குறியீட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. உலக பயங்கரவாத குறியீடு 2025-ல் இந்தியா 14-வது இடத்தில் இருந்தது.
11. குறிப்பாக, 2025-ல், தெற்காசியா பயங்கரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாக இருந்ததுடன், குறியீட்டில் அதிக சராசரி மதிப்பெண்ணையும் பெற்றிருந்தது. 2016-ஆம் ஆண்டு முதல் பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பிராந்தியமாக தெற்காசியா இருந்து வருகிறது. இருப்பினும், அதிகம் பாதிக்கப்பட்ட பிராந்தியமாக இருந்தபோதிலும், 2025-ல் பயங்கரவாதத்தின் தாக்கம் குறைந்தது. நான்கு நாடுகள் முன்னேற்றத்தைப் பதிவுசெய்தன, பாகிஸ்தான் மட்டுமே அதன் குறியீட்டு மதிப்பெண்ணில் சரிவைச் சந்தித்தது.
2025-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அமைதி குறியீடு (Global Peace Index (GPI))
1. 'பொருளியல் மற்றும் அமைதிக்கான நிறுவனம்' (Institute for Economics and Peace) வெளியிட்டுள்ள GPI உலகளாவிய அமைதி குறியீட்டின் 10-வது பதிப்பு, 163 நாடுகளை உள்ளடக்கியுள்ளது; இந்நாடுகள் உலகின் மொத்த மக்கள் தொகையில் 99.7 சதவீதத்தைக் கொண்டுள்ளன.
2. அறிக்கையின் படி, உலகளாவிய அமைதியின் நிலை 0.36 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 17 ஆண்டுகளில் இது 13-வது முறை உலகளாவிய அமைதி நிலை குறைந்தத அளவாகும். இதில் 74 நாடுகள் முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனால், 87 நாடுகளில் அமைதி நிலை மேலும் மோசமடைந்துள்ளது.
3. ஐஸ்லாந்து தொடர்ந்து உலகின் மிகவும் அமைதியான நாடாக தனது முதலிடத்தை தக்கவைத்துள்ளது. இந்த நிலையை அது 2008-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வருகிறது. ஐஸ்லாந்திற்கு அடுத்ததாக ஆஸ்திரியா, நியூசிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் உள்ளன. மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பா உலகின் மிகவும் அமைதியான பிராந்தியமாகும்; இதில் உலகின் முதல் 10 அமைதியான நாடுகளில் 8 நாடுகள் உள்ளன.
4. உலக அளவில் இந்தியா 115-வது இடத்தில் உள்ளது; 2.229 என்ற GPI மதிப்பெண்ணைப் பெற்றுள்ள இந்தியா, கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தனது அமைதி நிலையில் 0.58 சதவீதம் முன்னேற்றம் கண்டுள்ளது. 2019-இல் 141-வது இடத்திலும், 2020-இல் 139-வது இடத்திலும், 2023-இல் 126-வது இடத்திலும், 2024-ல் 116-வது இடத்திலும் இருந்த இந்தியாவின் தரவரிசை, தற்போது படிப்படியாக உயர்ந்து வரும் போக்கைக் இது சுட்டிக்காட்டுகிறது.
5. அறிக்கையின் படி, “தெற்கு ஆசியா அனைத்து பிராந்தியங்களிலும் அதிகளவில் அமைதி குறைவடைந்த பகுதியாகும். குறிப்பாக, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் அமைதி நிலைக் குறைந்துள்ளது. உலகில் இரண்டாவது குறைந்த அமைதி கொண்ட பிராந்தியமாக இது உள்ளது. இந்தப் பிராந்தியத்தில் மிகவும் அமைதி குறைந்த நாடக ஆப்கானிஸ்தான் உள்ளது.
Original link:
Global Terrorism Index 2026: Trends, rankings, and key highlights