வழக்கத்திற்கு மாறான வழிமுறைகளைப் பயன்படுத்துவது ஒரு சாத்தியமான தேர்வாகும்.
தொடர்ந்து நடைபெற்றுவரும் மேற்கு ஆசிய மோதல், இன்னும் ஒரு வாரத்தில் கூடவிருக்கும் பணவியல் கொள்கைக் குழுவிற்கு (Monetary Policy Committee (MPC)) முன்னெப்போதும் இல்லாத சவால்களை முன்வைக்கிறது.
அதிகரித்துவரும் பணவீக்கம் மற்றும் ஏற்படக்கூடிய வளர்ச்சி மந்தநிலை ஆகியவற்றால் உலகப் பொருளாதாரம் நிலையற்றத் தன்மையை எதிர்கொண்டுள்ளது. இது கொள்கை வட்டி விகிதங்களின் போக்கையும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களையும் சீர்குலைக்கிறது. இந்தியா ஓரளவிற்கு மீண்டு எழும் திறன் கொண்டது. ஆனால், அந்நியப் பங்கு முதலீட்டாளர்களின் (FPI) வெளியேற்றம் நாணய மாற்று விகித நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், உலகளாவிய வட்டி விகித மாற்றங்களின் தாக்கத்திலிருந்து தன்னை முழுமையாகப் பாதுகாத்துக்கொள்ள அதனால் இயலாது.
பணவியல் கொள்கைக் குழுவிற்கு (MPC) நம்பிக்கையூட்டக்கூடிய சில கொள்கை சார்ந்த மாற்றங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) பணவீக்கத்திற்கான இலக்கான 4% (±2% என்ற அனுமதிக்கப்பட்ட வரம்புடன்) நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்பு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு, அதாவது 2031-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும். நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) பணவீக்கத்தைக் கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டு, 2023–24-ஆக மாற்றப்பட்டுள்ளது. இதேபோல், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான (GDP) அடிப்படை ஆண்டு 2022-23-ஆக மாற்றப்பட்டுள்ளது. தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் (Index of Industrial Production (IIP)) அடிப்படை ஆண்டு மாற்றமான 2022-2023 ஆனது, 2026-ம் ஆண்டு மே மாதம் முதல் நடைமுறைக்கு வரும்.
தற்போதைய நிலையில், பணவீக்கமும் வளர்ச்சியும் ஒரு சாதகமான வரம்பில் உள்ளன. இருப்பினும், வலுவான வெளிப்புற அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, வெளிப்புற அபாயங்களைத் தாங்குவதற்குப் பொருளாதாரத்திற்கு உதவும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், பணவியல் கொள்கை விவாதம் நுணுக்கமானதாக இருக்கும்.
ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக சரக்குப் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி மற்றும் விநியோகச் சங்கிலி இடையூறுகள், எரிபொருள் இறக்குமதியைச் சார்ந்துள்ள பொருளாதாரங்களைப் பாதிக்கும். வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க சொத்துக்கள்மீது ஈரான் நடத்தும் தாக்குதல்கள், இந்தியத் தொழிலாளர்கள் தாயகம் திரும்ப வேண்டிய நிலை மற்றும் இந்தியாவிற்கு அனுப்பப்படும் வெளிநாட்டுப் பணவரவைக் குறைக்கக்கூடும்.
இந்தச் சிக்கல்கள், இடையூறுகளும் தொடர் பிரச்சனைகளும் பணவீக்கத்தை அதிகரிக்கச் செய்து, கொள்கை வட்டி விகித நிர்வாகத்தைச் சீர்குலைக்கக்கூடும்.
உலகளாவிய கொள்கை நகர்வுகள்
உதாரணமாக, மார்ச் 18 அன்று நடந்த சமீபத்திய கூட்டாட்சி திறந்த சந்தைக் குழு (Federal Open Market Committee (FOMC)) கூட்டத்தின்போது, அமெரிக்க பெடரல் ரிசர்வ் (US Fed) தனது 2 சதவீத இலக்கைவிட கணிசமாக அதிகரிக்க, 2.8-3.1 சதவீதம் என்ற அளவில் பணவீக்கம் உயர்ந்திருந்தபோதிலும், கொள்கை வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருந்தது. இதேபோல், இங்கிலாந்தின் பணவீக்கம் 2 சதவீத இலக்கை விட 3 சதவீதம் அதிகமாக இருந்தபோதிலும், கொள்கை வட்டி விகிதங்கள் மாற்றப்படாமல் விடப்பட்டன.
பணவீக்கம் 2 சதவீத இலக்கைவிட அதிகமாக இருந்தபோதிலும், ஐரோப்பிய மத்திய வங்கியும் (European Central Bank(ECB)) தனது கொள்கை வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருந்தது.
முந்தைய பணவியல் கொள்கையில் கணிக்கப்பட்டதைப் போலவே, 2026 நிதியாண்டில் நுகர்வோர் விலைக் குறியீட்டுப் (CPI) பணவீக்கம் சுமார் 2.1 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது பிப்ரவரியில் 3.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 4 சதவீத அளவிற்குக் குறைவாகும். ஆனால், தற்போதைய சூழ்நிலையில், குறிப்பாக கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் எல்பிஜி விநியோகத் தடைகளுக்கு மத்தியில், கடுமையான சரிவு அபாயங்களை நிராகரிக்க முடியாது. தலைமைப் பொருளாதார ஆலோசகர் நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் சமர்ப்பித்த அறிக்கையில், ஒரு பீப்பாய்க்கு 90 டாலர் விலை சமாளிக்கக்கூடியதாக இருந்தாலும், இரண்டு முதல் மூன்று காலாண்டுகளுக்கு ஒரு பீப்பாய்க்கு 130 டாலர் என்ற விலை நீடித்தால், அது மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை 6.4 சதவீதமாகக் குறைத்துவிடும் என்று குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வுகளின் காரணமாக, ரெப்போ விகிதம் (repo rate) மாற்றப்படாமல் இருக்கலாம். மேலும், இதற்கான கொள்கை நிலைப்பாடு நடுநிலையாக' தொடரலாம். தற்போதைய கடினமான காலங்களைச் சமாளிக்க வங்கிகளுக்கும் வணிகங்களுக்கும் உதவும் வகையில் குறிப்பிட்ட நிவாரண நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படலாம்.
கொள்கை விகிதங்களுக்கு அப்பால்
வெளித்துறையிலிருந்து அதிகரித்துவரும் பிணைய அபாயங்களுக்கு மத்தியில், கடன் செலவுகள் உயர்வதால் வங்கிகளின் சொத்துத் தரம் அழுத்தத்திற்கு உள்ளாகக்கூடும். கடன் விரிவாக்கத்தைவிட வைப்புத்தொகை வளர்ச்சி பின்தங்கியுள்ளதால், பணப்புழக்க அபாயங்கள் அதிகமாகவே உள்ளன. மார்ச் 13, 2026 நிலவரப்படி, 10.8 சதவீத வைப்புத்தொகை வளர்ச்சி விகிதத்தைவிட 13.8 சதவீத கடன் வளர்ச்சி அதிகமாக உள்ளது. மேலும், கடன்-வைப்புத்தொகை விகிதம் (credit-to-deposit ratio) 83 சதவீதத்தை எட்டியுள்ளது. கடன் மற்றும் வைப்புத்தொகைக்கு இடையிலான இந்த இடைவெளி, பணப்புழக்க அபாயங்களை அதிகரிக்கக்கூடும்.
இந்திய ரிசர்வ் வங்கியின் பணப்புழக்க சரிசெய்தல் வசதியானது வங்கிகளுக்கு ஒரு தற்காலிக தீர்வாக அமையக்கூடும். மேலும், ஏப்ரல் 1 முதல் டிஜிட்டல் முறைகளுடன் இணைக்கப்பட்ட வைப்புத்தொகைகளுக்கு 2.5 சதவீதம் 'ரன் ஆஃப்' (run-off) ஒதுக்கீட்டை வங்கிகள் கடைப்பிடிக்க வேண்டும். சொத்து-பொறுப்பு முரண்பாட்டு (asset-liability mismatch) அழுத்தத்தை சமாளிக்க, வங்கிகளின் கடன் வழங்கக்கூடிய வளங்களை அதிகரிக்கும் வகையில், நடுத்தர கால நிதிகளை வழங்க ரிசர்வ் வங்கி நீண்ட கால மறுநிதியளிப்பு உத்தரவுகளை (Long-Term Repo Operations (LTRO)) முன்மொழியக்கூடும். நெருக்கடியில் உள்ள நிறுவனங்களுக்கு உதவும் விதிமுறைகள் மூலம் ஆதரவளிப்பது அவசியம். மேலும், அவ்வாறு செய்ய வங்கிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSME) வெளியீடு, விதி, பயன்பாடு, முடிவு (issue, rule, application, conclusion(IRAC)) விதிமுறைகளில் சில தற்காலிக தளர்வுகள் முன்மொழியப்படலாம்.
வரும் காலங்களில், அவசரகால கடன் உத்தரவாதத் திட்டத்தைப் போன்றே, அரசாங்க உத்தரவாதத்துடன்கூடிய நிதி உதவியையும் அரசாங்கம் அறிவிக்கக்கூடும்.
தற்போதைய நெருக்கடியை வணிகங்கள் சமாளிக்க உதவும் வகையில், ஏப்ரல் மாதக் கொள்கையானது வழக்கத்திற்கு மாறான ஒழுங்குமுறைச் செயலாக்கிகளைக் கொண்டிருக்கக்கூடும்.
கட்டுரையாளர், ஹைதராபாத்தில் உள்ள காப்பீடு மற்றும் இடர் மேலாண்மை நிறுவனத்தின் இணைப் பேராசிரியர்.
Original Link : Expectations from MPC