சமூக ஊடகப் பயனர்களை ஒழுங்குபடுத்த புதிய விதிகளை ஒன்றிய அரசு பரிசீலித்து வருகிறது. -ஆரூன் தீப்

தனிப்பட்ட பயனர்களின் பதிவுகளை நீக்குவதற்கான அறிவிப்புகளை அனுப்ப, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு அரசு அனுமதி அளிக்கலாம். இது, தகவல் தொழில்நுட்ப விதிகள்-2021 (IT Rules) இன் வரைவுத் திருத்தத்தில் உள்ள சர்ச்சைக்குரிய ஒரு பிரிவை உள்ளடக்கியுள்ளது. இந்த நடவடிக்கையை, இணைய சுதந்திர அறக்கட்டளை இதை ‘அரசியலமைப்புக்கு முரணான தணிக்கையின் மிகப்பெரிய விரிவாக்கம்’ (massive expansion of unconstitutional censorship) என்று குறிப்பிட்டுள்ளது.


தனிப்பட்ட பயனர்களின் சமூக ஊடகப் பதிவுகளை நீக்குவதற்கான அறிவிப்புகளை அனுப்ப, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தை (I&B) அனுமதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2021-ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, அமைச்சகத்தால் இதுபோன்ற அறிவிப்புகளை இணைய செய்தித் தளங்களுக்கு மட்டுமே வழங்க முடிந்தது.


மேலும், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) சமூக ஊடகத் தளங்களுக்கு வழங்கும் அறிவுரைகள் பின்பற்றப்படாவிட்டால், அது அந்த நிறுவனங்களின் “பாதுகாப்பு அரண்” (safe harbour) என்ற வசதியை இழக்க நேரிடும். இதன் விளைவாக, பயனர்களால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்திற்காக நீதிமன்றத்தில் அவை சட்டரீதியான பொறுப்புக்கு உள்ளாக்கப்படக்கூடும்.


சமீபத்தில் பிப்ரவரியில் திருத்தப்பட்ட, தகவல் தொழில்நுட்பம் (முகவர் வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள் குறியீடு) விதிகள்-2021 (Information Technology (Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules) இல், மார்ச் 30, 2026 திங்கட்கிழமை அன்று கொண்டுவரப்பட்ட ஒரு வரைவுத் திருத்தத்தில் இந்த மாற்றங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை முன்மொழியப்பட்ட திருத்தம் தொடர்பான விளக்கக் குறிப்பில், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் தனிப்பட்ட பயனர் பதிவுகள் சேர்க்கப்பட்டது. அமைச்சகத்தின்படி, பதிவுசெய்யப்பட்ட பதிப்பாளர்கள் அல்லாத பயனர்களால் பகிரப்படும் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் சார்ந்த உள்ளடக்கங்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும் என்பதை இந்த நடவடிக்கை தெளிவுபடுத்துகிறது.


ஒரு அறிக்கையில், இணைய சுதந்திர அறக்கட்டளை (Internet Freedom Foundation (IFF)) இந்த முன்மொழிவை “அரசியலமைப்புக்கு முரணான தணிக்கை மற்றும் ஒழுங்குமுறை அதிகாரத்தின் மிகப்பெரிய விரிவாக்கம்” (massive expansion of unconstitutional censorship and regulatory power) என்று கண்டித்துள்ளது.


இந்தத் திருத்தங்கள் தெளிவுபடுத்தும் மற்றும் நடைமுறை சார்ந்தவை என்றும், சட்டப்பூர்வமான உறுதித்தன்மையை மேம்படுத்துவதையும், அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களைச் செயல்படுத்தும் திறனை வலுப்படுத்துவதையும், இடைத்தரப்புகளால் வெளியிடப்படும் உள்ளடக்கம், குறிப்பாகச் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் மீது திறம்பட்ட பயனுள்ள மேற்பார்வையை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இணைய சுதந்திர அறக்கட்டளை (Internet Freedom Foundation (IFF)) அந்தக் கூற்றை மறுத்து, குறிப்பிட்ட முன்மொழிவில் உள்ள ஒரு முக்கிய மாற்றத்தைச் சுட்டிக்காட்டியது. அதாவது, புகார்கள் மீதான முடிவுகளுக்கு எதிரான மேல்முறையீடுகளை விசாரிப்பதற்காக ஒரு துறைகளுக்கிடையேயான குழு (inter-departmental committee (IDC)) ஒன்றைச் சார்ந்ததாகும். இது துறைகளுக்கிடையேயான குழுவின் (IDC) அதிகார வரம்பை விரிவுபடுத்துவதாக இணைய சுதந்திர அறக்கட்டளை (IFF) கூறுகிறது. "தொடக்கத்தில் இருந்த விதி 14(2), 'நெறிமுறைக் குறியீட்டின் மீறல் அல்லது விதிமீறல் தொடர்பான புகார்களை' துறைகளுக்கிடையேயான குழு (IDC) விசாரிக்க வேண்டும் என்று கோரியது. ஆனால், திருத்தப்பட்ட பதிப்பு இந்தக் கோரிக்கையை முற்றிலுமாக நீக்குகிறது," என்று இணைய சுதந்திர அறக்கட்டளை (IFF) தனது அறிக்கையில் கூறியது. "துறைகளுக்கிடையேயான குழுவின் (IDC) இனி இரண்டு வகையான வழக்குகளை விசாரிக்கும். அவை (அ) நிலை I அல்லது II-இல் எடுக்கப்பட்ட முடிவுகளிலிருந்து எழும் குறைகள் அல்லது (ஆ) அமைச்சகத்தால் தனக்குப் பரிந்துரைக்கப்படும் 'விவகாரங்களை' அது விசாரிக்கும் என்று அது கூறியது.


தகவல் தொழில்நுட்ப விதிகள் வெளியிடப்பட்ட, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79-ஐப் பயன்படுத்தி, நீக்குவதற்கான அறிவிப்பின் கீழ் உள்ள குறிப்பிடப்பட்டுள்ள உள்ளடக்கம் தக்கவைக்கப்பட்டால், அது அவற்றின் பாதுகாப்பான அரணை இழக்க வழிவகுக்கும் என்று சமூக ஊடகத் தளங்களை அரசாங்கம் எச்சரிக்கிறது. பிப்ரவரியில், இதுபோன்ற உள்ளடக்கங்களை அகற்றுவதற்கான காலக்கெடுவை ஒரு திருத்தம் மாற்றியது. முன்னதாக, தளங்கள் நடவடிக்கை எடுக்க 24 முதல் 36 மணிநேரம் அவகாசம் இருந்தது. இப்போது, ​​தங்கள் பாதுகாப்பைத் தக்கவைத்துக் கொள்ள, அவை இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த திடீர் மாற்றத்தின் காரணமாக, மெட்டா இதுபோன்ற அறிவிப்புகளைப் பெறும்போது அதிக பதிவுகளையும் கணக்குகளையும் அகற்றத் தொடங்கியுள்ளது. சட்டப்படி மிகவும் கட்டுப்படுத்தும் முடக்குதல் தொடர்பான ஆணைகள் பிரிவு 69A-ன் கீழ் பிறப்பிக்கப்படுகின்றன.


தகவல் தொழில்நுட்ப விதிகளின் சில பகுதிகளுக்குத் தடை விதித்துள்ள சென்னை மற்றும் மும்பை உயர் நீதிமன்றங்களின் உத்தரவுகளை அரசு மீற முயற்சிப்பதாக அறக்கட்டளை குற்றம் சாட்டியது. "பிரிவு 8 மற்றும் 14-இல் செய்யப்பட்ட திருத்தங்களின் ஒட்டுமொத்த விளைவானது, மும்பை மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்கள் அரசியலமைப்புரீதியாகச் சந்தேகத்திற்குரியது என்று கண்டறிந்திருந்தன. தற்போதுள்ள இடைக்கால நீதிமன்ற உத்தரவுகளைத் தவிர்ப்பதற்காகவே இந்த அமைப்பின் புதிய வடிவம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்றும் இணைய சுதந்திர அறக்கட்டளை (IFF) கூறியது.


பல அறிவிப்புகள்


கடந்த சில வாரங்களாக, அரசுக்கு எதிரான முக்கியப் பிரமுகர்களின் பதிவுகள் மற்றும் கணக்குகள், அத்துடன் பிரதமர் நரேந்திர மோடியைக் கேலி செய்யும் உள்ளடக்கங்கள் ஆகியவற்றை இணையத்தில் இருந்து அகற்றுவதற்கான உத்தரவுகளை அரசாங்கம் அதிகரித்து வருகிறது. சமீபத்திய இந்த நீக்கம் தொடர்பாக அதிகரித்துள்ள உள்ளடக்க அகற்றல்கள் குறித்துக் கேட்டபோது, ​​தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், திங்களன்று 'தி இந்து' பத்திரிகையாளர் சந்திப்பில், அரசாங்கம் "செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட டீப்ஃபேக்குகள்" (AI-generated deepfakes) மற்றும் "போலிச் செய்திகள்" (fake news) மீது நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.


கடந்த சில வாரங்களாக நீக்க அறிவிப்புகளைப் பெற்ற உள்ளடக்கங்களில், 'தி வயர்' தயாரித்த பிரதமர் மோடி இடம்பெற்ற அனிமேஷன்கள், அரசாங்கத்தை விமர்சிக்கும் அல்லது கேலி செய்யும் 'எக்ஸ்' தளத்தின் பல பதிவுகள், மற்றும் காங்கிரஸின் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட நையாண்டி காணொலிகள் ஆகியவை அடங்கும்.


வார இறுதி முழுவதும், பதிவுகளை நீக்கும் உத்தரவுகள் தொடர்ந்தன. யூடியூபில் ஏழு லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்ட, சுதந்திரமான செய்தி மற்றும் கருத்து ஊடகமான 'மொலிட்டிக்ஸ்'-ன் (Molitics) முழு முகநூல் பக்கமும் (Facebook page) இந்தியாவில் முடக்கப்பட்டது. உண்மை சரிபார்ப்புத் தளமான 'ஆல்ட் நியூஸ்'-ன் (Alt News) இணை நிறுவனரான முகமது சுபைர், மேற்குவங்கத்தில் நடந்த ஒரு மதக்கலவரச் சம்பவத்தின் பின்னணியை விளக்கிய தனது பதிவை நீக்கினார். அதேசமயம், அவர் பதிலளித்திருந்த, மேற்கு வங்க பாஜக எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியின் பதிவு இணையத்தில் நீக்கப்படாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Original Link: Centre eyes new regulation to cover social media users.


Share: