எந்த ஒரு தனிப்பட்ட தகவல்களுக்கு முழுமையாக விலக்கு (blanket exemption) அளிப்பது ஏன் சிக்கலானது?
தற்போதைய செய்தி: டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு (Digital Personal Data Protection (DPDP)) சட்டத்தின் ஒரு பிரிவு மூலம் தனிப்பட்ட தகவல்களுக்கு முழுமையான விலக்கு அளிக்கும் தகவல் அறியும் உரிமை (Right to Information (RTI)) சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதை எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களை உச்சநீதிமன்றம் அரசியல் சட்ட அமர்வுக்கு (Constitution Bench) அனுப்பியுள்ளது.
டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு (Digital Personal Data Protection (DPDP)) சட்டம் எவ்வாறு உருவாக்கப்பட்டது?
2017-ஆம் ஆண்டு, புட்டசாமி வழக்கில் உச்சநீதிமன்றம், தனியுரிமைக்கான உரிமையை பிரிவு 21-ன் கீழ் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையாக (right to life and liberty) அறிவித்தது. பிரிவு 19-ன் கீழ் இது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை உள்ளடக்கிய ஒரு உரிமையாகும். அரசு ஒரு தரவு பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அரசு, நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் ஒரு குழுவை அமைத்து. தரவு பாதுகாப்பு சட்ட அமைப்பைப் பற்றி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கஉத்தரவிட்டது. அந்த குழு ஜூலை 2018-ல் தனது அறிக்கையும், தரவு பாதுகாப்பு மசோதா வரைவு ஒன்றையும் சமர்ப்பித்தது. அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 2023-ல், நாடாளுமன்றம் DPDP சட்டத்தை நிறைவேற்றியது. DPDP சட்டம் தனிநபர்களின் தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பதற்கான சட்ட கட்டமைப்பை வழங்குகிறது. இது தனிநபர் தரவு முதன்மைகள் (data principals) என்றும் அழைக்கப்படுகிறது. தனிநபர்கள் தங்கள் தனிப்பட்ட தரவை மற்றவர்களுடனோ, நிறுவனங்களுடனோ அல்லது அரசு நிறுவனங்களுடனோ பகிர்ந்து கொள்ளும்போது, அந்த நிறுவனங்கள் தகவலைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும் அதை முறையாகப் பயன்படுத்துவதற்கும் முக்கியப் பொறுப்பை கொண்டுள்ளன.
தற்போது எழுந்துள்ள சர்ச்சை என்ன?
2005-ஆம் ஆண்டில், அரசு அதிகாரிகளிடமிருந்து தகவல்களைப் பெறும் உரிமையை குடிமக்களுக்கு வழங்குவதற்காக தகவல் அறியும் உரிமை சட்டம் இயற்றப்பட்டது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பிரிவு 8(1)-(j)-, தனிப்பட்ட தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிடுகிறது. பொதுச் செயல்பாடு அல்லது பொதுநலனுடன் தொடர்பில்லாத தனிப்பட்ட தகவல்கள் அல்லது ஒரு நபரின் தனியுரிமையை தேவையற்ற முறையில் மீறக்கூடிய தகவல்கள் வழங்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும், பொதுநலனுக்காக அந்த தகவலை வெளியிடுவது முக்கியமானது என உரிய அதிகாரி திருப்தி அடைந்தால், அந்த தகவலை வழங்கலாம்.
டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு (Digital Personal Data Protection (DPDP)) சட்டத்தின் பிரிவு 44(3) தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பிரிவு 8(1)(j)-ஐ திருத்துகிறது. இது தனிப்பட்ட தகவலுடன் தொடர்புடைய எந்தவொரு தகவலுக்கும் விதிவிலக்குகள் இல்லாமல் முழுமையான விலக்கு அளிக்கிறது. இந்தத் திருத்தத்தின் நோக்கம், அரசு அதிகாரிகளின் தனியுரிமைக்கான அடிப்படை உரிமையைப் பாதுகாப்பதாகும், இதனை நாடாளுமன்றச் சட்டத்தால் சுருக்கவோ அல்லது பறிக்கவோ முடியாது. மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 8(2)-ன் கீழ், சில தகவல்கள் பொதுவாக பிரிவு 8(1)-ன் கீழ் விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், பாதுகாக்கப்பட்ட நலனுக்கு ஏற்படும் தீங்கை விட, தகவலை அறிந்து கொள்வதில் பொதுநலன் மிக முக்கியமானது என்றால், அரசு அதிகாரி தகவலைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று அரசாங்கம் என்று அரசாங்கம் தனது வாதத்தை முன்வைத்தது.
இருப்பினும், இந்தத் திருத்தம் அரசியலமைப்பை மீறுவதாகும் என்ற அடிப்படையில், தொடர்ச்சியான மனுக்கள் மூலம் உச்சநீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டுள்ளது.
முன்னோக்கி செல்லும் வழி என்னவாக இருக்க முடியும்?
உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தகவல் அறியும் உரிமையை பிரிவுகள் 19 மற்றும் 21-ன் ஒருங்கிணைந்த பகுதியாகக் கருதியுள்ளது. முன்னதாக, அரசு ஊழியர்கள் தங்கள் தனிப்பட்ட சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்களை அரசாங்கத்திற்கு தவறாமல் சமர்ப்பிக்க வேண்டிய சூழல் இருந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், பொதுத் தகவல் அதிகாரிகள் இந்தத் தகவல் பொதுமக்களுக்கு முக்கியமானதாக இருந்தால் அதைப் பகிர்ந்து கொள்ளலாம். இது அவர்கள்மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், தற்போதைய திருத்தத்தின் மூலம், அத்தகைய தகவல்கள் தனிப்பட்ட தகவல்களுடன் தொடர்புடையவை என்பதன் அடிப்படையில் நிராகரிக்கப்படும். கொள்முதல் பதிவுகள், தணிக்கை அறிக்கைகள் அல்லது பொதுச் செலவுகள் தொடர்பான கோரிக்கைகளைகூட அது 'தனிப்பட்ட தகவலாக' இருக்கலாம் என்ற அடிப்படையில் நிராகரிப்பதற்கு சட்டம் உதவியாக இருக்கும். 'தனிப்பட்ட தகவல்' (‘personal information) என்றால் என்ன என்பதற்கான வழிகாட்டுதல்களை இது வகுக்கக்கூடும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. இது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இருப்பினும், 2023-ஆம் ஆண்டு DPDP சட்டம், மூலம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். பிரிவு 8(1)(j) பொதுநலனுக்கு நன்மை அளிக்கும் தனிப்பட்ட தகவல்களை வெளியிட அனுமதிக்கும் முந்தைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இந்த விதி பிரிவு 8(2)-ல் உள்ள பொது விதியைவிட வலுவானது மற்றும் ஏற்கனவே பணியில் உள்ள அரசு அதிகாரிகளின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கும் தேவைப்படும்போது தகவல்களைப் பகிர்வதற்கும் இடையில் ஒரு விகிதாசார சமநிலையை (proportionate balance) ஏற்படுத்துகிறது.
ரங்கராஜன் ஆர் ஒரு முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி மற்றும் ‘எளிமைப்படுத்தப்பட்ட அரசியல் குறித்த பாடநெறி’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார். அவர் தற்போது அதிகாரிகள் இந்திய ஆட்சிப்பணி அகாடமியில் பயிற்சி பெறுகிறார்.
Original tittle : Does the Data Act dilute the Right to Information Act? -Rangarajan R.