மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தைச் சுட்டிக்காட்டி, SIR ஆவணப் பட்டியலிலிருந்து ஆதார் அடையாள அட்டையை (Aadhaar) நீக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. -கிருஷ்ணதாஸ் ராஜகோபால்

 நாட்டின் எல்லைப் பகுதிகளில் போலி ஆதார் அட்டைகள் 'பெருமளவில்' தயாரிக்கப்படுவது குறித்த தனது கவலைகளை, மனுதாரரும் வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய் ஒன்றிய அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.


செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (Special Intensive Revision (SIR)) பணியில் ஆதார் அட்டையைப் பயன்படுத்த அனுமதித்த தனது செப்டம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்யவும் இந்திய உச்சநீதிமன்றம், மறுத்துவிட்டது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (Representation of the People Act) இன்னும் 12 இலக்க ஆதார் எண்ணை குடிமக்களுக்கான சரியான அடையாளச் சான்றாக அங்கீகரிக்கிறது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. 


இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் தலைமையிலான அமர்வு, நாட்டின் எல்லைப் பகுதிகளில் அதிகளவில் உள்ள போலி ஆதார் அடையாள அட்டைகள் குறித்த தனது கவலைகளை உபாத்யாய ஒன்றிய அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.


ஆதார் அடையாள அட்டையப் போலியாகத் தயாரிக்க முடியும் என்றால், கடவுச் சீட்டையும் போலியாகத் தயாரிக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆதார் அடையாள அட்டையை 12-வது ஆவணமாக ஏற்பதை மறுபரிசீலனை செய்யக் கோரிய மனுவை விசாரித்தபோது நீதிமன்றம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. 


மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், ஆதார் அடையாள அட்டையை ஒரு செல்லுபடியாகும் அடையாளச் சான்றாக அனுமதிக்கும் வரை, அந்தச் சட்டத்தை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. 


1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 23-ன்படி, ஒருவர் தனது அடையாளத்தை நிரூபிக்க, வாக்காளர் பதிவு அதிகாரியிடம் (Electoral Registration Officer (ERO)) தனது ஆதார் எண்ணை வழங்கலாம் என்று குறிப்பிடுகிறது.


மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் செய்யுமாறு நீங்கள் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுக்க வேண்டும். இந்தப் பிரச்சினையை எப்போதும் நீதிமன்றத்தில் விவாதித்துக் கொண்டிருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். ஆதார் அடையாள அட்டைகள் பெருமளவில் மோசடியாகப் பெறப்பட்டிருந்தால், அதைச் சட்டத்தின் மூலம் முறைப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் நீதிபதி பாக்சி கூறினார்.


வங்காளதேசத்தவர்களோ அல்லது ரோஹிங்கியாக்களோ காவல் துறையினரிடம் பிடிபடும் போதெல்லாம், அவர்களிடம் இருக்கும் ஆதார் அட்டைகள் வங்காளத்தில் இருந்து போலியாக வழங்கப்பட்டவையாக இருக்கின்றன என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. 


தலைமை நீதிபதி காந்த் கூறுகையில், இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது என்றும் ஆனால், அரசாங்கத்திடம் முறையிடப்பட வேண்டிய விவகாரம், என்றும், தவறாக நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். 


வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் (SIR) போது, வாக்காளர்கள் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தப் பயன்படுத்தும் ஆவணங்களின் பட்டியலிலிருந்து 'ஆதார்' அடையாள அட்டையை நீக்க வேண்டும் என்ற வாதத்தை, நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


அந்தச் சமயத்தில், ஆதார் அட்டையை எளிதாகப் போலியாகத் தயாரிக்க முடியும் என்றும், தனியார் நிறுவனங்கள் மூலமாக அதைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கூறப்பட்டது. 

இந்திய அரசின்கீழ் கடவுச்சீட்டுகள்கூட தனியார் நிறுவனங்கள் மூலமாகவே நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்று குறிப்பிட்டார். ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளும் இந்த தனியார் மையங்கள், சட்டபூர்வமான அதிகார அமைப்புகள் அல்லது அரசாங்கத்தின்கீழ் தான் செயல்படுகின்றன என்றும் அவர் கூறினார். ஆதார் என்பது ஒரு பொது ஆவணம்; கடவுச்சீட்டு உட்பட எந்தவொரு ஆவணத்தையும் போலியாக உருவாக்க முடியும் என்றும் கூறியுள்ளார். எனவே, ஆதார் வழங்கும் பணியில் ஈடுபடும்போது, அந்த தனியார் மையங்கள் ஒரு பொதுக் கடமையைத்தான் செய்கின்றன என்று நீதிபதி பாக்சி விளக்கினார்.


கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி, பீகார் மாநில வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையின் போது அடையாளச் சரிபார்ப்பிற்காக ஆதார் அட்டையை 12-ஆவது 'அறிவுறுத்தும்' (indicative) ஆவணமாகச் சேர்க்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்தியாவுக்குள் நடக்கும் ஊடுருவல் எல்லை மீறிப் போய்விட்டதாகவும் இது ஒரு வெளிநாட்டு ஆக்கிரமிப்பு போன்றது என்று உபாத்யாயா கூறினார். அதனால், அவ்வப்போது 'வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த' ஆய்வுகளை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


Original tittle :  Supreme Court declines plea to remove Aadhaar from SIR document list, cites RP Act -Krishnadas Rajagopal

Share: