ராஜகோபாலாச்சாரி சிலை நிறுவப்பட்டது, லுட்யென்ஸ் சிலை அகற்றப்பட்டது -ரோஷ்னி யாதவ்

 குடியரசுத் தலைவர் மாளிகையில், எட்வின் லுட்யென்ஸின் சிலைக்குப் பதிலாக சி. ராஜகோபாலாச்சாரியின் சிலை திறக்கப்பட்டுள்ளது. இது சிந்தனை மற்றும் கலாச்சாரத்தில் காலனித்துவ தாக்கங்களிலிருந்து விலகிச் செல்வதற்கான இந்தியாவின் முயற்சியைக் குறிக்கிறது. சி. ராஜகோபாலாச்சாரி யார்? தலைநகரின் ஏகாதிபத்திய வடிவமைப்பை லுட்யென்ஸ் எவ்வாறு வடிவமைத்தார்?


தற்போதைய செய்தி


காலனிய மனநிலையின் எச்சங்களை நீக்கி இந்தியாவின் பாரம்பரியத்தைத் தழுவுவதற்கான “தொடர் படிகளின்” ஒரு பகுதியாக, ஜனாதிபதி திரௌபதி முர்மு திங்கள்கிழமை (பிப்ரவரி 23) அன்று, சுதந்திரப் போராட்ட வீரரும் சுதந்திர இந்தியாவின் முதல் மற்றும் ஒரே இந்திய ஆளுநர்-பொதுவாளருமான சி. ராஜகோபாலாச்சாரியின் மார்பளவுச் சிலையை ராஷ்டிரபதி பவனில் அசோக மண்டபத்திற்கு அருகிலுள்ள பிரம்மாண்டமான திறந்த படிக்கட்டில் திறந்து வைத்தார். இது புதுடெல்லியின் கட்டிடக் கலைஞரான எட்வின் லுட்டியன்ஸின் மார்பளவுச் சிலையை மாற்றுகிறது. இந்தச் சூழலில், சி. ராஜகோபாலாச்சாரி மற்றும் எட்வின் லுட்டியன்ஸ் பற்றி அறிந்து கொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. தனது ரசிகர்களாலும், ஆதரவாளர்களாலும் 'ராஜாஜி' என்று அன்பாக அழைக்கப்பட்ட சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி, டிசம்பர் 10, 1878 அன்று சென்னை மாகாணத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ள தொரப்பள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். 1899-ஆம் ஆண்டு, இளங்கலை சட்டத் தேர்வில் தேர்ச்சிபெற்று, சேலத்தில் சட்டப் பயிற்சியைத் தொடங்கினார்.


2. வங்காளத்தை வகுப்புவாத அடிப்படையில் பிரிக்க கர்சன் பிரபு எடுத்த முடிவு, ராஜகோபாலாச்சாரிக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் எதிர்பாராத ஒரு திருப்புமுனையாக அமைந்து. பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து முழுமையான விடுதலைக்காக ஒவ்வொரு இந்தியரையும் போராடுமாறு வலியுறுத்திய லோகமான்ய பால கங்காதர திலகரின் அழைப்பால் ராஜகோபாலாச்சாரி ஈர்க்கப்பட்டார். அவர் திலகரைத் தனது வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டார். ராஜகோபாலாச்சாரி இந்திய தேசிய காங்கிரஸில் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார்.


3. மார்ச் 12, 1930 அன்று, காந்தி தனது வரலாற்றுச் சிறப்புமிக்க தண்டி யாத்திரையை மேற்கொள்ளத் திட்டமிட்டார். சென்னை மாகாணத்தில், உப்புச் சட்டத்தை (Salt Law) மீறுவதற்காக கடல் கடற்கரைக்கு நீண்ட நடைப்பயணத்தை ராஜகோபாலாச்சாரி வழிநடத்தினார். திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரை நடைப்பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டார். வேதாரண்யம் சத்தியாகிரகத்தில் இருந்து ராஜாஜி ஒரு தேசியப் போராளியாக  மாறினார்.


4. சுதந்திரத்திற்குப் பிறகு, ராஜகோபாலாச்சாரி மேற்கு வங்கத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1947-ஆம் ஆண்டு, சுதந்திர இந்தியாவின் முதல் மாகாண ஆளுநரான லார்ட் மவுண்ட்பேட்டனின் பதவிக்காலம் முடிந்ததும், அவருக்குப் பதிலாக சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.


5. டிசம்பர் 1950-ல் சர்தார் படேல் இறந்த பிறகு, ராஜகோபாலாச்சாரி உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். தேசத்திற்கு அவர் ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக, ராஜகோபாலாச்சாரிக்கு 1954-ல் 'பாரத ரத்னா' விருது  வழங்கப்பட்டது. இந்த மிக உயர்ந்த குடிமை விருதைப் பெற்ற (highest civilian award) முதல் நபர் ராஜகோபாலாச்சாரி  ஆவார்.


6. ராஜாஜி 1959-ல் சுதந்திரக் கட்சியை உருவாக்கினார். இது சந்தைப் பொருளாதாரத்திற்காக தீவிரமாகப் பிரச்சாரம் செய்தது. ராஜாஜியின் கூற்றுப்படி, சுதந்திரக் கட்சி ஒரு அரசியல் கட்சி அல்ல, ஒரு இயக்கமாகும்.


எட்வின் லுட்யன்ஸ் (Edwin Lutyens)


1. 1869-ல் லண்டனில் பிறந்த எட்வின் லுட்யன்ஸ், புதுடெல்லியின் பல்வேறு பகுதியை வடிவமைத்த ஒரு முக்கிய ஆங்கிலேய கட்டிடக் கலைஞர் ஆவார்.


2. தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து புது டெல்லிக்கு மாற்றப்பட்ட பிறகு, 1912-ஆம் ஆண்டில் நகரத்தின் முக்கியக் கட்டிடங்களை வடிவமைக்கும் பணியில் எட்வின் லுட்யன்ஸ் ஈடுபட்டார். இதில் குடியரசுத் தலைவர் மாளிகை, இந்தியா கேட், நார்த் பிளாக் மற்றும் சவுத் பிளாக் ஆகியவை அடங்கும். அவர் லண்டனில் உள்ள நினைவுச்சின்னத்தையும் வடிவமைத்து 1918-ல் நைட் (knighted) பட்டம் பெற்றார்.


குடியரசுத் தலைவர் மாளிகை


எட்வின் லுட்யன்ஸ் வடிவமைத்த குடியரசுத் தலைவர் மாளிகை முதலில் அரசாங்க மாளிகை (Government House) என்று அழைக்கப்பட்டது. மேலும் டிசம்பர் 1929-ல், வைஸ்ராய் இர்வின் அங்கு குடிபெயர்ந்தபோது, சில மின் பணிகள் நிலுவையில் இருந்தபோதிலும் இது அரசப்பிரதிநிதி  மாளிகை (Viceroy House)  என்று அறியப்பட்டது. வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளுக்கு அருகிலேயே இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், முதலாம் உலகப் போர், கல் பற்றாக்குறை மற்றும் லுடியன்ஸ்-ஹெர்பர்ட் பேக்கர் கருத்து வேறுபாடு உள்ளிட்ட பல தடைகள் பணிகள் நிறைவடைவதில் தாமதத்தை ஏற்படுத்தின. அரசு மாளிகையின் நான்கு பிரிவுகள் கட்டி முடிக்கப்பட்டு, குவிமாடம்  (dome) 1928-ல் கட்டப்பட்டது.



ஹைதராபாத் மற்றும் பிற மாளிகைகள்


இந்தியா கேட் பகுதியைச் சுற்றி பல்வேறு "இளவரசர்களின்" வீடுகள் கட்டப்பட்டன. மேலும், எட்வின் லுட்யன்ஸ் ஹைதராபாத் மாளிகை மற்றும் பரோடா ஹவுஸின் கட்டிடக் கலைஞர் ஆவார். 1928-ஆம் ஆண்டில், ஹைதராபாத் மாளிகை மற்றும் பிகானர் மாளிகை திறக்கப்பட்டன. 1931-ஆம் ஆண்டில், இறுதியாக புது டெல்லியில் திறக்கப்பட்டபோது, ​​பரோடாமாளிகை மற்றும் திருவிதாங்கூர் மாளிகை பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. மற்ற மாளிகைகள் லுட்யனின் கட்டிடக்கலை பாணியைப் பின்பற்றின.


வடக்கு மற்றும் தெற்கு தொகுதி கட்டிடங்கள்

 

முதலாம் உலகப் போர் புது டெல்லியின் கட்டுமானத்தில் ஒரு தடையாக இருந்தது. மேலும், செயலகக் கட்டிடங்கள் இப்போது வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகள் என்று அழைக்கப்படுகிறது. கட்டிடக் கலைஞர் ஹெர்பர்ட் பேக்கரால் வடிவமைக்கப்பட்ட தொகுதிகள் 1915-ஆம் ஆண்டில் கட்டப்பட்டு வந்த நிலையில், அரசு மாளிகை அல்லது குடியரசுத் தலைவர் மாளிகையின் பார்வை தடைபடும் என்று எட்வின் லுட்யன்ஸ் சுட்டிக்காட்டினார். இது பேக்கருக்கும் லுட்யனுக்கும் இடையிலான பழைய நட்பு கசப்பாக மாற வழிவகுத்தது. 1930-ஆம் ஆண்டில், கட்டிடங்கள் தயாராக இருந்தன.


குடியரசுத் தலைவர் மாளிகையில் சமீபத்தில் என்ன மாறிவிட்டது


1. 'கிரந்த் குதிர்': ராஷ்ட்ரபதி பகவானின் காலனியப் பழக்கங்களை அகற்றி 2,300 புத்தகங்கள் மற்றும் கையேடுகளுக்காக தனித்தப் பகுதியை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இது அமைக்கப்பட்டுள்ளது என்று குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


— ஒரு மாதத்திற்கு முன்பு, ஜனவரி 23 அன்று, குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள நூலகத்தில் லார்ட் கர்சன் உரைகள் மற்றும் வில்லியம் ஹோகார்த்தின் அசல் படைப்புகள் புராணங்கள், வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் பல பண்டைய கையெழுத்துப் பிரதிகள் மற்றும் இந்திய இதிகாசங்கள் மற்றும் தத்துவத்தை உள்ளடக்கிய புத்தகங்களுக்கு வழங்கப்பட்டன. இவை தற்போது குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள நூலகமான கிரந்த் குதிர்க்குச் சொந்தமான 11 பாரம்பரிய மொழிகளில் உள்ள 2,300 புத்தகங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளின் ஒரு பகுதியாகும்.


2. கணதந்திர மண்டபமும் அசோக மண்டபமும்: கடந்த ஆண்டு ஜூலை மாதம், குடியரசுத் தலைவர் துரோபதி முர்மு ராஷ்ட்ரபதி பகவானின் இரண்டு முக்கிய மண்டபங்களான டர்பார் ஹால் மற்றும் அசோக் ஹால்களை கணதந்திர மண்டபு மற்றும் அசோக மண்டபம் (Ashok Mandap) என பெயர் மாற்றம் செய்தார். டர்பார் ஹால் தேசிய விருதுகள் வழங்கல் போன்ற முக்கியமான விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கான இடமாக தர்பார் மண்டபம் இருந்தாலும், அசோக மண்டபம் முதலில் ஒரு நடன அரங்கமாக இருந்தது. இப்போது முக்கிய நிகழ்வுகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.


“தர்பார்" என்ற வார்த்தை இந்திய ஆட்சியாளர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் நீதிமன்றங்கள் மற்றும் கூட்டங்களைக் குறிக்கிறது. இந்தியா ஒரு குடியரசாக மாறிய பிறகு, அது பொருத்தமற்றதாகிவிட்டது. "குடியரசு” என்ற கருத்து இந்திய சமூகத்தில் ஆழமான வேர்களைக் கொண்டிருப்பதால், மண்டபத்தை குடியரசு மண்டபம் என்று மறுபெயரிடுவது சரியான நடவடிக்கையாகும்.


— “‘அசோக கூடம்’ என்பதை ‘அசோக் மண்டபம்’ என்று மறுபெயரிடுவது மொழியில் சீரான தன்மையைக் கொண்டுவருகிறது மற்றும் ‘அசோக்’ என்ற வார்த்தையுடன் தொடர்புடைய முக்கிய மதிப்புகளை நிலைநிறுத்துகிறது. அதே நேரத்தில் ஆங்கிலமயமாக்கலின் தடயங்களை நீக்குகிறது” என்று கூறியது.


3. அம்ரித் உத்யான்: ஜனவரி 2024-ல், முகலாய தோட்டங்கள் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, குடியரசுத் தலைவர் மாளிகை அதற்கு 'அம்ரித் உத்யான்' என்ற பொதுப் பெயரை வழங்குவதாக அறிவித்தது. 15 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த மைதானம், ஜம்மு & காஷ்மீரில் முகலாயர்களால் கட்டப்பட்ட தோட்டங்களின் பாணியில் அமைக்கப்பட்டதால் அதன் பெயரைப் பெற்றது.


4. கர்தவ்ய பாதை: 2022-ஆம் ஆண்டில், குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து இந்தியா கேட் வரையிலான பாதை, முன்னர் ராஜ்பத் என்று அழைக்கப்பட்டது, கர்தவ்ய பாதை (Kartavya Path) என மறுபெயரிடப்பட்டது.

 

இந்த நிகழ்வில், பிரதமர் அலுவலகம்: “முந்தைய ராஜ்பாத் அதிகாரத்தின் சின்னமாக இருந்ததைவிட்டு, கார்தவ்ய பாத் பொதுமக்களின் சொந்த உரிமை மற்றும் அதிகாரப்பூர்வ அதிகாரத்தின் உதாரணமாக மாறுவதை இது குறிக்கிறது என்று கூறியது. மேலும், இது காலனித்துவ சிந்தனையின் அனைத்து தடயங்களையும் அகற்றும் அமிர்த காலத்தில் புதிய இந்தியாவிற்கான பிரதமரின் இரண்டாவது, "பஞ்ச பிரான்" திட்டத்தைப் பின்பற்றி இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Original tittle :  Rajagopalachari installed, Lutyens removed -Roshni Yadav

Share: