இந்தியாவின் ஒருங்கிணைந்த PRAHAAR உத்தி ஆவணத்தின் உள்ளடக்கங்கள் -தீப்திமான் திவாரி

இதுவரை, இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு கட்டமைப்பு சட்டங்கள், நிலையான  வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure (SOPs)), அமைச்சரவை முடிவுகள் மற்றும் மாநில அளவிலான ஏற்பாடுகள் என பிளவுப்பட்டு இருக்கிறது. 'புதுமை' என்பது அவற்றை ஒரே, பொது, தேசிய அளவிலான கொள்கை மற்றும் உத்தியில் ஒன்றாக இணைப்பதில் உள்ளது.


உள்துறை அமைச்சகம் (MHA) திங்களன்று இந்தியாவின் முதல் பொதுவில் வெளிப்படுத்தப்பட்ட தேசிய பயங்கரவாத எதிர்ப்பு உத்தி ஆவணமான PRAHAAR-ஐ வெளியிட்டது. 8 பக்கங்களைக் கொண்ட இந்த ஆவணம், பயங்கரவாதத்திற்கான இந்தியாவின் அணுகுமுறை, பல ஆண்டுகளாக ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்திற்கான திட்டங்கள் பற்றிய பரந்த கட்டமைப்பை வகுக்கிறது.


பட்டியலிடப்பட்டுள்ள பல நடவடிக்கைகள் புதியவை அல்ல: அவை சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் மற்றும் பிற பாதுகாப்புச் சட்டங்கள் போன்ற சட்டங்கள் மூலம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன அல்லது அவை உள்துறை அமைச்சகம் மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களின் தொடர்ச்சியான முயற்சிகளை ஒரு கொள்கை அறிக்கையாக  இணைத்துள்ளன.


PRAHAAR எதை கோடிட்டுக் காட்டுகிறது?


PRAHAAR, இந்தியாவின் பயங்கரவாதச் சவால்களை ஒரு விரிவான அச்சுறுத்தல் சூழலில் விளக்குகிறது. இந்த சூழல், பல தசாப்தங்களாக நீடித்துவரும் எல்லைத் தாண்டிய வன்முறைகள், Al-Qaeda மற்றும் ISIS போன்ற உலகளாவிய ஜிஹாதி தீவிரவாத வலையமைப்புகளின் இருப்பு ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ட்ரோன்கள், குறியாக்கப்பட்ட தகவல்தொடர்புகள், டார்க் வெப் தளங்கள், கிரிப்டோ நிதியுதவி, சைபர் தாக்குதல்கள், மற்றும் (வேதியியல், உயிரியல், கதிர்வீச்சு, அணு, வெடிமருந்து, டிஜிட்டல் (Chemical, Biological, Radiological, Nuclear, Explosive, Digital (CBRNED)) பொருட்களை அணுகும் முயற்சிகள் உள்ளிட்ட தொழில்நுட்பத்தின் வேகமான பயன்பாடும் இதில் அடங்கும். அதே நேரத்தில், இது எந்த ஒரு தனிப்பட்ட போர்க்களம் அல்லது பிராந்தியத்தை மட்டும் இலக்காகக் கொள்ளாமல் பரந்த நோக்கத்துடன்  அச்சுறுத்தலை அணுகுகிறது.


இது, ஏழு தூண்களை அடிப்படையாகக் கொண்ட ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை முன்வைக்கிறது. அதன் மையமாக, நுண்ணறிவு சார்ந்த தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நேரடி (real-time) துறைமுகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு அமைந்துள்ளது. இதன் மூலம் பிரச்சாரம், மறைமுக (sleeper) அணிகள், நிதி ஆதரவு மற்றும் ஆயுத வலையமைப்புகளை தடுக்க முயல்கிறது. மேலும், உள்ளூர் காவல்துறையின் தலைமையில், சிறப்பு பயங்கரவாத எதிர்ப்பு படைகளின் ஆதரவுடன், விரைவான மற்றும் அளவான (proportionate) பதிலடி வழங்கும் நடைமுறையையும் இது வலியுறுத்துகிறது. காவல்துறையை நவீனமயமாக்கல் மற்றும் தரநிலைப்படுத்தப்பட்ட பயிற்சியின் மூலம் திறன்களை ஒருங்கிணைத்தல், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீது உறுதியான பற்றுதல், இளைஞர்கள் மற்றும் பெண்களை சிறப்பாகக் கவனத்தில் கொண்டு கட்டமைக்கப்பட்ட மறைமுக தீவிரவாத எதிர்ப்பு (de-radicalisation) மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவையும் இதில் அடங்கும். அதேபோல், நுண்ணறிவுப் பகிர்வு, சட்ட உதவி, குற்றவாளிகள் ஒப்படை (extradition), பல்தரப்பு அறிவிப்புகள் (multilateral designations) ஆகியவற்றின் மூலம் சர்வதேச ஒத்துழைப்பை ஒருங்கிணைத்தல்; குடிமை நிர்வாகம், நிபுணர்கள், தன்னார்வ அமைப்புகள் (NGOs) மற்றும் சமூகங்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய “முழு சமூக அணுகுமுறை” (whole-of-society approach) மூலம் மீட்பு மற்றும் தாங்கு திறனை (resilience) வலுப்படுத்துதல் ஆகியவற்றையும் இது முன்வைக்கிறது. இவை அனைத்தும், எந்த மதத்துடனோ அல்லது அடையாளத்துடனோ பயங்கரவாதத்தை இணைக்காமல், பயங்கரவாதத்திற்கு பூஜ்ய சகிப்புத்தன்மை (zero tolerance) என்ற தெளிவான அரசியல் நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டதாகும்.


இந்தத் திட்டத்தில் புதிதாக என்ன இருக்கிறது?


  • கணிசமாக, பல்துறை ஒருங்கிணைப்பு மையம் (Multi-Agency Centre (MAC))


  • தேசிய பாதுகாப்பு காவல் படை (National Security Guard (NSG))


  • தேசிய பாதுகாப்பு முகமை (National Investigation Agency (NIA))


  • சட்டவிரோத செயல்கள் (தடுப்பு) சட்டம் (Unlawful Activities (Prevention) Act (UAPA))


  • மத்திய ஆயுதப்படை காவல் படைகள் (Central Armed Police Forces (CAPFs))


  • சமூக அணுகுமுறை முயற்சிகள் (Community Outreach Initiatives)


சமூகப்பொருளாதாரத் திட்டங்கள் (Socioeconomic Schemes) ஆகியவை ஏற்கனவே இருந்து செயல்பாட்டில் உள்ளன. இந்த ஆவணம் திடீரென புதிய அமைப்புகளையோ அல்லது புதிய அதிகாரங்களையோ உருவாக்குவதில்லை. ‘புதிய தன்மை’ என்பது, அனைத்தையும் ஒரே பொதுவான, தேசிய மட்டக் கொள்கை மற்றும் ராஜதந்திரரீதியாக ஒருங்கிணைத்து வெளியிட்டதில் உள்ளது.


இதுவரை, இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு கட்டமைப்பு சட்டங்கள், உள் நிலையான வழிகாட்டு நடைமுறைகள், அமைச்சரவை முடிவுகள் மற்றும் மாநில அளவிலான ஏற்பாடுகள் என சிதறிக்கிடந்தது. மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை பெயரிடப்பட்ட தூணாக மாற்றுவது போன்ற முன்னர் மறைமுகமாக இருந்த சில கூறுகளையும் இது உயர்த்துகிறது; பயங்கரவாத எதிர்ப்பை வறுமை ஒழிப்பு, கல்வி, வீட்டுவசதி, வேலைகள், உதவித்தொகைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கான பெண்கள் அதிகாரமளித்தல் ஆகியவற்றுடன் வெளிப்படையாக இணைக்கிறது; இந்தியா பயங்கரவாதத்தை எந்த குறிப்பிட்ட மதம் அல்லது சமூகத்துடனும் தொடர்புபடுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. இது பலதரப்பு மன்றங்களில் இராஜதந்திர நடவடிக்கையைக் கொண்ட ஒரு வழியாகும்.


இது, நாம் ஏற்கனவே செய்து கொண்டு இருக்கும் செயல்பாடுகளை விரிவாக உள்ளடக்கும் ஒரு நோக்கத்தின் வெளிப்பாடாகவே இருக்கும். இருப்பினும், பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் நாம் தீவிரமாக இருக்கிறோம் என்பதற்கான ஒரு தெளிவான செய்தியை பொதுமக்களுக்கும் எதிரிகளுக்கும் வழங்கும் என்று பாதுகாப்பு அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


மேற்கு நாடுகள் எவ்வாறு அணுகியுள்ளன?


அமெரிக்காவும் ஐக்கியராச்சியமும் பயங்கரவாத எதிர்ப்பு உத்தி ஆவணங்களை வெளியிட்டுள்ளன. அப்போதைய டிரம்ப் நிர்வாகம், 2018-ஆம் ஆண்டில் அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு உத்தி (US National Strategy for Counterterrorism (USNSCTT))-ல் பயங்கரவாதம் குறித்த நாட்டின் கொள்கையை விவரித்தது. இது 2020-ஆம் ஆண்டில் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையால் (Department of Homeland Security (DHS)) பயங்கரவாதம் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட வன்முறையை எதிர்ப்பதற்கான கட்டமைப்பால் (Countering Terrorism and Targeted Violence (CTTV)) கூடுதலாக வழங்கப்பட்டது. ஐக்கிய ராச்சியத்தில், ரிஷி சுனக் அரசாங்கம் நாட்டின் 2003-ஆம் ஆண்டு CT உத்தி ஆவணமான CONTEST-ஐ 2023-ஆம் ஆண்டில் புதுப்பித்தது.


பயங்கரவாதிகளின் தாக்கும் திறனைக் குறைத்தல், நிதி மற்றும் தளவாட ஆதரவைத் துண்டித்தல், உள்கட்டமைப்பைப் பாதுகாத்தல் மற்றும் தீவிரமயமாக்கல் மற்றும் ஆட்சேர்ப்பை எதிர்த்தல் போன்ற நோக்களுக்காக உருவாக்கப்பட்ட அனைத்து "அமெரிக்க அதிகாரக் கருவிகளையும்" பயன்படுத்த அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு உத்தி (USNSCT) விரும்புகிறது. பயங்கரவாதிகளை அவர்களின் எல்லை மற்றும் பயண வழித்தடத்தை அழித்தல், நட்பு நாடுகளுடன் நிதி மற்றும் உளவுத்துறை கருவிகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட "முயற்சிகளின்" மூலம் பணிகளை மேற்கொண்டன.


CONTEST 2023-ஐ, பயங்கரவாத எதிர்ப்பு (CT) பணிகளை நான்கு பிரிவுகளாக பிரித்துள்ளது: அதன்படி,


தடுப்பு (Prevent) – மக்கள் பயங்கரவாதிகளாக மாறுவதையும் அல்லது பயங்கரவாதத்தை தடுக்குதல்,


தொடர்தல் / தாக்குதல்களை தடுக்குதல் (Pursue)– தாக்குதல்களை தடுப்பது,


பாதுகாப்பு வலுப்படுத்துதல் (Protect) – பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துதல், தயார்நிலை (Prepare)– தாக்குதல்களின் விளைவுகளை குறைத்தல் போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு செயல்பாட்டு மையம், வலுவான எல்லைக் கட்டுப்பாடுகள், இஸ்லாமிய மற்றும் தீவிர வலதுசாரி பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு சுறுசுறுப்பான பதில்கள் போன்ற கருவிகளைப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கும், சமூகத்திற்கும் இடையிலான கூட்டாண்மைகள்  மூலம் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு பதிலடி தரப்படுகின்றன.


PRAHAAR எவ்வாறு ஒப்பிடுகிறது?


Prahaar போல் இல்லாமல், அமெரிக்கா மற்றும் ஐக்கியராச்சியம் உத்திகள் இரண்டும் அவற்றின் விரிவான பயங்கரவாத எதிர்ப்பு திட்டங்களாகும். Prahaar பக்கங்களைக் கொண்டிருந்தாலும், USNSCT 34 பக்கங்களிலும், CONTEST 78 பக்கங்களிலும் இயங்குகிறது.


விரிவான விவரங்கள் (Granular details): PRAHAAR கொள்கைத் தத்துவங்களை முன்வைக்கிறது — நுண்ணறிவு சார்ந்த காவல்துறை நடவடிக்கைகள், MAC மற்றும் JTFI மூலம் தகவல் பகிர்வு, காவல்துறை மற்றும் சிறப்பு படைகளின் பங்குகள், BPR&D மற்றும் NSG-வழியாக பயிற்சி, சமூக-பொருளாதார திட்டங்கள் இருந்த போதிலும் இவற்றை பொது நோக்கங்கள், துணைத் திட்டங்கள் அல்லது நிறுவனம் சார்ந்த பணிகளாகப் பிரிக்கவில்லை.


அமெரிக்க உத்தி, மாறாக, பெரிய இலக்குகளை முயற்சி வரிசைகளாக (lines of effort) மாற்றி, பின்னர் குறிப்பிட்ட “நாங்கள் செய்வோம்” என்ற நடவடிக்கைகளாக ஆக்குகிறது: உதாரணமாக, பயங்கரவாத நிதியை சீர்குலைப்பதற்கு நிதி கருவிகளையும் உலகளாவிய பணமாக்குதல் தடுப்பு (anti-money laundering) தரநிலைகளையும் பயன்படுத்துதல், எல்லை சோதனை மற்றும் பரிசோதனையை நவீனமயமாக்குதல், மற்றும் வெளிநாட்டு கூட்டாளிகளுடன் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு (CT) திறனை உருவாக்குதல். DHS CTTV பின்னர் நான்கு இலக்குகளை குறிப்பிடுகிறது மற்றும் அச்சுறுத்தல்களை புரிந்துகொள்வது, ஆபத்தான நபர்களை நுழைய விடாமல் தடுப்பது, சமூகங்களில் பயங்கரவாதம் மற்றும் இலக்கு வைத்த வன்முறையை தடுப்பது, மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் சமூக தயார்நிலையை மேம்படுத்துவது ஆகியவற்றுக்கான முன்னுரிமை நடவடிக்கைகளை இணைக்கிறது.


விநியோக இயந்திரங்களை வரையறுப்பதில் ஐக்கியராச்சியத்தின் போட்டி இன்னும் ஒரு படி மேலே செல்கிறது. 2023-ஆம் ஆண்டு புதுப்பிப்பு தரவு மற்றும் நிபுணத்துவத்தை ஒன்றிணைக்க ஒரு பிரத்யேக பயங்கரவாத எதிர்ப்பு செயல்பாட்டு மையம் (Counter‑Terrorism Operations Centre (CTOC)) பற்றி பேசுகிறது. மேலும், உள்ளூர் அரசாங்க ஆவணங்கள் "குழுக்களைப் பாதுகாத்து தயார்படுத்துங்கள்" என்பதற்கான விதிமுறைகளை உருவாக்குகின்றன. அவற்றில் யார் இடம்பெற்றிருக்கிறார்கள், எத்தனை முறை சந்திக்கிறார்கள், என்ன மதிப்பாய்வு செய்கிறார்கள், தேசிய அமைப்பில் எவ்வாறு அறிக்கை செய்கிறார்கள் என்று விரிவாக கண்காணிக்கப்படுகிறது. ஐக்கியரட்சியத்தில் உள்ள ஒரு பள்ளித் தலைமை ஆசிரியர் அல்லது கவுன்சில் அதிகாரிக்கு, தடுப்பு/போட்டி கட்டமைப்பின்கீழ் தெளிவான, எழுதப்பட்ட பங்கு உள்ளது.


மேற்பார்வை மற்றும் அளவீடுகள்: PRAHAAR சட்டத்தின் ஆட்சியை வலியுறுத்துகிறது. ஆனால், பொது அறிக்கையிடல் அல்லது சுயாதீனமான ராஜதந்திர-நிலை மதிப்பாய்வை கணிக்கவில்லை. PRAHAAR செயல்படுத்தல் குறித்த வருடாந்திர பொது அறிக்கையிடலுக்கான உரையில் எந்த உறுதிப்பாடும் இல்லை. அமெரிக்காவில், DHS காங்கிரஸுக்கு வருடாந்திர மதிப்பீடுகள் மற்றும் அளவிடக்கூடிய மேம்பாடுகளுக்கு உறுதியளித்துள்ளது; ஐக்கியராச்சியத்தில், CONTEST திட்டம் துறைமுறை மற்றும் உள்ளூர் பயங்கரவாத எதிர்ப்பு (CT) அமைப்புகளின் வழியாக முறையான அறிக்கையிடல் நடைமுறைகளில் செயல்படுகிறது.


சிறிய கருத்தியல் பரப்பளவு (Narrower Ideological Canvas): PRAHAAR எல்லைத் தாண்டிய மற்றும் ஜிஹாதி பயங்கரவாதத்தை தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், மேற்கத்திய உத்திகள் தீவிர வலதுசாரி மற்றும் கலப்பான தீவிரவாத வடிவங்களையும் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டுகின்றன.


துல்லியமான செயல்முறை விவரங்களை மறைப்பதற்காக, விரிவான திட்டங்கள் திட்டமிட்ட முறையில் தவிர்க்கப்பட்டிருக்கலாம்” என்று பாதுகாப்பு அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


முன்னோக்கிய வழிகள் (The Way Forward)


எந்த உத்தி ஆவணமும், அது அடித்தள மட்டத்திற்கு (கிராம மக்களிடம்) பரவுவதற்கும் அதன் செயலாக்கத்திற்கும் ஏற்பவே மதிப்பு பெறும். பிரஹார் திட்டம் டெல்லிக்கு அப்பால் முக்கியத்துவம் பெற வேண்டுமானால், உள்துறை அமைச்சகம் (MHA) அதைத் தொடர்ந்து தெளிவான, ஒருவேளை மாநில அளவிலான. வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும். இவை ஏழு தூண்களை தினசரி காவல்துறைப் பணிகள், உளவுத் தகவல் பகிர்வு, சிறை மேலாண்மை மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றில் மாற்றி செயல்படுத்த உதவும். மேலும், மாநில ATS அலகுகள் மற்றும் மாவட்ட காவல்துறைக்கு திறன் மேம்பாடு (capacity-building) தேவைப்படும். உள்துறை அமைச்சகத்திற்கு—உள் நடைமுறைகளாக இருந்தாலும்—“முழு சமூகமும்” (whole of society) மற்றும் சமூக-பொருளாதார கூறுகள் பாதுகாப்புத் திட்டமிடலில் ஒருங்கிணைக்கப்படுகின்றனவா என்பதை கண்காணிக்கும் வழிமுறைகள் தேவைப்படும்.


இந்த ராஜதந்திரத்தின் வெற்றி, பதில் சக்கரத்தில் ஒவ்வொரு ஆணியும் எவ்வளவு சிறப்பாக வரையறுக்கப்பட்டுள்ளது மற்றும் அவை எவ்வளவு சிறப்பாக பொருத்தப்பட்டுள்ளன என்பதைப் பொறுத்து இருக்கும். மாநில காவல்துறை முதல் பதிலளிப்பவராக இருந்தால், அதற்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் மாநில-குறிப்பிட்ட படைகள் இருக்க வேண்டும். எந்த கட்டத்தில் தேசிய பாதுகாப்பு காவல் படை (National Security Guard (NSG))  வரும் என்பதையும் குறிப்பிட வேண்டும் என்று இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஒரு முன்னாள் அதிகாரி கூறினார்.


நோக்கத்திற்கும் செயல்படுத்தலுக்கும் இடையிலான இடைவெளியைக் குறிப்பிட்டு, "இந்த ஆவணம் தீவிரமயமாக்கல் பற்றிப் பேசினாலும், அதற்கான தேசியக் கட்டமைப்பு எதுவும் இல்லை. தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் இதில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. ஆனால், அது இன்னும் அதிகரிக்கப்படவில்லை."


தேசிய பாதுகாப்பு முகமையின்  (National Investigation Agency (NIA)) முன்னாள் கூடுதல் இயக்குநர் ஜெனரல், BPR&D DG-ஆக ஓய்வு பெற்ற NIA-ன் முன்னாள் கூடுதல் இயக்குநர் ஜெனரல் NR வாசன், "தேசிய பாதுகாப்பு முகமை இந்தியாவின் FBI என்று கூறப்படுகிறது. ஆனால், கூட்டாட்சி விசாரணை அலுவலகம் போல் இல்லாமல் இதற்கு எந்த உளவுத்துறை சேகரிக்கும் திறன்களும் இல்லை. அந்த வேலை பல்துறை ஒருங்கிணைப்பு மையம் மற்றும் நுண்ணறிவு பிரிவுடன் உள்ளது. எனவே, தேசிய பாதுகாப்பு முகமையின் வெற்றி மற்ற நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பதில் உள்ளது.


மத விவரக்குறிப்பை வெளிப்படையாக நிராகரித்தல், மனித உரிமைகள் மற்றும் சட்ட ஆட்சி (Rule of Law) ஆகியவற்றை பயங்கரவாத எதிர்ப்பின் முக்கிய தூண்களாக முறையாக ஏற்றுக்கொள்வது, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை ஒருங்கிணைக்க முயற்சித்தல் ஆகியவை PRAHAAR-ன் உறுதித்தன்மையாகும். அதன் பலவீனங்கள்: பொது பதிப்பில் செயல்பாட்டு விவரங்கள், மேற்பார்வை மற்றும் அளவுகோல்கள் இல்லாமை, மேலும், தானா மற்றும் மாவட்ட அளவில் பயன்படுத்தப்படும் சொற்களை அன்றாட நடைமுறைகளாக மாற்றுவதில் உள்ள சவால் ஆகும்.

 

Original tittle :  What India’s consolidated PRAHAAR strategy document entails?. -Deeptiman Tiwary

Share: