தற்போதைய செய்தி
இந்திய வரலாற்றை வடிவமைத்த பல வரலாற்று நிகழ்வுகள் ஏப்ரல் மாதத்தில் நிகழ்ந்துள்ளன. பீம்ராவ் அம்பேத்கரின் பிறப்பு முதல் ஜாலியன்வாலா பாக் படுகொலை வரை, இந்த மாதம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளைக் கொண்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
தண்டி யாத்திரை
மார்ச் 12 அன்று சபர்மதி ஆசிரமத்திலிருந்து தொடங்கிய தண்டி யாத்திரை, ஏப்ரல் 5, 1930 அன்று நிறைவடைந்தது. 24 நாட்கள் நீடித்த இந்த யாத்திரை, ஆங்கிலேயரின் உப்பு ஏகபோகத்திற்கு எதிரான ஒரு வரி எதிர்ப்புப் பிரச்சாரமாக அமைந்தது. ஏப்ரல் 6 அன்று உப்புச் சட்டத்தை மீறியதன் மூலம் இந்த யாத்திரை முழுமையாகத் தொடங்கியது.
காந்தியின் அகிம்சை அல்லது சத்தியாகிரகக் கொள்கையின் அடிப்படையில் அமைந்த இந்தப் பேரணி, சட்ட ஒத்துழையாமை இயக்கத்திற்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது.
1882-ஆம் ஆண்டின் உப்புச் சட்டம், உப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஆங்கிலேயர்களுக்கு ஏகபோக உரிமையை வழங்கியது. இந்தியாவின் கடற்கரைப் பகுதிகளில் உப்பு அதிகமாகக் கிடைத்தபோதிலும், இந்தியர்கள் அதை ஆங்கிலேயர்களிடமிருந்து வாங்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள். ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்குவதற்கு ஏதேனும் ஒரு பொருள் இருக்குமானால், அது உப்புதான் என்று காந்தி முடிவு செய்தார்.
காந்தி ஏப்ரல் 5 அன்று தண்டி சென்றடைந்தார். ஏப்ரல் 6 அதிகாலையில், அவர் மற்ற யாத்திரிகர்களுடன் இணைந்து கடலை நோக்கிச் சென்றார். அங்கு ஒரு சிறிய குழியில் கிடந்த இயற்கையான உப்புக்கட்டிகளை அவர் கையில் எடுத்தார். இந்தச்செயல் ஒரு குறியீட்டுச் செயலாக அமைந்தபோதிலும், பத்திரிகைகளால் மிக விரிவாகப் பேசப்பட்டது. மேலும், இந்தியாவின் பிற பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு பிற சட்டமறுப்புப் போராட்டங்களுக்கும் இந்த யாத்திரையே தொடக்கமாகவும் அமைந்தது.
உதாரணமாக, வங்கத்தில், சதீஷ் சந்திர தாஸ்குப்தா தலைமையிலான தன்னார்வலர்கள், உப்பு தயாரிப்பதற்காக சோதேபூர் ஆசிரமத்திலிருந்து மஹிஸ்பதன் கிராமத்திற்கு நடந்து சென்றனர். பம்பாயில் கே.எஃப். நாரிமன் மற்றொரு குழுவினரை ஹாஜி அலி முனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்கள் அருகிலுள்ள ஒரு பூங்காவில் உப்பு தயாரித்தனர். ரயத்வாடி பகுதிகளில், வாடகை செலுத்தாததுடன், கிராமக் காவல்துறை எதிர்ப்பு (anti-chowkidari) வரியும் பின்பற்றப்பட்டது.
வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் (North-West Frontier Province (NWFP)), 'எல்லைப்புற காந்தி' (Frontier Gandhi) எனப் பிரபலமாக அறியப்பட்ட கான் அப்துல் கஃபார் கான், வன்முறையற்ற தன்னார்வலர்களைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினார். இந்தக் குழு இறைவனுக்காக சேவைசெய்யும் சிவப்பு சட்டையணிந்த தன்னார்வலர்கள் (Red Shirts) குழு என்று அழைக்கப்பட்டது. மேலும், அவர்கள் இந்த இயக்கத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மகாத்மா ஜோதிராவ் பூலே
இந்திய அரசு, மகாத்மா ஜோதிபா பூலே அவர்களின் 200-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஏப்ரல் 2026 முதல் ஏப்ரல் 2027 வரை ஒரு ஆண்டு காலத்திற்கு கொண்டாட்டங்களை நடத்தி வருகிறது.
ஃபுலே 1827-ஆம் ஆண்டு ஏப்ரல் 11-ஆம் தேதி பிறந்தார். அவர் தோட்டக்காரர்கள் மற்றும் காய்கறி உழவர்களான மாலி சாதியைச் சேர்ந்தவர். அவருக்கு 1888-ஆம் ஆண்டு மே 11-ஆம் தேதி மகாராஷ்டிர சமூக ஆர்வலர் விதல்ராவ் கிருஷ்ணாஜி வந்தேகர் என்பவரால் மகாத்மா பட்டம் வழங்கப்பட்டது.
மகாராஷ்டிராவில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு சமமான சமூக மற்றும் பொருளாதார நலன்களைப் பெற்றுத் தரும் நோக்கில், பூலே தனது மனைவி சாவித்ரிபாய் பூலே மற்றும் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து உண்மை தேடுவோர் சங்கம் (Satyashodhak Samaj) என்ற அமைப்பை உருவாக்கினார்.
ஃபுலே 1873-ஆம் ஆண்டு “குலாம்கிரி” (Gulamgiri) என்ற நூலை எழுதினார். இதில் இந்தியாவில் ‘தீண்டத்தகாதவர்கள்’ எதிர்கொள்ளும் அவல நிலையை விளக்கியுள்ளார். சாதி எதிர்ப்பு இயக்கங்களின் சொற்களில் ‘தலித்’ (‘தீண்டத்தகாதோர்’ அல்லது ‘தனித்து துண்டிக்கப்பட்ட மக்கள்’) எனும் சொல்லை அவர் பயன்படுத்தியதுடன், ஆரியப் படையெடுப்புக் கோட்பாடு குறித்த தனது சொந்த விளக்கத்தையும் பரப்பினார்.
ஃபுலேவின் பிற முக்கியமான படைப்புகள்: “ஷேத்கார்யாச்சா அஸூத்” (1883), “சர்வஜனீக் சத்யதர்ம புஸ்தக்” மற்றும் “பிரம்னாஞ்சே கசாப்” ஆகியவையாகும்.
3. ஜாலியன்வாலா பாக் படுகொலை
பல வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, ஜாலியன்வாலா படுகொலையானது, இந்தியா தனது ஆங்கிலேய ஆட்சியாளர்களுடன் கொண்டிருந்த உறவில் ஒரு திருப்புமுனையாகவும், அதன் விளைவாக இந்தியாவின் சுதந்திரப் போராட்டப் வரலாற்றில் ஒரு முக்கியத் தருணமாகவும் அமைந்தது.
1919-ஆம் ஆண்டு, ஏப்ரல் 13 அன்று, பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயர், அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் திரண்டிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு தனது படைகளுக்கு உத்தரவிட்டார். சுதந்திரத்திற்காகப் போராடிய இரண்டு தலைவர்களான சத்ய பால் மற்றும் சைஃபுதீன் கிட்ச்லேவ் ஆகியோரின் சிறைவாசம் மற்றும் ரௌலட் சட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காகவும், அது குறித்து விவாதிப்பதற்காகவும் அந்தக் கூட்டம் நடைபெற்றது.
ரௌலட் சட்டம் (Rowlatt Act
ஆங்கிலேய எதிர்ப்புச் சதித்திட்டங்கள் அதிகரித்ததற்குப் பதிலளிக்கும் விதமாக, ஆங்கிலேய அரசாங்கம் 1919-ஆம் ஆண்டின் 'அராஜக மற்றும் புரட்சிகரக் குற்றங்கள் சட்டத்தை' (Anarchical and Revolutionary Crimes Act) இயற்றியது. இது பொதுவாக 'ரௌலட் சட்டம்' என்றழைக்கப்படுகிறது. சர் சிட்னி ரௌலட் தலைமையில் அமைக்கப்பட்ட 'அரசத்துரோகக் குழுவின்' (Sedition Committee) பரிந்துரைகளின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட இந்தச்சட்டம், மக்கள் அமைதியின்மையைக் கட்டுப்படுத்துவதையும், இந்தியர்கள்மீது கூடுதல் ஆதிக்கத்தைச் செலுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.
இந்தச் சட்டம், தீவிரவாதம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே, எந்த இந்திய குடிமகனையும் விசாரணையின்றி இரண்டு ஆண்டுகள் வரை கைது செய்து சிறையில் வைக்க ஆங்கிலேய அரசுக்கு அதிகாரம் வழங்கியது. இந்தச் சட்டம் இந்திய முழுவதும் பரவலான எதிர்ப்பை சந்தித்தது.
நோபல் பரிசு பெற்றவரும் உலகப் பிரமுகருமான ரவீந்திரநாத் தாகூர், தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக தனக்கு வழங்கப்பட்ட 'நைட்' (knighthood) பட்டத்தைத் திருப்பிக் கொடுத்தார். வைசராய் Chelmsford அவர்களை நோக்கி ரவீந்திரநாத் தாகூர், “என் நாட்டு மக்களில், தங்களது பெயரற்ற தன்மை காரணமாக மனிதர்களுக்கு உகந்ததல்லாத அவமானத்தை அனுபவிக்கும் நிலையில் உள்ளவர்களுடன், அனைத்துச் சிறப்புப் பட்டங்களும் நீக்கப்பட்ட நிலையில், நானும் நின்று கொள்ள விரும்புகிறேன்.” என்று குறிப்பிட்டார்.
சில மாதங்களுக்குள் மகாத்மா காந்தி, இந்தியாவின் சுதந்திரத்திற்கான முதல் அகில இந்திய இயக்கமான ஒத்துழையாமை இயக்கமான கிலாபத் இயக்கத்தைத் தொடங்கினார். அந்த ஆண்டு அக்டோபரில் வெளியான ஒரு தலையங்கத்தில் அவர், “எனது நாட்டு மக்களின் சுதந்திரத்தை மதிக்காத எந்த அரசும் மரியாதைக்குரியது அல்ல” என்று ஒரு ‘A Punjab Victim”, Young India, 1919’ கட்டுரையில் குறிப்பிட்டார்.
4. அம்பேத்கர் ஜெயந்தி
பி. ஆர். அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 அன்று அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. 1891-ல் மகர் சாதியில் பிறந்த அம்பேத்கர், தன் வாழ்நாள் முழுவதும் கடுமையான சாதிப் பாகுபாட்டை (caste discrimination) அனுபவித்தார்.
டாக்டர் அம்பேத்கர் தனது வாழ்நாள் முழுவதும் இந்தியாவில் பெண்கள், தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்காகப் போராடி, சமூகப் பாகுபாட்டை ஒழித்து, அதன் மூலம் இந்தியாவின் அனைத்து மக்களுக்கும் சட்டத்தின்முன் அனைவரும் சமம் (Equality Day) என்ற கோட்பாட்டை நிலைநாட்டியதால், இந்த நாள் சமத்துவ தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
1927-ஆம் ஆண்டின் மகத் சத்தியாகிரகம், அம்பேத்கர் தலைமையில் தலித்துகள் நடத்திய முதல் பெரிய கூட்டுப் போராட்டமாகும். இது தலித் இயக்கத்தின் “அடித்தள நிகழ்வாக” (foundational event) கருதப்படுகிறது. சாதி அமைப்பை நிராகரித்து, தங்களின் மனித உரிமைகளை நிலைநாட்டும் உறுதியை அந்தச் சமூகம் கூட்டாக வெளிப்படுத்தியது இதுவே முதல் முறையாகும்.
அம்பேத்கர், அதிகாரமளித்தல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான ஒரு வழியாகக் கல்வியை முன்னிறுத்தினார். மேலும், விளிம்புநிலை சமூகத்தினரிடையே கல்வியைப் பரப்புவதற்காக 1923-ல் பகிஷ்கிரித் ஹிதகர்னி சபாவை (Bahishkrit Hitkarini Sabha) நிறுவினார்.
சாதி அமைப்பை விமர்சித்து, அதை முழுமையாக ஒழிக்க அழைப்பு விடுத்த 'சாதி ஒழிப்பு' (Annihilation of Caste) என்ற நூல், சமூக சமத்துவம் குறித்த அம்பேத்கரின் மிகவும் செல்வாக்கு மிக்க நூல்களில் ஒன்றாகும். அவருடைய மற்ற படைப்புகளில், ‘The Untouchables’ (தீண்டத்தகாதவர்கள்), ‘Who Were the Shudras’ (சூத்திரர்கள் யார்), ‘States and Minorities’ (அரசுகளும் சிறுபான்மையினரும்) மற்றும் ‘Buddha and His Dhamma’ (புத்தரும் அவரது தம்மமும்) ஆகியவை அடங்கும்.
மேலும், ‘Administration and Finance of the East India Company’ (கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகமும் நிதியும்), ‘The Evolution of Provincial Finance in British India’ (ஆங்கிலேய இந்தியாவில் மாகாண நிதியியலின் பரிணாம வளர்ச்சி) மற்றும் ‘The Problem of the Rupee: Its Origin and Its Solution’ (ரூபாயின் பிரச்சினை: அதன் தோற்றமும் தீர்வும்) போன்ற பொருளாதார நூல்களையும் எழுதியுள்ளார்.
5. பானிபட் முதல் போர்
ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிபட், இந்திய வரலாற்றில் மூன்று முக்கியப் போர்கள் நடந்த இடமாகும். முதல் பானிபட் போர், 1526-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி, டெல்லி சுல்தான் இப்ராஹிம் லோதிக்கும் தைமூரியப் படைத்தளபதி ஜஹீருதீன் பாபருக்கும் இடையே நடைபெற்றது.
இது, பானிபட்டின் முதல் ஆட்சியாளரான பாபருக்குப் பிறகு இந்தியாவில் முகலாயப் பேரரசுக்கு அடித்தளமாக இருந்ததுடன், லோடி வம்சத்தின் தலைமையிலான டெல்லி சுல்தானியத்தின் ஆட்சியையும் முடிவுக்குக் கொண்டுவந்தது.
லோதி தோட்டம் (Lodhi Garden)
1936-ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி, சையத் மற்றும் லோதி வம்சப் பிரபுக்கள் பல நூற்றாண்டுகளாகப் புதைக்கப்பட்டிருந்த பண்டைய டெல்லியின் ஒரு பகுதி, லேடி வில்லிங்டன் பூங்கா (Lady Willingdon Park) என்ற பெயரில் முறைப்படி பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, இது லோதி தோட்டம் என்று அழைக்கப்படுகிறது.
தலைநகரின் மையப்பகுதியில் 80 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தோட்டம், முகமது ஷாவின் கல்லறை, படா கும்பாத், ஷிஷ் கும்பாத் மற்றும் சிக்கந்தர் ஷாவின் கல்லறை ஆகிய நான்கு இடைக்கால நினைவுச்சின்னங்களையும், அத்துடன் ஒரு மூங்கில் தோப்பு, ஒரு போன்சாய் பூங்கா, மூன்று குளங்கள் மற்றும் 210 இனங்களைச் சேர்ந்த 5,400-க்கும் மேற்பட்ட மரங்களையும் கொண்டுள்ளது.
NCERT, இந்தப் போரில் துப்பாக்கி மண் (gunpowder), வெளிப்புற துப்பாக்கி பீரங்கிகள் (field artillery) மற்றும் தீக்குச்சித் துப்பாக்கி (matchlock) துப்பாக்கிகள் போன்றவை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன. இவை சமீபத்தில் இந்தியப் போர்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டவை ஆகும்.
1556-ஆம் ஆண்டில் நடந்த இரண்டாம் பானிபட் போரில், ஹேமு ‘விக்ரமாதித்ய’ (Vikramaditya’) மன்னரிடமிருந்து வந்த அச்சுறுத்தலை அக்பர் முறியடித்தபோது, முகலாய ஆட்சி வலுப்பெற்றது.
மூன்றாம் பானிபட் போர் 1761-ல் மராத்தா படைகளுக்கும், படையெடுத்து வந்த ஆப்கானிய தளபதி அகமது ஷா அப்தாலியின் படைகளுக்கும் இடையே நடைபெற்றது. இந்தப்போரில் மராத்தாக்கள் தோற்கடிக்கப்பட்டனர். அவர்களின் 40,000 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே, சமயம் அப்தாலியின் படையில் 20,000 பேர் உயிரிழந்ததாக மதிப்பிடப்படுகிறது.
லோதி தோட்டம்: 90-ஆண்டுகளுக்குப் பிறகு, சுதந்திரம் பெற்றதிலிருந்து லோதி தோட்டம் என்று அழைக்கப்படும் இந்தத் தோட்டம், அமைதியான காலை நடைப்பயிற்சி மேற்கொள்ள விரும்புவோருக்கு ஒரு புகலிடமாக மாறியுள்ளது.
மகாவீர் – ஜைன மதத் தத்துவம் (Mahavir – Jainism philosophy)
1. மார்ச் மாதத்தின் கடைசி நாளில் (மார்ச் 30-31, 2026), ஜைன மதத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான, பகவான் மகாவீரரின் பிறப்பைக் குறிக்கும் ‘மகாவீர் ஜெயந்தி’ அல்லது ‘மகாவீர ஜன்ம கல்யாணக்’ கொண்டாடப்பட்டது. வர்தமானர் (Vardhamana) என்றும் அழைக்கப்படும் பகவான் மகாவீரர், ஜைன மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை நிறுவினார். அவை இன்றும் மில்லியன் கணக்கான பின்பற்றுபவர்களுக்கு வழிகாட்டி வருகின்றன.
2. பகவான் மகாவீரர், கி.மு. 599-ல் பீகாரில் உள்ள குண்டலகிராமத்தில், மன்னர் சித்தார்த்தருக்கும் ராணி திரிசாலைக்கும் மகனாகப் பிறந்தார். அவரது தாயாரான திரிசாலை, லிச்சாவித் தலைவரான சேதகரின் சகோதரி ஆவார். அவர் தனது 30-வது வயதில் அரச பதவியைத் துறந்து, அனைத்து விதமான உலக வாழக்கை முறைகளிலிருந்தும் விலகி 12 ஆண்டுகள் துறவ வாழக்கையைக் கழித்தார்.
3. மகாவீரர், பிற்காலத்தில் ஜைன மதத்தின் அடிப்படைக் கொள்கைகளாக மாறிய தனது அகிம்சை (non-violence), சத்யம் (truth), அஸ்தேயம் (non-stealing), பிரம்மச்சரியம் (chastity), மற்றும் அபரிகிரகம் (non-attachment) ஆகிய தத்துவங்களைப் போதிப்பதற்காக, 30 ஆண்டுகள் இந்தியா முழுவதும் பயணம் செய்தார்.
4. ஜைன மதத்தின் உண்மையின் பன்முகத் தன்மை (anekantavada) மற்றும் சார்பியல் உண்மை கோட்பாடு (syadavada) ஆகியவை, உண்மை என்பது சிக்கலானதும் பல அம்சங்களைக் கொண்டதுமாக இருப்பதால், அதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது என்று வலியுறுத்துகின்றன. இருக்கும் அனைத்திற்கும் மூன்று அம்சங்கள் உள்ளன. அவை பொருள் (dravya), குணம் (guna) மற்றும் காலம் (paryaya) ஆகும்.
5. ஜைன மதத்தின் மூன்று முக்கிய கேட்பாடுகள்: முக்தியின் பாதை, என்பது சரியான நம்பிக்கை ((samyag-darshana)), சரியான அறிவு ((samyag-jnana)) மற்றும் சரியான நடத்தை (samyag-charitra) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Original link: