இந்த மாற்றம் பல வழித்தடத் தடையற்ற போக்குவரத்து (Multi-Lane Free Flow (MLFF)) எனப்படும் சுங்க கட்டண வசூல் முறையை முன்னேற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இந்த முறையில், வாகனங்கள் சுங்க சாவடிகளில் நிற்காமல், வேகமாக செல்ல அனுமதிக்கப்படுகிறது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highway Authority of India (NHAI)), தான் வழங்கிய FASTag-களுடன் துல்லியமான வாகனப் பதிவு எண்கள் (Vehicle Registration Numbers (VRNs)) அல்லது வாகனப் பலகை எண்களை உடனடியாகச் சரிபார்க்குமாறு, FASTag-களை வழங்கும் அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
ஃபாஸ்டேக் வருடிகளால் (Scanner) கண்டறியப்பட்ட வாகனப் பதிவு எண்கள், வாகன உரிமத் தகடுகளில் காட்டப்படும் எண்ணுடன் பொருந்தவில்லை என்ற பல புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறான அல்லது செல்லாத வாகனப் பதிவு எண்களுடன் இணைக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்ட FASTag-குகளைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்குமாறு வங்கிகளுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) உத்தரவிட்டுள்ளது.
சுங்கச்சாவடிகளில் நிற்காமலோ அல்லது வேகம் குறைக்காமலோ, வாகனங்கள் அதிக வேகத்தில் சுங்க சாவடிகளைக் கடந்து செல்ல அனுமதிக்கும் ஒரு மேம்பட்ட வசதியான, பலவழி தடையற்ற போக்குவரத்து (MLFF) சுங்கக் கட்டண முறைக்கான முன்னெடுப்பின் ஒரு பகுதியில் இருந்து வருகிறது. பலவழி தடையற்ற போக்குவரத்து சுங்கக் கட்டண முறைக்கு FASTag உடனான துல்லியமான வாகன வழித்தட (VRN) வரைபடம் மிகவும் முக்கியமானது.
பல வழித்தடத் தடையற்ற போக்குவரத்தின் (Multi-Lane Free Flow (MLFF)) நன்மைகள் என்னென்ன?
தற்போதைய மின்னணு சுங்கக் கட்டண முறையின்கீழ், பயனர் கட்டணத்தைச் செலுத்துவதற்காக வாகனங்கள் சுங்கச் சாவடியில் நிற்க வேண்டும். ஏதேனும், முரண்பாடு ஏற்பட்டால், சுங்கச் சாவடி ஊழியர் விவரங்களைச் சரிபார்த்த பின்னரே, வாகனங்கள் கடந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றன. ஒரு பல வழித்தடத் தடையற்ற போக்குவரத்து அமைப்பானது, பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு இந்த செயல்முறையை சீராக மாற்றும். குறிப்பாக, அதிக நெரிசல் உள்ள சாலைகள் அல்லது நெடுஞ்சாலைகளில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இருப்பினும், பல வழித்தடத் தடையற்ற போக்குவரத்து அல்லது தடையற்ற சுங்கக் கட்டண அமைப்பில் தடுப்புத் ஏதும் இல்லை. உயர் செயல்திறன் கொண்ட ரேடியோ அதிர்வெண் அடையாளக் கருவிகள் மற்றும் தானியங்கி வாகனப் பதிவு எண் அங்கீகாரக் கேமராக்கள் FASTag மற்றும் துல்லியமான வாகனப் பதிவு எண்களைப் சரி பார்த்த பிறகு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தச் முரயில் மனிதத் தலையீடு இல்லாத நிலையில், FASTag உடன் இணைக்கப்பட்ட துல்லியமான வாகனப் பதிவு எண்ணில் ஏற்படும் பொருத்தமின்மையால் பயணிகள் கட்டணம் செலுத்தாமல் கடந்து செல்ல நேரிடலாம்.
பல வழித்தடத் தடையற்ற போக்குவரத்து (Multi-Lane Free Flow (MLFF)) கட்டமைப்பின் கீழ், பயனர் கட்டணத்தைச் செலுத்தாத வாகனங்களுக்கு மின்னணு அறிவிப்புகளை அனுப்புவது உள்ளிட்ட நடவடிக்கைகள், துல்லியமான மற்றும் சரிபார்க்கப்பட்ட வாகன அடையாளத் தரவுகளை அதிகம் சார்ந்துள்ளன.
FASTag வழங்கும் முறையானது வாகன (தேசிய வாகனப் பதிவகம்) தரவுத்தளத்துடன் ஒருங்கிணைக்கப்படுவதற்கு முன்னர் வழங்கப்பட்ட FASTagக-களில், இதுபோன்ற எண்ணிக்கையிலான பொருத்தமின்மைகள் காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அந்தக் காலகட்டத்தில், சரிபார்ப்பு வழிமுறைகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தன. பெரும்பாலும் எழுத்து சார்ந்த செயல்முறைகளையே சார்ந்திருந்தன. இது வாகன அடையாளப் பதிவுகளில் முரண்பாடுகளுக்கு வழிவகுத்தது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority (NHAI)) கூறியது.
பல வழித்தடத் தடையற்ற போக்குவரத்து தொடர்பாக வேறு என்ன நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன?
பல வழித்தடத் தடையற்ற போக்குவரத்து அமைப்பு முழுமையாகச் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பு, தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் (NHAI) சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகமும் (Ministry of Road Transport and Highways (MoRTH)), குறிப்பாகப் பயனர் கட்டணம் தொடர்பான முறைகேடுகளைத் தடுப்பதற்காகத் தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
கடந்த மாதம், சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை (MoRTH) புதிய தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகளை வெளியிட்டது. இந்த விதிகளின்படி, சுங்க கட்டணம் செலுத்தப்படாமல் இருந்தால், பயணிகள் அந்த சுங்கச் சாவடிக்கு ஏற்ப இரண்டு மடங்கு கட்டண தொகையை செலுத்த வேண்டும். ஆனால், 72 மணி நேரத்திற்குள் கட்டணம் செலுத்தப்பட்டால், அசல் கட்டணமே வசூலிக்கப்படும்.
இங்கும், வாகன விவரங்கள், வாகனம் சென்ற தேதி மற்றும் இடம், செலுத்த வேண்டிய சுங்க கட்டணம் ஆகியவற்றுடன் கூடிய ஒரு மின்னணு அறிவிப்பு (e-notice) வெளியிடப்படும். இந்த மின்னணு அறிவிப்பால் அதிருப்தியடையும் வாகன உரிமையாளர் அல்லது ஓட்டுநர், 72 மணிநேரத்திற்குள் அதனை எதிர்த்து முறையிடக்கூடிய ஒரு குறைதீர்க்கும் வழிமுறையையும் இந்தவிதிகள் வழங்குகின்றன. அவ்வாறு செய்யப்பட்ட முறையீட்டை, சுங்கக் கட்டண வசூல் முகமை ஐந்து நாட்களுக்குள் தீர்த்து வைக்கப்படவிட்டால், செலுத்தப்படாத சுங்கக் கட்டணத்திற்கான கோரிக்கை காலாவதியாகிவிடும்.
இந்தியாவில் பல வழித்தடத் தடையற்ற போக்குவரத்து (MLFF) எப்போது, எங்கு செயல்பாட்டுக்கு வரும்?
தடையற்ற சுங்கக் கட்டண முறையைச் செயல்படுத்துவதற்காக, 16 சுங்கச்சாவடிகளுக்கான ஒப்பந்தத்தை சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வழங்கியுள்ளது. சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் நிற்பதைத் தவிர்ப்பதன் மூலம் நெரிசலைக் குறைப்பது, பயண நேரத்தைக் குறைப்பது, எரிபொருள் சிக்கனத்தையும் சுங்க வருவாயை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகவும்.
இந்த சுங்கச்சாவடிகள் ஹரியானாவில் NH-44-ல் உள்ள கரௌண்டா, குஜராத்தில் NH-48-ல் உள்ள சோரியாசி மற்றும் போரியாச்; ராஜஸ்தானில் NH-48-ல் உள்ள தௌலத்புரா, மனோகர்புரா மற்றும் ஷாஜஹான்பூர்; டெல்லியில் UER-II-ல் உள்ள முண்டகா; தமிழ்நாட்டில் NH-48-ல் உள்ள நேமிலி மற்றும் செனசமுத்திரம் மற்றும் NH-45-ல் உள்ள பரனூர்; ஆந்திரப் பிரதேசத்தில் NH-44-ல் உள்ள கசேபள்ளி, அமகத்தாடு மற்றும் மரூர், மகாராஷ்டிராவில் NH-50-ல் உள்ள சாலக்வாடி மற்றும் ஹிவர்காவ்ன் பாவ்ஸா, மற்றும் ஹரியானாவில் NH-19-ல் உள்ள படர்பூர் ஃபரிதாபாத் ஆகியவை ஆகும். மேலும், இந்தியாவில் பல வழித்தடத் தடையற்ற போக்குவரத்து முறையை செயல்படுத்துவதற்காக கூடுதலாக 36 கட்டணச் சாவடிகளுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
குஜராத்தில் உள்ள சோரியாசி சுங்கச் சாவடி, இந்தியாவின் முதல் தடையற்ற சுங்கச் சாவடியாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாலைப் போக்குவரத்து அமைச்சகம், 2025-26 நிதியாண்டில் (டிசம்பர் 2025 வரை), தேசிய நெடுஞ்சாலைக் கட்டணச் சாவடிகளில் FASTag-கள் மூலம் தினசரி சராசரி வசூல் சுமார் ரூ. 186 கோடியாகவும், தினசரி சராசரி மின்னணு சுங்கக் கட்டணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 1.05 கோடியாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளது.
Original link:
NHAI is verifying vehicle registration numbers linked with FASTags. Here is why