கடுமையான வெப்பம் காரணமாக மக்கள் பணிக்குச் செல்லமுடியாதபோது ஏற்படும் வருமான இழப்பை ஈடுசெய்வதற்காக, அரசு தகுந்த நிதி இழப்பீட்டிற்கான முறையான விதிகளை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும்.
இந்தியாவில் நிலவும் கடும் வெப்பமானது, ஒரு பருவகாலப் பிரச்சனையிலிருந்து ஒரு அமைப்புரீதியான தேசிய நெருக்கடியாக மாறி, வலுவான புவியியல் மற்றும் மக்கள்தொகை மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. ஒரு காலத்தில் வெப்ப அலைகள் பெரும்பாலும் வறண்ட வடமேற்கு மற்றும் மத்திய சமவெளிகளுக்குள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டிருந்த வெப்ப அலைகள், இப்போது ஈரப்பதமான கடலோரப் பகுதிகளையும், மிதவெப்ப மண்டலமாகக் கருதப்பட்ட பகுதிகளுக்கும் தொடர்ந்து பரவி வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத வெப்பநிலை பதிவாகியுள்ளது. தற்போது, 57%-க்கும் மேற்பட்ட இந்திய மாவட்டங்கள் வெப்பத்தால் பாதிக்கப்படக்கூடியவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், வெப்பமானது இப்போது நாடு முழுவதும் பாதிப்படைந்திருந்தாலும், அதன் தாக்கம் வர்க்கம், சாதி மற்றும் பாலினம் அடிப்படையில் கடுமையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வசதி படைத்தவர்களுக்கு, வெப்பம் என்பது குளிரூட்டிகள் போன்ற தனிப்பட்ட குளிர்விக்கும் அமைப்புகளைப் பயன்படுத்தி அதைச் சமாளிக்கிறார்கள். ஆனால், ஏறக்குறைய 400 முதல் 490 மில்லியன் முறைசாராத் தொழிலாளர்களுக்கு, இது வாழ்வதற்கான அடிப்படை உரிமையின் அமைப்புரீதியான மீறலாகவும், "வெப்ப அநீதிக்கு" (thermal injustice) ஒரு காரணமாகவும் உள்ளது.
தனியார் உள்கட்டமைப்பு வசதிகள் கொண்டவர்களைப் போலல்லாமல், கட்டுமானத் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள் மற்றும் விநியோக வர்த்தகர்களுக்கு, குளிர்விப்பதற்கான தன்னாட்சி உரிமை இல்லை. ஆய்வுகள் தொடர்ந்து நிரூபிப்பது போல, இதுபோன்ற நபர்களுக்கு வெப்பநிலையில் ஏற்படும் ஒரு சிறிய உயர்வுகூட, உற்பத்தித்திறனில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியையும், அதற்கேற்ற வருமான இழப்பையும் ஏற்படுத்துகிறது. இந்தத் தொழிலாளர்கள் வழக்கமாகத் தங்கள் உயிரியல் வாழ்விற்கும், பொருளாதார வாழ்விற்கும் இடையே ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்.
களப்பணியாளர்களிடமிருந்து கிடைத்த சான்றுகள்
களப்பணியாளர்களிடமிருந்து கிடைத்த சமீபத்திய சான்றுகள், இந்த சமத்துவமின்மையை அடிக்கோடிட்டுக் காட்டும், கடுமையான மற்றும் வேதனையான பாதிப்புகளை வெளிப்படுத்தியுள்ளன. துப்புரவுப் பணியாளர்களும் கழிவு சேகரிப்பாளர்களும், பிரிக்கப்படாத கழிவுகளிலிருந்து வரும் நச்சுப் புகையுடன்கூடிய கடுமையான சுற்றுப்புற வெப்பம், சுற்றியுள்ள பகுதிகளைவிட 5% வரை வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடிய அபாயகரமான நுண்-காலநிலைகளை (micro-climates) உருவாக்குவதாகத் தெரிவிக்கின்றனர். சில தொழிலாளர்கள், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சூடான கழிவுப் பொருட்களைக் கையாள்வதால், தங்கள் கைகளிலும் கால்களிலும் கடுமையான தீக்காயங்களுக்கு ஆளானதாகத் தெரிவித்துள்ளனர். இந்த 'காலநிலை-சாதித் தொடர்பு' (climate-caste nexus), மிகவும் மனிதாபிமானமற்ற பணிகளில் உள்ளவர்கள் அதிகபட்ச வெப்ப அபாயங்களை எதிர்கொள்கின்றனர். அதேநேரத்தில், தற்போதுள்ள ஏற்பு உத்திகளிலிருந்து அவர்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
இந்த பாதிப்புகள் அனைத்துத் துறைகளிலும் காணப்படுகின்றன. பகுதிநேரப் பணி வழங்கும் அமைப்புகள் "நேர அடிப்படையிலான பணிச்சுமை அழுத்தத்தின்" (algorithmic pressure) கீழ் இயங்குகின்றனர். அவர்கள் டெலிவரிகளைத் தாமதப்படுத்தினால், அபராதங்களை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது. இது, கடும் வெப்ப எச்சரிக்கைகளின் போதும் கூட, அவர்களை ஓய்வெடுக்க விடாமல் தடுக்கிறது. கட்டுமானத் தொழிலாளர்கள், உடல் உழைப்பால் உருவாகும் அதிக வளர்சிதை மாற்ற வெப்பத்தை எதிர்கொள்கின்றனர். எஃகு மற்றும் கான்கிரீட்டிலிருந்து வரும் வெப்பம் இந்த வெப்பத்தை மேலும் அதிகரிக்கிறது. தெருவோர வியாபாரிகள், பொருட்கள் கெட்டுப்போவதாலும் வாடிக்கையாளர்கள் பின்வாங்குவதாலும், உடல்நலக் குறைவு மற்றும் அவர்களின் தினசரி வருமான குறைவு என்ற மற்றொரு வகையான இடரை எதிர்கொள்கின்றனர்.
ஒரு கடுமையான சட்ட மற்றும் நிதி இடைவெளி இந்த நெருக்கடியை மேலும் மோசமாக்குகிறது. 1948-ம் ஆண்டின் தொழிற்சாலைகள் சட்டம், உள்ளரங்க "பணி அறைகளில்" உள்ளவர்களை மட்டுமே பாதுகாக்கிறது. அதேசமயம் புதிய தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டம்-2020 (Occupational Safety, Health and Working Conditions Code(OSHWC)), வெளிப்புற வெப்பத்தை முறையாகக் கையாளத் தவறிவிட்டது. இச்சட்டத்தின் 23-வது பிரிவு, காலநிலைக்கான தரநிலைகளை அறிவிக்க அரசாங்கத்திற்கு அனுமதி அளித்தாலும், அவற்றை அது கட்டாயமாக்கவில்லை. இது மத்திய அரசுக்குத் தன்னிச்சையான அதிகாரத்தையும், குறைந்தபட்ச பாதுகாப்புத் தரம் குறித்த உத்தரவாதம் இல்லாத நிலையையும் அளிக்கிறது.
மேலும் நிதிரீதியாக, வெப்ப அலைகள் தற்போது தேசிய அளவில் அறிவிக்கப்பட்ட பேரிடர் பட்டியலில் இல்லாததால், மாநிலங்கள் '10% பொறி' (10% trap) எனப்படும் கட்டுப்பாட்டிற்கு உள்ளாகின்றன. இதனால், அவை தங்கள் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிவாரணப் பணிகளுக்காக ஒரு சிறிய பகுதியை மட்டுமே பயன்படுத்த முடியும்.
இருப்பினும், ஒரு தொழிலாளர்களின் கண்ணோட்டத்தில், இந்தப் பிரச்சினை வெறும் பேரிடர் மேலாண்மை என்பதைவிட, பணியிடப் பாதுகாப்பு சார்ந்ததாகவே உள்ளது.
‘வெப்ப அநீதி’யைக் கையாளுதல்
இந்த இடைவெளிகளைக் குறைப்பதற்கும், விருப்பத்திற்குரிய ஆலோசனைகளிலிருந்து அமல்படுத்தக்கூடிய உரிமைகளுக்கு மாறுவதற்கும், சட்டமன்ற மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்கான ஒரு விரிவான கட்டமைப்பு தேவைப்படுகிறது. 2026-31 காலகட்டத்திற்கான அறிவிக்கப்பட்ட தேசியப் பேரிடர் பட்டியலில் வெப்ப அலைகள் மற்றும் மின்னலைச் சேர்க்க வேண்டும் என்ற 16-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையை முறைப்படி ஏற்றுக்கொள்வதில் இருந்து இது தொடங்க வேண்டும். இத்தகைய நடவடிக்கை, தேசியப் பேரிடர் மீட்பு நிதியிலிருந்து நிதியை விடுவிக்கும், தற்போதைய செலவினக் கட்டுப்பாடுகளைத் தவிர்க்கும், மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கைகளை எளிய ஆலோசனைகளிலிருந்து மாவட்ட நிர்வாகங்களுக்கான கட்டுப்படுத்தும் ஆணைகளாக மாற்றும். அதேநேரத்தில், இரண்டு அமைப்புகளான தொழிலாளர் அமைச்சகமும், இந்திய வானிலை ஆய்வுத் துறையும் வெப்ப அலைகளை அறிவிப்பதற்கான முதன்மை சட்டப்பூர்வத் தூண்டுதலாக, உண்மையான மனித உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் வெப்பநிலை மற்றும் ஒப்பு ஈரப்பதத்தை இணைக்கும் அளவீடான வெப்பக் குறியீட்டிற்கு மாறவேண்டும். வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றின் அபாயகரமான கலவையை எதிர்கொள்ளும் கடலோரப் பகுதிகள், தேசியப் பாதுகாப்பு நெறிமுறைகளில் பாதகமான நிலையில் இல்லை என்பதை உறுதிப்படுத்த இது அவசியமாகும்.
மேலும், பாதுகாக்கப்பட்ட வேலை-ஓய்வு சுழற்சிகள் (protected work-rest cycles) உள்ளிட்ட கட்டாய வெப்பப் பாதுகாப்பு விதிகள் மற்றும் வெப்பம் கடத்தாத தண்ணீர் குடுவைகள் போன்ற சிறப்புத் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை (Personal Protective Equipment (PPE)) வழங்குதல் ஆகியவற்றை, ஒரு முதலாளிகளுக்கான கட்டாயக் கடமைகளாக அறிவிப்பதற்கு, தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நீர் பாதுகாப்புச் சட்டத்தின் (OSHWC) பிரிவு 23-ன்கீழ் அரசாங்கம் தனது அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டும். உச்சநீதிமன்றத்தின் ரஞ்சித்சிங் (2024) தீர்ப்பின் அடிப்படையில், ‘குளிரூட்டும் உரிமை’ என்பது சட்டப்பிரிவின் 21-ன்கீழ் ஒரு அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட வேண்டும். இதன் காரணமாக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் பொருத்தமான குளிரூட்டும் கூடங்களையும் இலவச பொது நீர் விற்பனை நிலையங்களையும் நிறுவ வேண்டியது அவசியமாகிறது.
சுகாதாரம் மற்றும் நிலத்தடி சுரங்கப்பணி போன்ற அதிக அபாயங்களைக் கொண்ட தொழில்களில், நச்சுப் பாதிப்பினால் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்கு, பிரத்யேகமான கட்டுப்படுத்தும் வழிகாட்டுதல்கள் தேவைப்படுகின்றன. தற்காலிகப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, வெப்ப எச்சரிக்கைகளின்போது, டிஜிட்டல் தளங்கள் விநியோக நேரத்திற்கான அபராதங்களை விதிப்பதைச் சட்டப்பூர்வமாகத் தடை செய்ய வேண்டும். இதன்மூலம், தற்போது 'ஒப்பந்தக்காரர்' என்ற தகுதியின் காரணமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஒரு சட்டரீதியான வெப்பப் பாதுகாப்பு நிலையை உறுதி செய்யமுடியும். இறுதியாக, கடுமையான வெப்பம் காரணமாகப் பணிகள் தடைபடும்போது ஏற்படும் வருமான இழப்பை ஈடுசெய்வதற்காக, அரசாங்கம் பொருத்தமான நிதி இழப்பீட்டு விதிகளை அறிமுகப்படுத்த வேண்டும். சுயதொழில் செய்யும் பெண்கள் சங்கத்தால் உருவாக்கப்பட்ட அளவுரு வெப்பக் காப்பீட்டுத் திட்டம் (parametric heat insurance scheme) போன்ற புதுமையான மாதிரிகள், இந்த மாற்றத்திற்கான ஒரு சாத்தியமான வரைபடத்தை வழங்குகின்றன. வெப்பப் பாதுகாப்பு என்பது அரசியலமைப்பு நீதியின் ஒரு சமரசமற்ற கட்டளையாக இருக்கும் சமூக ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய அங்கமாக, வெப்ப நிர்வாகம் மறுவடிவமைக்கப்பட வேண்டும்.
பூமிகா சௌத்ரி ஒரு தன்னார்வல ஆராய்ச்சியாளர் மற்றும் ஆலோசகர் ஆவார். அவர் வணிகம் மற்றும் மனித உரிமைகள், இடம்பெயர்வு, மற்றும் தொழிலாளர் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளில் பணியாற்றுகிறார்.
Original Link: Mapping the legislative vacuum in India’s heat crisis.