பாக்சைட் : அதன் பரவல், பயன்பாடுகள் மற்றும் ஒடிசாவில் பழங்குடியினரின் எதிர்ப்பு. -ரோஷ்னி யாதவ்

ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் பாக்சைட் சுரங்கத் திட்டம் தொடர்பாக ஏற்பட்ட மோதல்கள், இந்தக் கனிமத்தை மீண்டும் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளன. இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் பாக்சைட்டின் கலவை மற்றும் பரவல் என்ன? அலுமினிய உற்பத்தியில் அது என்ன பங்கு வகிக்கிறது? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே உள்ளது.


தற்போதைய செய்தி


சில நாட்களுக்கு முன்னர், ஒடிசாவின் ராயகடா மாவட்டத்திலுள்ள காஷிபூருக்கு அருகே, பழங்குடியின கிராம மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், ஏப்ரல் 7-ஆம் தேதி அன்று 40 காவலர்களும் 25 கிராம மக்களும் காயமடைந்தனர். இந்த வன்முறைக்கு, சிஜிமாலி பாக்சைட் சுரங்கத்திற்குச் செல்லும் 3 கிலோமீட்டர் நீளமுள்ள அணுகுசாலை அமைக்கும் பணி  மேற்கொள்ளப்பட்டதே முக்கிய காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


வனவாசிகளின் சாலைக்கு எதிரான எதிர்ப்பு, 2023ஆம் ஆண்டு சுரங்கம் வேதாந்தா லிமிடெட் நிறுவனத்துக்கு ஏலம் மூலம் ஒப்படைக்கப்பட்டதிலிருந்து, பாக்சைட் திட்டத்திற்கு எதிராக அவர்களின் நீண்டகாலமாக அடங்கியிருந்த அதிருப்தியை பிரதிபலிக்கிறது. இந்த சூழலில், பாக்சைட்டைப் பற்றி – அதன் கலவை, பரவல் மற்றும் பயன்பாடு ஆகியவற்றைப் பார்ப்போம்.


முக்கிய   அம்சங்கள்:


1. பாக்சைட் என்பது ஒரு அலுமினியம் நிறைந்த பாறை ஆகும். இதில் நீரேற்றப்பட்ட அலுமினியம் ஆக்சைடு முக்கிய அங்கமாகவும், இரும்பு ஆக்சைடு, சிலிக்கா மற்றும் டைட்டானியா ஆகியவை சிறிய அங்கங்களாகவும் பல்வேறு விகிதங்களில் உள்ளன.


2. பாக்சைட் தாதுவில் இரும்பு ஆக்சைடு ஹீமடைட் அல்லது கோய்தைட்  வடிவில் காணப்படுகிறது. சிலிகா களிமண் (clay) மற்றும் சுதந்திர குவார்ட்ஸ்   வடிவில் உள்ளது. டைட்டேனியா லீகோக்சீன் அல்லது ரூடைல் வடிவில் காணப்படுகிறது.


3. பாக்சைட் என்பது அலுமினியத்தின் முக்கியத் தாதுவாகும். அலுமினியம், நவீனத் தொழில்துறையில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான இரும்பு அல்லாத உலோகங்களில் ஒன்றாக உள்ளது. மேலும், இது தீக்களிமண் மற்றும் வேதியியல் தொழில்களுக்கு  பயன்படும் ஒரு  முக்கியத்  தாதுவும் ஆகும்.


பாக்சைட்டின் பரவல் (Distribution of Bauxite)


1. இந்திய கனிமங்கள் ஆண்டுப்புத்தகம் 2023-ன் படி, மாநில வாரியாக, நாட்டின் பாக்சைட் வளத்தில் ஒடிசா மட்டும் 41% பங்களிக்கிறது. அதனைத் தொடர்ந்து சத்தீஸ்கர் (20%), ஆந்திரப் பிரதேசம் (12%), குஜராத் (8%), ஜார்க்கண்ட் (6%), மகாராஷ்டிரா (5%) மற்றும் மத்தியப் பிரதேசம் (4%) ஆகிய மாநிலங்கள் உள்ளன.


2. முக்கிய பாக்சைட் வளங்கள் ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கிழக்குக் கடற்கரை பாக்சைட் பகுதிகளில் அதிகமாக உள்ளன. குறிப்பாக, 2022 மற்றும் 23-ஆம் ஆண்டுகளில், ஒடிசா மொத்த உற்பத்தியில் 73% பங்களித்து. ஒடிசா முக்கிய பாக்சைட் உற்பத்தி செய்யும் மாநிலமாக உருவெடுத்தது.

3. இந்திய கனிமங்கள் ஆண்டுப்புத்தகம் 2023-ன் படி, உலக பாக்சைட் இருப்பு 31 பில்லியன் டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. பாக்சைட் இருப்பு கினியா (24%), வியட்நாம் (19%), ஆஸ்திரேலியா (16%), பிரேசில் (9%), ஜமைக்கா (6%), இந்தோனேசியா (3%) மற்றும் சீனா, இந்தியா & ரஷ்யா (தலா 2%) ஆகிய நாடுகளில் அமைந்துள்ளது.


4. BGS உலக கனிம உற்பத்தி, 2018-2022 அறிக்கையின்படி, கினியாவும் ஆஸ்திரேலியாவும் இணைந்து மொத்த உற்பத்தியில்  51% (கினியா 26% மற்றும் ஆஸ்திரேலியா 25%) என்ற அளவில் தங்களது பங்களிப்பை வழங்குகின்றன. இரண்டு நாடுகளும் முன்னணி உற்பத்தியாளர்களாக உள்ளன. இதனைத் தொடர்ந்து சீனா (19%), பிரேசில் (9%), இந்தோனேசியா (7%) மற்றும் இந்தியா (6%) ஆகிய நாடுகள் உள்ளன.

பாக்சைட்டின் பயன்கள்


1. பாக்சைட் முதன்மையாக 'பேயர் செயல்முறை' (Bayer process) வாயிலாக அலுமினாவை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படுகிறது. அலுமினியத் தொழில் துறையானது, குறைந்தது 40% அலுமினியம் ஆக்சைடு (Al2O3) கொண்ட பாக்சைட்டையே பயன்படுத்துகிறது. இருப்பினும், காஸ்டிக் சோடாவில் கரையும் தன்மை மற்றும் சிலிக்கா அற்ற நிலை போன்ற பிற பண்புகளைப் பொறுத்து, ஏற்ற கலவையின் மூலம்  சிறிதளவு தரம் குறைந்த வகைகளும் பயன்படுத்தப்படுகின்றன.


2. எஃகுத் தொழிலில், ஃபுளோரைட்டிற்குப் பதிலாக பாக்சைட் கசடு திருத்தியாகப் (slag corrector) பயன்படுத்தப்படுகிறது.


அலுமினியம்


1. இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் இரும்பு அல்லாத உலோகம் அலுமினியம் ஆகும். இது அதிக கடத்துத்திறன், எளிதில் மறுசுழற்சி செய்யக்கூடிய தன்மை மற்றும் அதிக அளவு எதிர்ப்புத்திறன் போன்ற பல பண்புகளைக் கொண்டிருப்பதால், பரந்த அளவிலான பயன்பாடுகளைச் சாத்தியமாக்குகிறது.


2. பூமியின் மேலோட்டில் மிகவும் அதிகமாகக் காணப்படும் உலோகம் அலுமினியம் ஆகும். (எடையின் அடிப்படையில், இது பூமியின் மேலோட்டில் 8% ஆகும்). மேலும், ஆக்ஸிஜன் மற்றும் சிலிக்கானுக்குப் பிறகு, 3-வது மிகவும் பொதுவான கனிமம் ஆகும்.


3. இந்தியாவில் உள்ள அலுமினியத் தொழில், உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். இந்தியாவின் வளமான பாக்சைட் கனிம வளம், உலகம் முழுவதும் உள்ள மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், இந்தத்துறைக்கு ஒரு போட்டித்  தன்மையை வழங்குகிறது.


4. பாக்சைட் தாதுவிலிருந்து அலுமினா (Alumina) சுத்திகரிக்கப்பட்டு அலுமினியம் தயாரிக்கப் பயன்படுகிறது. அலுமினியம் சோடா கேன்கள் முதல் விமானங்கள் வரை அனைத்தையும் தயாரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.


அலுமினா (Alumina)


பாக்சைட்டிலிருந்து அலுமினா உற்பத்தி செய்யப்படுகிறது. 3 முதல் 3.5 டன் பாக்சைட்டிலிருந்து ஒரு டன் அலுமினாவும், இரண்டு டன் அலுமினாவிலிருந்து சுமார் ஒரு டன் அலுமினியமும் உற்பத்தி செய்யப்படுகின்றன. பூமியில் மிகவும் அதிகமாகக் காணப்படும் உலோகம் மற்றும் மூன்றாவது பொதுவான கனிமம் அலுமினியம் ஆகும்.


பூமியின் மேலோட்டில் எடையின் அடிப்படையில் 8% அலுமினியம் உள்ளது. இதுவே உலகில் மிகவும் அதிகமாகக் காணப்படும் உலோகமாகவும், ஆக்ஸிஜன் மற்றும் சிலிக்கானுக்குப் பிறகு ஒட்டுமொத்தமாக மூன்றாவது மிகவும் பொதுவான தனிமமாகவும் திகழ்கிறது. எஃகுக்கு அடுத்தபடியாக, உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் 2-வது உலோகம் அலுமினியம் ஆகும். மேலும், எஃகு மற்றும்  நெகிழியை விட இது சுற்றுச்சூழலுக்கு  ஏற்றதாகவும் உள்ளது.


6. இது பொதியிடல், வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னணுவியல் மற்றும் போக்குவரத்து போன்ற பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது விண்வெளித் தொழில்துறையிலும், இலகு உலோகம் தேவைப்படும் பிற தொழில்களிலும் பயன்படுத்தப்படுகிறது. மின்சக்திப் பரிமாற்றம், இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் கட்டுமானம் ஆகிய துறைகளில் இது அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.


7. இந்திய கனிமங்கள் ஆண்டுப்புத்தகம் 2023-ன் படி, இந்தியாவில் அலுமினிய நுகர்வை அதிகரிக்கக்கூடிய முக்கியத் துறைகள் ஆட்டோமொபைல், மின்சாரம், மின்னணுவியல், ரயில்வே, விண்வெளி மற்றும் பாதுகாப்பு கட்டுமானம், சூரிய ஆற்றல் மற்றும் அலுமினிய பொதியிடல் ஆகியவை ஆகும்.


8. 2022-ல், சீனா உலகின் மிகப்பெரிய அலுமினிய உற்பத்தியாளராகவும் நுகர்வோராகவும் இருந்தது. இது உலக அலுமினிய உற்பத்தியில் 57% பங்களிப்பையும், உலக நுகர்வில் 55% பங்களிப்பையும் வழங்கியது.


9.  முக்கியமாக, அலுமினியத்துக்கு சில குறைபாடுகளும் உள்ளன. இதன் இழுவை வலிமை மற்றும் இயந்திரப்படுத்தும் திறன் மிதமான அளவில் மட்டுமே உள்ளது. இதனால், பல இறுதி பயன்பாட்டு துறைகளில் இதை நேரடியாக பயன்படுத்துவதில் சில வரம்புகள் உள்ளன. ஆனால், எடை குறைவாகவும் மற்றும் சிறந்த வலிமை கொண்டதனால், எஃகு மற்றும் இரும்பு போன்ற பொருட்களுக்கு இது ஒரு சிறந்த மாற்றாக உள்ளது.


Original Link: Bauxite in Focus— Distribution, uses, and tribal opposition in Odisha.


Share: