நுகர்வோர் விலைக் குறியீட்டின் (Consumer Price Index (CPI)) அடிப்படையில் கணக்கிடப்பட்ட மார்ச் மாத பணவீக்க விகிதம் 3.4%-ஆக உள்ளது. இது பிப்ரவரி மாத 3.21% அளவிலிருந்து சிறிய அதிகரிப்பாகும். நுகர்வோர் விலைக் குறியீடு (CPI), மொத்த விலைக் குறியீட்டிலிருந்து (Wholesale Price Index (WPI)) எவ்வாறு வேறுபடுகிறது? எட்டு முக்கியத் துறைத் தொழில்களின் குறியீடு (Index of Eight Core Sector Industries) பற்றி இங்கே :
தற்போதைய செய்தி :
நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) அடிப்படையில் கணக்கிடப்படும் இந்தியாவின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம், மார்ச் மாதத்தில் 3.4 சதவீதமாக அதிகரித்தது. மேற்கு ஆசியப் போரின் தாக்கம் மிகச் சில குறிப்பிட்ட பகுதிகளிலும், மிகக் குறைந்த அளவிலுமே உணரப்பட்டதே இதற்கு காரணம் என்று, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)) திங்களன்று வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index (CPI)) 3.4% என்ற அளவில் உள்ளது. இது பிப்ரவரி மாதத்தின் 3.21%-ஐ விட சிறிய அதிகரிப்பாகும். இருப்பினும், உணவுப் பணவீக்கம் பிப்ரவரி மாதத்தின் 3.47%-லிருந்து அதிகரித்தது, 3.87% என்ற விகிதத்தில் வேகமாகஅதிகரித்துள்ளது.
முக்கிய அம்சங்கள்:
பணவீக்கம் (Inflation) மற்றும் வாழ்க்கைச் செலவில் அது ஏற்படுத்தும் தாக்கம்
1. பணவீக்கம் (Inflation) என்பது, ஒரு குறிப்பிட்ட காலத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளின் பொதுவான விலை நிலை உயரும் விகிதத்தைக் குறிக்கிறது. இது பணத்தின் வாங்கும் சக்தியையோ அல்லது உண்மையான வருமானத்தையோ குறைக்கிறது. வேறுவிதமாகக் கூறுவதானால், பணவீக்கம் அதிகரிக்கும்போது, ஒவ்வொரு நாணய அலகும் முன்பு இருந்ததைவிடக் குறைவான பொருட்கள் மற்றும் சேவைகளையே வாங்க முடியும்.
2. அதிகரித்து வரும் பணவீக்கம், குடும்பங்களின், குறைந்த வருமானம் அல்லது நிலையான வருமானம் கொண்ட குடும்பங்களின் நிதி நிலைமையைப் பாதிக்கிறது. பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிக்கும்போது, அதே பெயரளவு வருமானத்தில் வாங்கக்கூடிய பொருட்கள் மற்றும் சேவைகளின் அளவு குறைகிறது. இதனால் குடும்பங்களின் வாழ்க்கைச் செலவு பாதிக்கப்படுகிறது.
3. பணவீக்கம் (Inflation) அதிகரிக்கும்போது உண்மையான வட்டி விகிதங்களும் பாதிக்கப்படுகின்றன. உண்மையான வட்டி விகிதம் (Real interest rate) என்பது, பெயரளவு வட்டி விகிதத்திலிருந்து பணவீக்க விகிதத்தை கழித்துப் பெறப்படும் மதிப்பாகும். பெயரளவு வட்டி விகிதம் 10 சதவீதமாகவும், பணவீக்கம் 8 சதவீதமாகவும் இருந்தால், உண்மையான வட்டி 2 சதவீதமாக இருக்கும்.
உண்மையான வட்டி = பெயரளவு வட்டி விகிதம் — பணவீக்க விகிதம்
பணவீக்கம் அதிகரிக்கும்போது உண்மையான வட்டி விகிதம் குறைகிறது. இதனால், பணத்தின் மதிப்பு அதிகரிக்காது என்பதால் மக்கள் சேமிப்பதில் ஆர்வம் குறையக்கூடும்.
நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) மொத்த விலைக் குறியீட்டிலிருந்து (WPI) எவ்வாறு வேறுபடுகிறது?
1. ஒரு குறிப்பிட்ட மாதத்தில் நுகர்வோர் வாங்கும் நூற்றுக்கணக்கான பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளில் ஏற்பட்ட மாற்றம், கடந்த ஆண்டின் அதே மாதத்துடன் ஒப்பிட்டு அளவிடும் நுகர்வோர் விலைக் குறியீட்டின் (Consumer Price Index (CPI)) பணவீக்கம் நாட்டின் முக்கியமான பொருளாதார குறியீடாகத் திகழ்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நிர்ணயிக்கும் வட்டி விகிதங்களின் அளவை இது நேரடியாக பாதிக்கிறது.
பணவீக்கத்தைக் கணக்கிடுவதற்கான சூத்திரம் ((CPI x+1 – CPI x )/CPI x ))*100 ஆகும்.
நுகர்வோர் விலைக் குறியீடு x = தொடக்க/அடிப்படை ஆண்டான x-ல் CPI-இன் மதிப்பு ஆகும்.
2. பிப்ரவரி மாதத்தில், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI), 2012-ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாக மாற்றி, 2024-ஆம் ஆண்டைப் புதுப்பித்த அடிப்படை ஆண்டுடன் புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டை வெளியிட்டது. 2024 தொடர், முன்பு இருந்த 6 பிரிவுகளைக் கொண்ட அமைப்பை மாற்றியுள்ளது. அந்த பழைய பிரிவுகள் பின்வருமாறு: உணவு மற்றும் பானங்கள் பான், புகையிலை மற்றும் மயக்கப்பொருட்கள் உடை மற்றும் காலணி, வீடு, எரிபொருள் மற்றும் ஒளி, பிற கல்வி, சுகாதாரம் போன்ற சேவைகள் ஆகும். இது போன்று இருந்த அமைப்பை தற்போதைய 2024-ஆம் ஆண்டு புதிய தொடர் மாற்றியுள்ளது.
3. நுகர்வோர் விலைக் குறியீடு 2024-ல், 358 பொருட்கள் மற்றும் சேவைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு உள்ளது. இது முந்தைய தொகுப்பைவிட 59 பொருட்கள் மற்றும் சேவைகளைவிட அதிகமான அளவாகும். செலவினமானது படிநிலையின் முதல் மட்டத்தில் 12 பிரிவுகளாகவும், 43 குழுக்களாகவும், 92 வகுப்புகளாகவும், 162 துணை வகைகளாகவும் மற்றும் 358 இனங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புற வீட்டுவசதி செலவினத்தை (rural housing consumption) முழுமையாக சேர்பதற்காக, முதல்முறையாக கிராமப்புற வீட்டு வாடகை இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
4. மொத்த விலைக் குறியீடு (Wholesale Price Index (WPI)): நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) சில்லறை சந்தையில் ஏற்படும் விலை மாற்றங்களை (வரிகள் உட்பட அதிகபட்ச சில்லறை விலைகள் (maximum retail prices(MRP)) அளவிடும் அதே வேளையில், மொத்த விலைக் குறியீடு (WPI) மொத்த சந்தையில் ஏற்படும் விலை மாற்றங்களை அளவிடுகிறது. உதாரணமாக, வெங்காயம் போன்ற ஒரு பொருளின் விலை, அது மொத்த சந்தையிலிருந்து வாங்கப்படுகிறதா அல்லது சில்லறை சந்தையிலிருந்து வாங்கப்படுகிறதா என்பதைப் பொறுத்து மாறுபடும்.
5. நுகர்வோர் விலைக் குறியீட்டு, அடிப்படையிலான பணவீக்கத் தரவுகள் வேளாண்மை மற்றும் கலாச்சார அமைச்சகத்தால் வகைப்படுகின்றன. மேலும், மொத்த விலைக் குறியீட்டு (WPI) அடிப்படையிலான பணவீக்கத் தரவுகள், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையால் (Department for Promotion of Industry and Internal Trade (DPIIT)) ஒருங்கிணைக்கப்படுகின்றன.
6. மொத்த விலைக் குறியீட்டின் (WPI) அடிப்படை ஆண்டு 2011 மற்றும் 2012 ஆகும். மொத்த விலை என்ற கருத்தாக்கம், இதுவரை உள்நாட்டுச் சந்தையில் மேற்கொள்ளப்படும் அனைத்துப் பரிவர்த்தனைகளையும் உள்ளடக்கும் பொதுவான கருத்தைக் கொண்டிருந்தது. மொத்த விலைக் குறியீட்டின் எடைகள், சம்பந்தப்பட்ட பொருட்களின் மதிப்புக் கூட்டல் அல்லது இறுதிப் பயன்பாட்டிற்கான பங்களிப்புடன் நேரடியாக பொருந்தவில்லை. இதில் மொத்தம் 697 பொருட்கள் இடம் பெற்றுள்ளன. இவை பொதுவாக மூன்று முக்கிய கூறுகளாக (components) வகைப்படுத்தப்பட்டுள்ளன.
7. கவனிக்கத் தவறக்கூடாத ஒரு முக்கிய வேறுபாடு என்னவென்றால், சேவைகளின் விலை மாற்றங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ளளதாகும். உதாரணமாக, முடி திருத்துதல் அல்லது வங்கிப் பரிவர்த்தனை போன்றவற்றை — மொத்த விலைக் குறியீடு கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், நுகர்வோர் விலைக் குறியீடு அவற்றை கணக்கில் எடுத்துக்கொள்கிறது.
8. போக்குவரத்து, கல்வி, பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை, தனிநபர் பராமரிப்பு போன்ற சேவைகளின் விலை கணிசமாக உயர்ந்தால், சில்லறைப் பணவீக்கம் அதிகரிக்கும், ஆனால் மொத்த விலைப் பணவீக்கத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
8 முக்கியத் துறைத் தொழில்களின் குறியீடு
1. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின்கீழ் உள்ள பொருளாதார ஆலோசகர் அலுவலகம், 8 முக்கியத் தொழில்களின் குறியீட்டை (Index of Eight Core Industries (ICI)) வெளியிடுகிறது. பிப்ரவரி 2025-ல் இருந்த குறியீட்டுடன் ஒப்பிடும்போது, பிப்ரவரி 2026-ல் இது 2.3 சதவீதம் (தற்காலிகமாக) அதிகரித்துள்ளது. இதன் அடிப்படை ஆண்டு 2011 மற்றும் 2012 ஆகும்.
2. முக்கியத் துறைத் தொழில்களின் குறியீடு ஆனது நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்புப் பொருட்கள், உரங்கள், எஃகு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் ஆகிய 8 முக்கியத் தொழில்களின் உற்பத்தியின் ஒருங்கிணைந்த மற்றும் தனிப்பட்ட செயல்திறனை அளவிடுகிறது.
3. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின்படி, தொழில்துறை உற்பத்தி குறியீட்டில் (Index of Industrial Production (IIP)) சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் எடையில் 8 முக்கியத் தொழில்கள் 40.27 சதவீதத்தைக் கொண்டுள்ளன. பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் 28.04 சதவீதத்துடன் அதிகபட்ச எடையைக் கொண்டுள்ளன.
4. இந்த எட்டு துறைகள் பொருளாதாரம் செயல்பட தேவையான அடிப்படை மற்றும் இடைநிலை (basic & intermediate) துறைகள் ஆகும். அதனால், இந்த துறைகளின் வளர்ச்சியைப் பார்க்கும் போது, நாட்டின் பொருளாதார நிலையை அடிப்படையாக புரிந்துகொள்ளலாம். வேறுவிதமாகக் கூறினால், இந்த 8 தொழில்களும் போதுமான வேகத்தில் வளரவில்லை என்றால், பொருளாதாரத்தின் மற்ற பகுதிகளும் வளராது.
Original Link: CPI vs WPI and Inflation.