பவளப்பாறைகள் (corals) ஏன் இடமாற்றம் செய்யப்படுகின்றன? பவளப் பாறைகளும் அவற்றின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ளுதல். -குஷ்பூ குமாரி

 இந்திய விலங்கியல் ஆய்வு மையம் (Zoological Survey of India (ZSI)), நிக்கோபார் மேற்கு கடற்கரையில் பவளப்பாறை இடமாற்றத்திற்காக நான்கு இடங்களை அடையாளம் கண்டுள்ளது.  பவளப்பாறைகள் இடமாற்றம் என்றால் என்ன, பவளப்பாறைகள் ஏன் பூமியின் மிகவும் மதிப்புமிக்க சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாக விளங்குகின்றன?


தற்போதைய செய்தி :


கிரேட் நிக்கோபார் தீவு (Great Nicobar Island (GNI)) மெகா திட்டத்தின் ஒரு பகுதியாக கலாதியா விரிகுடாவில் (Galathea Bay) முன்மொழியப்பட்டுள்ள சரக்கு பரிமாற்றத் துறைமுகத் திட்டத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அந்த பகுதியில் உள்ள பவளப்பாறைகள் மற்றும் ராட்சத சிப்பிகள் (giant clams) வேறு இடத்திற்கு மாற்றப்படவுள்ளதாக இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனம் (Zoological Survey of India (ZSI)) தெரிவித்துள்ளது.


இருப்பினும், பவளப்பாறை இடமாற்றம் (coral translocation) என்றால் என்ன? பவளப்பாறைகள் ஏன் பூமியின் மிகவும் மதிப்புமிக்க சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன? இந்த கிரேட் நிக்கோபார் தீவு (Great Nicobar Island (GNI)) மெகா திட்டம் என்றால் என்ன?

முக்கிய அம்சங்கள்:


1. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற 4-வது கூட்டத்தின் போது, ​​பல்லுயிர்ச் சூழல் தொடர்பான விவகாரங்களைச் செயல்படுத்தும் பணிகளைக் கண்காணிக்கும் குழுவிடம் இந்திய விலங்கியல் ஆய்வு மையம் (ZSI) ​​இந்தத் தகவலைத் தெரிவித்தது. இந்தக் கூட்டத்தின் குறிப்புகளை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக் கழகம் (Andaman and Nicobar Island Integrated Development Corporation Ltd (ANIIDCO)) ஜூன் 10 அன்றே பொது வெளியில் வெளியிட்டது.


2. கிரேட் நிக்கோபார் தீவுகளின் மேற்குப் பகுதியில் பவளப்பாறைகள் மற்றும் ராட்சத சிப்பிகளை (Giant Clams) இடமாற்றம் செய்வதற்கான நான்கு புதிய இடங்களை இந்திய விலங்கியல் ஆய்வு மையம் அடையாளம் கண்டுள்ளது. மேலும், திட்டப் பணிகள் தொடங்குவதற்கு முன்னதாக, சுற்றுச்சூழல் அனுமதி (Environmental Clearance (EC)) மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல (Coastal Regulation Zone (CRZ)) அனுமதி நிபந்தனைகளின்படி, திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதியிலிருந்து இவற்றை இடமாற்றம் செய்யும் பணிகளை மேற்கொள்ளவுள்ளது.







3. சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்கான நிபந்தனைகளுக்கு ஏற்ப,  சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக, மூன்று தன்னிச்சையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. அவை பின்வருமாறு:


(அ) பல்லுயிர் பெருக்கம் (Biodiversity) தொடர்பான விவகாரங்களை மேற்பார்வையிடும் குழு,


(ஆ) மாசுபாடு (Pollution) தொடர்பான விவகாரங்களை கண்காணித்து மேற்பார்வையிடும் குழு,


(இ) ஷோம்ப்பென் (Shompen) மற்றும் நிகோபாரி (Nicobarese) பழங்குடியின மக்களின் நலன் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளை மேற்பார்வையிடும் குழுக்களாகும்.


4. நிக்கோபார் மெகாபோட் (Nicobar Megapode), லெதர்-பேக் கடல் ஆமைகள், உவர்நீர் முதலைகள், நிக்கோபார் மக்காக் குரங்குகள், ராபர் நண்டுகள், பவளப்பாறை இடமாற்றம் மற்றும் நிக்கோபார்த் தீவில் மட்டுமே காணப்படும் பிற பறவைகள் ஆகியவற்றின்மீது இத்திட்டம் ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் திட்டங்களை மேற்பார்வையிடும் பொறுப்பு, பல்லுயிர் பெருக்கம் தொடர்பான இந்தக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இனங்கள்

பாதுகாப்பு நிலை

நிக்கோபார் மெகாபோட் (Megapodius nicobariensis))

நிக்கோபார் தீவுகளில் மட்டுமே காணப்படும் (Endemic) பறவை இனமாகும்.

பொதுவாக, இது “வெப்பமானிப் பறவை” (thermometer bird) என்று அழைக்கப்படுகிறது

இந்த பறவை இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தின் (International Union for Conservation of Nature (IUCN))  அழிந்து வரக்கூடிய   பறவை  என்ற  பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

தோல்முதுகு கடலாமைகள் (Dermochelys coriacea)

இந்த பறவை இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தின் (International Union for Conservation of Nature (IUCN))  அழிந்து வரக்கூடிய   இனம்  என்ற  பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

அழிந்துவரும் நிலையில் உள்ள காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் குறித்த உடன்படிக்கையின் பின் இணைப்பு I-ல் இடம் பெற்றுள்ளது.

கலத்தியா வளைகுடா, தோல்முதுகு கடல் ஆமைகளுக்கு உலகளவில் முட்டையிடும் மிக முக்கியமான தளங்களில் ஒன்றாகும்.

பெரிய நிக்கோபார் பாம்பு கழுகு

(Spilornis klossi)

உலகின் மிகச் சிறிய கழுகு இனமாகக் கருதப்படுகிறது.

250-க்கும் குறைவான முதிர்ந்த (mature) பறவைகள் மட்டுமே உள்ளன.

இந்த பறவை இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தின் (International Union for Conservation of Nature (IUCN))  அழிந்து வரக்கூடிய பறவை என்ற பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

நிக்கோபார் நீண்ட வால் ‘மக்காக்’ குரங்கு

இந்த பறவை இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தின்  அழிந்து வரக்கூடிய   இனம்  என்ற  பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

அழிந்துவரும் நிலையில் உள்ள காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் குறித்த உடன்படிக்கையின் பின் இணைப்பு II-ல் இடம் பெற்றுள்ளது.

வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-ன் அட்டவணை I-ல் இடம் பெற்றுள்ளது.

நிக்கோபார் கிளி

(Psittacula caniceps)

இந்த பறவை இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தின் (International Union for Conservation of Nature (IUCN))  அழிந்து வரக்கூடிய   பறவை  என்ற  பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தின் பட்டியலில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலையை நெருங்கும் இனமாகும்.

நிக்கோபார் ஸ்காப்ஸ்-ஆந்தை (இன்னொன்று)

அழிந்துவரும் நிலையில் உள்ள காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் குறித்த உடன்படிக்கையின் பின் இணைப்பு II-ல் இடம் பெற்றுள்ளது.

இந்த பறவை இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தின் அழிந்து வரக்கூடிய   பறவை என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ளது.


பவளப்பாறைகள் இடமாற்றம் (coral translocation) பற்றி அறிந்துகொள்வதற்கு முன், பவளப்பாறைகள் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வோம்.


5. பவளப்பாறைகள் என்பது 'நிடாரியா' (Cnidaria) தொகுதியைச் சேர்ந்த விலங்குகள் ஆகும். அவை நிடேரியா எனப்படும் நூற்றுக்கணக்கான முதல் ஆயிரக்கணக்கான உயிரினங்களைக் கொண்டுள்ளன. பாலிப்கள் (polyp) ஒவ்வொன்றும் சில மில்லிமீட்டர் விட்டம் மட்டுமே கொண்டுள்ளது. ஒவ்வொரு பாலிப் (Polyp) உயிரினத்திற்கும் பிளாங்க்டன் மற்றும் சிறிய மீன்கள் போன்ற உணவுகளைப் பிடிப்பதற்கான கொட்டும் தன்மையுள்ள தொடுவிழிகள் (stinging tentacles) உள்ளன. இது, பவளம் என அங்கீகரிக்கப்பட்ட 'காலனி' என்று அழைக்கப்படும், மரபணுரீதியாக ஒத்த நூற்றுக்கணக்கான முதல் ஆயிரக்கணக்கான பாலிப்புகள் கொண்ட குழுக்களாக வாழ்கின்றன.



6. பவளப்பாறைகள் கடின அல்லது மென்மையான பவளப்பாறைகள் என்று வகைப்படுத்தப்படுகின்றன. பவளப்பாறைகளின் சிற்பிகள் கடின பவளங்கள் ஆகும். அவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் சிக்கலான மூன்று பரிமாண கட்டமைப்புகளை உருவாக்குகின்றன.


7. பவளப்பாறையின் அடிப்பகுதியில், calicle எனப்படும் கடினமான, பாதுகாப்பு அளிக்கும் சுண்ணாம்புக்கல் எலும்புக்கூடு உள்ளது. இதுவே பவளப்பாறைகளின் கட்டமைப்பை உருவாக்குகிறது. கடலுக்கு அடியில்  உள்ள ஒரு பாறையில் ஒரு பாலிப் தன்னை இணைத்துக்கொண்டு, பின்னர் பிரிந்து சென்று ஆயிரக்கணக்கான பிரதிகளை (clones) உருவாக்கும்போது பாறைகள் உருவாக்குகின்றன. பாலிப்பின் கூடுகள் (calicles) ஒன்றுடன் ஒன்று இணைந்து, தனியாகச் செயல்படும் ஒரு கூட்டமைப்பை உருவாக்குகின்றன.


8. பவளப்பாறைகளின் வண்ணமயமான தோற்றத்திற்குக் காரணம், பவள செல்களுக்குள் வாழும் மஞ்சள்-பழுப்பு நிறப் பாசி (Zooxanthellae) எனப்படும் நுண்ணிய பாசிகளே ஆகும். இந்தப் பாசிகள் ஒளிச்சேர்க்கை செய்து, பவளப்பாறைகளுக்கு முக்கியமான உணவையும் ஊட்டச்சத்துக்களையும் கொண்டு சேர்க்கின்றன.

பவளப் பாறைகளின் முக்கியத்துவம் என்ன?

  • பவளப் பாறைகள் பெரிய புயல்கள் மற்றும் வெள்ளங்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கின்றன. பவளப் பாறைகள், தாழ்வான முகடு கொண்ட அலைத்தடுப்புகள் போலச் செயல்பட்டு, 97% அலை ஆற்றலை உள்வாங்கிக்கொள்கின்றன.


  • கடலுக்கு அடியில் உயிரினங்கள் வாழும் நகரங்களாக பவளப் பாறைகள் விளங்குகின்றன. ஒரே ஒரு பவளப்பாறை ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களுக்கு வாழ்விடம், உணவு மற்றும் இனப்பெருக்கத் தளமாக உள்ளது.


  • கடலுக்கும் கடற்கரைக்கும் இடையில் ‘அலைத் தடுப்புகளாக’ (wave breaks) செயல்பட்டு, கடல் அரிப்பின் தாக்கத்தைக் குறைக்கின்றன.


  • ஒவ்வொரு ஆண்டும்   $3375 பில்லியன்  மதிப்புள்ள வணிகப் பொருட்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்கிறது.


  • சில மருந்துகளுக்கான புதிய மூலப்பொருள் ஆதாரம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய உள்ளனர். புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை மெதுவாக்கும் என்று நம்பப்படும் எலியூதெரோபின் (Eleutherobin), ஒரு பொதுவான வகை மென்மையான பவளப் பாறையில் காணப்படுகிறது.


  • "கடலின் மழைக்காடுகள்" (rainforests of the sea) என்று அழைக்கப்படும் பவளப் பாறைகள், பூமியில் 45 கோடி ஆண்டுகளாக இருந்து வருகின்றன. ஆஸ்திரேலியாவின் பெரும் பவளப்பாறைத் தொடர், 2,028 கிலோமீட்டர் நீளத்திற்குப் பரந்து, உலகின் மிகப்பெரிய பவளப்பாறைத் தொடராகும்.


இந்தியாவில், 1972-ஆம் ஆண்டின் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் (Wildlife Protection Act (WPA)) அட்டவணை I-ன் கீழ், புலி அல்லது யானையைப் போலவே பவளப்பாறைகளும் பாதுகாக்கப்படுகின்றன.


பவளப் பாறைகள் எவ்வாறு இடமாற்றம் செய்யப்படுகின்றன?


1. இந்திய விலங்கியல் ஆய்வு மையம் (Zoological Survey of India (ZSI)), பவளப்பாறை இடமாற்றத்தைக் கண்காணித்து வருகிறது. பவளப்பாறை மீட்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கட்ச் வளைகுடா பகுதியில் 16,000-க்கும் மேற்பட்ட பவளங்கள் வெற்றிகரமாக புதிய இடங்களுக்கு மாற்றப்பட்டன. 2017-ஆம் ஆண்டு முதல் அந்தமான் தீவுகளில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு திட்டத்தில், ரீஃப்வாட்ச் கடல்சார் பாதுகாப்பு (ReefWatch Marine Conservation) அமைப்பு, மொத்தம் 20 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஒன்பது செயற்கை கட்டமைப்புகளில் பவளப்பாறைகள் பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.


2. சிந்துதுர்க்கில் மூன்றாண்டு காலம் நடைபெற்ற ஒரு திட்டத்தில், பவளப் பாறைகள் வளர்க்கப்பட்டன. இதற்காக, பவளப்பாறைத் துண்டுகள் சேகரிக்கப்பட்டு நைலான் நூல்கள் மூலம் கான்கிரீட் சட்டங்களில் இணைக்கப்பட்டன. பின்னர், அவை பவளப்பாறைகளின் வளர்ச்சிக்கு ஏற்ற ஆழத்தில் கடலில் வைக்கப்பட்டன.


3. பவளப்பாறைகள் அதிக ஆண்டுகள் இருக்க வேண்டுமானால், ஆழம், நீரோட்டம், ஒளி அளவு மற்றும் அழுத்தம் போன்ற சூழலியல் பண்புகளுக்கு ஏற்ப  அவற்றை இடமாற்றம் செய்வது முக்கியமான நடவடிக்கை என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர்.


கிரேட் நிக்கோபார் தீவு (Great Nicobar Island (GNI)) மெகா திட்டம்


1. பிப்ரவரி 2026-ல், அரசின் ரூ. 81,000 கோடி மதிப்பிலான 'கிரேட் நிக்கோபார்'   மெகா உள்கட்டமைப்புத் திட்டத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் (National Green Tribunal (NGT)) அனுமதி அளித்தது. இந்தத்திட்டத்தின் "ராஜதந்திர முக்கியத்துவத்தை" சுட்டிக்காட்டிய தீர்ப்பாயம், இதன் சுற்றுச்சூழல் அனுமதியில் "போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள்" இடம்பெற்றுள்ளதையும் சுட்டிக்காட்டியது.

2. கிரேட் நிக்கோபார் தீவு 910 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்தியாவின் தென்கோடி இடமான இந்திரா முனை இங்கு அமைந்துள்ளது.


3. தீவில் ஒரு பொருளாதார மற்றும் பாதுகாப்பு மையத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. இந்த நோக்கம் நான்கு புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது:


பாதுகாப்பு வசதிகளை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த நகரம் ((Integrated township)


ஒரு சரக்கு மாற்றுத் துறைமுகம்,


ஒரு குடிமை  மற்றும் இராணுவ விமான நிலையம்,


450- மெகாவோல்ட்-ஆம்பியர் (MegaVolt-Ampere (MVA)) திறன் கொண்ட எரிவாயு மற்றும் சூரிய சக்தி அடிப்படையிலான ஆலை போன்றகைளாகும்.


4. தொடக்கத்தில் நிதி ஆயோக்கால் முன்னெடுக்கப்பட்ட இந்தத்திட்டத்தை, தற்போது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக் கழகம் (Andaman and Nicobar Island Integrated Development Corp Ltd (ANIIDCO)) செயல்படுத்தும் முகமையாக உள்ளது.


5. இந்தத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட மொத்தப் பரப்பளவில், 149 சதுர கிலோமீட்டர் ஒருங்கிணைந்த நகரத்திற்கும், 8.45 சதுர கிலோமீட்டர் புதிய விமான நிலையத்திற்கும், 7.66 சதுர கிலோமீட்டர் துறைமுகத்திற்கும் மற்றும் 0.39 சதுர கிலோமீட்டர் மின் உற்பத்தி நிலையத்திற்கும் பயன்படுத்தப்படும். இந்த ஒருங்கிணைந்த நகரத்தில் குடியிருப்பு, வணிகம், சுற்றுலா, தளவாடங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகளும் இருக்கும்.




6. சரக்கு மாற்று துறைமுகமானது (transshipment port), கிரேட் நிக்கோபாரின் தென்முனையில் உள்ள கலாத்தியா வளைகுடாவில் அமையவுள்ளது. இது தோல்முதுகு ஆமைகளின் முட்டையிடும் இடங்கள் அமைந்துள்ள மற்றும் கலாத்தியா ஆறு கடலில் கலக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.


original article : Why are corals being moved? Understanding coral reefs and their importance. -Khushboo Kumari

Share: