காவல்துறை மீது உள்ள நம்பிக்கையின்மை காரணமாக, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் போதுமான அளவில் புகாரளிக்கப்படாமல் உள்ளன.
இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் குறித்த புகார்கள் தொடர்ந்து மிகக் குறைவாகவே பதிவாகி வருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் மீதான அரசின் நடவடிக்கைகளில் கடுமையான அமைப்புரீதியான குறைபாடுகள் தெளிவாக தெரிகின்றன. கடந்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட கோயம்புத்தூர் சூலூர் சம்பவம் உட்பட, 90 சதவீதத்திற்கும் அதிகமான வழக்குகளில், குழந்தைக்கு ஏற்படும் ஆபத்து குடும்பத்தின் நம்பிக்கைக்குரிய வட்டாரத்திலிருந்தே வருகிறது. பொதுமக்களின் கவனம் பெரும்பாலும் வெளிநாபர்கள் மீதே சந்தேப்படுகிறார்கள். இது குடும்பங்களும் சமூகங்களும் ஆபத்தை உரிய நேரத்தில் கண்டறிந்து தடுப்பதற்குப் பெரிதும் உதவுவதில்லை. குறிப்பாக, உள்ளூர் பாதுகாப்புச் சமூக வலை அமைப்புகளில் முழுமையாக இணைக்கப்படாத புலம்பெயர்ந்தோர் மற்றும் தொழிலாளர்கள் அதிக ஆபத்துகளை எதிர்கொள்கின்றனர். இரண்டாவதாக, கைவிடப்பட்ட தொழிற்சாலை வளாகங்கள் மற்றும் முறையாகப் பராமரிக்கப்படாத பொது இடங்கள் குற்றங்கள் நடைபெறும் இடங்களாக மாறக்கூடும். 'பாதுகாப்பான நகரம்' (Safe City) திட்டம் மற்றும் குழந்தைகளுக்கேற்ற நகர்ப்புற மேம்பாட்டுக் கோட்பாடுகள் குறித்த விழிப்புணர்வு இருந்தபோதிலும், நகரங்களை மறுவடிவமைப்பு செய்யும் முயற்சிகள் இன்றும் பெருநகரங்களின் முக்கியமான பகுதிகள் மீதே அதிக கவனம் செலுத்துகின்றன. நொய்யல் ஆறு போன்ற நகர்ப்புற சதுப்பு நிலங்களைச் சீரமைப்பதில் உள்ள சமூகப் பாதுகாப்பு அம்சங்களும் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. அடுத்ததாக, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்ட (Protection of Children from Sexual Offences (POCSO)) வழக்கு விசாரணைகள் சிறப்பு நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை இருந்தபோதிலும், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ நீதிமன்றங்களில் 89% வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், வரலாற்றுரீதியாகக் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் விகிதம் 3% முதல் 30% வரை மட்டுமே இருந்து வருகிறது. இது காவல்துறை மற்றும் நீதித்துறையின் மீதான நம்பிக்கையைச் சிதைக்கிறது. சூலூர் சம்பவம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழிகளை உருவாக்கியிருந்தாலும், அது ஒரு தனிப்பட்ட சம்பவம் மட்டுமே, பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளை பாதுகாக்க தேவையான அமைப்புரீதியான சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளன. 2024-ஆம் ஆண்டில், 70,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்ட 69,191 பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ (POCSO) வழக்குகளை தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau (NCRB)) பதிவு செய்துள்ளது.
பொதுமக்களிடையே நம்பிக்கையின்மை நிலவுவதால், சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளைப் பற்றி புகார் அளிப்பதில் மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். மேலும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காது என்ற அச்சத்தில், காணாமல் போன குழந்தைகளைத் தேட குடும்பத்தினரே நேரடியாக முயற்சி செய்கின்றனர். இதனால் குற்றவாளிகளுக்கு சான்றுகளை மறைக்கவோ அல்லது தப்பிச் செல்லவோ கூடுதல் வாய்ப்பு கிடைக்கிறது. இறுதியில், அரசு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வழங்கத் தவறும்போது, காவல்துறையை மக்கள் ஒரு தடையாகவே கருதுகின்றனர். இதன் விளைவாக குழந்தைகள் மேலும் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகிறது. தண்டனைகளை கடுமையாக்குவது, குறிப்பாக குற்றவாளி குடும்பத்தினர் அல்லது அறிமுகமானவர் ஆக இருக்கும் பெரும்பாலான வழக்குகளில், புகார் அளிப்பதைத் தடுக்கிறது. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தில் 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் செய்யப்பட்ட திருத்தங்களும், ஆழமான ஆய்வுகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இல்லாமல், பொதுமக்களின் கோபம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக கொண்டு வரப்பட்டன. மேலும், அவை பெரும்பாலும் கடுமையான தண்டனைகளை விதிப்பதிலேயே கவனம் செலுத்தின. மீண்டும் மீண்டும் குற்றம் புரிவது குறித்த விரிவான நீண்டகாலத் தரவுகளும், கடுமையான சட்டத் தண்டனைகள் பயனுள்ள தடுப்பு முறைகளாக உள்ளனவா என்பது குறித்த ஆய்வுகளும் போதியளவு நடத்தபடுவதில்லை. தரவு சேகரிப்பு மேம்பட்டிருந்தாலும், குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டவர்களின் நடத்தை தொடர்பான பகுப்பாய்வுகள், கொள்கை மாற்றங்களுக்கு அரிதாகவே வழிவகுக்கின்றன என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு (Ministry of Women and Child Development) அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இறுதியாக, பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையைப் புரிந்து செயல்படும் (trauma-informed) காவல் நடவடிக்கைகள் இல்லாததாலும், சமூக அவப்பெயர் (stigma) தொடர்வதாலும், உண்மையான பாதுகாப்பு ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு இன்னும் கிடைக்கவில்லை. இதன் விளைவாக அவர்கள் புகாரளிக்கப்படாத மற்றும் தண்டிக்கப்படாத வன்முறைகளின் சுழற்சியில் சிக்கிக்கொள்ளும் அபாயகரமான சூழலை எதிர்கொள்கின்றனர்.
original article : Series of gaps: on underreporting of child sexual abuse.