முக்கிய அம்சங்கள்:
— 2025-2026-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் (BE) மத்திய துறைத் திட்டங்களுக்காக அமைச்சகத்திற்கு 92,743 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. நிதி அமைச்சகத்தால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டபடி, டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி நிலவரப்படி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் (MoHUA) செலவினம் 25,878 கோடி ரூபாயாக இருந்தது, இது மத்திய துறைத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் 27.90 சதவீதம் என்று கூறப்படுகிறது.
— தெரு வியாபாரிகளுக்கான சிறு மூலதனக் கடன் திட்டம் (Prime Minister Street Vendor's Atmanirbhar Nidhi (PM-SVANidhi)) மற்றும் மத்திய விஸ்டா மறுசீரமைப்பு உட்பட பொதுப் பிரிவுக் குடியிருப்புத் திட்டங்களுக்கான செலவினங்களைத் தவிர, மற்ற அனைத்துத் திட்டங்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே பயன்படுத்தியுள்ளன என்று தெரியவந்துள்ளது.
— இதுவரை அதிகபட்சமாக, தொடர் விரைவுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக 14,811 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இது அந்தத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் 42.55 சதவீதம் என்று கூறப்படுகிறது.
— தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Mission) மற்றும் பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டம் (Pradhan Mantri Awas Yojana (PMAY)) போன்ற முக்கிய அமைச்சகத் திட்டங்கள் தங்கள் வரவுசெலவுத் திட்டங்களில் இதுவரை 25 சதவீதத்துக்கும் குறைவாகவே பயன்படுத்தியுள்ளன. தூய்மை இந்தியா இயக்கத்தைப் பொறுத்தவரை, 5,000 கோடி ரூபாய் வரவுசெலவுத் திட்டத்தில் 829 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது, இது வெறும் 16.58 சதவீதம் என்று தெரிவிக்கின்றனர்.
— பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் (PMAY), ஒதுக்கப்பட்ட 23,294 கோடி ரூபாய் வரவு செலவுத் திட்டத்தில் 14.75 சதவீதம் அதாவது 3,435 கோடி ரூபாய் மட்டுமே இதுவரை செலவிடப்பட்டுள்ளது. மேலும், வரவு செலவுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள மூன்று திட்டங்களான தேசிய நகர்ப்புற டிஜிட்டல் இயக்கம், நகர்ப்புற சவால் நிதி மற்றும் தொழில்துறை வீட்டுவசதித் திட்டம் ஆகியவை இன்னும் செயல்படுத்தப்படவில்லை, டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி நிலவரப்படி எந்த செலவினங்களும் பதிவு செய்யப்படவில்லை என்று தரவுகள் தெரிவிக்கின்றனர்.
— இந்த ஆண்டு தனது 2025-26 வரவு செலவுத் திட்ட உரையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நகர்ப்புற சவால் நிதி (Urban Challenge Fund) அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
— 15-வது நிதி ஆணையத்தின் ஐந்தாண்டுச் சுழற்சி முடிவடைகிறது, மேலும் 16-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் அடுத்த நிதியாண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. வழிகாட்டுதல்களின்படி, அடுத்த ஐந்தாண்டுச் சுழற்சிக்கு ஒரு அமைச்சகத்தின் சராசரி ஆண்டுச் செலவினத்தைவிட 5.5 மடங்கு வரை நிதி ஒதுக்கீடுகளைப் பரிந்துரைக்க நிதி ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
— நகர்ப்புற சவால் நிதி மூன்று அம்சங்களைக் கையாள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, நகரங்களை உற்பத்தித்திறன் மிக்க மற்றும் திறன்வாய்ந்த பொருளாதார வளர்ச்சி மையங்களாக மாற்றுவது ஆகும் (வளர்ச்சி மையங்களாக நகரங்கள்). இரண்டாவதாக, அவற்றை ஒரு ஆக்கப்பூர்வமான முறையில் மேம்படுத்துவது மற்றும் மறுசீரமைப்பதும் (நகரங்களின் ஆக்கப்பூர்வமான மறுசீரமைப்பு) மற்றும் மூன்றாவதாக, உள்கட்டமைப்பை மேம்படுத்துவது (நீர் மற்றும் சுகாதாரம்) ஆகும்.
— நகரமயமாக்கல் என்பது ஒரு சமூகம் பெரும்பாலும் கிராமப்புறங்களில் இருந்து பெரும்பாலும் நகர்ப்புறங்களாக மாறும்போது நிகழும் ஒரு உருமாற்றச் செயல்முறையாகும். இது ஒரு நாட்டின் மக்கள்தொகையில் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களின் விகிதம் அதிகரிப்பதை உள்ளடக்கியது ஆகும். இது நகரங்கள் மற்றும் பேரூர்களின் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. மேலும், இது நகரங்களின் பரப்பளவு ரீதியான விரிவாக்கத்தை மட்டுமல்லாமல், அவற்றின் சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார மாற்றங்களையும் உள்ளடக்கியது ஆகும்.
— 2021-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா இயக்கம் (நகர்ப்புறம்) 2.0 (Swachh Bharat Mission (SBM-Urban 2.0)) திட்டமானது, குப்பையற்ற நகரங்கள், மனிதக் கழிவுச் சேறு, நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகள், திறன் மேம்பாடு மற்றும் சாம்பல்நீர் மேலாண்மை (Greywater management) ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இத்திட்டம் 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி முதல் 2026-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி வரை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.