தற்போதைய செய்தி
வெனிசுலாவுடனான தனது நீண்டகால மோதலில் ஒரு உச்சகட்ட நடவடிக்கையாக, அமெரிக்கா சனிக்கிழமை அதிகாலையில் கராகஸ் மீது பெரிய அளவிலான இராணுவத் தாக்குதல்களை நடத்தியது. அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸையும் கைது செய்தது. வாஷிங்டன் ஒரு "போதைப்பொருள் பயங்கரவாத ஆட்சி" என்று வர்ணிக்கும் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதையும், எண்ணெய் வளம் நிறைந்த அந்த தென் அமெரிக்க நாட்டில் ஒரு "மாற்றத்தை" ஏற்படுத்துவதையுமே இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டது என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
முக்கிய அம்சங்கள்:
1. தென் அமெரிக்க நாட்டில் தரைவழித் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று டிரம்ப் கூறிய சில வாரங்களுக்குப் பிறகு, சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் குடியேறிகளின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக ஆட்சி மாற்றத்திற்கு அழுத்தம் கொடுப்பேன் என்று அவர் வலியுறுத்திய போதிலும், இது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2. கடந்த மாதம், அவர் சட்டவிரோத fentanyl மற்றும் அதன் முக்கிய இரசாயன மூலப்பொருட்களைப் பேரழிவு ஆயுதங்கள் (weapons of mass destruction (WMD)) என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
Fentanyl நெருக்கடி
1. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, Fentanyl என்பது வலி நிவாரணியாகவும் மயக்க மருந்தாகவும் பயன்படுத்தப்படும் ஒரு சக்திவாய்ந்த செயற்கை ஓபியாய்டு மருந்தாகும். இது morphine-னை விட 50-100 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது.
2. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மெடிசின் வலைத்தளத்தின்படி, "ஓபியம் பாப்பி செடியில் (opium poppy plant) காணப்படும் இயற்கைப் பொருட்களிலிருந்து பெறப்படும் மருந்துகளின் ஒரு வகை ஓபியாய்டுகள் ஆகும். அவை மிகவும் அடிமையாக்கும் தன்மை கொண்டவை மற்றும் மக்களை வலியற்றவர்களாகவும் மகிழ்ச்சியாகவும் உணர வைக்கும். பரிந்துரைக்கப்பட்ட ஓபியாய்டு வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்பவர்கள் அடிமையாகிவிடும் அபாயத்தில் உள்ளனர்.
3. Fentanyl தவிர, சில பொதுவான ஓபியாய்டுகளில் ஆக்ஸிகோடோன், மார்பின், கோடீன் மற்றும் ஹெராயின் ஆகியவை அடங்கும். Fentanyl-ன் பிரச்சனை என்னவென்றால், அது ஹெராயின் அல்லது மார்பினை விட 30 முதல் 100 மடங்கு அதிக சக்தி வாய்ந்ததாகவும், வேகமாக செயல்படுவதாகவும் இருப்பதால், விரைவான மற்றும் அதிக எண்ணிக்கையிலான அதிகப்படியான இறப்புகளுக்கு வழிவகுக்கிறது. அமெரிக்காவில் ஏற்படும் அனைத்து அதிகப்படியான மருந்துப் பயன்பாட்டு மரணங்களிலும் 69 சதவீதத்திற்கும் அதிகமானவை Fentanyl-லால் ஏற்படுகின்றன.
4. இந்தியா Fentanyl-ல் மற்றும் Tramadol போன்ற செயற்கை ஓபியாய்டுகளை உற்பத்தி செய்கிறது. இருப்பினும், சட்டப்பூர்வமான ஃபெண்டானில் ஏற்றுமதிகள் குறித்து கவலை இல்லை. Fentanyl மற்றும் அதன் முன்னோடி இரசாயனங்களான NPP மற்றும் ANPP ஆகியவற்றின் சட்டவிரோத வர்த்தகத்தைத்தான் அமெரிக்கா குறிவைக்கிறது.
எண்ணெய் ஒரு முக்கிய காரணியா?
1. எண்ணெய், மோதல்களுக்குப் புதியதல்ல. ஜனவரி 3ஆம் தேதியன்று வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்ததால் இது முக்கிய காரணியாக வெளிப்பட்டுள்ளது.
2. மதுரோவை அமெரிக்கா கைது உடனேயே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கராகஸின் எண்ணெய் துறையை வாஷிங்டன் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் என்றும், போராடும் வெனிசுலா எண்ணெய் தொழிலை மீட்டெடுக்கவும், நாட்டில் பிளவுபட்டு இருக்கும் எண்ணெய் உள்கட்டமைப்பை சரிசெய்யவும் அமெரிக்க பெரிய நிறுவனங்கள் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் என்றும் கூறினார்.
3. வெனிசுலாவில் உலகிலேயே மிகப்பெரிய எண்ணெய் இருப்பு உள்ளது. இது 300 பில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமாக அல்லது உலகெங்கிலும் நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்புகளில் ஐந்தில் ஒரு பங்கு என மதிப்பிடப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதி அரேபியா, நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்புகளின் அடிப்படையில் வெனிசுலாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. ஆனால், வெனிசுலா ஒரு நாளைக்கு 1 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்கிறது. அதே, சமயம் உலகளாவிய உற்பத்தி ஒரு நாளைக்கு 100 மில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமாக உள்ளது.
4. பாரிய ஆற்றல் வளம் இருந்தபோதிலும், வெனிசுலாவின் எண்ணெய் உற்பத்தி ஒப்பீட்டளவில் மிகக் குறைவாக இருப்பதற்குப் பல காரணிகள் அடங்கிய ஒரு கலவையே காரணமாகும். இதில், வெனிசுலாவில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அந்நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்பில் முதலீடு இல்லாத நிலை ஆகியவற்றுடன், அந்நாட்டின் எரிசக்தி ஏற்றுமதிகளைக் கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் தடைகளும் அடங்கும்.
5. அமெரிக்க அதிபர், முக்கிய அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலாவின் எரிசக்தி உள்கட்டமைப்பை புதுப்பிக்கத் திரும்பும் என்று கூறினார். எந்தவொரு அமெரிக்க இருப்புக்கும் "நிலத்திலிருந்து வெளிவரும் பணம்" மூலம் பணம் செலுத்தப்படும் என்று வாதிட்டார். அவரது கருத்துக்கள், ஈராக் மற்றும் பிற நாடுகளில் அமெரிக்கா மேற்கொண்ட கடந்தகால தலையீடுகளையும், அங்கு எரிசக்தி வளங்கள் மீதான கட்டுப்பாடு பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியதையும் மக்களுக்கு நினைவூட்டின.
6. வெனிசுலா அரசாங்கமும் பல சர்வதேச விமர்சகர்களும் அமெரிக்கா இந்த நடவடிக்கைக்குப் பின்னால் உள்ள உண்மையான நோக்கமாக எண்ணெயைப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டினர்.
மரணம் (தங்க) பிறை மற்றும் மரணம் (தங்க) முக்கோணம்
1. ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தின் (United Nations Office on Drugs and Crime (UNODC)) படி, போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலின் இரண்டு முக்கியப் பகுதிகள் "மரணம் (தங்க) பிறை" மற்றும் "மரணம் (தங்க) முக்கோணம்" ஆகும். மரணம் (தங்க) பிறை என்பது ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் உள்ள சட்டவிரோத அபின் உற்பத்திப் பகுதிகளை உள்ளடக்கியது மற்றும் "மரணம் (தங்க) முக்கோணம்" மியான்மர், தாய்லாந்து மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளை உள்ளடக்கியது.
2. “இந்தியா மரண (தங்க) பிறை மற்றும் மரண (தங்க) முக்கோணத்திற்கு இடையில் இருக்கிறது. இந்த இரண்டு பிராந்தியங்களிலிருந்தும் போதைப்பொருட்கள், குறிப்பாக ஹெராயின் மற்றும் மெத்தாம்பெட்டமைன், நாட்டிற்குள் அதிக அளவு வந்து கொண்டிருக்கின்றன. இந்த போதைப்பொருட்களுக்கான உலகின் தேவையில் 90 சதவீதம் இந்த இரண்டு பிராந்தியங்களிலிருந்தே வருகிறது. இந்தியா ஒரு பெரிய சந்தையாகவும் மற்ற நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்துவதற்கான ஒரு வழித்தடமாகவும் உள்ளது” என்று ராகேஷ் அஸ்தானா எழுதினார்.
3. 2023ஆம் ஆண்டில், ஒன்றிய உள்துறை அமைச்சர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த மாநாட்டில் பேசுகையில், முன்னர் போதைப்பொருள் கடத்தலின் முக்கிய பகுதி தங்க முக்கோணம் மற்றும் தங்க பிறை என்று அழைக்கப்பட்டது. ஆனால், இந்திய அரசாங்கம் சர்வதேச அளவில் இதற்கு மரண முக்கோணம் (Death Triangle) மற்றும் மரண பிறை (Death Crescent) என்று பெயரிடப்பட வேண்டும் என்று முன்மொழிந்துள்ளது. இந்த அணுகுமுறை போதைப்பொருட்களுக்கு எதிரான நமது போராட்டத்தின் திசையையும் தீவிரத்தையும் காட்டுகிறது என்று கூறினார்.
Original Article : Beyond Venezuela’s President Nicolás Maduro’s Capture -Roshni Yadav