முக்கிய அம்சங்கள்:
• நிகழ்நேர மலிவு விலை மற்றும் வர்த்தக தகவல்களை பெறும் மின்னணு தளம் (Electronic Platform for Real-time Access to Affordable Prices and Trading Information ((E-PRAAPTI))) 'செயல்பாடற்ற கணக்குகளைக் கண்காணிக்க உதவும் ஆதார் சார்ந்த அணுகல் இணையதளம்' (EPF Aadhaar-Based Access Portal for Tracking Inoperative Accounts) — எனப் பெயரிடப்படவுள்ள இந்த இணையதளம், அனைவருக்குமான கணக்கு எண் (Universal Account Number (UAN)) இல்லாத மற்றும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளைப் பழைய காகித வடிவத்தில் பராமரித்து வந்த ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி வைத்துள்ள உறுப்பினர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
• பழைய ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளை அடையாளம் காணுதல், கண்காணித்தல், அனைவருக்குமான கணக்கு எண் இணைப்பு மற்றும் செயல்படுத்துதல் ஆகிய செயல்முறைகளை, பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த டிஜிட்டல் தளம் எளிதாக்கும் என்று ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். இந்த இணையதளம், ஆதார் அடிப்படையிலான ஒரு சீரான அங்கீகார வழிமுறையை வழங்கும். இதன்மூலம், உறுப்பினர்கள் தங்கள் பழைய ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளை அவற்றுடன் அனைவருக்குமான கணக்கு எண் இணைக்கப்படாமல் இருந்தாலும் பாதுகாப்பான முறையில் அணுக முடியும். மேலும், வருங்கால வைப்பு நிதி வைத்துள்ள உறுப்பினர்களின் விவரங்களைப் புதுப்பிக்கும் செயல்முறையைத் தொடங்கி, அதைத் தொடர்ந்து அனைவருக்குமான கணக்கு எண்ணை தடையின்றி இணைத்து, கணக்கைச் பயன்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.
உங்களுக்குத் தெரியுமா?
• பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (Employees' Provident Fund Organisation) மொத்தம் 31.83 லட்சம் செயல்படாத கணக்குகள் உள்ளன. இவற்றில் 41% கணக்குகள் 5 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாகவும், 22% கணக்குகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த விதமான செயல்பாடும் இன்றி முடங்கிக் கிடக்கின்றன. மார்ச் மாதம் நடைபெற்ற கூட்டத்தில், இந்தச் சிக்கலைத் தீர்க்கும் வகையில், இது போன்ற செயல்படாத கணக்குகளைத் தானாகவே முடித்துவைக்க (auto-settlement) பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பிற்கு ஒன்றிய அறங்காவலர் வாரியம் (Central Board of Trustees) ஒப்புதல் அளித்தது. இந்தமுயற்சியின் முதற்கட்டமாக, ரூ. 1,000 அல்லது அதற்குக் குறைவான தொகையை உரிமை கோராமல் வைத்துள்ள கணக்குகளில் உள்ள இருப்பானது, கணக்கு வைத்துள்ள நபர்களின் பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கே நேரடியாகச் செலுத்தப்படவுள்ளது.
• செயல்பாடற்ற கணக்குகள் (Inoperative accounts) என்பது, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வட்டி சேர்க்கப்படாத ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்குகளை குறிக்கும். முக்கியமாக, ஊழியர்களின் வருங்கால வைப்பு அமைப்பு (EPFO) உறுப்பினர்கள் 55 வயதிற்கு பிறகு ஓய்வு பெற்றவர்களின் கணக்குகளே இதில் அடங்கும். ஒரு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கு, உறுப்பினர் 55 வயதை அடைந்த பிறகு அல்லது ஓய்வு பெற்ற தேதியிலிருந்து (இரண்டிலும் பின்னர் எது பின்னர் வருகிறதோ அது), தொடர்ந்து 3 ஆண்டுகள் எந்தத் தொகையும் செலுத்தப்படவில்லை என்றால், அந்த கணக்கு செயலற்றதாகக் கருதப்படும். ஆனால், உறுப்பினர் 55 வயதுக்குக் குறைவாக இருந்து, எந்த விதப் பங்களிப்பும் செய்யப்படாமல் இருந்தால், அத்தகைய ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகள் 58 வயது வரை தொடர்ந்து வட்டி தொகையை வழங்கும்.
Original article : What is E-PRAAPTI?