ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவின் உத்திக்கான கோட்பாடு (India’s strategic doctrine) கடுமையாகப் பரிணமித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) நடவடிக்கை, மே 7, 2025 அன்று அதிகாலை 1:05 மணிக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட பயங்கரவாத உள்கட்டமைப்புகளைத் துல்லியமாகவும், அதிகத் தீவிரத்துடனும் அழிப்பதன் மூலம் தொடங்கியது. இந்தத் தாக்குதல், ஏப்ரல் 22, 2025 அன்று எல்லை தாண்டிய பயங்கரவாதிகளால் திட்டமிடப்பட்ட கோழைத்தனமான பஹல்காம் தாக்குதலுக்கு நேரடியான மற்றும் தீர்க்கமான பதிலடியாக அமைந்தது. இந்த நடவடிக்கை, இந்தியாவின் அரசியல் மற்றும் இராணுவச் சிந்தனையிலும் கோட்பாட்டிலும் ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது. மேலும், தேசியப் பாதுகாப்பு குறித்த இந்தியாவின் அணுகுமுறையில் இது ஒரு திருப்புமுனையாக அமைகிறது.
புதிய காலகட்ட இந்தியக் கோட்பாடு
இந்தியாவின் கடந்த காலத்தில், "எதிர்வினை கட்டுப்பாடு" (reactive restraint) என்ற நிலைப்பாடு, "ஆவண அணுகுமுறைக்கு" (dossier approach) ஒரு வலுவான ஆதரவை வழங்கியது. இதில் இந்தியா பெரும்பாலும் இராணுவ நடவடிக்கையைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக ஆதாரங்களை முன்வைப்பதையும் இராஜதந்திர அழுத்தத்தையும் நம்பியிருந்தது. இந்த இராணுவச் செயலற்ற தன்மை பெரும்பாலும் அசாதாரணமான கட்டுப்பாடு என்று விவரிக்கப்பட்டது. மேற்கத்திய நாடுகளால் இந்த அணுகுமுறையை அடிக்கடி ஊக்குவித்தும் பாராட்டியும் வந்தன. அதேநேரத்தில், அணு ஆயுதம் ஏந்திய எதிரி நாட்டில் உள்ள பயங்கரவாத இலக்குகளைத் தாக்குவது குறித்த "ஒருவேளை இப்படி நடந்தால் என்ன?" என்ற விவாதங்களும், இந்தியாவின் முடிவெடுப்பவர்களை வலுவாகப் பாதித்து, இராணுவ நடவடிக்கையை ஊக்கமிழக்கச் செய்தன. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட "சகித்துக்கொள்ள முடியாத நிலை" (zero tolerance) கொள்கையை மேலும் வலுப்படுத்தினார். இந்த அணுகுமுறையின் கீழ், எந்தவொரு எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயலும் இனி ஒரு “போர்ச் செயலாகவே” கருதப்படும்.
இது, செயல்படுவதற்கான உத்திக்கு உறுதியையும், பதிலடி கொடுப்பதில் ஆயுதப் படைகளின் மீதுள்ள முழுமையான நம்பிக்கையையும் கொண்ட ஒரு தலைமையைப் பிரதிபலிக்கிறது. அரசியல்ரீதியான அபாயங்கள் இருந்தபோதிலும், பயங்கரவாதத்தை நேரடியாக எதிர்கொள்வதற்கான இந்த அசாதாரணமான உறுதியும், அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கும், வெளிப்புற அழுத்தங்களுக்கும் அடிபணிய மறுத்த இந்த அணுகுமுறை புதிய சிவப்பு கோடுகளை (new red lines) உருவாக்கியது.
ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கை இந்தியாவின் பாதுகாப்பு பரிணாம வளர்ச்சியிலும் ஒரு புதிய அத்தியாயத்தை வரையறுத்தது. ஒருங்கிணைப்பு மற்றும் மறுசீரமைப்புக்கான மாற்றத்தின் போது, இந்த நடவடிக்கை இந்திய விமானப்படை (IAF), இந்திய கடற்படை மற்றும் இந்திய ராணுவம் ஆகிய முப்படைகளின் கள யதார்த்தங்களைச் சோதித்தது. பஹல்காம் நடவடிக்கைக்குப் பிறகு, படைகள் ஒரு தெளிவான அரசியல் நடவடிக்கையை எதிர்பார்க்கும் வகையில் தயாராக இருந்தன. அந்த நடவடிக்கை, நேரடியான மற்றும் தெளிவான முறையில் வந்ததுடன், படைகள் எதிர்பார்த்ததைவிட வலிமையானதாகவும் இருந்தது. இதில், முப்படைகளுக்கும் செயல்படுத்துவதற்கான முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது.
அதன் விளைவாக, ஒன்பது பயங்கரவாத இலக்குகள்மீது இந்தியா நடத்திய தாக்குதல்கள், முப்படைகளாலும் மிகச் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு, முழு விழிப்புடன் இருந்த பாகிஸ்தானையும் மீறி முழுமையான வெற்றியை அடைந்தன. பாகிஸ்தானில் உள்ள பஹாவல்பூர் மற்றும் முரிட்கே ஆகிய இடங்களை இலக்குகளாகத் தேர்ந்தெடுத்தது பலரால் சாத்தியமற்றது என்று கருதப்பட்ட இலக்குகளை தாக்கியது இந்தியாவின் பாராட்டுக்குரியது. பாகிஸ்தானும் உலகின் பிற நாடுகளும் ஒரு "புதிய இயல்புநிலை" என்பதன் யதார்த்தங்களை உணர்ந்து விழித்துக்கொண்டன. இந்த பயங்கரவாத மையங்களில் ஏற்பட்ட பெரும் அழிவைக் காட்டும் படங்களும் காணொளிகளும் அதிர்ச்சியூட்டின. இந்தத் தாக்குதல்களின் தன்மையும் வெற்றியும் குறிப்பிடத்தக்கவையாக இருந்தன.
அடுத்த இரண்டு நாட்களில், மிகவும் துல்லியமாகத் திட்டமிடப்பட்ட மற்றும் புத்திசாலித்தனமான இந்தியப் பதிலடி, அமைதியாகவும் ஆனால் உறுதியாகவும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டது. பாகிஸ்தான் இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டைத் தெளிவாகத் தவறாகப் புரிந்துகொண்டது. மே 9 மற்றும் 10 தேதிகளில், பாகிஸ்தான் விமானப்படை இந்தியாவின் சில முக்கிய, உயர் மதிப்புள்ள சொத்துக்களைத் தாக்க முயன்றபோது, இந்திய விமானப்படை கிட்டத்தட்ட நிகழ்நேரத்தில், பாகிஸ்தான் முழுவதும் உள்ள நூர் கான், சர்கோதா, முரிட் மற்றும் போலாரி உள்ளிட்ட 11 தளங்களைத் தாக்கும் தொடர் வான்வழித் தாக்குதல்கள் மூலம் அதை முறியடித்தது. இந்தத் தாக்குதல்களின் துல்லியத்தின் அளவையோ அல்லது அதனால் ஏற்பட்ட சேதத்தின் அளவையோ பாகிஸ்தான் கற்பனை செய்திருக்க முடியாது. அணு ஆயுதம் ஏந்திய ஒரு நாட்டிற்கு எதிராக இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளிலேயே இது மிகவும் தீர்க்கமான மற்றும் துல்லியமான நடவடிக்கைகளில் ஒன்றாகும் என உலகளாவிய பாதுகாப்பு பகுப்பாய்வு சமூகம் தற்போது அங்கீகரித்துள்ளது.
இராணுவத்தின் துணிச்சலுக்கு இதுவே உச்சநிலை.
பதற்றம் அதிகரிப்பதற்கான அபாயத்தின்மீது இது சிறந்த கட்டுப்படுத்தும் இந்த முழுமையான, ஒருங்கிணைந்த மற்றும் கவனமாக அளவிடப்பட்ட பதிலடி, இந்தியாவின் குடிமை மற்றும் இராணுவ அமைப்புகளுக்கு இடையேயான தடையற்ற ஒருங்கிணைப்பைப் பிரதிபலிக்கிறது. பொதுவான கருத்துப்படி, இந்தியாவின் சாதனைகள் இதைவிடச் சிறப்பாக இருந்திருக்க முடியாது. 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கி 88 மணி நேரத்திற்குப் பிறகு, மே 10-ம் தேதி நண்பகலில், இந்திய விமானப்படையால் 11 தளங்களில் ஏற்படுத்தப்பட்ட பெரும் அழிவினால் பாகிஸ்தான் நிலைகுலைந்து போயிருந்தது. அதே நேரத்தில், நடவடிக்கைக்காகத் தயாராக இருந்த இந்தியக் கடற்படையின் நிலைநிறுத்தங்களைக் கராச்சி பதற்றத்துடன் கண்காணித்துக் கொண்டிருந்தது. அதே நேரத்தில், கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லை நெடுகிலும் இந்திய இராணுவத்தின் தீவிரமான நடவடிக்கைகள், ஆளில்லா விமானத் தாக்குதல்களைச் சாத்தியமற்றதாக்கியிருந்தன. எஸ்-400 ஏவுகணை அமைப்பு உட்பட, வலுவான, வலையமைக்கப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பு, இந்தியப் பகுதிக்கு மேலாக மட்டுமல்லாமல் பாகிஸ்தானின் உட்பகுதி வரையிலும் வான்வெளியை முற்றிலுமாகத் தடுத்திருந்தது. இந்தச் சூழ்நிலை காரணமாக, பாகிஸ்தானுக்கு விரைவாகப் போர்நிறுத்தம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை.
அணு ஆயுத அச்சுறுத்தலின்கீழ் பதற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் உள்ள சிக்கலான தன்மைகளையும் அதன் நுணுக்கங்களையும் கருத்தில் கொண்டால், மே 10 அன்று மேற்கொண்ட தீவிரமான இலக்குத் தாக்குதலுக்கும், பதற்றம் அதிகரித்த வாய்ப்பைத் திறமையாகப் பயன்படுத்தி, போர் நிறுத்தத்தை வலுக்கட்டாயமாக முடிவுக்குக் கொண்டு வந்ததற்கும் இந்தியப் பாதுகாப்புப் படைத் தலைமைத் தளபதியும், முப்படைகளின் தளபதிகளும் பெரும் பாராட்டுக்குரியவர்கள் ஆவர். இது இராணுவத்தின் மிக உயர்ந்த அளவிலான துணிச்சலும் தைரியமும் ஆகும்.
இந்திய ஆயுதப் படைகள், அரசியல் தலைமையின் அறிவுறுத்தல்களை முழுமையாக நிறைவேற்றின. இதன் மூலம், விரைவான மற்றும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாட்டின் திறன் குறித்து எந்த சந்தேகத்தையும் விட்டுவைக்கவில்லை. மே 10 அன்று இந்தியாவின் நடவடிக்கைகளின் அளவையும் வேகத்தையும் நாடு முழுவதும் உள்ள மக்கள் வியப்புடன் பார்த்தனர்.
போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பு, பொதுமக்களுக்கு திடீரென அறிவிக்கப்பட்ட ஒன்று. மேலும், போர் நிறுத்தத்தைக் கோரிய மக்களை பொதுவாக குறை கூற இயலாது. இந்த நிகழ்வுகளை உணர்ச்சிப்பூர்வமாகப் பார்க்கக்கூடாது. அனைத்து நோக்கங்களும் திட்டமிடப்பட்ட செயல் வரம்பும் மே 10-ஆம் தேதிக்குள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முடிவு மிகச் சரியான நேரத்தில் எடுக்கப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறுவது ஒரு வலுவான உத்திசார் நடவடிக்கையைக் கொண்டுள்ளது. அதன் முக்கிய அறிவிப்பானது, பயங்கரவாதிகள் தலைமறைவாக இருக்கவும், அவர்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் தங்கள் நடவடிக்கைகளைக் கைவிடவும் வேண்டும் என்பதே இதன் முதன்மை செயதியாக உள்ளது. இந்தச் செய்தி பாகிஸ்தான் குடிமக்களுக்கும் பொருந்தும். இது அவர்களின் இராணுவத் தலைமையின் ஒரு பிரிவினரின் பொறுப்பற்ற செயல்களுக்கு கடுமையான மற்றும் தொடர்ச்சியான நினைவூட்டலாக அமைகிறது. இன்று உலகளாவிய டிஜிட்டல் வெளிப்படைத்தன்மை மற்றும் நிபுணத்துவ உத்திசார் பகுப்பாய்வு காலகட்டத்தில், இந்த நிகழ்வுகளின் உண்மையை அவர்களின் மக்களிடமிருந்து நீண்டகாலத்திற்கு மறைக்க முடியாது. அரசியல் என்னும் போர்வையில் மறைக்கப்பட்ட ஒரு இராணுவ ஆட்சியின் யதார்த்தங்களை அவர்கள் இப்போது எதிர்கொள்ள வேண்டும். மேலும், "ஆட்சி" மாற்றம் என்ற கருத்து இப்போது பொது விவாதத்திலும் சிந்தனையிலும் இடம்பெற வேண்டும்.
உள்நாட்டுப் பாதுகாப்பு வளர்ச்சியை விரைவுபடுத்துதல்
தொடர்ந்து நடைபெற்று வரும் நடவடிக்கைகள் இந்தியாவிற்கும் முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. பாதுகாப்புப் படைகள் எந்த நேரத்திலும் செயல்படுவதற்கு மிகவும் தயாராக இருக்க வேண்டும். 'ஆபரேஷன் சிந்தூர்' (Operation Sindoor) நடவடிக்கையின் தொடக்கச் சுற்றுக்குப் பிறகு, எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன. இந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய ஆயுதப் படைகள் ஏற்கனவே தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன என்று நாம் நம்புவோம். ”தன்னிறைவு இந்தியாவை” (Atmanirbharata) அடைவதற்காக, பாதுகாப்புத் தொழில் துறை உண்மையான அளவில் தனது செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்பது சமமான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தாக்கமாகும். பெரிய அளவில் "புத்தாக்கம், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி" செய்வதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
பாதுகாப்பு, வானூர்தியியல், விண்வெளி, சைபர் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் உள்ள பொது மற்றும் தனியார் தொழில்துறைகளுக்குப் புத்துயிர் அளிக்கும் சீர்திருத்தங்களில் அரசாங்கம் வலுவாகக் கவனம் செலுத்தியுள்ளது. 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது உள்நாட்டு அமைப்புகளின் சிறப்பான செயல்பாடு, இந்தியாவின் புத்தாக்கம் மற்றும் புத்தொழில் நிறுவனச் சூழலுக்குப் புத்துயிர் அளித்துள்ளது. "மாற்றத்தின் முகவராக" மாறுவதற்கான முக்கியப் பொறுப்பு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆய்வகங்கள், பாதுகாப்புப் பொதுத்துறை நிறுவனங்கள் ஓரளவிற்கு, இந்த அமைப்பில் உள்ள பெரிய தொழில் நிறுவனங்களிடமே உள்ளது. இந்த அமைப்புகளுக்கு இனி நடவடிக்கையைத் தாமதப்படுத்தும் வாய்ப்பில்லாமல், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட முழு தனியார் துறையையும், ஒரு 'தேசியம் தழுவிய' அணுகுமுறையின் மூலம் ஒரு உள்நாட்டுச் சூழலமைப்பில் உண்மையாக ஒருங்கிணைப்பதில் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும். நிர்வாகம் மற்றும் சீர்திருத்தங்களின் இந்த முக்கியமான காலகட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய அவசரத் தேவை உள்ளது. மேலும், கணிக்க முடியாத புவிசார் அரசியல் சூழலானது, உண்மையான தற்சார்பு நிலையை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மேம்படுத்துகிறது.
இறுதியில், எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பான “மோடியின் சிவப்பு கோடுகள்” (Modi redlines) நிரந்தரமானவை. இந்த வரம்புகளும் கொள்கைகளும் இப்போது ஒரு புதிய இயல்புநிலையின் அங்கமாகிவிட்டன. இந்த மாற்றத்தை இனி பின்வாங்கச் செய்ய இயலாது. வரும் ஆண்டுகளில் இந்தியாவின் உத்திசார் சிந்தனையை இதுவே வடிவமைக்கும். தேசம் இந்த அணுகுமுறைக்குக் குறைவாக எதையும் எதிர்பார்க்கவில்லை. மேலும், இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக் கொள்கைகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்தும் எவருக்கும் இந்திய மக்கள் உறுதுணையாக நிற்பார்கள். 'ஆபரேஷன் சிந்தூர்' (Operation Sindoor) வெற்றியடையப் பங்களித்த அனைவருக்கும் எனது வணக்கம்.
ஆர்.கே.எஸ். பதௌரியா, முன்னாள் விமானப்படைத் தளபதி (Air Chief Marshal) ஆவார். இவர் இந்திய விமானப்படையின் தலைமைத் தளபதியாகப் பணியாற்றியவர்.
Orginal article: A watershed moment in India’s defence posture -R.K.S. Bhadauria