முக்கிய அம்சங்கள்:
• பொதுவாக, ஒரு தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோருவதும், ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைப்பதும் வழக்கமான நடைமுறையாகும். அவ்வாறு அழைக்கப்பட்ட பிறகு, அந்தக் கட்சி, சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இருப்பினும், ஆளுநர் அர்லேகர் அவர்கள், விஜய் அவர்களை 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்குத் தேவையான குறைந்தபட்சம் 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை முன்கூட்டியே சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. தற்போது தமிழக வெற்றிக் கழகத்திடம் 108 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் சேரும்போது, மொத்த எண்ணிக்கை 113-ஆக உயர்கிறது.
• அதிக இடங்களை வென்ற மிகப்பெரிய கட்சியையே ஆட்சி அமைக்க முதலில் அழைக்க வேண்டும் என்ற மரபு பின்பற்றப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்புகளில் பலமுறை வலியுறுத்தியுள்ளது. பெரும்பாலும் ஆளுநர் மாளிகைகள் அரசியல் சர்ச்சைகளுக்கு உள்ளாவதால், ஆட்சி அமைக்க உரிமை கோருவதில் சிக்கல் ஏற்படும்போது எதிர்க்கட்சிகள் உதவிக்காக நீதிமன்றத்தை நாடுகின்றன.
• கடந்த 2018-ஆம் ஆண்டில், கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா அவர்கள் பி.எஸ். எடியூரப்பாவை முதலமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடிவு செய்ததையடுத்து, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (Janata Dal Secular (JD(S))) கட்சிகள் நள்ளிரவில் உச்சநீதிமன்றத்தை அணுகின. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு இந்த இரு கட்சிகளும் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியை அறிவித்திருந்த போதிலும், ஆளுநர் அதிக இடங்களை வென்ற தனிப்பெரும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க அழைத்தார். அதோடு, பாரதிய ஜனதா தலைமையிலான அரசு சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் கால அவகாசத்தையும் ஆளுநர் வழங்கினார்.
• இருப்பினும், அப்போதைய இந்திய தலைமை நீதிபதி (Chief Justice of India) தீபக் மிஸ்ரா இந்த வழக்கை இரவு முழுவதும் விசாரித்தார், ஆனால் முதலமைச்சர் பதவியேற்பு விழாவிற்குத் தடை விதிக்க மறுத்துவிட்டார். ஒரு நாள் கழித்து, குதிரை பேரம் நடப்பதாகவும், சட்டமன்ற உறுப்பினர்கள் சொகுசு விடுதிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதைக் கேட்ட இந்திய உச்சநீதிமன்றம், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பை 36 மணி நேரத்திற்குள்ளாகவே நடத்த உத்தரவிட்டது. இறுதியில், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது, அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியை அமைத்தது.
• மே மாதம் 2016-ஆம் ஆண்டு, உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட இதேபோன்ற ஒரு அரசியல் நெருக்கடியின்போது, இந்திய உச்சநீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு முறையையே இதற்கான "இறுதித் தீர்வு" என்று விவரித்தது. மேலும், அப்போதைய காங்கிரஸ் முதலமைச்சர் ஹரிஷ் ராவத்தை சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
உங்களுக்குத் தெரியுமா?
• இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பரிவு 164-ன்படி (Article 164) , மாநில முதலமைச்சரை ஆளுநர் நியமிக்கிறார்; மேலும், முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் மற்ற அமைச்சர்களையும் ஆளுநர் நியமிக்கிறார். அதேபோல், அமைச்சர்கள் அனைவரும் ஆளுநர் விரும்பும் காலம் வரை (During the pleasure of the Governor) பதவியில் நீடிப்பார்கள் என்றும் இந்தச் சட்டம் கூறுகிறது.• இந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்காக, மக்கள் ஆதரவைப் பெற்ற மற்றும் ஆட்சி அமைக்க உரிமை கோரிய கட்சியை ஆளுநர் அழைக்கிறார். அதன் பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்கான நேரத்தை ஆளுநர் தீர்மானிக்கிறார். பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்கும், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்கும் 'தற்காலிக சபாநாயகர்' ஒருவரை ஆளுநர் நியமிக்கிறார். பொதுவாக, சபையில் உள்ள மூத்த சட்டமன்ற உறுப்பினரே இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
Orginal article: What Supreme Court of India said about the Governor’s role? -Priya Kumari Shukla