தற்போதைய செய்தி: அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பிரம்மாண்டமான கடல் நீரோட்ட அமைப்பின் நிலைத்தன்மை குறித்து விஞ்ஞானிகள் கவலையடைந்துள்ளனர். முன்னதாகக் கருதப்பட்டதைவிட மிகக் கடுமையாக அமைப்பு வலுவிழக்கக்கூடும் என்று புதிய ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
முக்கிய அம்சங்கள்:
• உலகின் பெரும்பகுதியில் காலநிலையை ஒழுங்குபடுத்தும் அட்லாண்டிக் தீர்க்கரேகை தலைகீழ் சுழற்சி (Atlantic Meridional Overturning Circulation (AMOC)), 2100-ஆம் ஆண்டிற்குள் 59% வரை குறையக்கூடும். இதனால், இந்தியத் துணைக்கண்டம் போன்ற தொலைதூர வானிலை அமைப்புகளில் கடுமையான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
• இந்தக் கண்டுபிடிப்புகள் இந்தியாவிற்கு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. ஏனெனில், இங்கு கோடிக்கணக்கான மக்கள் தங்கள் விவசாய வாழ்வாதாரத்திற்கும் நீர் விநியோகத்திற்கும் கோடைகால பருவமழையைச் சார்ந்துள்ளனர்.
• அட்லாண்டிக் தீர்க்கரேகை தலைகீழ் சுழற்சி (AMOC) அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்திருந்தாலும், அது செயலிழந்தால் பசிபிக் பெருங்கடலில் குழப்பம் ஏற்படும்.
El Niño என்பது பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நிகழும் வெப்பமயமாதல் ஆகும். இது உலகளாவிய வானிலையைச் சீர்குலைக்கிறது. உலகளாவிய கடல் நீரோட்டங்களும் காற்றின் போக்குகளும் ஒன்றுக்கொன்று ஆழமாக இருப்பதால், AMOC தென் அரைக்கோளத்தில் வெப்பத்தைத் தக்கவைத்து, வட பசிபிக் பகுதியைக் குளிர்ச்சியை வழங்குகிறது.
• இது எல் நினோவை இயக்கும் நுட்பமான வெப்பநிலை சமநிலையைக் குலைக்கிறது. பலவீனமான AMOC ஆனது எல்-நினோ நிகழ்வுகளை மேலும் கணிக்க முடியாததாகவும் தீவிரமானதாகவும் மாற்றும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு சிறந்த உதாரணமாக, 2015-16 மற்றும் 2023-24-ல் ஏற்பட்ட சக்திவாய்ந்த எல் நினோ நிகழ்வுகளாகும். உலகளவில் அதிக சீர்குலைவுகளை ஏற்படுத்தி, அமெரிக்காவில் வறட்சியைத் அதிகரிக்க செய்து, தெற்காசியாவில் மழைப்பொழிவைக் குறைத்தன.
• இந்தியாவைப் பொறுத்தவரை, அட்லாண்டிக் தீர்க்கரேகை தலைகீழ் சுழற்சியின் வேகம் (Atlantic Meridional Overturning Circulation (AMOC)) முற்றிலுமாக குறைந்து வருவது என்பது தொலைதூரக் கடலில் நடைபெறும் ஒரு இயற்கை நிகழ்வு மட்டுமல்ல, அது நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு ஏற்படும் நேரடியான அச்சுறுத்தலாகும். ஏனெனில், அது உணவுப் பாதுகாப்பிற்கான நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தும். நாட்டின் வேளாண்மை மற்றும் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் கோடைப் பருவமழை, குறிப்பிட்ட உலகளாவிய வெப்பப் பரவல்களைச் சார்ந்துள்ளது. அட்லாண்டிக் வெப்பக் கடத்தியின் வேகம் குறையும்போது, வடக்கு நோக்கிப் பயணிக்கும் வெப்பத்தின் அளவு குறைகிறது. இந்த நகர்வு, புவியின் வெப்பமண்டல மழையை இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து விலகி, தெற்கு நோக்கி இழுக்கிறது.
உங்களுக்குத் தெரியுமா?
• பூமியின் பெருங்கடல்களை, ஒரு பிரம்மாண்டமான, கண்ணுக்கு தெரியாத கடத்தும் காற்றைக் கற்பனை செய்து பாருங்கள். அட்லாண்டிக் பெருங்கடலில், இந்த அமைப்பு அறிவியல் ரீதியாக அட்லாண்டிக் தீர்க்கரேகை தலைகீழ் சுழற்சி (Atlantic Meridional Overturning Circulation (AMOC)) என்று அழைக்கப்படுகிறது.
• வெப்பமண்டலப் பகுதிகளிலிருந்து வரும் சூடான, உப்பு நிறைந்த மேற்பரப்பு நீர் கிரீன்லாந்தை நோக்கி வடக்கே செல்கிறது. அது உறைபனி நிறைந்த ஆர்க்டிக் பகுதியை அடையும்போது, நீர் குளுர்ச்சியடைந்து, அடர்த்தி அதிகரித்து, பல கிலோமீட்டர் ஆழ்கடலுக்குள் மூழ்குகிறது. பின்னர், அது ஒரு குளிர்ந்த ஆழ்கடல் நீரோட்டமாக மீண்டும் தெற்கு நோக்கி நகர்கிறது. இறுதியில் மேற்பரப்பிற்கு வந்து வெப்பமடைந்து. இந்தச் சுழற்சியை மீண்டும் தொடங்குகிறது.
இந்த மெதுவான இயக்கம், உலகம் முழுவதும் அதிக வெப்பத்தைக் கடத்துகிறது. இதன் வேகத்தை ஒப்பிட்டுப் பார்க்கையில், ஒரு கன மீட்டர் நீர் பயணத்தை முடிக்க 1,000 ஆண்டுகள் ஆகும். ஐரோப்பாவில் மிதமான காலநிலை நிலவுவதற்குக் இதுவே முக்கிய கரணியாகும். மேலும், இது ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் ஆசியாவின் மழைப்பொழிவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
• இந்தக் நீரோட்ட அமைப்பு, கடல் வெப்பநிலை மற்றும் உப்பு அளவுகளின் நுட்பமான சமநிலையைச் சார்ந்துள்ளது. இருப்பினும், மனிதனால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றம், ஆர்க்டிக் பனியை அபாயகரமான வேகத்தில் உருக்கி, அதிக அளவிலான நன்னீரை வட அட்லாண்டிக்கில் கொட்டுகிறது. நன்னீர் உப்புத்தன்மை குறைந்ததாகவும் இருப்பதால், அது எளிதில் மூழ்குவதில்லை. இது முழு அட்லாண்டிக் தீர்க்கரேகை தலைகீழ் சுழற்சி அமைப்புக்கும் ஒரு தடையாகச் செயல்படுகிறது.
• கடந்த 50 ஆண்டுகளில் 15% சரிவு ஏற்படும் என முந்தைய ஆய்வுகள் மதிப்பிட்டிருந்த நிலையில், தற்போதைய கடல் அளவீடுகளைப் பயன்படுத்தும் புதிய ஆராய்ச்சி, இதைவிட மிகக் கடுமையான சரிவு ஏற்படும் என்று கணித்துள்ளது. இது 2100-ஆம் ஆண்டிற்குள் நீரோட்டங்களை 59% வரை பலவீனப்படுத்தக்கூடும்.
• இது முக்கியமானது. ஏனெனில், AMOC என்பது ஒரு “காலநிலை மாற்றத்தின் திருப்புமுனை” (climate tipping point) ஆகும். சமநிலைப் புள்ளியைத் தாண்டிச் சாய்ந்த ஒரு நாற்காலியைப் போலவே, AMOC ஒரு குறிப்பிட்ட வரம்பைக் கடந்தவுடன், அது மீளமுடியாத வகையில் ஒரு புதிய, மந்தமான நிலைக்குச் சென்றுவிடும். சரியான காலக்கெடு குறித்து விஞ்ஞானிகள் விவாதித்தாலும், இது இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நிகழக்கூடும் என்று சிலர் எச்சரிக்கின்றனர். அவ்வாறு நடந்தால், அதன் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும். இது வட அமெரிக்காவில் தீவிரமான கடல்மட்ட உயர்வையும், உலகளவில் கடுமையான வானிலை சீர்குலைவுகளையும் அதிகரிக்க செய்யும்.
Orginal article: What is Atlantic Meridional Overturning Circulation (AMOC)? -Priya Kumari Shukla