முக்கிய அம்சங்கள் :
ஒருங்கிணைந்த வக்பு நிர்வாகம், அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாடுத் தளமான 'உமீத்' (UMEED) இணையதளத்தில் கிடைக்கும் தரவுகளின்படி, மொத்தத்தில் 5,87,804 சொத்துக்கள், அதாவது மொத்தத்தில் 74% ஆனது சேர்க்கப்படுவதற்காக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பதிவு செய்யும் செயல்முறை (registration process) இன்னும் முழுமையடையவில்லை.
உத்தரப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான கிட்டத்தட்ட 31,783 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இது, 'உமீத்' (UMEED) இணையதளத்தில் நிராகரிக்கப்பட்ட நாடு தழுவிய வக்ஃப் சொத்துக்களில் கிட்டத்தட்ட 36% ஆகும். மேற்கு வங்கத்தில் 14,134 வக்ஃப் சொத்து விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இது மொத்த நிராகரிப்புகளில் 16% ஆகும். ராஜஸ்தானில் 12,080 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இது மொத்த நிராகரிப்புகளில் 13%-க்கும் அதிகமாகும். மொத்தத்தில், 88,571 சொத்துக்கள் சேர்க்கப்படாததைத் தொடர்ந்து, பல மாநிலங்களில் உள்ள வக்ஃப் வாரியங்களின் அதிகாரிகள், இணையதளத்தால் நிராகரிக்கப்பட்ட சொத்துக்களுக்கு என்ன நடக்கும் என்பது குறித்து தங்களுக்கு "எந்தத் தகவலும் இல்லை" என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தனர்.
வக்ஃப் சொத்து விண்ணப்பங்கள் அதிகபட்சமாக நிராகரிக்கப்பட்ட மாநிலங்களில் இராஜஸ்தான் (37%), தமிழ்நாடு (26%), உத்தரப் பிரதேசம் (22.23%) ஆகியவை அடங்கும். மொத்தத்தில், 7,95,784 வக்ஃப் சொத்துக்கள் இணையதளத்தில் சேர்க்க முன்மொழியப்பட்டன. இதில் உத்தரப் பிரதேசத்திலிருந்து மட்டும் 160,857 சொத்துக்களும் (20.1%), மேற்கு வங்கத்திலிருந்து மேலும் 1,34,545 சொத்துக்களும் (16.9%) அடங்கும். ஷியா மற்றும் சன்னி சமூகங்களுக்கு என இரண்டு தனித்தனி வக்ஃப் வாரியங்களைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில், 1.52 லட்சம் சன்னி வக்ஃப் சொத்து விண்ணப்பங்களில் 29,724 நிராகரிக்கப்பட்டன. 8,171 ஷியா வக்ஃப் சொத்து விண்ணப்பங்களில், 2,059 நிராகரிக்கப்பட்டன. அண்டை மாநிலமான உத்தரகாண்டில், 2,468 சொத்து விண்ணப்பங்களில் 455 நிராகரிக்கப்பட்டன.
உங்களுக்குத் தெரியுமா?
அனைத்து வக்ஃப் சொத்துக்களுக்கும் புவிசார் குறியிடுதல் (geo-tagging) செய்த பிறகு, அவற்றின் டிஜிட்டல் விவரப்பட்டியலை உருவாக்கும் நோக்கில், மத்திய அரசு 2025 ஜூன் 6 அன்று 'உமீத்' (UMEED) இணையதளத்தைத் தொடங்கியது. இந்தியா முழுவதும் பதிவுசெய்யப்பட்ட அனைத்து வக்ஃப் சொத்துக்களின் விவரங்களும் ஆறு மாதங்களுக்குள் கட்டாயமாகப் பதிவேற்றப்பட வேண்டும். கடந்த ஆண்டு டிசம்பர் 5 அன்று, இணையதளத்தில் விவரங்களைச் சேர்ப்பதற்கான ஆறு மாதக் காலக்கெடு முடிவடைந்தபோது, மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, இணையதளத்தில் சொத்துக்களைப் பதிவுசெய்யத் தவறியவர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என்றும், அவர்கள் கால நீட்டிப்புக்காக மாநிலங்களில் உள்ள வக்ஃப் தீர்ப்பாயங்களை அணுகலாம் என்றும் கூறினார். அதைத் தொடர்ந்து, மாநில வக்ஃப் தீர்ப்பாயங்கள் (state waqf tribunals) விவரங்களைப் பதிவேற்றுவதற்கு கால நீட்டிப்பு வழங்கின. நீட்டிக்கப்பட்ட காலக்கெடு சில மாநிலங்களில் ஏற்கனவே முடிந்துவிட்டது, மற்ற மாநிலங்களில் வரும் நாட்களில் முடிவடைய உள்ளது.
இணையதளத்தில் ஒரு வக்ஃப் சொத்தைப் பதிவு செய்வதற்கான செயல்முறை மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. ஒன்று, உருவாக்குபவரால் (வக்ஃப் சொத்தின் முத்தவல்லி (mutawalli) அல்லது பராமரிப்பாளர்) தொடங்குதல், இரண்டு “சரிபார்ப்பாளரால்” (நியமிக்கப்பட்ட மாவட்ட அளவிலான அதிகாரி அல்லது மாநில வக்ஃப் வாரிய அதிகாரி) சரிபார்த்தல், மற்றும் மூன்று “ஒப்புதல் அளிப்பவரால்” (மாநிலத்தின் மூத்த வக்ஃப் வாரிய அதிகாரிகள்) ஒப்புதல் அளித்தல் ஆகும்.
உத்தரப் பிரதேசத்தில், ஷியா மற்றும் சன்னி சமூகங்களுக்கு என இரண்டு தனித்தனி வக்ஃப் வாரியங்கள் உள்ளன. அங்கு, சன்னி வக்ஃப் வாரியத்தில் 1.52 லட்சம் சொத்துக்களுக்கான விண்ணப்பங்களில் 29,724 நிராகரிக்கப்பட்டன. ஷியா வக்ஃப் வாரியத்தில் 8,171 விண்ணப்பங்களில் 2,059 சொத்துக்கள் நிராகரிக்கப்பட்டன. உத்தரப் பிரதேச ஷியா வக்ஃப் வாரியத்தின் தலைவர் அலி ஜைதி குறிப்பிட்டதாவது, “வக்ஃப் சட்டத்தின்படி, இணையதளத்தில் (சேர்க்கப்படுவதற்கு) நிராகரிக்கப்பட்ட சொத்துக்களுக்கு என்ன நடக்கும் என்பது குறித்த செயல்திட்டம் எதுவும் அதில் இல்லை. இது தொடர்பாக அரசிடமிருந்து எங்களுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.
Original article : Historical background of Waqf. -Priya Kumari Shukla