நவீன நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் ஒரு முக்கிய அம்சம், அதிக வளங்களைச் சார்ந்திருக்கும் 'சாம்பல் நிறக் கட்டமைப்பு' (grey infrastructure) முறையிலிருந்து, நிலையான 'பசுமைச் சாலைகள்' (Green Roads) முறைக்கு மாறுவதாகும். கடுமையான பொதுப் பாதுகாப்பு நடைமுறைகளுடன், பருவநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய (climate-resilient) பொறியியல் முறைகளை ஊக்குவிக்க இந்தியா எவ்வாறு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது?
2047-ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கான இலக்கை அடைய இந்தியா தனது நெடுஞ்சாலைக் கட்டமைப்பை வேகமாக விரிவுபடுத்தி வரும் நிலையில், உட்கட்டமைப்பு நவீனமயமாக்கலின் வரையறையும் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளின் அடிப்படை விரிவாக்கத்தைத் தாண்டிப் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.
நவீனமயமாக்கல் என்பது இனி பல வழித்தடங்களைக் கொண்ட சாலைகளை அமைப்பதையோ அல்லது போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதையோ மட்டும் குறிப்பதாகப் பார்க்கப்பட போவதில்லை. மாறாக, மனித உயிர்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் வகையில் சாலைக் கட்டமைப்பின் பாதுகாப்பையும் நிலைத்தன்மையை உறுதி செய்வதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
அதற்கேற்ப, இந்தியாவின் சாலைக் கட்டமைப்பு நவீனமயமாக்கலானது இது போன்ற முக்கிய அம்சங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
பாதுகாப்பு தொடர்பான கவலைகள்
இந்தியாவின் சாலைக் கட்டமைப்பு விரிவடைந்த நிலையில் உள்ளதால், அதற்கேற்ப பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளும் அதிகரித்துள்ளன. சாலைப் பாதுகாப்பு இல்லாத சூழல் என்பது ஒரு அமைதியான தேசிய அவசரநிலையாக மாறியுள்ளது. உலகளாவிய வாகன பயன்ப்பாட்டில் 1 சதவீதம் மட்டுமே இந்தியா கொண்டிருந்தாலும், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் 11 சதவீதம் இந்தியாவில் நிகழ்கிறது என்று உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது. இது போன்ற அதிக உயிரிழப்பு விகிதத்திற்கு, சாலை உள்கட்டமைப்பில் உள்ள கட்டமைப்பு குறைபாடுகளும், மனிதர்களின் பாதுகாப்பற்ற செயல்பாடுகளும் முக்கியக் காரணிகளாக உள்ளன.
1988-ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தை (Motor Vehicles Act) முறையாக அமல்படுத்தாததால், அதிவேகம், ஒழுங்கற்ற வழித்தடம் மற்றும் அதிக சுமை ஏற்றி இயங்கும் வணிக வாகனங்கள் போன்ற விதிமீறல்கள் தடுக்கப்படாமல் தொடர்கின்றன. இதன் விளைவாக, நாடு முழுவதும் சாலைப் பாதுகாப்பிற்கு கடுமையான அபாயங்கள் ஏற்படுகின்றன. தரமற்ற சாலைப் பொறியியல், சாலைகளின் வடிவமைப்பில் உள்ள குறைபாடுகள் மற்றும் சரியாகக் குறியிடப்படாத இணைப்பு (Merging) பாதைகள் ஆகியவை, அடிக்கடி விபத்துகள் நிகழும் முன்கூட்டியே கணிக்கக்கூடிய அபாயகரமான இடங்களான "அபாய பகுதிகள்" (Black Spots) உருவாகுவதற்கு முக்கியக் காரணங்களாக உள்ளன.
சாலை கட்டுமானத்திற்காக தார் கலவைகளை இடும் விரைவான தார் பயன்பாட்டில் கொள்கை அதிக கவனம் செலுத்தும் அதே வேளையில், இந்த அபாயப் பகுதிகளை முறையாகக் கண்டறிந்து அவற்றை பொறியியல்ரீதியாகச் சீரமைக்கும் பணிகள் போதிய அளவில் முன்னேற்றம் அடையவில்லை. இதன் விளைவாக, அதிவேக விரைவுச் சாலைகள் (Expressways) பாதுகாப்பான பயணப் பாதைகளாக இல்லாமல், அதிக விபத்து அபாயம் நிறைந்த வழித்தடங்களாக மாறியுள்ளன.
இந்த சமநிலையின்மை, திட்டமிடலில் உள்ள ஒரு கட்டமைப்புச் சிக்கலைப் காட்டுகிறது. சாலைகளை அமைப்பதற்கும் விரிவுபடுத்துவதற்கும் இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டிருந்தாலும், சாலைகளையும் போக்குவரத்தையும் திறம்படத் தணிக்கை செய்யவும், பராமரிக்கவும், ஒழுங்குபடுத்தவும் தேவையான வசதிகள் இதில் இடம் பெறவில்லை.
தொழில்நுட்பத் தலையீடுகள்: V2V வழியாக “பேசும் கார்கள்”க்கு மாறுதல்
மனிதர்களால் மேற்கொள்ளப்படும் சட்ட அமலாக்க முறைகளின் வரம்புகளையும், சாலையில் ஏற்படும் ஆபத்தை கவனித்து அதற்கு நடவடிக்கை எடுக்க ஓட்டுநர் எடுத்துக்கொள்ளும் நேரம் குறைபாடுகளை சரி செய்வதற்காக, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின்கீழ் இயங்கும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India (NHAI)), நுண்ணறிவு போக்குவரத்து அமைப்புகளை (Intelligent Transport Systems (ITS)) ஒருங்கிணைப்பதன் மூலம் முக்கிய தொழில்நுட்ப மேம்பாடுகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பதிலளிக்கும் நேரத்தைக் குறைக்கவும் பாதுகாப்பை மேம்படுத்தவும், முக்கிய விரைவுச் சாலைகள் முழுவதும் மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்புகள் (Advanced Traffic Management Systems (ATMS)) உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகள், செயற்கை நுண்ணறிவால் இயங்கும் சிசிடிவி கேமராக்கள், வாகன வேகத்தைக் கண்டறியும் அமைப்புகள், நிகழ்நேர தகவல் மின்னணு அறிவிப்பு பலகைகள் (Variable Message Signs (VMS)), தானியங்கி விபத்து மற்றும் அவசரநிலையை கண்டறியும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன.
மேலும், வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று நிகழ்நேரத்தில் (real-time) நேரடியாகத் தகவல் பரிமாறிக்கொள்ள உதவும் முக்கியப் புதுமையான 'வாகனங்களுக்கு இடையிலான தொடர்பு' (Vehicle-to-Vehicle (V2V)) தொழில்நுட்பம், வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பிரத்யேக வயர்லெஸ் தகவல் பரிமாற்றக் கருவிகளைப் (Dedicated On-board Wireless Units) பயன்படுத்தி, வாகனத்தின் வேகம், துல்லியமான இருப்பிடம், பிரேக் செயல்பாட்டு நிலை போன்ற முக்கிய தகவல்களை அருகிலுள்ள மற்ற வாகனங்களுடன் தொடர்ந்து பரிமாறிக் கொள்கிறது. இதன் மூலம், அதிவேக விரைவுச் சாலைகளில் 'கூட்டு விழிப்புணர்வு' (cooperative awareness) சார்ந்த ஒரு சூழல் உருவாக்கப்படுகிறது.
இந்தத் தொழில்நுட்பம் மனிதப் பிழையால் ஏற்படும் விபத்துக்களைப் அதிக அளவில் குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. பனிமூட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் அல்லது கனமழையின் போது, சாலையோரத்தில் மறைந்திருக்கும் அபாயங்கள் அல்லது முன்னால் செல்லும் வாகனங்கள் திடீரென நிறுத்தம் செய்வது குறித்து ஓட்டுநர்களுக்கு எச்சரிப்பதன் மூலம், வாகனங்களுக்கு இடையிலான தொடர்பு (V2V) தொழில்நுட்பத்தால் 360-டிகிரி ஓட்டுநரின் பார்வைக்கு தெரியாத பகுதிகள் குறித்த விழிப்புணர்வை வழங்க முடியும்.
வாகனங்களுக்கு இடையிலான தொடர்பு தொழில்நுட்பம், சில வினாடிகளுக்கு முன்பே ஆபத்து குறித்த எச்சரிக்கையை வழங்குவதன் மூலம், அதிவேகத்தில் ஏற்படும் பின்புற மோதல் விபத்துகளையும் (Rear-end Collisions), பல வாகனங்கள் தொடர்ச்சியாக மோதும் விபத்துகளையும் (Multi-vehicle Pile-ups) தடுக்கிறது. இதன் மூலம், வாகனங்கள் வெறும் செயலற்றவையாக இல்லாமல், உடனுக்குடன் செயல்படும், ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பாதுகாப்பு வலையமைப்புகளாக (Responsive, Interconnected Safety Networks) மாறுகின்றன. இந்தத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு, விபத்து நடந்த பிறகு காவல்துறை நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் அபராதம் விதிப்பது போன்ற நிலைப்பாட்டிலிருந்து, மனிதப் பிழைகளைத் தடுக்கும் முன்கூட்டிய தலையீடுகளை நோக்கிய அரசாங்கத்தின் கொள்கை மாற்றத்தைக் காட்டுகிறது.
சாலைப் பாதுகாப்பிற்கான நீதித்துறை அங்கீகாரம்
தொழில்நுட்பப் கண்டுபிடிப்புகளுடன் இணைந்து, நீதித்துறையின் தலையீடும் சாலைப் பாதுகாப்பு நிர்வாகத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியுள்ளது. சாலைப் போக்குவரத்துத் துறையில் தொடர்ந்து நிலவும் சவால்களை உணர்ந்து, சாலைப் பாதுகாப்பை அரசியலமைப்புச் சார்ந்த நிர்வாகத்தின் ஒரு பகுதியாக வரையறுக்க நீதித்துறை பலமுறை தலையிட்டுள்ளது. 1989-ஆம் ஆண்டு பர்மானந்த் கட்டாரா v. யூனியன் ஆஃப் இந்தியா (Parmanand Katara v. Union of India) வழக்கில், உச்சநீதிமன்றம், "பாதுகாப்பாகப் பயணம் செய்யும் உரிமை" (Right to Safe Travel) என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள "வாழ்வுரிமை" (Right to Life) என்பதன் ஒரு பகுதியாகும் என்று தீர்ப்பளித்தது.
உச்சநீதிமன்றத்தின் தலையீடுகள், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ உதவிக்கு உத்தரவாதம் அளித்தல் மற்றும் மாநில சாலைப் பாதுகாப்புக் குழுக்களை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு வழிவகுத்தன. 2025-ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றம் மோட்டார் வாகனச் சட்டத்தின் 138(1A) மற்றும் 210-D பிரிவுகளின்கீழ், பாதுகாப்பான நடைபாதைகள் மற்றும் பொதுச் சாலைகளுக்கான உரிமையை ஒரு அரசியலமைப்பு அடிப்படை உரிமையாக அங்கீகரித்தது.
பிரிவு 138(1A) பொதுச் சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் பாதசாரிகள் மற்றும் இயந்திர சக்தியால் இயக்கப்படாத வாகனங்களின் (non-mechanically propelled vehicles) போக்குவரத்தை ஒழுங்குபடுத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கும் அதே வேளையில், பிரிவு 210-D தேசிய நெடுஞ்சாலைகள் அல்லாத பிற சாலைகளின் வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் பராமரிப்புக்கான தரநிலைகளை வகுக்கக் கட்டாயப்படுத்துகிறது.
2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், சாலை விபத்துகளில் இருந்து பயணிகளின் பாதுகாப்பும், நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பாகப் பயணிப்பதற்கான உரிமையும், அரசியலமைப்பின் 21-வது பிரிவின்கீழ் உள்ள வாழ்வதற்கான அடிப்படை உரிமையின் (fundamental right to life) ஒரு பகுதியாகும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.
நீதித்துறைத் தலையீடுகள் மற்றும் சாலைப் பாதுகாப்பு நிர்வாகம்
அரசியலமைப்பின் 142-வது பிரிவின்கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றம், குறிப்பிட்ட பொறியியல் குறைபாடு உள்ள பகுதிகளைச் சரிசெய்வதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு (NHAI) காலக்கெடு விதிப்பது உள்ளிட்ட நெடுஞ்சாலை மேலாண்மை தொடர்பான விவாகரங்களில் கட்டுப்படுத்தும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
நீதித்துறைத் தலையீடுகளின் விளைவாக, சிறப்புச் சாலைப் பாதுகாப்பு மன்றங்கள் (safety councils) உருவாக்கப்பட்டுள்ளன. வேகக் கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பங்களை நிறுவுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், மாநில போக்குவரத்து அதிகாரிகள் பொறுப்புடன் செயல்படுவதை உறுதிசெய்யும் அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
இது போன்ற நீதித்துறைத் தலையீடுகள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21-ன் வரம்பையும் விரிவுபடுத்தியுள்ளன. வாழ்வுரிமை மற்றும் தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், பாதுகாப்பான மற்றும் ஆபத்துகளற்ற பயணம் மேற்கொள்ளும் உரிமையும் (Right to Safe, Hazard-Free Travel) பிரிவு 21-ன் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சாலை வடிவமைப்பு, பராமரிப்பு, போக்குவரத்து மேலாண்மை, பயணிகளின் வசதி போன்ற சாலை வலையமைப்பில் உள்ள குறைபாடுகள், கட்டுமான அல்லது பராமரிப்புத் தோல்விகளாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. மாறாக, அவை குடிமக்களின் வாழ்வுரிமை மற்றும் பாதுகாப்புக்கான அரசியலமைப்புச் சட்ட உரிமையை நேரடியாக மீறும் செயல்களாக கருதப்படுகின்றன.
பசுமை மற்றும் நிலையான பொறியியல்
நவீன நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் மற்றொரு முக்கிய அம்சம், வளங்களை அதிகம் பயன்படுத்தும் 'சாம்பல்நிற உள்கட்டமைப்பிலிருந்து' (கடினமான கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தி மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள்) நிலையான 'பசுமைச் சாலைகளுக்கு' (Green Roads) மாறுவதாகும்.
இந்த மாற்றம் இனி வெறும் இலட்சியமாக மட்டும் இல்லாமல், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தாலும், சாலை உட்கட்டமைப்பால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க வேண்டிய அவசியத்தாலும் உருவான கட்டாயத் தேவையாக மாறியுள்ளது. அதன்படி, இந்தியா சாலை கட்டுமானத்தில் வட்டப் பொருளாதாரத்தின் (கழிவுகளை அகற்றி, இயற்கைச் சூழல் அமைப்புகளைப் புதுப்பிக்கும் ஒரு அமைப்பு) கொள்கைகளை ஒருங்கிணைக்கத் தொடங்கியுள்ளது.
சுரங்கக்கற்கள் மற்றும் ஆற்று மணல் போன்ற புதிய இயற்கை மூலம் கிடைக்கும் மொத்தப் பொருட்களின் நுகர்வைக் குறைக்கும் வகையில், நெடுஞ்சாலை கட்டுமானத்தில் தார் கலவைகளில் கழிவு நெகிழி, தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் அனல் மின் நிலையங்களிலிருந்து வரும் சாம்பல் போன்ற மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவதை சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை (MoRTH) கட்டாயமாக்கியுள்ளது.
மேலும், இந்த முயற்சியின் மூலம், பல மில்லியன் டன் தொழில்துறைக் கழிவுகள் குப்பைமேடுகளில் (Landfills) கொட்டப்படுவது தடுக்கப்படும், சாலைகளின் நீர் எதிர்ப்புத் திறனை மேம்படுத்தி, சாலை மேற்பரப்பின் நீடித்த தன்மையையும் (Durability) அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நெடுஞ்சாலை நிலைத்தன்மை குறித்த உலகளாவிய கண்டுபிடிப்புகள்
இந்த பசுமை மாற்றத்தை விரைவுபடுத்துவதற்காக, நெடுஞ்சாலைகள் ஆற்றல் கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதை மறுவடிவமைக்கும் உலகளாவிய அளவுகோல்களை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) ஆராய்ந்து வருகிறது. அவற்றில் குறிப்பிடத்தக்க சில உதாரணங்கள் பின்வருமாறு::
1. நெதர்லாந்தின் சூரியச் சாலைகள் முயற்சியின் மூலம், இது அருகிலுள்ள மின்கட்டமைப்புகளுக்குப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்வதற்காக, ஒளிமின் அழுத்த செல்களை (photovoltaic cells) நேரடியாகச் சாலை மேற்பரப்புகளில் ஒருங்கிணைக்கிறது.
2. ஜெர்மனியின் மின்-நெடுஞ்சாலை அமைப்பில், சாலையின் மேற்பகுதியில் மின்சார கம்பிகள் (Overhead Catenary Power Lines) நிறுவப்படுகின்றன. கனரக வணிக வாகனங்களின் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ள மேல்மின் கம்பியிலிருந்து மின்சாரத்தைப் பெறும் இணைப்புக் கருவி (Pantograph), இந்த மின்கம்பிகளிலிருந்து தொடர்ந்து மின்சாரத்தைப் பெற்றுக்கொள்கிறது. இதனால், அதிக போக்குவரத்து கொண்ட நெடுஞ்சாலைகளில் டீசல் எரிபொருளைச் சார்ந்திருக்கும் நிலை குறைக்கப்படுகிறது.
3. ஸ்வீடன், மின்மயமாக்கப்பட்ட சாலைகளை உருவாக்கியுள்ளது. இந்தச்சாலைகளில், வணிக மின்சார வாகனங்கள் பயணித்துக்கொண்டே இருக்கும் போது, வயர்லெஸ் முறையில் தானாகவே மின்கலன்கள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. இதனால், வாகனங்களில் மிகப் பெரிய திறன் கொண்ட மின்கலன்களை (Massive Vehicle Batteries) பொருத்த வேண்டியதன் தேவை குறைகிறது.
4. மின்சார வாகனங்களுக்கான பயண தூரக் கவலையை குறைப்பதற்காக, நார்வேயின் மின்சார வாகன நெடுஞ்சாலைச் சூழல் அமைப்புகளில், ஒவ்வொரு சில கிலோமீட்டருக்கும் முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் ஓய்வுப் பகுதிகளில் அதிகத் திறன் கொண்ட மின்னேற்றும் வலையமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இந்த எடுத்துக்காட்டுகள் நிலையான நெடுஞ்சாலைக் கட்டமைப்பு குறித்த முக்கிய நுண்ணறிவுகளை வழங்குவதோடு, ஒரு முழுமையான கட்டமைப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகின்றன.
முன்னால் உள்ள பாதை
லட்சியமிக்க உட்கட்டமைப்பு இலக்குகளுக்கும், நிலையான மற்றும் பாதுகாப்பான விளைவுகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கு, பருவநிலை மாற்றங்களைத் தாங்கும் பொறியியலைக், கடுமையான பொதுப் பாதுகாப்பு அமலாக்கத்துடன் ஒருங்கிணைக்கும் ஒரு பயனுள்ள முழுமையான கட்டமைப்பை இந்தியா பின்பற்ற வேண்டும்.
சாலை மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் தேசிய உத்தியின் அடித்தளத் தூண்களாக விளங்கும் சாலைப் பாதுகாப்பின் 4 அம்சங்களைத் திறம்படச் செயல்படுத்துவதன் மூலம் இதை அடைய முடியும்:
1. பொறியியல்: மனிதர்களால் ஏற்படும் தவறுகளைக் குறைக்கும் வகையில், சாலை கட்டுமானத்திற்கு முன்பே சாலைகளின் வடிவமைப்பில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்து, பாதுகாப்பான சாலைகளை உருவாக்க வேண்டும். மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள், நெகிழிக் கழிவுகள் மற்றும் பிற சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொருட்களின் பயன்பாட்டை விரிவுபடுத்த வேண்டும்.
2. அமல்படுத்துதல்: தானியங்கி வேகக் கேமராக்கள், சரக்குகளுக்கான நகரும் வாகன எடை உணர்விகள் மற்றும் கட்டமைப்பு அல்லது போக்குவரத்து விதிமீறல்களுக்கான கடுமையான தண்டனைகள் அல்லது போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடுமையான அபராதங்கள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.
3. கல்வி: ஓட்டுநர் உரிமம் வழங்கும் முறைகளை நிர்வாக நடைமுறையாக இல்லாமல், கடுமையான, பாதுகாப்பு சார்ந்த பயிற்சித் திட்டங்களாக மேம்படுத்தும் முறையாக மாற்ற வேண்டும்.
4. அவசர சிகிச்சை: ஒரு விபத்துக்குப் பிறகு, அந்த முக்கியமான ‘கோல்டன் ஹவர்’ (golden hour) மருத்துவக் கவனிப்பை உறுதி செய்வதற்காக, முக்கிய வழித்தடங்களில் பரவலாக்கப்பட்ட முதலுதவி மற்றும் மருத்துவப் பராமரிப்பு அமைப்புகளை நிறுவ வேண்டும்.
தனித்தனி திட்டங்களை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையிலிருந்து, கட்டுப்பாடான குறைந்தபட்ச விலை (Least-Cost (L1)) ஏலமுறையிலிருந்து, குறைந்த செலவிலான மூலதனச் செலவினத்தைவிட நீண்டகால நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கும் தரம் மற்றும் செலவு அடிப்படையிலான தேர்வு (Quality and Cost-Based Selection (QCBS)) முறைக்கு கொள்முதலை மாற்றும் ஒரு ஒருங்கிணைந்த வாழ்க்கைச் சுழற்சி நிர்வாகக் கட்டமைப்புக்கு மாற வேண்டிய தேவையும் உள்ளது.
இவ்வாறு, பாதுகாப்பு மற்றும் சூழலியல் சார்ந்த துறைகளில் தொழில்நுட்பம் மற்றும் பொறியியலைத் திறமையாக பயன்படுத்துவதன் மூலம், தேசிய வளர்ச்சியை சீரான முறையில் முன்னெடுக்கும் ஒரு சாலைக் கட்டமைப்பை இந்தியாவால் உருவாக்க முடியும்.
Original articles : How technological innovations help India build safe, sustainable road network?. -Kannan K