மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டை என்பது வெளிநாட்டு இந்தியக் குடிமக்களுக்கு இந்தியாவிற்குள் வாழ்நாள் முழுவதும் பலமுறை நுழைந்து, எந்த விதமான காலவரம்பின்றி தங்க அனுமதிக்கும் சிறப்பு விசா (Lifelong Visa) ஆகும்.
தற்போதைய செய்தி: உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜூன் 30, 2026 அன்று மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டையை (e-OCI) அறிமுகப்படுத்தினார். முழுமையான டிஜிட்டல் அமைப்பின் மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான OCI சேவைகளை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்ட, குடிமக்களை மையமாகக் கொண்ட ஒரு முக்கிய முயற்சி இந்த அட்டை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை, 50 லட்சத்திற்கும் அதிகமான OCI அட்டைதாரர்களை பாதிக்கக்கூடும். தற்போது, மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டைகள் காகிதப் புத்தக (Paper Booklet) வடிவில் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமக்கள் (Overseas Citizen of India (OCI)) யார்?
இந்தியா இரட்டைக் குடியுரிமையை அனுமதிக்காததால், வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளைக் (passports) கொண்ட இந்திய வம்சாவளியினருக்கு சில வசதிகளை வழங்குவதற்காக, 1955-ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் (Citizenship Act) செய்யப்பட்ட ஒரு திருத்தத்தின் மூலம் 2005-ஆம் ஆண்டில் வெளிநாட்டு இந்தியக் குடியுரிமைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்றோ அல்லது அதற்குப் பிறகு இந்தியக் குடிமக்களாக இருந்தவர்கள் அல்லது அன்றைய தேதியில் இந்தியக் குடியுரிமை பெறத் தகுதியுடையவர்களாக இருந்தவர்கள், இந்தியா வெளிநாட்டுக் குடிமக்கள் அட்டையைப் பெற தகுதியுடையவர்கள் ஆவார். இருப்பினும், பாகிஸ்தான் அல்லது வங்கதேச குடிமக்களாக இருப்பவர்கள், இருந்தவர்கள் அல்லது அவர்களின் பெற்றோர், பாட்டன், பாட்டி அல்லது கொள்ளுப் பாட்டன் ஆகியோர் அந்த நாட்டின் குடிமக்களாக இருந்தவர்கள் எனில் இதை பெறுவதற்கு தகுதி பெறமாட்டார்கள். OCI அட்டை என்பது வெளிநாட்டு இந்திய வம்சாவளியினர் இந்தியாவிற்குள் நுழைவதற்கும் தங்குவதற்கும் வழங்கப்படும் ஒரு வாழ்நாள் விசா ஆகும். இது அவர்களைக் காவல் அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பிப்பதிலிருந்து விலக்கு அளிக்கிறது. வேளாண் நிலம் அல்லது தோட்டச் சொத்துக்களை வாங்குவதைத் தவிர்த்து, நிதி, பொருளாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (Non-Resident Indians (NRIs)) இணையான சலுகைகளை இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமக்கள் பெறுகின்றனர்.
மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டையின் பல்வேறு அம்சங்கள் யாவை?
விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பது, துணை ஆவணங்களைப் பதிவேற்றுவது, ஒப்புதல் கிடைத்த பிறகு டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட அட்டையைப் பதிவிறக்கம் செய்வது என முழுமையான செயல்முறையையும் விண்ணப்பதாரர்கள் இணையவழியில் முடிக்க இந்த புதிய வசதி உதவும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே அட்டை வைத்திருப்பவர்களும் புதிய விண்ணப்பம் அல்லது நேரடி சரிபார்ப்பு இல்லாமல் தங்களின் மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டையை டிஜிட்டல் முறையில் பெறலாம். 20 வயதுக்குப் பிறகு புதிய கடவுச்சீட்டைப் பெறும்போது மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டை கையேட்டை மீண்டும் பெறவேண்டிய தேவை நீக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இருப்பினும், புதிய கடவுச்சீட்டு வழங்கப்படும் அனைத்து சூழல்களிலும் மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் கடவுச்சீட்டு விவரங்களை இணைய வழியில் புதுப்பிக்க வேண்டும்.
இந்த மின்னணு அட்டைகள் நேரடி வருகையின் தேவையை நீக்குகின்றன. மொபைல் சாதனங்கள் மூலம் எந்த நேரத்திலும் அணுகலை அனுமதிக்கின்றன செயலாக்கத்தை விரைவுபடுத்துகின்றன, நேரடி ஆவணங்களைத் தொலைப்பது அல்லது சேதப்படுத்துவது போன்ற அபாயங்களை நீக்குகின்றன. மேலும், விரைவான குடிவரவு அனுமதியை வழங்குவதன் மூலம் சுமூகமான பயணத்திற்கு வழிவகுக்கின்றன என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அரசு அதிகாரிகளுக்கு, மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டை இணைய வழியில் வழங்கப்படுவதை உறுதி செய்கிறது. காகித வேலை மற்றும் நிர்வாகச் செலவுகளைக் குறைக்கிறது, தரவு மேலாண்மை மற்றும் மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பை வலுப்படுத்துகிறது. மேலும், விமான நிலையங்களில் நிகழ்நேர சரிபார்ப்புக்காக டிஜிட்டல் குடிவரவு அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம், அடையாளத்தை மிகவும் துல்லியமாகச் சரிபார்க்க முடியும், பாதுகாப்பு மேலும் வலுப்பெறும், மோசடி நடைபெறும் அபாயமும் குறையும் என்று உள்துறை அமைச்சகம் (MHA) தெரிவித்துள்ளது.
பயனர்களிடம் ஏதேனும் கவலைகள் உள்ளனவா?
மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டைப் பதிவு மற்றும் அதைப் பயன்படுத்துவது தொடர்பாகப் பயனர்கள் பல்வேறு கவலைகளை எழுப்பியுள்ளனர். குறிப்பாகப், பல ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்த விண்ணப்பதாரர்களில் சிலர், ஆரம்பத்தில் பதிவு செய்யப் பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரியை இப்போது அணுக முடியாத நிலையில் உள்ளனர். பல மின்னஞ்சல் கணக்குகளைக் கையாள்வதில் சிரமப்படும் வயதான குடும்ப உறுப்பினர்களுக்கு உதவும் வகையில், குடும்பத்தினர் அனைவரும் ஒரே பொதுவான மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தலாமா என்றும் சிலர் கேட்டுள்ளனர். இணையதளம் அடிக்கடி முடங்குவதால் மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டைகளைப் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என்றும் பயனர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ஆரம்பகால மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டை பதிவின்போது மின்னஞ்சல் முகவரி எதுவும் பதிவு செய்யப்படாததால், தங்கள் விவரங்களை அணுகுவதிலோ அல்லது புதுப்பிப்பதிலோ சவால்களை எதிர்கொள்வதாகச் சில விண்ணப்பதாரர்கள் கூறியுள்ளனர்.
உள்துறை அமைச்சகம் என்ன விளக்கமளித்துள்ளது?
ஆரம்பகால மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டைப் பதிவின்போது பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரியை இப்போது அணுக முடியாத விண்ணப்பதாரர்கள், மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டை இணையதளத்தின் (https://ociservices.gov.in/onlineOCI/) 'பல்வேறு சேவைகள்' பிரிவின் கீழ் உள்ள 'மின்னஞ்சல் புதுப்பிப்பு வசதி' மூலம் தங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலை மாற்றிக்கொள்ளலாம் என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் 'தி இந்து'விடம் தெரிவித்தார். மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டைப்பதிவுகளில் புதிய மின்னஞ்சல் முகவரி புதுப்பிக்கப்பட்டதும், விண்ணப்பதாரர்கள் அந்தப் புதிய மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தித் தங்கள் கணக்கை பயன்படுத்தி, இணையதளத்திலிருந்து மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டையைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அந்த அதிகாரி கூறினார்.
முதியவர்கள் மற்றும் வயதான விண்ணப்பதாரர்கள் உட்படக் குடும்பத்தின் பல உறுப்பினர்களுக்கான மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டை சேவைகளை நிர்வகிக்க ஒரு பொதுவான பயனர் கணக்கையும் பயன்படுத்தலாம். இதைச் செயல்படுத்த, ஒவ்வொரு மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டையுடனும் தொடர்புடைய பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியை முதலில் 'மின்னஞ்சல் புதுப்பிப்பு வசதி' (Email Updation facility) மூலம் தனித்தனியாகப் புதுப்பிக்க வேண்டும். அனைத்து மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டைப் பதிவுகளும் ஒரே மின்னஞ்சல் முகவரியுடன் இணைக்கப்பட்ட பிறகு, ஒரே பயனர் கணக்கு மூலம் சமந்தப்பட்ட மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டைகளை நிர்வகிக்க முடியும். இதன் மூலம் இணைக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டைகளை எளிதாக அணுகவும் பதிவிறக்கம் செய்யவும் முடியும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டைகளைப் பதிவிறக்குவதில் உள்ள சிரமங்கள் குறித்துப் பேசிய அந்த அதிகாரி, பின்னணிச் செயலாக்கம் (backend processing) மற்றும் கணினிச் சரிபார்ப்புத் தேவைகள் காரணமாக இது போன்றச்செயல்முறைக்கு சில சமயங்களில் எதிர்பார்த்ததைவிட அதிக நேரம் எடுக்கலாம் என்று கூறினார். விண்ணப்பதாரர்கள் பதிவிறக்க செயல்முறையை இடையில் நிறுத்த வேண்டாம். பதிவிறக்கம் தாமதமாகிறது என்பதற்காக, இணையதளம் முடங்கிவிட்டது அல்லது செயல்பாட்டில் இல்லை என்பதாகிவிடாது என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
ஆரம்பகால மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டை பதிவின்போது மின்னஞ்சல் முகவரி பதிவு செய்யப்படாத நிலையில், விண்ணப்பதாரர்கள் தங்கள் தற்போதைய மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி இணையதளத்தில் ஒரு புதிய பயனர் கணக்கை உருவாக்க வேண்டும். பின்னர், தங்கள் மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டைப் பதிவுடன் தொடர்புடைய மின்னஞ்சலை விண்ணப்பதாரர்கள் தங்கள் மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டை எண், பிறந்த தேதி மற்றும் மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டையுடன் இணைக்கப்பட்ட கடவுச்சீட்டு (Passport) எண் ஆகியவற்றை வழங்குவதன் மூலம், இதர சேவைகள் பிரிவின்கீழ் மின்னஞ்சல் முகவரியைப் புதுப்பித்துக்கொள்ளும் வசதி உள்ளது. மின்னஞ்சல் முகவரி புதுப்பிக்கப்பட்டதும் அது மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டைப்பதிவுகளுடன் இணைக்கப்படும். இதன்மூலம் விண்ணப்பதாரர்கள் மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டை சேவைகளைப் பெறவும், இணையதளத்திலிருந்து தங்கள் மின்னணு இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் அட்டையை எளிதாகப் பதிவிறக்கம் செய்யமுடியும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
Original articles : What are e-OCI cards? -Vijaita Singh