மாட்டு இறைச்சிக்காக பசுக்கள் கொல்லப்படுவதற்கு (cow slaughter) தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், மாநிலச் சட்டங்களோ இதனை 'ஒழுங்குமுறைப்படுத்துவது' (regulation) பற்றிக் குறிப்பிடுகின்றன. அவை கூறுவது என்ன? - அமால் ஷேக்

 பக்ரீத் பண்டிகையை ஒட்டி பசுக்கள் கொல்லப்படுவதற்கு (cow slaughter) கட்டுப்பாடுகள் விதிக்கக் கோரி சமீபத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் விளைவாக, அரசு குறிப்பிட்டது போல, இச்செயலுக்கு "முழுமையான மற்றும் ஒட்டுமொத்தத் தடை" (absolute and blanket ban) விதிக்கும் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.


"பக்ரீத் பண்டிகைக்கு முந்தைய நாளிலோ அல்லது வேறு எந்த நாளிலோ எந்தவொரு பசுவோ அல்லது கன்றுக் குட்டியோ வெட்டப்படாமல் இருப்பதை" உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.


பொது இடங்களில் பசுவதை செய்யப்படுவதை தடுப்பது குறித்து மட்டுமே மனுவில் கோரப்பட்டிருந்த நிலையில், உயர்நீதிமன்றம் "முழுமையான மற்றும் ஒட்டுமொத்தத் தடை" (absolute and blanket ban) விதித்துள்ளதாக வாதிட்டு, மாநில அரசு ஒரு 'சிறப்பு அனுமதி மனுவை' (Special Leave Petition) தாக்கல் செய்துள்ளது.


மேலும், இந்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவானது மாநிலத்தின் சட்டக் கட்டமைப்பிற்கு முரணானது என்றும், அச்சட்டம் "முறைப்படுத்துவதற்கு மட்டுமே வழிவகுக்கிறதே தவிர, முழுமையான தடைக்கு அல்ல" என்றும் தமிழ்நாடு அரசு தனது மேல்முறையீட்டில் வாதிட்டுள்ளது. நீதிமன்றம் சட்டத்தை "மாற்றி எழுதுவதற்கும் அல்லது மறுவடிவமைப்பதற்கும்" புதிய வடிவம் கொடுத்துள்ளதாக கூறுகிறது. மேலும், சென்னை உயர்நீதிமன்றம் தனக்கு முன் இருந்த விவகாரத்தின் வரம்பைத் தாண்டிச் சென்று, "கோரப்படாத அல்லது வேண்டப்படாத" (neither pleaded nor requested) ஒரு நிவாரணத்தை வழங்கியுள்ளதாகவும் அரசு வாதிடுகிறது.


பசுவதை (cow slaughter) செய்வது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கூறியது என்ன?


பதிவு செய்யப்படாத அமைப்பான 'இந்து மக்கள் கட்சி தமிழகம்' (Indu Makkal Katchi Tamilagam) என்பதன் இளைஞரணி மாநிலப் பொதுச் செயலாளர் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட சூர்யா என்பவர், பக்ரீத் பண்டிகையின் போது "பொது இடங்களில்" பசுக்கள் கொல்லப்படுவதைத் (cow slaughter) தடுக்குமாறு அதிகாரிகளிடம் மே 18 அன்று ஒரு கோரிக்கை மனுவை அளித்தார்.


பின்னர், அந்தக் கோரிக்கையைப் பரிசீலித்து, பொது இடங்களில் பசுவதை செய்யப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடக் கோரி ஒரு ரிட் மனு (writ petition) தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஒரு பொதுநல வழக்காகக் (Public Interest Litigation (PIL)) கருதிய தனி நீதிபதி ஒருவர், இவ்வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு மாற்றினார்.


வழக்கில் எதிர்வாதிகளில் ஒரு தரப்பாக ஆஜரான காவல்துறையினர், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், "போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமலும், பிற சமூகத்தினரின் மத உணர்வுகளைப் புண்படுத்தாமலும், பொது இடம் இல்லாத ஒரு பகுதியில்" குர்பானி (விலங்கு பலி) கொடுப்பதற்காகத் தற்காலிமாகக் கொட்டகை (temporary shed) ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.


இந்த ஏற்பாடுகள் விதிமுறைக்கு உட்பட்டவை என்பதை ஒப்புக்கொள்ளும் வகையிலான ஒரு கருத்தாகவே நீதிமன்ற அமர்வு இதைப் புரிந்துகொண்டது. அதன் பிறகு, அந்த உத்தரவானது விதிமுறைகளுக்கு இணங்குவது (compliance) குறித்த கேள்வியையும் தாண்டிச் சென்றது. அரசியலமைப்பின் 48-வது பிரிவு, "அரசு விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை நவீன மற்றும் அறிவியல் பூர்வமான அடிப்படையில் அமைத்திட முயற்சிக்க வேண்டும். குறிப்பாக, பசுக்கள், கன்றுகள் மற்றும் பிற பால் தரும் மற்றும் உழைப்புக்கு உதவும் கால்நடைகளின் இனங்களைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும், அத்துடன் அவற்றைக் கொல்வதைத் தடை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறுகிறது. இது 'அரசு கொள்கை வழிகாட்டும் நெறிமுறைகளின்' (Directive Principles of State Policy (DPSP)) ஒரு பகுதியாகும். இவை அரசுக்கான வழிகாட்டுதல்களாக அமைந்தாலும், சட்டப்படி கட்டாயமாக அமல்படுத்தப்பட வேண்டியவை அல்ல.


பக்ரீத் பண்டிகையின்போது பசுவதை செய்யப்படுவது கட்டாயமானதல்ல என்று நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டது. மேலும், 1958-ம் ஆண்டின் தமிழ்நாடு கால்நடைப் பாதுகாப்புச் சட்டத்தின் (Tamil Nadu Animal Preservation Act) 4-வது பிரிவையும் அமர்வு சுட்டிக்காட்டியது. இப்பிரிவின்படி, ஒரு பசுவின் வயது பத்து ஆண்டுகளுக்கு மேல் இருப்பதோடு, அது வேலை செய்வதற்கும் இனப்பெருக்கத்திற்கும் தகுதியற்றது என்பதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே அதை கொல்ல அனுமதிக்கப்படுகிறது. அத்துடன், பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இறைச்சிக் கூடங்களில் பசுக்களைக் கொல்லத் தடை விதிக்கும் தமிழ்நாடு அரசின் அரசாணையையும் (GO Ms No. 1715) நீதிமன்றம் மேற்கோள் காட்டியது.


"அங்கீகரிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்களைத் தவிர வேறு எந்த இடத்திலும் எந்த விலங்கையும் வெட்டுவதை அதிகாரிகள் அனுமதிக்க முடியாது" என்று நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. மேலும், "பக்ரீத் பண்டிகையின் முந்தைய நாளிலோ அல்லது வேறு எந்த நாளிலோ பசுவோ கன்றோ கொல்லக்கூடாது" என்றும் குறிப்பிட்டு, அதன் மூலம் ஒரு பொதுவான உத்தரவைப் பிறப்பித்தது.


மாநில அரசின் மேல்முறையீட்டு வாதம் என்ன?


பொது இடங்களில் பசுவதை செய்யப்படுவதைத் தடுப்பதற்கான ஒரு உத்தரவை மட்டுமே கோரிய மனுவிலிருந்து உயர்நீதிமன்றத்தின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று அந்த மனு வாதிடுகிறது. இருப்பினும், நீதிமன்றம் "பசுக்கள் மற்றும் கன்றுகளை வெட்டுவதற்கு முழுமையான மற்றும் பொதுவான தடையை" விதித்துள்ளது. இது மனுதாரரால் கோரப்படாத ஒரு நிவாரணமாகும்.


உயர்நீதிமன்றத்தின் உத்தரவு, "தமிழ்நாடு மாநிலத்தில் விலங்குகளை கொல்லும் நடைமுறையை நிர்வகிக்கும் சட்டக் கட்டமைப்புக்கு முரணானது" என்றும், மேலும் "வெளிப்படையாகவும் சந்தேகத்திற்கிடமின்றியும் ஒழுங்குமுறைக்கு மட்டுமே வழிவகுக்கும், தடைக்கு அல்ல" என்று கூறும் நிர்வாகச் சட்டத்தை மீண்டும் எழுதுவதற்கும் மறுவடிவமைப்பதற்கும் சமமானது என்றும் அது குறிப்பிடுகிறது.


பக்ரீத் பண்டிகையின் போது, ​​இறைச்சிக் கூடங்களாக அங்கீகரிக்கப்படாத இடங்களில் பசுக்களையும் கன்றுகளையும் வெட்டலாமா என்பது மட்டுமே உயர்நீதிமன்றத்தின் முன் இருந்த பிரச்சினை என்று அரசு தரப்பு வாதிட்டது. இருப்பினும், நீதிமன்றம், "பரிசீலனையில் இருந்த குறிப்பிட்ட விவகாரத்தையும் தாண்டி", தனக்கு முன் இருந்த சர்ச்சைக்கு அப்பாற்பட்ட ஒரு தடையை விதித்தது.


இந்த மேல்முறையீடு, அதன் தீர்ப்பிற்குள்ளேயே ஒரு முரண்பாடு இருப்பதாகக் குறிப்பிடுவதையும் சுட்டிக்காட்டுகிறது. நீதிமன்ற உத்தரவின் ஒரு பகுதி, அங்கீகரிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்களில் பசுவதை நடைபெறலாம் என்பதை அங்கீகரிக்கிறது என்றும், மற்றொரு பகுதி பசுவதையை முற்றிலுமாகத் தடை செய்கிறது என்றும் அது கூறுகிறது. உயர்நீதிமன்றம், "முரண்பாடாக, பசுவதைக்கு ஒரு முழுமையான மற்றும் ஒட்டுமொத்தத் தடையையும் விதித்துள்ளது" என்று மனு கூறுகிறது.


மேலும், அரசாணை எண். 1715 (GO Ms No. 1715) உண்மையான மனுதாரரால் ஒருபோதும் ஆதாரமாகக் கொள்ளப்படவில்லை என்றும், அதன் செல்லுபடியாகும் தன்மை அல்லது பொருந்தக்கூடிய தன்மை உயர்நீதிமன்றத்தின் முன் ஒருபோதும் சர்ச்சையில் இருக்கவில்லை என்றும் அந்த மனு குறிப்பிடுகிறது. இருப்பினும், நீதிமன்றம் "தன்னுடைய சொந்த முயற்சியால்" அதை ஆதாரமாகக் கொண்டது. "இந்த அரசாணையை நீதிமன்றம் அடிப்படையாகக் கொள்ளப்போகிறது என்பது குறித்து அரசுக்கு எந்தவித முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை" என்று மேல்முறையீட்டு மனு வாதிடுகிறது. மேலும், "பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் இது குறித்து நேரடியாகக் கூறாமல் உயர்நீதிமன்றம் இந்த அரசாணையை சார்ந்திருப்பது, இயற்கை நீதியின் கோட்பாடுகளைக் கடுமையாக மீறுவதைக் காட்டுகிறது."


"ஒரு நிர்வாக உத்தரவு/அரசாணை சட்டப்பூர்வ விதிகளுக்கு முரணாகவோ அல்லது ஒவ்வாத வகையிலோ இருக்க முடியாது" என்றும், சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களை நிர்வாக உத்தரவுகள் மீற முடியாது என்றும் அந்த மனு மேலும் குறிப்பிடுகிறது.




பக்ரீத் பண்டிகையின்போது பசுவதை செய்யப்படுவது அவசியமா என்பது குறித்த உயர்நீதிமன்றத்தின் விவாதத்தையும் இந்த மேல்முறையீடு கேள்விக்குள்ளாக்குகிறது. மாநில அரசின் கூற்றுப்படி, இந்த வழக்கில் இரு தரப்பினராலும் இந்தக் கேள்வி ஒருபோதும் எழுப்பப்படவில்லை. இது தற்போதைய வழக்கிற்கு "முற்றிலும் தொடர்பில்லாத" ஒரு பிரச்சினை என்று அது கூறுகிறது.


இந்த உத்தரவினால் ஏற்படக்கூடிய பொருளாதார மற்றும் நிர்வாகரீதியான விளைவுகளையும் மனு சுட்டிக்காட்டுகிறது. "ஒரு முழுமையான தடை, சட்டப்பூர்வ கட்டமைப்பிற்குள் செயல்படும் சிறு மற்றும் குறு விவசாயிகள், உரிமம் பெற்ற வர்த்தகர்கள் மற்றும் சட்டவரம்பிற்குள் செயல்படும் தொடர்புடைய துறைகள்மீது ஒரு குறிப்பிடத்தக்க பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும்." இந்த உத்தரவு “அதன் விளைவுகளில் பேரழிவை ஏற்படுத்தும்” என்று அது விவரிக்கிறது. மேலும், இது மாநில சட்டத்தின்கீழ் நிறுவப்பட்டுள்ள தற்போதைய உரிமம், சான்றிதழ் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளை சீர்குலைக்கக்கூடும் என்றும் கூறுகிறது.


தடை உத்தரவு (stay) பிறப்பிக்கப்படாவிட்டால், தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பு பயனற்றதாகி, ஒரு “நிர்வாகக் குழப்பத்தை” உருவாக்கும் என்று மாநில அரசு வாதிடுகிறது.


சட்டம் என்ன சொல்கிறது?


தமிழ்நாடு சட்டங்கள் பசுவதை செய்யப்படுவதை முற்றிலுமாகத் தடை செய்வதற்குப் பதிலாக ஒழுங்குபடுத்துகின்றன என்பதே மாநில அரசின் முக்கிய வாதமாகும். 1958-ம் ஆண்டின் தமிழ்நாடு விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் (Tamil Nadu Animal Preservation Act) பிரிவு-4, ஒரு தகுதிவாய்ந்த அதிகாரம் அனுமதிச் சான்றிதழ் வழங்கினால் மட்டுமே, சில விலங்குகளை வெட்டமுடியாது என்று கூறுகிறது. அத்தகைய சான்றிதழை வழங்குவதற்கான நிபந்தனைகளையும் சட்டம் வகுக்கிறது.


பிரிவு-6, அங்கீகரிக்கப்படாத இடங்களில் பசுவதை செய்யப்படுவதைத் தடை செய்கிறது. இந்த விதிகள் ஒரு முழுமையான தடையை ஏற்படுத்தாமல், உரிமம் மற்றும் சான்றிதழ் வழங்கும் முறையை நிறுவுகின்றன என்று அரசின் மனு வாதிடுகிறது. “சட்டத்தின் திட்டத்திலிருந்து, பசுவதை செய்யப்படுவதை ஒழுங்குபடுத்துவது மட்டுமே இதன் நோக்கம் என்பதும், பசுவதை செய்யப்படுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதும் தெளிவாகத் தெரிகிறது” என்று அது கூறுகிறது.


1998-ம் ஆண்டின் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் (Tamil Nadu Urban Local Bodies Act) போன்ற நகராட்சிச் சட்டத்தின்கீழ், இந்த மனுவானது பிரிவு 113-ஐச் சார்ந்திருந்தது. அப்பிரிவு, உள்ளாட்சி அமைப்புகள் இறைச்சிக் கூடங்களை வழங்கவேண்டும் என்றும், ஆணையரால் வழங்கப்பட்ட உரிமம் இல்லாமல் "ஒரு தனியார் இறைச்சிக் கூடத்தை" அல்லது "விலங்குகளின் தோல் அல்லது இறைச்சிகளைப் பதப்படுத்தும் எந்தவொரு இடத்தையும்" நிறுவுவதையோ அல்லது பயன்படுத்துவதையோ தடைசெய்கிறது. 2023-ம் ஆண்டின் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் (Tamil Nadu Urban Local Bodies Rules), இறைச்சிக் கூடங்களைப் பராமரிப்பதற்கான தரநிலைகளையும், அவற்றுக்கு உரிமம் வழங்குவதற்கான நடைமுறைகளையும் மேலும் பரிந்துரைக்கின்றன.


பசுவதை செய்வதேயே தடை செய்யப்பட்டிருந்தால், இந்த விதிமுறைகளுக்கு எந்தச் சட்ட விதிகள் அர்த்தமற்றதாகிவிடும் என்று மாநில அரசு வாதிடுகிறது.


தமிழ்நாடு அரசும் மத்திய சட்டங்களையே அடிப்படையாகக் கொள்கிறது. 'விலங்குகள் மீதான கொடுமைத் தடுப்புச் சட்டம்-1960'-ன் (Prevention of Cruelty to Animals Act) கீழ், இறைச்சிக் கூடங்களின் உள்கட்டமைப்பு, பராமரிப்பு மற்றும் செயல்பாடு குறித்து அரசுகளுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஆலோசனை வழங்கும் அதிகாரம் 'விலங்கு நல வாரியத்திற்கு' (Animal Welfare Board) வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டமும்கூட பசுவதை செய்வதைத் தடை செய்யவில்லை என்று மனுதாரர் குறிப்பிடுகிறார்.


அதேபோல, 'விலங்குகள் மீதான கொடுமைத் தடுப்பு (இறைச்சிக் கூடங்கள்) விதிகள்-2001' இன் (Prevention of Cruelty to Animals (Slaughter House) Rules) படி, நகராட்சிப் பகுதிகளுக்குள் உள்ள விலங்குகளை அங்கீகரிக்கப்பட்ட அல்லது உரிமம் பெற்ற இறைச்சிக் கூடங்களில் மட்டுமே கொல்ல முடியும். "பசுவதை செய்யும் நடைமுறை மற்றும் இறைச்சிக் கூடங்களுக்கான அங்கீகாரம் ஆகியவற்றை முறைப்படுத்துவதற்காக மத்திய அரசு விரிவான விதிமுறைகளை வகுத்திருப்பதே, பசுவதை செய்வது தடை செய்யப்பட்ட செயல் அல்ல என்பதைக் காட்டுகிறது" என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Original articles : Madras HC orders cow slaughter ban, but state’s laws speak of regulation. Here’s what they say -Amaal Sheikh

Share: