திவால் மற்றும் கடன் செலுத்த இயலாமைச் சட்டத்தின்கீழ் (Insolvency and Bankruptcy Code (IBC)) தற்காலிக தடைக்காலம் (Moratorium) வழங்கும் பாதுகாப்பு, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act (PMLA)) கீழ் ஒரே நேரத்தில் முடக்கப்படும் சொத்துக்களுக்கும் பொருந்துமா என்பதுதான் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (National Company Law Appellate Tribunal (NCLAT)) முன் இருந்த கேள்வியாகும்.
தற்போதைய செய்தி: தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், திவால் மற்றும் கடன் செலுத்த இயலாமைச் சட்டத்தின் (IBC) கீழ் உள்ள தடை ஆணை, "குற்றச் செயல் மூலம் கிடைத்த வருமானம்" எனக் கூறப்படும் சொத்துக்களை, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் பறிமுதல் செய்வதிலிருந்து பாதுகாக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. சித்தி விநாயக் லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் திவால் நடவடிக்கைகளில் ஈடுபட்டுருந்த போதிலும், அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate (ED)) அதன் சொத்துக்களை பறிமுதல் செய்திருந்தது. நிறுவனத்தின் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ், திவால் மற்றும் நொடிப்பு சட்டம் என்ற புனித கங்கையாக மாற்றி கழுவிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் நாடாளுமன்றம் திவால் மற்றும் கடன் செலுத்த இயலாமைச் சட்டத்தை இயற்றவில்லை என்று தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (NCLAT) முதன்மை அமர்வு ஜூன் 30 அன்று குறிப்பிட்டது.
என்ன நடந்தது?
இந்த வழக்கு, சித்தி விநாயக் லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் தொடர்பானது. அந்த நிறுவனத்தின் முன்னணி நிறுவானார்கள் மீது வங்கி மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல், குற்றச் சதி மற்றும் ₹1,600 கோடிக்கும் அதிகமான கடன் தொகையை முறைகேடாக வேறு நோக்கங்களுக்கு மாற்றிப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை, 2017-ஆம் ஆண்டில் பணமோச தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியது. பின்னர் நிறுவனத்தின் சொத்துக்களைத் தற்காலிகமாகப் பறிமுதல் செய்தது. சில மாதங்களுக்குப் பிறகு, அந்தநிறுவனம் பெருநிறுவன திவால்நிலைத் தீர்வுச் செயல்முறையில் நுழைந்ததால், திவால் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 14-ன் கீழ் தடை உத்தரவு செயல்படுத்தப்பட்டது.
திவால் மற்றும் கடன் செலுத்த இயலாமைச் சட்டத்தின்கீழ், 'தற்காலிக தடைக்காலம்' (Moratorium) என்பது கடனைத் திரும்பப் பெறுதல், பாதுகாப்பு உரிமைகளை அமல்படுத்துதல், சொத்துக்களை விற்பது அல்லது மாற்றுவது மற்றும் தேவையான ஒப்பந்தங்களை ரத்து செய்வது போன்ற எந்தவொரு நீதித்துறை நடவடிக்கைகளையும் பெருநிறுவனத்திற்கு எதிராகத் தொடங்கவோ அல்லது தொடரவோ முடியாத ஒரு காலகட்டமாக விவரிக்கப்படுகிறது. கடன்தடை காலத்தை அறிவிப்பதன் முக்கிய நோக்கம், நிறுவன திவால் தீர்வு செயல்முறை (Corporate insolvency resolution process (CIRP)) நடைபெறும் காலத்தில் நிறுவனக் கடனாளியின் (Corporate Debtor) சொத்துகள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதாகும். இல்லையெனில், நிறுவனத்திற்கு எதிராக நடைபெற்றுவரும் வழக்குகளின்போது, அதிகாரம் பெற்ற எந்த நீதிமன்றமும் அல்லது சட்ட அமைப்பும் அந்தச் சொத்துகளை பறிமுதல் செய்யக்கூடும்.
தற்காலிக தடைக்காலத்தின் (Moratorium) போது, அமலாக்கத்துறை நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளில் ஒன்றிலிருந்து ₹2.29 கோடியை முடக்கி வைத்தது. 2019-ஆம் ஆண்டில், நிறுவனத்தைக் கலைக்கும் நடவடிக்கைகள் நடந்துகொண்டிருந்தபோது, அமலாக்கத்துறை நிறுவனத்திற்குச் சொந்தமான 6,000-க்கும் மேற்பட்ட வாகனங்களைத் தற்காலிகமாகப் பறிமுதல் செய்தது. கடன் வழங்குநர்களுக்குக் கிடைக்கும் சொத்துக்களைக் குறைப்பதன் மூலம், இந்த நடவடிக்கைகள் IBC தடைக்காலத்தை மீறுகின்றன என்று வாதிட்டு, கலைப்பு அதிகாரி தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தில் (NCLT) இந்த நடவடிக்கைகளை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அந்த மனுவை நிராகரித்த பிறகு, இந்த விவகாரம் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயமான தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்க்குச் சென்றது.
திவால் மற்றும் கடன் செலுத்த இயலாமைச் சட்டமும் (IBC) பணமோசடி தடுப்புச் சட்டமும் (Prevention of Money Laundering Act (PMLA)) ஏன் முரண்படுகின்றன?
இந்த வழக்கில் உள்ள முக்கிய சிக்கல், இரண்டு வெவ்வேறு நோக்கங்களைக் கொண்ட இரண்டு சட்டங்கள் சந்திக்கும் இடத்தில் உருவானது.
திவால் மற்றும் கடன் செலுத்த இயலாமைச் சட்டம் ஆனது, ஒரு நிறுவனத்தின் சொத்துக்களைப் பாதுகாப்பதன் மூலமும், கடனளிப்போர் தங்களுக்குரிய தொகையை சரியான முறையில் வசூலிப்பதை உறுதி செய்வதன் மூலமும், பெருநிறுவனத் திவால்நிலையைத் தீர்க்க முயல்கிறது. இதை எளிதாக்குவதற்காக, பிரிவு 14 ஒரு தற்காலிகத் தடையை (moratorium) விதிக்கிறது. இது, திவால் நடவடிக்கைகள் தொடங்கியவுடன், பெருநிறுவனக் கடனாளிக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் மீட்புச் செயல்களைப் பொதுவாகத் தடை செய்கிறது.
மறுபுறம், பணமோச தடுப்புச் சட்டம், 'குற்றச் செயல் மூலம் கிடைத்த வருமானம்' எனக் கூறப்படும் சொத்துக்களை அடையாளம் காணவும், அவற்றை இணைக்கவும், இறுதியாக அதனை பறிமுதல் செய்யவும் அமலாக்க இயக்குநரகத்திற்கு (ED) அதிகாரம் அளிக்கிறது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் (Prevention of Money Laundering Act (PMLA)), ஒரே நேரத்தில் நடவடிக்கைகளுக்கு உட்பட்டிருக்கும் சொத்துக்களுக்கும், திவால் மற்றும் கடன் செலுத்த இயலாமைச் சட்டத்தின் தடை உத்தரவின்கீழ் கிடைக்கும் பாதுகாப்பு நீட்டிக்கப்படுமா என்பதே தீர்ப்பாயத்தின் முன் இருந்த சட்டரீதியான கேள்வியாகும்.
வழங்கப்பட்ட தீர்ப்பு என்ன, அது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?
இந்த சர்ச்சையானது கலைப்பு அதிகாரிக்கும் அமலாக்க இயக்குநரகத்திற்கும் ஆகியோருக்கிடையேயான பிரச்சினை அல்ல. மாறாக, திவால் மற்றும் கடன் செலுத்த இயலாமைச் சட்டம் மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டத்திற்கு இடையிலானதாகும் என்றும் இந்த இரண்டு சட்டங்களும் வெவ்வேறு நோக்கங்களுக்காகவும், தனித்தனி சட்டப் பிரிவுகளில் செயல்படுகின்றன என்று கூறியது.
ஒரு நிறுவனத்தின் சட்டப்பூர்வமான சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் கடனளிப்பவர்களுக்கான மதிப்பை அதிகப்படுத்துவதற்காகவே திவால் மற்றும் கடன் செலுத்த இயலாமைச் சட்டம் இயற்றப்பட்டது என்றும், குற்றச் செயல்களிலிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் செல்வத்தைச் சட்டப்பூர்வமாக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்றும் அது தீர்ப்பளித்தது. எனவே, பிரிவு 14-ன் கீழ் விதிக்கப்பட்ட தடையானது, சட்டப்பூர்வமாகப் பெறப்பட்ட சொத்துக்களை மட்டுமே பாதுகாக்கிறது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ், குற்றச் செயல்களின் மூலம் பெறப்பட்டதாகக் கூறப்படும் சொத்துக்களுக்கு இது பொருந்தாது.
திவால் நடவடிக்கைகளின்போது, கடனளிப்பவர்கள் (Creditors) தங்களுக்கு கிடைக்க வேண்டிய தொகையில் குறைவான தொகையை ஏற்றுக்கொள்வது வழக்கமான நடைமுறையாக இருந்தாலும், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் அடிப்படை நோக்கமான தேசிய நலனை எந்தச் சூழலிலும் பாதிக்கவோ அல்லது சமரசம் செய்யவோ முடியாது என்று தெரிவித்தது. நிறுவனத்தின் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ், திவால் மற்றும் நொடிப்பு சட்டம் என்ற புனித கங்கையாக மாற்றி கழுவிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் நாடாளுமன்றம் திவால் மற்றும் கடன் செலுத்த இயலாமைச் சட்டத்தை இயற்றவில்லை என்று கூறியது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் பிறப்பிக்கப்பட்ட பறிமுதல் உத்தரவுகளின் செல்லுபடியை திவால் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தீர்ப்பாயங்கள் (insolvency tribunals) ஆராய முடியாது என்று தீர்ப்பாயம் கூறியது. எம்பஸி பிராப்பர்ட்டி டெவலப்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் vs கர்நாடக அரசு (Embassy Property Developments Pvt. Ltd. v. State of Karnataka) வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேற்கோள்காட்டி, அது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிரான எந்தவொரு சவாலும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் தீர்ப்பளிக்கும் வழிமுறையின் மூலமே தொடரவேண்டும் என்று தீர்ப்பாயம் கூறியது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களைத் திரும்பப் பெறுவதற்காக பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ், உள்ள சிறப்பு நீதிமன்றத்தை அணுகுமாறு திவால் தீர்வு நிபுணர்களுக்கு (Insolvency Professionals (IPs)) அறிவுறுத்தி, இந்திய திவால் மற்றும் கடன் செலுத்த இயலாமைச் வாரியம் 2025-ல் வெளியிட்ட சுற்றறிக்கையையும் தீர்ப்பாயம் குறிப்பிட்டது.
குற்றச்செயல்களின் மூலம் கிடைத்த வருமானம் என்று கூறப்படும் சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் முடக்குவதையோ அல்லது தக்கவைத்துக் கொள்வதையோ தடுப்பதற்கு, திவால் நடவடிக்கைகளைப் (insolvency proceedings) பயன்படுத்த முடியாது என்று இந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.
Original articles : Can the ED attach a company’s assets after it enters insolvency? -Rizmi Lia M.