சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund (IMF)) குறைந்த தரநிலைகளானது, தரவு மேம்படுத்தல்களில் ஏற்படும் தாமதங்கள் எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதைக் காட்டுகிறது.
இந்தியாவின் தேசிய கணக்கு புள்ளிவிவரங்களுக்கு, சர்வதேச நாணய நிதியம் (IMF) 'C' தரநிலைகளை வழங்கியுள்ளது. இது, இந்தியாவிற்கு கவலை அளிக்கும் விஷயமாக இருக்க வேண்டும். ஏனெனில், இந்தியா தரவுகளைச் சேகரித்து பகுப்பாய்வு செய்வதற்கு மிகவும் வலுவான அமைப்பைக் கொண்டுள்ளது. 'C' தரநிலையானது இரண்டாவது மிகக் குறைந்த தரநிலையாகும். அதாவது, பொருளாதாரத்தின் போதுமான கண்காணிப்பைத் தடுக்கும் தரவுகளில் சில சிக்கல்கள் உள்ளன என்பதைக் குறிக்கிறது. தேசிய கணக்குகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் மொத்த மதிப்புக் கூட்டல் (Gross Value Added(GVA)) போன்ற பரந்த பேரியல் குறிகாட்டிகள் மட்டுமல்லாமல், துறைசார் அளவிலான தரவு மற்றும் முதலீட்டு அளவீடுகள், நுகர்வோர் செலவினம் மற்றும் ஏற்றுமதிகள் பற்றிய தகவல்களும் இதில் அடங்கும். எனவே, இந்த அளவீடுகளில் உள்ள சிக்கல்கள் பயனுள்ள மற்றும் இலக்கு வைக்கப்பட்ட கொள்கைகளை உருவாக்குவதை கடினமாக்குகின்றன. 'C' தரநிலை, அதன் தேசிய கணக்குகளைப் பொறுத்தவரை சீனாவைப் போலவே அதே பிரிவில் இந்தியாவை வைக்கிறது. இது ஒரு நல்ல இடம் அல்ல. இந்தியாவின் தேசிய கணக்குகளில் உள்ள குறைபாடுகளை முன்னிலைப்படுத்தி சுட்டிக்காட்டுவது சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இதுவே முதல் முறையும் அல்ல. தேசிய கணக்கு தரவுகளில் IMF-ன் முக்கியப் பிரச்சனை என்னவென்றால், அதன் அடிப்படை ஆண்டு 2011-12 மிகவும் பழமையானது என்பதான். இந்த பிரச்சனை இதற்கு முன்பு பல முறை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா நீண்ட காலமாக காலாவதியான தரவுகளுடன் போராடி வருகிறது. தொழில்துறை உற்பத்திக் குறியீடு (Index of Industrial Production (IIP)) மற்றும் நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index (CPI)) இரண்டும் 2011-12-ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்டுள்ளன. உண்மையில், இந்தியாவின் நுகர்வோர் விலை குறியீடு (CPI) 'A' தரநிலையைப் பெறாமல் 'B' தரநிலையைப் பெற்றதற்கான காரணம் காலாவதியான அடிப்படை ஆண்டுதான் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) கூட கூறியது. காலாவதியான அடிப்படை ஆண்டு மற்றும் நுகர்வோர் விலை குறியீட்டில் (CPI) உணவின் அதிகப்படியான மதிப்பீடு ஆகியவை இந்தியாவால் விலை மாற்றங்களை துல்லியமாக கையாள முடியவில்லை. இதன் விளைவாக, இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) பணவியல் கொள்கையும் பலவீனமடையும் நிலை உள்ளது.
தேசிய கணக்குகள், நுகர்வோர் விலை குறியீடு (CPI) மற்றும் தொழில்துறை உற்பத்தி குறியீடு (IIP) ஆகியவற்றிற்கான அடிப்படை ஆண்டுகள் மற்றும் வழிமுறைகளைப் புதுப்பிக்கும் பணியில் அரசாங்கம் தற்போது ஈடுபட்டுள்ளது. இதற்கான புதிய தொடர் 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட உள்ளது. இந்தியாவில் தேசிய கணக்கு புள்ளிவிவரங்களில் உள்ள மிகப்பெரிய பிரச்சினை மற்றும் அதிகக் கவனம் தேவைப்படும் பகுதி முறைசாரா துறையை துல்லியமாக கையாள முடியாததுதான். முறைசாரா துறை (informal sector) பதிவு செய்யப்படாத மற்றும் ரொக்க அடிப்படையிலான நிறுவனங்களைக் கொண்டிருப்பதால் அதை அளவிடுவது கடினம். இருப்பினும், முறைசாரா துறையின் மிகவும் துல்லியமான மதிப்பீடு பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் மற்றும் அளவைப் பாதிக்கும் என்பது மட்டுமல்லாமல், இந்தியாவின் பெரும்பாலான மக்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதற்கான முக்கியமான செயல்திறனையும் இது வழங்கும். இந்தியாவின் தேசிய கணக்கு மதிப்பீடு பல ஆண்டுகளாக மேம்பட்டுள்ளது. 2011-12 தொடரில் MCA-21 தரவுத்தளம் (MCA-21 database) மூலம் இந்தியாவின் பெருநிறுவனத் துறையிலிருந்து விரிவான தரகள் சேர்க்கப்பட்டன. இது முந்தைய வருடாந்திர தொழில்துறை கணக்கெடுப்பை மாற்றியது. அடுத்த ஆண்டு தொடரில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டில் சரக்கு மற்றும் சேவை (GST) தரவைச் சேர்ப்பது வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும். தரவு வெளியீடுகள் மற்றும் மேம்படுத்தல்களில் ஏற்படும் தாமதங்கள் எவ்வளவு சேதத்தை ஏற்படுத்தும் என்பதை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தரம் மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.