எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force (BSF)) காவலர் பணியிடங்களில் 50 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்த பிறகு, முன்னாள் அக்னிவீரர்களுக்கான மத்திய ஆயுதக் காவல் படைகளின் (Central Armed Police Forces (CAPFs) 'குரூப் C' (Group C)) பதவிகளில் இடஒதுக்கீட்டை அதிகரிக்க உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தப் புதிய கொள்கை அரசின் முந்தைய முடிவிலிருந்து ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது.
அக்னி வீரர்களின் முதல் குழுவினர் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு பல மாதங்களுக்கு முன்பே, மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு முடிவை எடுத்துள்ளது. அதன்படி, முன்னாள் அக்னிவீரர்களுக்கான மத்திய சமூக ஆயுதக் காவல் படைகளின் (CAPFs) 'குரூப் சி' பணிகளில் உள்ள இட ஒதுக்கீட்டை, தற்போதுள்ள 10 சதவீதம் என்பதிலிருந்து 50 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ஒரு மூத்த அரசு அதிகாரி தெரிவித்து உள்ளார்.
2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று, எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) காலியாக உள்ள காவலர் பணியிடங்களில் 50 சதவீத இடங்கள் முன்னாள் அக்னிவீரர்களுக்காக ஒதுக்கப்படும் என்று அமைச்சகம் அறிவித்தது. உடல் தகுதித் தேர்வு மற்றும் உடற்திறன் சோதனையிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், மற்ற வழக்கமான விண்ணப்பதாரர்களைப் போலவே முன்னாள் அக்னிவீரர்களும் எழுத்துத் தேர்வில் பங்கேற்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய ஆயுதக் காவல் படைகளில் உள்ள அனைத்து ‘குரூப் C’ பணியிடங்களுக்கான ஆள் சேர்ப்பு விதிகள், வரும் நாட்களில் படிப்படியாகத் திருத்தப்படும் என்று அந்த அதிகாரி கூறினார். மத்திய ஆயுதக் காவல் படைகளில், தற்காலிகமாகப் பணியாற்றிய ஆயுதப்படை வீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்கான அமைச்சகத்தின் முந்தைய முடிவில் இருந்து இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகக் கருதப்படுகிறது.
அக்னிவீரரின் குடும்பத்துக்கு வழக்கமான வீரர்களுக்கு வழங்கப்படும் மரண இழப்பீடு போன்று சமமான பலன்களை வழங்கக் கோரிய வழக்கில், மத்திய அரசின் பதிலை மும்பை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஆள்சேர்ப்பு கொள்கை (Recruitment Policy) வன்முறை போராட்டங்களைச் சந்தித்ததுடன், 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் முக்கியப் பிரச்சினையாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. போராட்டங்களைத் தொடர்ந்து, மத்திய ஆயுதப்படை (CAPFs) பணியிடங்களில் 10 சதவீத இடங்கள், அக்னிபாத் திட்டத்தின்கீழ் நான்கு ஆண்டுகள் சேவை முடித்த ஆயுதப்படை வீரர்களுக்கு ஒதுக்கப்படும் என்று அமைச்சகம் அறிவித்தது. மேலும், முதல் தொகுதி அக்னிவீரர்களுக்கு ஆள்சேர்ப்பில் ஐந்து ஆண்டுகள் வயது தளர்வு மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் பிரிவினருக்கு மூன்று ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படும் என்றும் அறிவித்தது. முதல் தொகுதி அக்னிவீரர்கள் 2026-ஆம் ஆண்டு மத்திய ஆயுதக் காவல் படைகளில் (CAPFs) சேருவதற்குத் தகுதி பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்னி வீரர்களை தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் பணியமர்த்தும் மத்திய அரசின் திட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19, 2025), மத்திய உள்துறை அமைச்சகம் எல்லைப் பாதுகாப்புப் படையின் (BSF) காவலர் (General Duty Cadre) ஆட்சேர்ப்பு விதிகளைத் திருத்தி, புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திருத்தத்தின்படி, நேரடி ஆட்சேர்ப்பில் ஒவ்வொரு ஆண்டும் 50 சதவீத காலியிடங்கள் முன்னாள் அக்னிவீரர்களுக்கு ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10 சதவீத முன்னாள் ராணுவ வீரர்களுக்காகவும் ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீதமுள்ள இடங்களுக்கு வழக்கமான ஆட்சேர்ப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது. முன்னாள் அக்னிவீரர்கள் உடல் தகுதித் தேர்வில் சில விலக்குகள் பெறுவர். ஆனால், எழுத்துத் தேர்வு அனைவருக்கும் கட்டாயம் என்று விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முதல் கட்டத்தில், முன்னாள் அக்னிவீரர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஐம்பது சதவீத காலியிடங்களுக்கு, நியமனப் பணிகள் முதன்மை ஒருங்கிணைப்புப் படைப்பிரிவால் (Nodal Force) நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டத்தில், மீதருக்கும் நாற்பத்தி ஏழு சதவீத காலியிடங்களுக்கு (முன்னாள் படைவீரர்களுக்கான பத்து சதவீதம் உட்பட), முன்னாள் அக்னிவீரர்கள் அல்லாத பிற விண்ணப்பதாரர்களுக்கான நியமனப் பணிகள் பணியாளர் தேர்வு ஆணையத்தால் (Staff Selection Commission) நடத்தப்படும். அத்துடன் முதல் கட்டத்தில் நிரப்பப்படாத, ஒரு குறிப்பிட்ட பிரிவில் உள்ள முன்னாள் அக்னிவீரர்களின் காலியிடங்களும் சேர்க்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) பிரிவில் உள்ள வர்த்தகப் பணியாளர்கள் பதவியில் இருந்து காவலர் பதவிக்குச் சேர்வதற்கான வயது வரம்பு, தற்போதுள்ள 30 வயதிலிருந்து 35 வயதாகத் தளர்த்தப்பட்டுள்ளது. மேலும், குறைந்தபட்ச பணிக்காலம் மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்ற படைகளுக்குப் பணிமாற்றம் செய்யப்படுவதற்கான அதிகபட்ச வயது வரம்பு, தற்போதுள்ள 52 வயதிலிருந்து 56 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய ஆயுதக் காவல் படைகளில் (CAPFs) மத்திய தொழில் பாதுகாப்புப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), மத்திய ரிசர்வ் காவல் படை, இந்திய-திபெத் எல்லைக் காவல் படை, ஆயுதம் ஏந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (Sashastra Seema Bal), மற்றும் அசாம் ஆயுதப்படை ஆகியவை அடங்கும்.
Original link:
Govt. to increase reservation for Agniveers in CAPFs to 50%