தொழில்நுட்பமும், செயலிகளும் மட்டும் பொறுப்பான பணியிடத்தை உருவாக்கவோ அல்லது பொதுநலனுக்காகச் செயல்பட ஊழியர்களை ஊக்குவிக்கவோ முடியாது.
தூய்மைப் பணியாளர்கள் வேலையில் தங்களை புகைப்படம் எடுப்பது அல்லது படம் பிடிப்பது அதிகரித்து வருகிறது. அவர்கள் தங்கள் வேலையைச் செய்வதை உறுதி செய்வதற்காக இது செய்யப்படுகிறது. இது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது.
பயோமெட்ரிக் காலம்
எங்கோ ஒரு இடத்தில், இந்த எரிச்சலூட்டும் பிரச்சனைக்கு டிஜிட்டல் கருவிகள் முக்கியமானதாக உருவெடுத்தன. உதாரணமாக, பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் சில அரசாங்கங்கள் சரியான நேரத்தில் வருவதை உறுதி செய்வதற்காக பயோமெட்ரிக் கருவிகளை அறிமுகப்படுத்தின. சில சூழல்களில், பயோமெட்ரிக் வருகை சரியான நேரத்தில் குறிக்கப்படாவிட்டால், ஊழியர்கள் துறை ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற எச்சரிக்கைகள் அளிக்கப்பட்டிருந்தன. அந்த நேரத்தில், ஜார்க்கண்டில் உள்ள குந்தி தொகுதியில், இணையம் மாலையில் வேகமாக இருந்ததால், சில அர்ப்பணிப்புள்ள அதிகாரிகள் அலுவலக நேரத்திற்குப் பிறகும் இணைய பணிகளை முடிக்க தங்கினர். நேரக் கணக்கெடுப்பு முறை வந்த பிறகு, வேலையை முடிப்பதில் இருந்து சரியான நேரத்தில் பயோமெட்ரிக் வருகையை குறிப்பது வரை அவர்களின் கவனம் மாறியது. ராஜஸ்தானில் நடத்தப்பட்ட சீரற்றக் கட்டுப்பாட்டு சோதனையில் (Randomized Controlled Trial (RCT)), அரசு செவிலியர்களுக்கான பயோமெட்ரிக் வருகை கண்காணிப்பை சோதித்தது. காலப்போக்கில், இந்த முறை உண்மையில் அதிகமான செவிலியர்கள் பணிக்கு வராமல் இருப்பதற்கு வழிவகுத்தது என்று கண்டறியப்பட்டது.
இன்னொரு உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதத் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS)) திட்டத்தில், தொழிலாளர் வருகைப் பதிவு பெரும்பாலும் ஊதியத்தைத் திருட போலியாக சில சமயங்களில் காட்டப்படுகிறன. போலி வருகைப் பதிவின் அடிப்படையில் ஊதியங்கள் பதிவு செய்யப்படுகின்றன. மேலும், அவை உண்மையில் வேலை செய்யாத "தொழிலாளர்களுடன்" பகிரப்படுகின்றன அல்லது முழுமையாகப் பொறுப்பானவர்களால் சேமிக்கப்படுகின்றன.
போலி வருகைப் பதிவைத் தடுக்கும்விதமாக, அரசாங்கம் 2022ஆம் ஆண்டில் தேசிய மொபைல் கண்காணிப்பு அமைப்பு (National Mobile Monitoring System (NMMS)) செயலியை அறிமுகப்படுத்தியது. தேசிய மொபைல் கண்காணிப்பு அமைப்பு செயலியின்படி, பணியிடத்தில் உள்ள தொழிலாளர்களின் புகைப்படத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை பதிவேற்ற வேண்டும். இது போலி வருகைப் பதிவேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக உருவாக்கப்பட்டது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்ட, பணித்தளத்தில் தொழிலாளர்களின் இருப்பை கட்டாயப்படுத்துவதில் இந்த செயலி வெற்றிபெறக்கூடும். ஆனால், அவர்கள் அங்கு சென்றவுடன் அவர்கள் எந்த பயனுள்ள வேலையையும் செய்கிறார்கள் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. மிகவும் மோசமான சூழல்களில், வருகைப் பதிவைச் சரிபார்க்க தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறைகூட பணிக்கு வருவதில்லை. திட்டமிடுபர்கள் தோராயமாக எடுத்த புகைப்படங்களையே பதிவேற்றம் செய்து வந்தனர். NMMS செயலி ஒரு JPEG கோப்பு மட்டுமே கேட்கிறது என்பதை அவர்கள் கண்டறிந்தனர்: தொடர்பில்லாத புகைப்படங்கள் அல்லது பழைய புகைப்படங்களின் படங்கள்கூட அமைப்பை ஏமாற்றுவதாக இருந்தன.
ஒன்றிய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் (Union Ministry of Rural Development (MoRD)) ஜூலை 2025 சுற்றறிக்கையில் இதுபோன்ற ஏழு மோசடிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. வருகையை அதிகரிக்க போலி கையொப்பங்களுக்குப் பதிலாக போலி புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும் மோசடி முன்பு போலவே அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தொடர்ந்தது.
அதே நேரத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படும் நியாயவிலைக்கடை பொருட்களுக்கு (Take Home Rations (THR)) முக அங்கீகார தொழில்நுட்பத்தை (Facial Recognition Technology) கட்டாயமாக்கியது. ஏனெனில், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி அல்லது பாலூட்டும் தாய்மார்களுக்கான வீட்டிற்கு அனுப்பப்படும் பொட்டலங்கள் பெரும்பாலும் அவர்களைச் சென்றடைவதில்லை. தாய்மார்கள் தங்கள் கண் சிமிட்டும் புகைப்படத்தை போஷன் டிராக்கரில் பதிவேற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது, மோசடி செய்வதை தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. போஷன் டிராக்கர், பதிவு செய்யப்பட்ட புகைப்படத்துடன் நேரடி புகைப்படத்தை நிகழ்நேரத்தில் பொருத்துவதாகத் தெரிகிறது.
ஹரியானாவின் நூஹ் பகுதியைச் சேர்ந்த ஒரு அங்கன்வாடி ஊழியர், மோசமான இணையம், கூட்டம் மற்றும் மெதுவான செயலி ஆகியவற்றைக் கையாளும்போது, ஏமாற்றுபவர்கள் தொடர்ந்து ஏமாற்றுவார்கள் என்று வெளிப்படையாகக் கூறினார். போஷன் டிராக்கரில் தாய்மார்கள் கடுமையான புகைப்பட சரிபார்ப்பை முடித்த பிறகும், தொழிலாளர்கள் அவர்களுக்கு THR உணவுப் பொட்டலங்களை வழங்க மறுக்கலாம்.
2017-ஆம் ஆண்டு பொதுவிநியோக முறை (Public Distribution System (PDS)) ரேஷன்களுக்கு ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரம் (Aadhaar-Based Biometric Authentication (ABBA)) கட்டாயமாக்கப்பட்டபோது, அது சரியான நபருக்கு மட்டுமே அவற்றைப் பெறுவதை உறுதி செய்வதாகக் கருதப்பட்டது. ஆனால், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் அண்டை வீட்டாரையோ அல்லது உறவினர்களையோ தங்கள் ரேஷன் பொருட்களைப் பெறச் சொல்லிக் கேட்பதால், இனி அவ்வாறு செய்ய முடியாது. நபர் A (நோய்வாய்ப்பட்டவர், வயதானவர் அல்லது மிகவும் நோய்வாய்ப்பட்டோர்) நேரில் செல்ல வேண்டியிருந்தது. இதன் விளைவாக, பலர் விடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து, சில மாநிலங்கள், குறைந்தபட்சம் காகிதத்தில், 'மீறல்' முறையை அறிமுகப்படுத்தின. இதற்கிடையில், பொது விநியோக முறைகள், தங்கள் முழு நியாய விலைக்கடை பொருட்களையும் பயோமெட்ரிக் முறையில் சரிபார்க்க மக்களை கட்டாயப்படுத்தினர். ஆனால், முழு தொகையைவிட குறைவாகவே வழங்கினர் - உதாரணமாக, 2017-ஆம் ஆண்டில் ஜார்க்கண்டில், மக்கள் 5 கிலோவுக்கு பதிலாக 4.5 கிலோ பெற்றனர். ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரம் (Aadhaar-Based Biometric Authentication (ABBA)) "ஆதாயம் இல்லாமல் வலியை மட்டும்" ஏற்படுத்தியது.
வரையறுக்கப்பட்ட விளைவு
இந்தியா முழுவதும் பல மாநிலங்களில், துணை செவிலியர்கள் மற்றும் தாதிகள் (Auxiliary Nurses and Midwives (ANMs)) செய்யும் பல பணிகளுக்கு புவிசார் குறிச்சொற்கள் அல்லது புகைப்பட ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. உதாரணமாக, துணை செவிலியர்கள் மற்றும் தாதிகள் தாய்ப்பால் ஆலோசனை செய்ததற்கான சான்றாக தாய்ப்பால் கொடுக்கும் தாயின் புகைப்படங்களைப் பதிவேற்றுவது ஒரு சிக்கலை உருவாக்குகிறது: ஆலோசனை செய்யாமல் புகைப்படத்தை மட்டும் பதிவேற்றினால் அவருக்கு எந்த பிரச்சனையும் வராது, ஆனால் ஆலோசனை செய்துவிட்டு புகைப்படத்தை பதிவேற்றவில்லை என்றால் மட்டுமே பிரச்சனை வரும். ஆந்திராவின் பழங்குடிப் பகுதியில், ஒரு செவிலியர், இணைய இணைப்பைப் பெறுவதற்காக, செயலியில் வீடு திரும்பும் போது, அதை பதிவு செய்ய, இடம் பெயர வேண்டியிருந்தது என்று கூறினார். 300 மீட்டருக்கு மேல் நகர்ந்ததால், தனது வருகை மோசடியானது என்று செயலி குறிப்பிட்டதால், அவருக்கு "காரணம் கேட்கும் குறிப்பாணை” கிடைத்ததால், அவர் வருத்தமடைந்தார். இத்தகைய கண்காணிப்பு செயலிகள், பொறுப்புணர்வை உறுதி செய்வதாகக் கூறினாலும், இறுதியில் நேர்மையான தொழிலாளர்களை ஊக்கப்படுத்துவதில்லை.
இந்தப் செயலிகள் அதிகபட்சமாக, பொறுப்புணர்வுகளை சிறிதளவு மட்டுமே மேம்படுத்த முடியும். ஆனால் பொறுப்புணர்வு என்பது ஒரு வரையறுக்கப்பட்ட சாதனையாகும்.
2025ஆம் ஆண்டில் ழான் ட்ரேஸ் மற்றும் அமர்த்தியா சென் ஆகியோர், மற்றவர்கள் விரும்புவதைச் செய்ய மக்களைத் தூண்டும் பொறுப்புணர்வில் மட்டும் கவனம் செலுத்தாமல், பொது நலனுக்காக மக்கள் தாங்களாகவே செயல்படவைக்கும் பணிகளில் கவனம் செலுத்துமாறு பரிந்துரைக்கின்றனர்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொழில்நுட்ப தீர்வுகள் பொறுப்பான நடத்தையை ஊக்குவிக்கவோ அல்லது தொழிலாளர்களை பொது நலனுக்காக செயல்பட ஊக்குவிக்கவோ முடியாது. தொழில்நுட்பத்தின் மீதான மோகம், சிறந்த பணி கலாச்சாரத்தை உருவாக்குவதிலிருந்தும், சமூக விதிமுறைகளை மாற்றுவதிலிருந்தும் கவனத்தை திசை திருப்புகிறது, மேம்படுத்துவதற்கான பிற வழிகளைப் புறக்கணிக்கிறது. அதை அடைவதற்கான பிற பாதைகளை இது நமக்குக் காட்டுவதில்லை. உதாரணமாக, பொறுப்புணர்வு குறைவாக உள்ள பகுதிகளில்கூட, இவ்வளவு செவிலியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் விடாமுயற்சியுடன் வேலை செய்வது எப்படி என்று சிலர் கேட்கிறார்கள்?
அறியாமையை வேண்டுமென்றே உருவாக்கும் ஒரு சதி
நலத்திட்டங்களில் தொழில்நுட்ப சரிசெய்தல் தோல்விகளை அரசாங்கம் புறக்கணிக்கிறது. தேசிய மொபைல் கண்காணிப்பு அமைப்பு (National Mobile Monitoring System (NMMS)) தவறாகப் பயன்படுத்தப்படுவதை கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புக்கொண்ட போதிலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஜூலை மாதம் உணவுப் பொட்டலங்களுக்கு முக அங்கீகாரத்தை கட்டாயமாக்கியது. தேசிய மொபைல் கண்காணிப்பு அமைப்பு தோல்வியடைந்ததை ஒப்புக்கொண்ட பிறகு, கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் அனைத்து கிராம சபைகளிலும் பதிவேற்றப்பட்ட ஒவ்வொரு புகைப்படத்தையும் தினமும் முழுமையாக சரிபார்க்க உத்தரவிட்டது.
செயலிகளால் ஏற்படும் புதிய பிரச்சனைகளை அதிகாரிகள் புறக்கணிக்கின்றனர். ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரம் தோல்வியடைந்ததால், வயதானவர்கள் அல்லது எந்த விதமான நடமாட்டமும் இல்லாதவர்களுக்கு பொது விநியோக முறையில் வழங்கப்படும் பொருள்கள் மறுக்கப்பட்டது அல்லது தேசிய மொபைல் கண்காணிப்பு அமைப்பில் அவர்களின் புகைப்படங்கள் பதிவேற்றப்படாவிட்டால் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்ட ஊழியர்கள் தடுக்கப்பட்டது போன்றவை விலக்கு அளிக்கப்படுகின்றன; பொது விநியோக முறை ரேஷன்கள் மற்றும் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் ரேஷன் பாக்கெட்டுகளை விநியோகிக்க அதிக நேரம் எடுக்கும் என்பதால், திறமையின்மை; ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரம் வெற்றியடைந்தாலும் தோல்வியடைவதாகக் கூறுவது போன்ற புதிய ஊழல்கள்; தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் புகைப்படங்களைப் பதிவேற்றுவதால் ஏற்படும் தனியுரிமை பாதிப்புகள்; அடையாள மோசடி மற்றும் தொழிலாளர் பதவி நீக்கம் ஆகும்.
இந்தப் பிரச்சினைகளிலிருந்து கற்றுக்கொள்ள மறுப்பது குழப்பத்தை (baffling) ஏற்படுத்துகிறது. தங்கள் தயாரிப்புகளுக்கு உறுதியான சந்தைகளை உருவாக்க, தனிப்பட்ட ஆர்வலர்கள் முடிவெடுப்பதை கைப்பற்றுவது குறித்த கேள்விகளை இது எழுப்புகிறது. முன்கள ஊழியர்களுக்கான ஸ்மார்ட்போன்கள், மின்னணு விற்பனை புள்ளி இயந்திரங்கள், வன்வட்டுகள் (Hard Drives), சர்வர்கள், இணைய தரவு மற்றும் அங்கீகார சேவைகள் போன்ற கண்காணிப்பு பயன்பாட்டு கருவிகள் அதிக விலை கொண்டவை. இன்றைய தொழில்நுட்ப நிறுவனங்கள், கடந்த காலத்தில் புகையிலை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை தொழிற்சாலைகளைப் போலவே, மாற்றங்களைத் தவிர்ப்பதற்காக தங்கள் தயாரிப்புகள் ஏற்படுத்தும் பாதிப்பை மறைக்கின்றன. அரசாங்கமும் அவர்களின் செயல்களுக்கு ஆதரவளித்து வருகிறது.
விஞ்ஞான வரலாற்றாசிரியர் ராபர்ட் ப்ரோக்டர் (Robert Proctor) இந்த நிகழ்வை விவரிக்க அறியாமையியல் (agnotology) என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். இது, பல்வேறு வகையான அறிவுகள் ஏன் உருவாகாமல் போயின அல்லது எப்படி உருவாகாமல் தடுக்கப்பட்டன என்பதை ஆராய்கிறது. எளிமையான சொற்களில், நலத்திட்டங்களில் தொழில்நுட்பத் தீர்வுகளும் செயலிகளும் விளம்பரம் மட்டுமே.
ரீத்திகா கெரா, ஐஐடி டெல்லியில் பொருளாதாரப் பேராசிரியராக உள்ளார்.
original link:
Surveillance apps in welfare, snake oil for accountability